ஆப்கானிஸ்தான்: தொடரும் சதிகளும் துரோகங்களும்

 உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாத உ
தாக்குதல்களின் 20வது ஆண்டு நிறைவு தினமான செப்டம்பர் 11
இற்குள், ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க
துருப்புக்களையும் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்காவின்
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் கடந்த 42 ஆண்டுக்கால வரலாறு என்பது
ஏவுகணைகளாலும், விமானக்குண்டு வீச்சுக்களாலும் துப்பாக்கிக்
குண்டுகளாலும், மனிதர்களின் குருதிகளையும், உடல்களையும்
சுமந்தே வந்துள்ளது. ஐரோப்பிய கண்டத்திற்கான ஆசியாவின்
நுழைவாயிலென அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான், பல்வேறு
முடியாட்சிகள், காலனித்துவ ஆட்சிகள், பிராந்திய ஆதிக்கங்கள்,
வல்லரசுகளுக்கிடையேயான மோதல்கள், இஸ்லாமிய தீவிரவாதம்
என நீண்ட கரடுமுரடான பாதையில் பயணித்துள்ளது.


2001, ஒக்ரோபர் 7ந ; திகதி, ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய
தலிபான் ஆட்சிக்கு எதிராகவும் மற்றும் அந்நாட்டின் அல் கைடா
(யுட ஞயநனய) தளங்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஒரு முழு
அளவிலான இராணுவ தாக்குதலைத் தொடங்கியது. 1996ஆம்
ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானைத் தனது கட்டுப்பாட்டில்
வைத்திருந்த தலிபான் ஆட்சியை இழந்த போதிலும், தொடர்ந்து
போரிட்ட வண்ணமேயிருந்தனர். அதனால் அமெரிக்கப்
படையினரின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்தது. போர்
என்பது ஆப்கானிஸ்தானின் இயல்பு வாழ்க்கையாக மாறியது.
2010இல் அமெரிக்கப் படையினர் 1 இலட்சமாகவும், நேட்டோ
நாட்டுப் படையினருடன் சேர்த்து மொத்தமாக ஒன்றரை இலட்சம்
படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்தன.


2011, மே 2ந ; திகதி, ஒசாமா பின்லாடன் அமெரிக்கப்
படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்
படைகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க
உத்தரவிட்டார், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா.
அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கப் படையினரின்
எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது ஏறத்தாழ
7500 பேர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக தெரிய வருகின்றது.
அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் போரில் குறைந்தது 1.5 இலட்சம்
பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 ஆயிரம் பொது மக்கள.; இந்தப்
போரினால், உலகம் முழுவதும் ஏறத்தாழ 25 இலட்சம்
ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அமெரிக்கப் படையினரில் 2,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்தப் போருக்கு அமெரிக்கா மொத்தமாக ஏறத்தாழ 2 ட்ரில்லியன்
(வருடம் 100 பில்லியன்) டொலர் பணம் செலவு செய்துள்ளது.
சோவியத் யூனியன் - அமெரிக்கா பனிப்போர் உச்சக்கட்டத்தில்
இருந்த காலகட்டமான, 1973 ஜுலை 17 இல், ஆப்கானிஸ்தான்
முடியாட்சி, அரச வம்சத்தைச் சேர்ந்த தாவு+த் ஹானால்
தூக்கியெறியப்பட்டது. இவர் சோவியத் சார்பாளராக இருந்தார்.
எனினும், ஆப்கானிஸ்தானில் எந்த வகையிலான ஆட்சி அமைய
வேண்டும் என்பதில் ஆளும் அதிகார வர்க்கத்திற்குள் குழப்பங்கள்
நிலவின. அதாவது மார்க்சிச, லெனினிச சித்தாந்தத்தின்
வழிகாட்டலில் ஆப்கானிஸ்தானை சோசலிஸ்ட் நாடாக
உருவாக்க வேண்டுமா, அல்லது சோவியத் சார்பு - இஸ்லாமியக்
குடியரசாக இருந்தால் மாத்திரம் போதுமா போன்ற
கருத்துக்களைக் கொண்ட பிரிவுகளிடையே மோதல்கள்
நிகழ்ந்தன. இந்தப் பிரிவுகள் அவ்வப்போது இராணுவத்
தலைமைகளையும் தம்பக்கம் இழுத்ததால் ஆப்கானிஸ்தான் பல
சதிக்கு மேல் சதிகளைச் சந்தித்தது. 1978 ஏப்ரல் 28 இல் தாவு+த்
ஹான் மற்றும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டு மக்கள்
ஜனநாயகக்கட்சியைச் (PனுPயு ) சேர்ந்த நூர் முஹமட் தராகி
ஆப்கன் அதிபரானார். பின்னர் இவரும் 1979இல் ஆட்சியிலிருந்து
அகற்றப்பட்டு, கொல்லப்பட ஹவிசுல்லா அமின் பதவிக்கு வந்தார்.
 

