பாடலாசிரியர் புலமைப்பித்தன் காலமானார்!

சினிமா பாடலாசிரியரும், தமிழக சட்ட மேலவையின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் வயது மூப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 86.

சினிமா பாடலாசிரான கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னை, அடையாறில் உள்ள போர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பின் காரணமாக உறுப்புகள் செயல்பாடு குறைவு ஏற்பட்டதால் அவருக்கு வெண்டிலேட்டா் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவர், இன்று (செப்.,8) காலை 9.33 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனையிலிருந்து, அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் – தெய்வானையம்மாள் தம்பதிக்கு கடந்த 1935 அக்., 06 ல் பிறந்தவர் புலமைப்பித்தன். இவரது இயற்பெயர் ராமசாமி.

ஒருமுறை ஹிந்தி ஆசிரியர் விளையாட்டாக “இவன் ஒரு பைத்தியக்காரன் ” எனத் திட்டியிருக்கிறார். உடனடியாக அவர் “ஆம் தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்ட பைத்தியக்காரன்” என்று கூறி புலமைப்பித்தன் என தனக்கு புனைபெயர் சூட்டிக் கொண்டார்.
கோவை சூலூர் பகுதியில் ஒரு நூற்பாலையில் வேலைபார்த்துக் கொண்டே தமிழ்ப் புலவர் படிப்பை முடித்தார். பின் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்த புலமைப்பித்தனுக்கு , இயக்குநர் கே. சங்கர் குடியிருந்த கோயில் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பளித்தார்.

‘நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?’

என்ற பாடலை எழுதினார் புலமைப்பித்தன்.

இந்தப் பாடலை அவர் படப்பிடிப்புத் தளத்தின் அறையில் அமர்ந்து எழுதவில்லை. மாறாக தியாராயநகரில் ஒரு சாலையின் ஓரம் வீதியிலே நின்று எழுதினார். இந்தப் பாடலை எழுதியபோது இவரது வயது 30.

இப்பாடல் பதிவு செய்யப்படுகிறது. அதுவரை இசையமைப்பாளர் விஸ்வநாதன், பின்னணி பாடகர் சவுந்திரராஜனுக்கோ, கவிஞர் யாரென்பது தெரியாது. இயக்குநர் சங்கருக்கு மட்டுமே தெரியும்.

அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ஆயிரம் நிலவே பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

எம்.ஜி.ஆர் தனது படங்களில் புலமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்து இவரைப் போன்ற தமிழறிஞர்கள் பலர் சினிமாவிற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

அம்மி கொத்த சிற்பி எதற்கு? என்று ஒரு காலத்தில் திரைப்பட பாடல் எழுதுவது தொடர்பாக கருத்தொன்றைத் தெரிவித்திருந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

அதே போல், ”ஐ.ஏ.எஸ். படித்து விட்டு பியூன் வேலை செய்வதற்குச் சமமான ஒரு விபத்து” என்று தான் பாடலாசிரியராக மாறியதைப் பற்றிக் கூறியிருக்கிறார் புலமைப்பித்தன்.
“இலக்கிய அந்தஸ்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்தவன் நான் தான்” எனத் தமிழ் செருக்கோடு கூறிய புலமைப் பித்தனின் பாடல்கள் சில …

1)அழகென்னும் ஓவியம் இங்கே – ஊருக்கு உழைப்பவன்

2) ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா – அடிமைப் பெண்

3) கங்கைநதியோரம் ராமன் நடந்தான் – வரப்பிரசாதம்

4) அமுத தமிழில் எழுதும் கவிதை – மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

5) தென்றலில் ஆடும் கூந்தலில்- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

6) புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என – ஊரும் உறவும்

7) நீங்க நல்லா இருக்கணும் – இதயக்கனி

8) இன்பமே உந்தன் பேர் பெண்மையோ – இதயக்கனி

9) பொன்னந்தி மாலைப் பொழுது- இதயக்கனி

10) என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்- பல்லாண்டு வாழ்க

11) இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா – பல்லாண்டு வாழ்க

12) பூமழை தூவி – நினைத்ததை முடிப்பவன்

13) எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா – குமரிக்கோட்டம்

14) உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை – நீயா

15) உனது விழியில் எனது பார்வை – நான் ஏன் பிறந்தேன்

16) ஓடி ஓடி உழைக்கணும்- நல்ல நேரம்

17) நீ என்னென்ன சொன்னாலும் கவிதை – நேற்று இன்று நாளை

18) பாடும் போது நான் தென்றல் காற்று – நேற்று இன்று நாளை

19) நேருக்கு நேராய் வரட்டும் – மீனவநண்பன்

20) கண்ணழகு சிங்காரிக்கு – மீனவநண்பன்

21) சிரித்து வாழவேண்டும் – உலகம் சுற்றும் வாலிபன்

22) நாளை உலகை ஆளவேண்டும் – உழைக்கும் கரங்கள்

23) இந்த பச்சைக்கிளிக்கொரு -நீதிக்குத் தலைவணங்கு

24) இனியவளே என்று பாடி வந்தேன் – சிவகாமியின் செல்வன்

25) எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது – சிவகாமியின் செல்வன்

