தடுப்பூசி ஏகாதிபத்தியம்: சீனா எதிர் மேற்குலகம் -லி ஸியு ஹின்

தடுப்பூசி பாகுபாடு: தடுப்பூசி பாகுபாடு: ப்பூசி பாகுபாடு: பணக்கார நாடுகள்

உயிர் காக்கும் தடுப்பூசியை சேமித்து வைத்திருக்கையில் ஏழை நாடுகளும்

இந்த நாடுகளிலுள்ள ஏழை மக்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சீனா இந்த

நோயை உருவாக்கும் நுண்ணுயிரியை கட்டுப்படுத்தியதையிட்டும், அது

உலகத்துக்கு தடுப்பூசியை வழங்கியது குறித்தும் மேற்கு நாடுகள்

 விமர்சிக்கின்றன.



எங்கள் உலகம் (Our World) என்ற இணையத்தளம் வழங்கிய தகவலின்

அடிப்படையில், உலகத்தில் சீனாவும் ரஸ்யாவுமே கொவிட் - 19இற்கு எதிரான

தடுப்பூசியை மக்களுக்கு செலுத்திய முதல் நாடுகளாகும். 2020 டிசம்பர் 15

 வரை 1.5 மில்லியன் சீன மக்கள் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுவிட்டனர்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் கூட, தடுப்பூசி போடும் இயக்கத்தை

 டிசம்பர் முற்பகுதியில் ஆரம்பித்துவிட்டாலும், டிசம்பர் 15 வரை அரை

 மில்லியன் மக்களுக்கு மட்டுமே அதைப் போட முடிந்தது.

முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட அல்லது முதல் கட்டத் தடுப்பூசி

போடப்பட்ட மக்களைப் பொறுத்தவரை சீனாவே முன்னணியில் உள்ள நாடாக

இருக்கின்றது. சீன ஊடகங்களின் தகவலின்படி, ஜனவரி 23 வரை

அமெரிக்காவுக்கு அடுத்ததாக சீனா 16 மில்லியன் பேருக்கு தடுப்பூசியைத்

செலுத்திவிட்டது. பெப்ருவரி 9 வரை சீனா 40.52 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

செலுத்தியிருக்க, அமெரிக்கா 43.2 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

செலுத்தியிருந்தது.


இது கிட்டத்தக்க கழுத்தோடு கழுத்து என்ற வகையிலான ஒரு ஓட்டம். சீன

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சீனப் புத்தாண்டின் போது (பெப்.11 – 17) வேகம்

குறைந்திருந்தது. பெப்ருவரி 21 வரை 63 மில்லியன் அமெரிக்க மக்கள்

 தடுப்பூசி பெற்றிருக்க சீனாவில் 53 மில்லியன் பேர் பெற்றிருந்தனர்.

 இப்பொழுது விடுமுறை முடிந்துவிட்டதால் சீனா வேகத்தை அதிகரித்து

 விரைவாகப் பழைய நிலையை எட்டிப் பிடித்துவிடும் என

எதிர்பார்க்கப்படுகிறது.


சீனாவும் அமெரிக்காவும் வித்தியாசமான சூழ்நிலைகளை 

 எதிர்நோக்குகின்றன. தற்போதைய போக்கில் அமெரிக்க தனது

சனத்தொகைக்கு ஆறு மாதங்களில் தடுப்பூசி ஏற்றி முடிக்க முடியும்.

 சீனாவைப் பொறுத்தவரையில் அதன் 140 கோடி சனத்தொகைக்கும்

 முழுமையாக தடுப்பூசி ஏற்றி முடிக்க இரண்டு வருடங்கள் வரை பிடிக்கலாம்

 என சிலர் கணிக்கின்றனர்.


எப்படி இருந்த போதிலும் அமெரிக்காவில் உள்ளது போல அல்லாமல், சீனாவில்

கொவிட் தொற்று தாழ்ந்த நிலையில் இருப்பதால், சீனாவின் பெருந்தொற்று

யுத்ததந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். “முழுமையான நோய்த்

 தடுப்பு” இலக்கை அடைவதற்காக சீனா முழுமையான தடுப்பூசித் தேவைக்கு

அவசரப்படத் தேவையில்லை. லி ஸியு ஹின் லி ஸியு ஹின் லி ஸியு ஹின்

சீனா ஏற்கெனவே பெருந்தொற்று யுத்தத்தில் வெற்றி அடைந்துள்ளதால், அது

இப்பொழுது புதிதாகப் பரவுவதைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது.

