ஐக்கியம் முழுமையானதாகவும் மனப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும்!

 

 

 

 

 

ண்மையில் கொழும்பில் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும், வேறு சில தமிழ் உதிரிக் கட்சிகளும், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசும், மனோ கணேசனின் முன்னணியும் தமிழ் பேசும் மக்களிடையே ஒற்றுமை உருவாகிவிட்டது எனப் பிரகடனம் செய்துள்ளன.

அவர்களது இந்தப் பிரகடனத்தைப் பார்க்கும் போது, சில கட்சிகள் மட்டும் கூடிப் பேசினால், முழுத் தமிழ் பேசும் மக்களினதும் ஐக்கியம் உருவாகி விடுமா என்ற கேள்வி எழுகின்றது. வடக்கு கிழக்கில் செயல்படுகின்ற ஏனைய முக்கிய கட்சிகளான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழர் சமூக ஐனநாயகக் கட்சி, மலையகத்தின் பிரதான கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இன்னொரு கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஏன் இந்த தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றவில்லை. அவர்கள் அழைக்கப்படவில்லையா? அல்லது அழைத்தும் அவை பங்குபற்றவில்லையா? இந்தக் கட்சிகளை சில்லறைக் கட்சிகள் என ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் இக்கட்சிகளுக்கும் 10 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதன் நோக்கம், அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை இயங்க வைப்பதை இந்தியா மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்துவதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987 இல் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டு உருவாக்கப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமே 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தத்தின் அடிப்படையிலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. மாகாண சபைகள் உருவாக்கத்தின் பிரதான நோக்கம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வினை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், தனியே வடக்கு கிழக்கிற்கு மட்டும் அதை உருவாக்கினால், அது சிங்கள மக்களின் எதிர்ப்பைக் கிளறி விட்டுவிடும் எனக் கருதியதால் முழு நாட்டுக்குமாக 9 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. எனவே, மாகாண சபைகள் ஒரு பக்கத்தில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வாகவும், மறு பக்கத்தில் முழு நாட்டு மக்களுக்குமான பிராந்திய ரீதியிலான அதிகாரப் பகிர்வாகவும் அமைந்தது. இது ஓரளவுக்கு சிறப்பான அதிகாரப் பகிர்வு ஏற்பாடு எனலாம். மாகாண சபைகள் உருவாகி 34 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் மற்றைய எல்லா மாகாண சபைகளும் சீராக இயங்கிய போதிலும், முக்கியமாக இயங்க வேண்டிய வடக்கு கிழக்கு மாகாண சபைகள் ஒழுங்காக இயங்கவில்லை.

 Source: Vaanavil 132 December 2021

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...