சின்ஜியாங் பற்றிய வதந்திகள் ‘நாடகத்தை’ அமெரிக்கா நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது! சீன வெளிநாட்டமைச்சு பேச்சாளர்

அமெரிக்காவின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரி லோரன்ஸ் வில்கேர்சன்
((Lawrence Wilkerson ) கூற்றுப்படி, “சின்ஜியாங்கின் உய்குர் பிரச்சினை” (“Xinjiang Uygur question”) என்பது சீனாவை உள்ளிருந்தே சீர்குலைக்கும் அமெரிக்காவின் ஒரு தந்திரோபாயச் சதி என்பது தெரிய வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் ((Hua Chunying) கூறியிருக்கிறார்.


அமெரிக்க இராணுவத்தின் ஓய்வுபெற்ற கேர்ணலும், முன்னாள் அமெரிக்க
இராஜாங்க செயலாளர் கொலின் பவலின் ((Colin Powell) முன்னாள்
தலைமை அதிகாரியாக இருந்தவருமான லோரன்ஸ் வில்கேர்சன் 2018
ஓகஸ்டில் நிகழ்திய உரையொன்றின் வீடியோ ஒன்றை சீன வெளிவிவகார
அமைச்சின் பேச்சாளர் ஹூவா வழமையான வாராந்த
செய்தியாளர்களின் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்குக் காண்பித்தார்.


அதில் வில்கேர்சன், சீனாவை சீர்குலைப்பதற்கு சீ.ஐ.ஏவுக்கு உள்ள சிறந்த வழி, ஸிங்கியாங்கில் வாழும் உய்குர் இனத்தவர்களுடன் இணைந்து குழப்பங்களைத் தோற்றுவித்து சீனா மீது உள்ளிருந்தே அழுத்தங்களைக்
கொடுப்பதுதான் எனக் கூறியிருக்கிறார். இது அமெரிக்காவின் தகாத செயலை எடுத்துக் காட்டுவதுடன், அதனுடைய சில மேற்குலகக் கூட்டாளிகளினதும், சில ஊடகங்களினதும் செயலையும் எடுத்துக் காட்டுகிறது. சீன எதிர்ப்புச் சக்திகள் ஒன்றிணைந்து ஆதாரமற்ற வதந்திகளை சீனாவுக்கு எதிராகப் பரப்புகின்றன எனவும் அவர்
குறிப்பிட்டார்.


இப்பொழுது சின்ஜியாங்கின் பருத்தி மீது இலக்கு வைத்துள்ள அமெரிக்காவும்
அதன் மேற்கத்தையக் கூட்டாளிகளும், அங்கு கட்டாய உழைப்பு,
பலவந்தமான கருத்தடை, இன அழிப்பு போன்ற ‘குற்றங்கள்’ நடைபெறுவதாகக் கூறுகின்றன. இதை வைத்துக்கொண்டு அவை சீன நிறுவனங்கள் மீதும், சில தனிநபர்கள் மீதும் தடைகளை விதித்துள்ளன.
சின்ஜியாங்கில் வாழ்கின்ற 25 மில்லியன் பல்வேறு சிறுபான்மை இனங்களின் பொது அபிலாசைகளைக் கேட்பதை விட ஒரு சிறிய தொகையினரான சீன எதிர்ப்பு சக்திகளால் புனையப்பட்ட வதந்திகளை மக்கள் நம்பிவிடுவார்கள் என அவர்கள் சிந்தனையற்று நம்புகிறார்கள்.


வில்கேர்சனின் வீடியோவைப் பார்த்த பின்னர் தங்களது உயரதிகாரிகளின்
வார்த்தைகளை யாராவது நம்புவார்களா? என ஹூவா கேள்வி எழுப்பினார்.
உண்மைகள் நிரூபிப்பதின்படி, சின்ஜியாங் பிரச்சினை என்பது இனம், மதம், மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான பிரச்சினை அல்ல, அது பிரிவினைவாதம், வன்முறை, பயங்கரவாதம், தலையீடு என்பவற்றுக்கு
எதிராகப் போராடுகின்ற பிரச்சினை. அமெரிக்காவால் “சின்ஜியாங் பிரச்சினை” எனக் கூறப்படுவது உய்குர் மக்களின் அக்கறையால் எழுந்தது அல்ல, அது சீனாவின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி, வளர்ச்சி என்பனவற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்டதாகும்.


அமெரிக்காவும் அதன் மேற்குலகக் கூட்டாளிகளும் சேர்ந்து உலகில்
உருவாக்கிய வேறு பல குழப்பங்களை ஹூவா உதாரணம் காட்டினார்.
2003இல் ஈராக் “பேரழிவுக்கான ஆயுதங்களை” வைத்திருக்கிறது என்று
சொல்லிக்கொண்டு ஈராக்கின் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை
மேற்கொண்டு, ஆயிரக்கணக்கான சேதங்களை ஏற்படுத்தியதுடன், ஒரு
மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை அகதிகளாகவும் ஆக்கியது. பல
வருடங்களின் பின்னர் ஈராக்கில் “பேரழிவுக்கான ஆயுதங்கள்”
இருக்கின்றது என்பதற்கு சிறிய அளவிலான ஆதாரமே இருந்தது என
அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.


2018இல் “சிரிய அரசாங்கம் தனது மக்களுக்கெதிராக இராசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறது” எனச் சொல்லிக்கொண்டு, அமெரிக்கா,
பிரித்தானியா, பிரான்ஸ் என்பன அந்நாட்டின் மீது விமானத் தாக்குதலை
நடத்தின. பின்னர் அது பொய்யான தகவல் எனத் தெரிய வந்தது.
2019இல் சீ.ஐ.ஏ. ஹொங்கொங்கில் ஜனநாயகத்துக்கான தேசிய மரபுரிமை
உட்பட பல குழுக்களை “வெள்ளை கையுறை” என்ற பெயரில் உருவாக்கி
அங்குள்ள சீன எதிர்ப்பாளர்களை  ஒன்றிணைத்து பலாத்காரமாகக்
கலகங்களை உருவாக்கி, ஹொங்கொங்கின் சட்டப் பேரவைக் கட்டிடத்தை தாக்கி சேதப்படுத்தினர்.


“இன்றைய சீனா என்பது ஒரு ஈராக்கோ, சிரியாவோ அல்லது எட்டு நாடுகளின்
கூட்டணிப் படைகளின் கீழ் இருந்த மறைநத கிங் இராஜவம்சமோ (1644 –
1911) அல்ல என அமெரிக்காவை நான் எச்சரிக்க விரும்புகிறேன்” எனவும் ஹூவா குறிப்பிட்டார். அத்துடன் சீன மக்கள் சீனாவின் தேசிய சுதந்திரம், பாதுகாப்பு, தேசிய அபிலாசைகள் மற்றும் கௌரவம் என்பனவற்றைப் பாதுகாக்கும் போதிய பலத்துடனும், முழு ஆற்றலுடனும் இருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். சீனாவின் வெளிப்படையான, சந்தேகத்துக்கு இடமற்ற உண்மைகள், எல்லாவிதமான கீழ்த்தரமான பொய்களையும் வதந்திகளையும் அம்பலமாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


-குளோபல் ரைம்ஸ்  

Source: vaanavil 124 April 2021

No comments:

Post a Comment

61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட லுமும்பாவின் பல்- இந்து குணசேகர்

   Courtesy: Wikipedia  பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட கொங்கோவின் விடுதலை நாயகன் பற்றிஸ் லுமும்பாவின் (Patrice Lulumba ) ‘பல்’ 61 ...