தடுப்பூசி ஏற்றுவதில் அது முதலில் மருத்துவ ஊழியர்களுக்கு முன்னுரிமை

வழங்கிய பின்னர், அடுத்ததாக பொதுமக்கள் தொடர்புள்ள மற்றும்

இறக்குமதிப் பொருட்களைக் கையாள்கின்ற தொழிலாளர்களுக்கு

முன்னுரிமை அளித்துள்ளது. மேற்கு நாடுகளில் இருப்பது போலல்லாது,

சீனாவில் முதியவர்களுக்கு இந்தத் தொற்று பாதிப்பது குறைவாக இருப்பதால்,

 பொதுத் தொழிலாளர்களுக்குப் பின்னரே அவர்களுக்கு முன்னுரிமை

 அளிக்கப்படும்.


மேற்கு நாடுகளில் பொதுத் தொழிலாளர்களே பட்டியில் தாழ்வான நிலையில்

 உள்ளனர். உலகளாவிய தடுப்பூசி ஏற்றும் ஓட்டப் உலகளாவிய தடுப்பூசி

 ஏற்றும் ஓட்டப் பந்தயத்துக்கு யார் தலைமை வகிக்கின்றனர்? வகிக்கின்றனர்?

பெப்ருவரி நடுப்பகுதியில் கொவிட் - 19இற்கான அவசர பயன்பட்டு அதிகாரம்

வழங்கப்பட்ட பின்னர், சைனோபாம்- பீஜிங், சைனோபாம்-வு+ஹான்,

கான்சைனோ மற்றும் சைனோவக் என்ற நான்கு வகைகளுடன் சீனா

 முன்னணியில் இருந்தது. அமெரிக்கா ஒன்றையும் (மொடேர்னா), அமெரிக்கா

 – ஜெர்மனி இணைந்து ஒன்றையும் (பைஃசர்.பயோஎன்ரெக்), பிரித்தானியா –

சுவீடன் இணைந்து ஒன்றையும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ராஸெனிகா), ரஸ்யா

இரண்டையும் (ஸ்புட்னிக் விஎபிவக்கொரோனா), இந்தியா ஒன்றையும்

(கொவக்ஸின்) கொண்டிருந்தன.


‘எங்கள் உலகம்’ தரவுகளின்படி, பெப்ருவரி 21 வரை கிட்டத்தக்க 98 நாடுகளும்

பிராந்தியங்களும் தடுப்பூசிக்கு பெறுவதற்கு கோரிக்கை விடுத்திருந்தன.

 அவற்றில் பெரும்பாலான – சுமார் 85 நாடுகள் மேற்கத்தைய தயாரிப்பான

 தடுப்பூசிகள் பெறுவதற்கு கோரியிருந்தன. 16 நாடுகள் வரையில் சீனத்

 தடுப்பூசி பெறவும், 9 நாடுகள் வரை ரஸ்ய தடுப்பூசி பெறவும்

வேண்டியிருந்தன.


எப்படியிருந்த போதிலும், “கோரிக்கை”யின் அர்த்தம் அவர்கள் தடுப்பூசியைப்

பெற்றுவிட்டார்கள் என்றோ அல்லது விரைவில் பெறுவார்கள் என்றோ

அர்த்தமாகாது. பெப்ருவரி 19இல் கொவிட் - 19 தடுப்பூசி சம்பந்தமான ஒரு

கூட்டத்தில் பேசிய ஐ.நாவின் செயலாளர் நாயகம் அன்ரோனியோ

 குற்ரெர்றெஸ் கொவிட் தடுப்பூசி பங்கிடப்பட்ட முறையை “பண்பாடற்றதும்

 அநீதியானதும் முறையற்றதும்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

 அதாவது அமெரிக்கா, கனடா மற்றும் எட்டு ஐரோப்பிய நாடுகள் உட்பட பத்து

 நாடுகள் 75 சதவீதமான தடுப்பூசியைப் பெற்றிருக்க, ஏனைய 130

நாடுகள் தனியொரு தடுப்பூசியைத் தன்னும் பெற்றிருக்கவில்லை.

நாயை நாய் உண்ணும் தடுப்பூசி தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும்

தடுப்பூசி புறக்கணி தடுப்பூசி புறக்கணிக்கும்  பணக்கார நாடுகள்

 கூடுதலான தடுப்பூசிகளைப் பதுக்கி வைத்துக்கொண்டு, வறிய நாடுகளுக்கு

 அதைக் கொடுப்பதற்கு மறுக்கின்றன.


