ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கைதி, ஏனைய கைதிகளையும் விடுதலை செய்ய கோரிக்கை


முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தமிழ் கைதியான நடேசு குகநாதன் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் கடந்த 16ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினைச் சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், 2013.07.09 ஆம் திகதி அன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கடந்த 8 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்க அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரை 17.09.21 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொறுப்பெடுத்து அவரது வீட்டில்கொண்டுவந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர், தன்னை விடுதலை செய்து குடும்பத்துடன் இணைந்தமைக்கு ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியால் மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் சிபார்சு காரணமாக நான் முதற்கட்டமாக விடுதலை செய்யப்பட்டுள்ளேன் என நினைக்கின்றேன். ஜனாதிபதிக்கு என் குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அந்தக் குழு என்னை தெரிவு செய்தமைக்கு மிக்க மிக்க நன்றிகள். இன்னும் 55 தமிழ் கைதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் சுமார் 15 தொடக்கம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கின்றார்கள்.

என்னைப்போன்று அவர்களையும் விடுதலை செய்து அவர்களும் குடும்பங்களுடன் இணைந்து வாழ வழி செய்ய வேண்டும். ஜனாதிபதி இதனை செய்துகொடுப்பார் என்ற நம்பிக்கை அரசியல் கைதிகளிடம் இருக்கின்றது. மிக விரைவில் அவர்களும் விடுதலையாகி குடும்பத்துடன் இணையவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...