ராஜா மகேந்திரன்: ஊடக தாதா, அரசியல் தரகன் - சபார் அஹமட்

 

இலங்கையின் தொழில்துறையின் முன்னோடியான ராஜா மகேந்திரனின் மறுபக்கம் கசப்பானது. ஊடக தாதா. அரசியல் தரகன். தமிழ் பேசும் மக்களின் அரசியலுக்கு எதிரி. ஸ்ரீலங்காவின் Murdochமகாராஜா குழுமத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையில் லடாய் என்று சொல்கிறார்கள். மகாராஜா குழும சேனல் ஒன்றில் கடைசியாய் முழு செய்தியறிக்கை ஒன்றை எப்போது பார்த்தேன் என்று ஞாபகத்தில் இல்லை. 2010 களிலேயே இந்தக் கெட்ட பழக்கம் வழக்கொழிந்து போய்விட்டது. சாரத்தைத் தூக்கிக் கொண்டு நிர்வாணம் தெரிய கத்திக் கொண்டிருக்கும் குடிகாரனைக் கடந்து செல்வது போல அவசரமாய் ரிமோட் பட்டன் தாண்ட முன்னர் முடிந்தது. ஆனால் இப்போது சமூகவலைத்தளங்கள் கோலோச்சுவதால் இந்த ஓநாய் மலத்தையும் சகித்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. ஓடி ஒளிய முடியவில்லை. ஐ.ரீ. என் இல் கோபி கடே பார்த்துவிட்டு ரூபாவாஹினியில் செய்தி பார்த்துவிட்டு இந்த நாட்டு மக்கள் தூங்கச் சென்ற 90களில் தான் இந்த ஊடக மாபியா இலங்கையில் தடம்பதித்தது. இலங்கையில் முதல் தனியார் எப்.எம் வானொலி 'சிரஸ' ஆர்ப்பாட்டமாய் அறிமுகமாகியது. இது எப்படி என்றால் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஒரு கம்யூனிஸ தேசம் ஒரே நாளில் தாராளமயமாக்கப்பட்டது போல அத்தனையும் மாறிப் போயின. எம்.டீ.வீ வந்தது. 98 இல் சக்தி டீ.வி வந்தது. கூடவே சன் டீ.வி நிகழ்ச்சிகள் குத்தகைக்குக் கொண்டு வரப்பட்டன. சிங்கள டிராமாக்களையே அதுவரை பார்த்து வந்த சிங்கள சனத்தின் வீடுகளில் சிரஸ டி.வி வழியாக ஹிந்தித் தொலைக்காட்சி சீரியல்கள் சிங்களம் பேசிக் கொண்டு நுழைந்தன. பளபளக்கும் ஆடைகளுடன் பங்களா வீடுகளில் நடமாடும் இக்கதை மாந்தர்கள் கோடிகளில் பிஸ்னஸ் பேசினர். பட்டுப் புடவையுடன் இரவு தூங்கச் சென்றனர். குக்கிராமங்களில் சீத்தைத் துணியுடன் இதைப் பார்த்த 80'S, 90'S கிட்ஸ்கள் வாய் பிளந்து நின்றன.  

இப்போது செல்லாக்காசாய் இருக்கும் சிரஸ அந்நாளில் அதீத பணப்புழக்கத்தால் கண்டதை எல்லாம் இறக்குமதி செய்து இங்கே திணித்து பாமர மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டது. சமாந்திரமாக செய்திகளிலும் தனி அஜெண்டாவுடன் நுழைந்தது. 2000 ஆம் ஆண்டுகளில் ஆரம்பமாகியது மகாராஜா- சந்திரிக்கா சண்டை. ஒரு வருடத்தில் சந்திரிக்கா அரசு வீடு செல்ல மறைகரம் அப்போது மகாராஜா. 

2001 இல் ரணில் வந்தார். மகாராஜா-ஜேவிபி சண்டை களைகட்டியது. இன்று தேசாபிமான வேடம் போடும் மகாராஜா அன்று ரணில் -புலிகள் ஒப்பந்தத்தைக் கண்டு கொள்ளவில்லை. சிரஸ டீ.வி இல் வேலை செய்பவர்கள் எல்லாம் புலிகள் என்றார் விமல் வீரவன்ச. இரண்டு வருடம் வீரவன்சவை வைத்துக் கேலிச் சித்திரம் கீறியது சிரஸ. 

       ஊடக தாதா VS பேட்டை ரௌடி


அதன் பின்னர் ஆரம்பமானது மகாராஜா - மேர்வின் சில்வா சண்டை. ஊடக தாதாவும் பேட்டை ரவுடியும் மோதியது போல இருந்தது அது. மேர்வின் கண்டபடி தூசணத்தில் அடிச்சி நொறுக்கி சிரசவின் கமெரா,மைக் எல்லாம் வீச ஒரு கட்டத்தில் அமைதியானது மகாராஜா.

                       ஊத்தை ரங்கா  


2010 இல் மகாராஜாவின் கழிப்பறையில் பல் விளக்கிக் கொண்டு இருந்த ஊத்தை ஊடகவியலாளன் ரங்காவின் பிரஜைகள் முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் தேசிய பட்டியலில் இடம் கொடுக்காததால் ஆரம்பமான ரணில் - மகாராஜா சண்டை இன்னமும் தீரவில்லை. பத்துவருடமாய் ரணிலை விரட்ட மகாராஜா செய்யாத யாகம் இல்லை.பார்க்காத பூசாரி இல்லை. பண்ணாத சதி இல்லை. ஆனால் எதுவும் சாத்தியப்படவில்லை.  2018 அக்டோபர் 26 இல் இடம்பெற்ற அரசியல் சதிப் புரட்சியை அட்ரஸ் இல்லாமலாக்கியதில் பெரும் பங்கு வகித்த சுமந்திரன் மேல் மகாராஜாவின் கோபம் இப்போது திரும்பி இருக்கிறது. நடுநிலை ஊடகம் என்று கூவிக் கொள்ளும் மகாராஜா அக்டோபர் சதியில் யார் பக்கம் இருந்தது என்று புதிதாய் சொல்ல ஒன்றும் இல்லை.  2000 ஆம் ஆண்டு தொடக்கம் மகாராஜாவின் கூத்துக்களைப் பார்க்கிறவர்களுக்குத் தெரியும். சுமந்திரனைக் கழுவி ஊத்த மகாராஜாவால் முன்னர் கடுமையாக விமர்சிக்கப்பட்ட விமல்,மேர்வின் வகையறாக்களையும் அது துணைக்கு அழைக்கும் என்று. தின்ன விரும்பினால் நாய் இறைச்சியையும் ஆட்டிறைச்சி என்று தின்னக் கூடிய குப்பை ஊடக நெர்ட்வோர்க் இது. இப்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி சொன்னால் மகாராஜா என்பது மனப் பிறழ்வு கொண்ட ஃபேக் ஐ டி மாதிரி. ப்ளொக் பண்ணிவிட்டு சும்மா இருக்க வேண்டியதுதான். புறக்கணிப்பு ஒன்றே ஒரே வழி.

Source: jaffnafashion நட்சத்திரன் செவ்விந்தியன்
2019ல் Zafar Ahmed எழுதிய கட்டுரை)

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...