26) ஒரு சின்னப் பறவை – மதன மாளிகை

27) சோளம் வெதைக்கையிலே – பதினாறு வயதினிலே

28) அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா

29) இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் – நல்ல பெண்மணி

30) முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்- ஆணிவேர்

31) தென்பாண்டிச் சீமையிலே – நாயகன்

32) கஸ்தூரி மான் குட்டியாம் – ராஜநடை

33) நானொரு பொன்னோவியம் கண்டேன்

34) செண்டு மல்லிப் பூப்போல் அழகிய பந்து – இதய மலர்

35) மண்ணில் வந்த நிலவே – நிலவே மலரே

36) ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா – தாலிதானம்

37) பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே – தீபம்

38) ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது -மதனமாளிகை

39) தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ் – இளஞ்சோடிகள்

40) ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – தங்கமகன்

41) கண்மணியே பேசு மெளனம் என்ன கூறு – காக்கிச் சட்டை

42) முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையே தருக – தர்மத்தின் தலைவன்

43) அட்ரா மேளத்தை ராசா – திசைமாறிய பறவைகள்

44) சந்தனம் பூச மஞ்சள் நிலாவும் – துடிக்கும் கரங்கள்

45) அக்கம் பக்கம் பாருடா சின்ன ராசா – உன்னால் முடியும் தம்பி

46) புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – உன்னால் முடியும் தம்பி

47) உன்னால் முடியும் தம்பி – உன்னால் முடியும் தம்பி

48) சாதிமல்லிப் பூச்சரமே- அழகன்

49) கோழி கூவும் நேரம் ஆச்சு – அழகன்

50) மழையும் நீயே – அழகன்

51) சங்கீத ஸ்வரங்கள்- அழகன்

52) ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு – சட்டம் ஒரு இருட்டறை

53) உன்னை நம்பி நெத்தியிலே – சிட்டுக்குருவி

54) மான் கண்டேன் மான் கண்டேன் – ராஜரிஷி

55) என்ன பாட்டுப் பாட என்ன தாளம் போட – சக்களத்தி

56) சின்னமணி பொண்ணுமணி சிரிச்சாக்கா கோயில் மணி – மல்லுவேட்டி மைனர்

57) அந்தப்புரத்தில் ஒரு மகராணி – தீபம்

58) சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா

59) நீ ஒரு காதல் சங்கீதம்- நாயகன்

60) பூந்தென்றல் காற்றே வா – மஞ்சள் நிலா

61) நான் பிடிச்ச மாப்பிள்ளைதான் – முந்தானை முடிச்சு

62) அடி வண்ணக்கிளியே – மிருதங்க சக்கரவர்த்தி

63) வெண்மேகம் விண்ணில் – நான் சிகப்பு மனிதன்

64) பட்டுவண்ண ரோசாவாம் – கன்னிப் பருவத்திலே

65) உச்சி வகுந்தெடுத்து – ரோசாப்பூ ரவிக்கைகாரி

66) மரகதத் தோரணம் வாசலில் அசைந்திட – பிள்ளையார்

67) எனது ராகம் – பொண்டாட்டி தேவை

68) அழகே உன்னைக் கொஞ்சம் – வாலிபமே வா வா

69) குக்குக்கூ கூ – வள்ளி

70) அடியெடுத்து – விடிஞ்சா கல்யாணம்

71) தேவமல்லிகைப் பூவே – நடிகன்

72) மாலை செவ்வானம் – இளையராஜாவின் ரசிகை

குடியிருந்த கோவில் படத்தில் இடம் பெற்ற, ‘நான் யார்…’ என்ற பாடல் வழியாக, திரையுலகில் நுழைந்தார். அடிமைப் பெண் படத்தில் எழுதிய, ‘ஆயிரம் நிலவே வா…’ பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நண்பரானார். தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராக பணியாற்றினார். அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

Source: chakkaram.com

 

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...