1978இல் கைச்சாத்திடப்பட்ட சோவியத் - ஆப்கானிஸ்தான்
நட்புபுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1979 ஆம் ஆண்டு
டிசம்பர் 25ந ; திகதி சோவியத் ரஷ்யாவின் செம்படைகள்
ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. அதனைத் தொடர்ந்து டிசம்பர்
29ந ; திகதி ஹவிசுல்லா அமின் கொல்லப்பட்டு, மக்கள்
ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த பாப்ரக் கர்மல் (டீயடிசயம முயசஅயட)
ஆப்கன் ஜனாதிபதியானார். 1986இல் சோவியத் யூனியன் கர்மலை
ஓரங்கட்டி விட்டு, மொஹமட் நஜிபுல்லாவை (ஆழாயஅஅநன
யேனதiடிழநடடயா) அதிபர் பதவியில் அமர்த்தியது.
இறுதியில் சோவியத் படைகள், முஜாஹிதீன் (ஆரதயானைநநn) என்று
பரவலாக அறியப்பட்ட இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களின்
தாக்குதல்களால் பாரிய இழப்புகளைச் சந்தித்து, 1989 இல்
பின்வாங்கின. அதற்கு பின்னர் தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தில்,
நஜிபுல்லா 1992இல் பதவி விலகி காபூல் ஐ.நா. அலுவலகத்தில்
தஞ்சம் புகுந்தார். 1996இல் அவர் பாகிஸ்தான் உளவுப்படையால்
கொல்லப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.


முஜாஹிதீன் குழுவில் இருந்தவர்களில் ஒசாமா பின் லாடனும்
ஒருவர். இந்த சோவியத் எதிர்ப்பு சக்திகளுக்கு அமெரிக்கா
பாகிஸ்தானிற்கு ஊடாக ஆயுதங்களையும் பிற உதவிகளையும்
செய்தது. அதனால் சோவியத் சார்பு அரசுக்கு பிந்தைய அதிகார
வெற்றிடத்தில், ஓர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவவும்,
வெளிநாட்டுக் கருத்துக்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மீதான
மோகங்களை நாட்டிலிருந்து களையவும், குறிப்பாக பெண்கள் மீது
கடுமையான இஸ்லாமிய சட்டத்தின் ஒடுக்குமுறைகளைத்
திணிக்கவும் விரும்பிய முல்லா முகமது ஒமர் தலைமையில்
1994இல் தலிபான் உருவாக்கப்பட்டது. 1996இல் ஆப்கன்
தலைநகரான காபூல் உட்பட முக்கிய நகரங்களை கைப்பற்றிய
போதிலும், 2001 ஆம் ஆண்டளவிலேயே தலிபான்கள் நாட்டின்
பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆனால்
அதே ஆண்டிலேயே அமெரிக்காவும் ஆப்கானை ஆக்கிரமித்தது.
தலிபான்களுடான யுத்தத்தில் வெல்ல முடியாது என்பதை
உணர்ந்து கொண்ட அமெரிக்கா, தலிபான்களுடன் இரகசிய
பேச்சுவார்ததைகளை நடத்தியது. 

கடந்த வருடம் பெப்ரவரி 29ந திகதி, அமெரிக்காவும் தலிபானும் கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனா;. அதன்படி,ஆப்கன் மண்ணிலிருந்து 14 மாதங்களில் அமெரிக்கப் படைகள்
வெளியேற வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அமெரிக்கப்
படைகள் ஆப்கன் மண்ணிலிருந்து வெளியேறுவதென்பது
தலிபானிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எனவே அவர்கள்
மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற இதுவே சிறந்த தருணம்.
ஆனால் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வருவதென்பது ஆப்கன்
மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஒருபோதும் கொண்டுவராது.

Source: vaanavil 124 April 2021

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...