ஆப்கானின் தற்போதைய நிலைக்கு அமெரிக்காவே பொறுப்பு

 சீனா லக்கு அமெரிக்காவே பொறுப்பு: சீனா ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் நிச்சயமற்ற நிலைமைக்கு அமெரிக்காவே பொறுப்பு என்று ஆப்கானிஸ்தானிய விவகாரங்களுக்கான சீன விஷேட தூதுவர் யு ஸியாயோங் (Yue Xiao Yong} தெரிவித்துள்ளார்.
ஜியோ செய்தி (புநழ நேறள) நிறுவனத்துக்கு அவர் வழங்கிய
செவ்வியில், ‘நாட்டில் அரசியல் தீர்வுக்கு எந்த உதவியும் செய்யாமல்
அமெரிக்கா ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டது’ என்றார்.
படையைப் பயன்படுத்துவது, இராணுவ நடவடிக்கை, மற்றும் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுதல் என்பன
நிலைமையை மிக மோசமாக்கும் என்பதை அமெரிக்கா உணரவேண்டும்
என்றும் அவர் கூறினார்.

See related image detail
ஆப்கானிஸ்தானில் பெற்றுக்கொண்ட அனுபவத்திலிருந்து அமெரிக்கா இந்த
பாடத்தைக் கற்றுக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறிய முறையானது
பொறுப்பற்றது என்றும் அவர் கூறினார்.விஷேட தூதுவர் மேலும் கூறுகையில்,
தலிபான்கள் எல்லா இன குழுக்களையும் ஐக்கியப்படுத்தி எல்லோரும்
ஏற்றுக்கொள்ளும் ஓர் அரசாங்கத்தை நிறுவுவார்கள் என்று சீனா
நம்புவதாகவும் அவர் சொன்னார்.


ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தின் பாதுகாப்புக்கு சொர்க்கமாக
இருக்கக்கூடாது. பயங்கரவாத குழுக்களிடமிருந்து அது ஒரு தெளிவான
இடைவெளியை ஏற்படுத்தவேண்டும்.அண்டைய நாடுகளுடன் நட்புறவுடன்
இருக்கவேண்டும். அண்டை நாடுகள், பிராந்தியம் மற்றும் பரந்த அளவிலான சர்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்றும் அமைதியை
பராமரிக்கும் தமது வாக்குறுதியை தலிபான்கள் காப்பாற்றுவார்கள் என்று
நம்புவதாகவும் விஷேட தூதுவர் கூறினார்.


அல்கைடாவுடன் தொடர்புடையது என்று நம்பப்படும் கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய அமைப்புக்கு (Eastern Turkestan Islamist Movement -ETIM ) அடைக்கலம் கொடுத்தது போன்ற தவறை தலிபான்கள் மீண்டும் செய்யமாட்டார்கள் என்று தமது நாடு நம்புவதாவும் அவர் கருத்து வெளியிட்டார்.


இதேவேளையில் ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்யவும், தமது நாட்டில்
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் தலிபான், சீனாவுக்கு அழைப்பு
விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசியல் வரலாற்றில் இது ஒரு
முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது. ஒருபோதுமே ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே நல்ல உறவு இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி தலிபான்கள், சீனாவுக்கு நெருக்கமாக செல்ல முடிவு செய்திருக்கலாம்.

vaanavil 128 August 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...