புலிகளை ஆதரிக்கும் தமிழ் புலம்பெயர் குழுக்கள் பலவற்றுக்குத் தடை

 

  • சில தனிநபர்களும் உள்ளடக்கம்
  • உலகத் தமிழர் பேரவை உள்ளடக்கம்
  • பெரும்பாலான குழுக்கள் 2015-இல் தடை நீக்கப்பட்டவை
  • இற்றைப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில நிறுவனங்கள் உள்ளடங்கலாக தமிழ் புலம்பெயர்க் குழுக்கள் சிலவற்றை அரசாங்கம் தடை செய்துள்ளது.

சில குழுக்கள் 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டபோதும், 2015ஆம் ஆண்டு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருந்தன.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடியத் தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் பேரவை, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவையே பாதுகாப்பமைச்சால் தடை செய்யப்பட்டுள்ளன.


ஐக்கிய நாடுகளின் 2012ஆம் ஆண்டு இலக்கம் ஒன்று வழிநடத்தல்களின் 4 (7) வழிநடத்தலின் கீழேயே இவை தடை செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலானது பாதுகாப்பமைச்சின் செயலாளர் கமால் குணரத்னவால் கைச்சாத்திடப்பட்டு, பெப்ரவரி 25ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது.  

பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா மற்றும் சில நாடுகளைத் தளமாகக் கொண்ட குறிப்பிட்ட தனிநபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஆகியோரும் தடை செய்யப்பட்டோரில் உள்ளடங்குகின்றனர். சில புலம்பெயர்க் குழுக்களின் மீதான தடையை முன்னைய அரசாங்கம் நீக்கியமையடுத்து, அப்போதைய வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சுரேன் சுரேந்திரன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.

மிதவாதக் கருத்துகளைக் கொண்டுள்ளதாகக் கருதியே முன்னைய அரசாங்கமானது தடைப் பட்டியலிலிருந்து பெரும்பலான குழுக்களை நீக்கியிருந்தது. நல்லிணக்கத்துக்கான இவர்களின் ஆதரவைப் பெறும் வகையில், வடக்கில் அபிவிருத்திக்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த குழுக்கள் இன்னும் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளதாகவும், தேசிய பாதுகாப்புக் குந்தகமானதாகவுமே தற்போதைய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை மனித உரிமைகள் பிரச்சினையில் விமர்சித்த தமிழ் புலம்பெயர் சமூகம், சுவிற்ஸர்லாந்தின் ஜெனிவாவில் இலங்கைக்கெதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டிருந்தது.

வர்த்தமானி இணைப்பு

Source: chakkaram.com 2021 March 

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்