வறுமைக்கு முடிவு கட்டிய நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி புதிய இலக்குகளை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்கின்றது!

 

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 100 ஆண்டுகளில் அந்நாடு மார்க்சிய தத்துவத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது என்று இலங்கையின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் டியூ குணசேகர (D.E.W. Gunasekera) கூறுகிறார்.

ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளளர் டியூ குணசேகர சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு சீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு (Xinhua) வழங்கிய நேர்காணலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளை பாராட்டியிருக்கிறார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளினதும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினதும் அனுபவங்களில் இருந்து பாடங்களைப் பெற்று சீனாவுக்கான வெற்றிகரமான அபிவிருத்தி வகை மாதிரியான்றை சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவமைத்திருப்பதாக கூறியிருக்கும் டியூ குணசேகர, அந்தக் கட்சி நாட்டின் வரலாற்றுக்கும் கலாசாரத்துக்கும் உண்மையாக நடந்து கொண்டிருக்கும் அதேவேளை, சீனாவின் பொருளாதாரத்தில் அரச தலையீட்டையும் சந்தைகளையும் வெற்றிகரமாக பிணைத்திருக்கிறது என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“சீனாவில் தற்போது காணப்படும் ஆக்கபூர்வமான நிலைவரங்கள் சீன குணவியல்புகளுடனான சோசலிசத்துடன் தொடர்புடையவையாகும். செழுமைமிக்க நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்குடன் நாட்டின் தேசபக்த சக்திகளை அணிதிரட்டும் ஐக்கிய முன்னணியொன்றை அமைக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவம் புத்தாக்கமானதும் செல்வாக்கு மிக்கதுமாகும்” என்று அவர் அந்த வீடியோ நேர்காணலில் குறிப்பிட்டார்.

“சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப் பெரிய தத்துவார்த்தப் பங்களிப்புகளில் ஒன்று ஐக்கிய முன்னணித் தத்துவமாகும். அதே தத்துவம் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் கொணடு வரப்பட்டுள்ளது. சமாதான சகவாழ்வு மீதான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பற்றுதல் இன்னொரு தத்துவார்த்த பங்களிப்பாகும். அது துரித அபிவிருத்திக்கு தேவைப்படுகின்ற உறுதிப்பாட்டை சீனாவுக்கு வழங்கியிருக்கிறது” என்று கூறிய இலங்கை கம்யூனிஸ்ட் தலைவர், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் சீனா இராஜதந்திரத்திலும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலிலும் நீண்ட பாய்ச்சல்களைச் செய்திருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார்.

மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் ‘மணடலமும் பாதையும்’ (Belt and Road) செயற்திட்டத்தைப் பற்றி கூறிய டியூ குணசேகர, அது மகத்தான உலகளாவிய ஒத்துழைப்பையும் பல்துருவத்தன்மையையும் சாத்தியப்படுத்தும் என்றார்.

“அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் யதார்த்தபூர்வமாக செயற்பட முயற்சிப்பதை நான் அதானிக்கிறேன். அது மார்க்சிய ஆய்வில் அடிப்படையானதாகும். முற்றுமுழுதான வறுமையை ஒழித்து விட்ட நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி இப்போது புதிய இலக்குகளை சாதிக்கும் பாதையில் காலடி வைத்திருக்கிறது” என்றும் டியூ குணசேகர குறிப்பிட்டார்.

மூலம்: Socialism with Chinese characteristics enriches Marxist theory, says former Sri Lankan party chief

Courtesy: chakkaram.com

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்