ஐரோப்பாவுக்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும், ஏழை மக்களுக்கு

எதிராகப் பணக்காரர்கள், நிறம் குறைந்தவர்களுக்கு எதிராக

வௌ;ளையர்கள் - என ஒரு இனவாத கோபுரம். உணவு விநியோக

 சங்கிலியிலும் மேற்கத்தைய வௌ;ளைப் பணக்காரர்கள்

உச்சியில் இருக்க, நிறம் குறைந்த ஏழைகளும், வளர்முக நாடுகளும்

எப்பொழுதும் கீழ் நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

மிகவும் குறைந்த அளவிலான மேற்கத்தைய தயாரிப்பு தடுப்பூசியே

உலகின் தெற்குப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. “தடுப்பூசி

ஏகாதிபத்தியம்”, “இனவாத விநியோகம்” என்ற சொற்பதங்கள் எழுந்தமைக்கு

காரணம், பணக்கார நாடுகள் கூடுதலான தடுப்பூசிகளை வாங்கி

 வைத்துக்கொள்ள, மிகவும் குறைவாகவே வளர்முக நாடுகளுக்கு

 ஒதுக்கப்பட்டமையாகும்.


நியாயமான வகையில் தடுப்பூசி விநியோகத்தை மேற்கொள்வதற்காக உலக

சுகாதார ஸ்தாபனம் (WHO)  உலகளாவிய தடுப்பூசி இணைப்பணி

(GAVI) மற்றும் பெருந்தொற்று தயார்நிலைக்கான கூட்டமைப்பு (CEPI)

என்பன இணைந்து கோவாக்ஸ் (COVEX) என்ற அமைப்பை

 உருவாக்கியுள்ளன. இது, ஒரு வருடத்துக்குள் 190 நாடுகளில் வாழும்

மக்களுக்கு 200 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கிவிட முடியும் என

நம்புகிறது. 98 பணக்கார நாடுகள் தடுப்பூசிகளைப் பெறுகின்ற

 அதேநேரத்தில், 92 வறிய நாடுகளும் அதைப் பெறுவதை

உத்தரவாதப்படுத்த வேண்டும் என இது விரும்புகிறது.


கோவாக்ஸ் 600 கோடி டொலர்களைத் திரட்டியுள்ள போதிலும், 2021ஆம்

ஆண்டுக்கு மேலதிகமாக 200 கோடி டொலர்கள் தேவைப்படுகிறது.

கொவாக்ஸ்சுக்கு யார் நிதியளிக்கப் போகிறார்கள், அத்துடன் இதிலிருந்து

 யார் பயன் பெறப் போகிறார்கள்? கோவாக்ஸ் உருவானதிலிருந்து அது மேற்கு

நாடுகளுடனும் அவற்றின் மருந்து நிறுவனங்களுடனும் உலகளாவிய தடுப்பூசி

சந்தையில் அவை ஆதிக்கம் செலுத்துவதற்கு உதவுவதற்காக நெருங்கி

ஒத்துழைக்கிறது. கோவாக்ஸ்சுக்கு பிரித்தானியா (734 டொலர்கள்) மற்றும்

அமெரிக்கா (4 பில்லியன் டொலர்கள்) பெரும் நிதி கொடையாளர்களாக

இருக்கின்றன. இந்த நாடுகள் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும்

அஸ்ராஸெனிகா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு

 ஆரம்பத்திலேயே அங்கீகாரம் வழங்கி அவை உலகளாவிய தடுப்பூசி

 வழங்குநர்கள் ஆவதற்கு உதவியுள்ளன.


ஆனால், பெரிய கோரிக்கைகளின் அர்த்தம் அவர்கள் விரைவாக அந்த

வேண்டுதல்களை நிறைவேற்றி விடுவார்கள் என்பதல்ல. கோடிக்கணக்கான

தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டாலும், முதல் வழங்குதல்

மேற்கு நாடுகளுக்கே உத்தவாதப்படுத்தப்படும். ஏனைய நாடுகள்

பல மாதங்கள், குறைந்தது ஒரு வருடமாவது காத்திருக்க

வேண்டியிருக்கும். இந்த நிலைமையில், ஒக்ஸ்போர்ட்-அஸ்ராஸெனெகா

 (Oxford-AstraZeneca) தடுப்பூசிகளைப் பெறுவதில்

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள

யுத்தத்தால், மற்றைய நாடுகளுக்கு அவற்றை அனுப்புவது கடினமாக

இருக்கும்.


டியூக் பல்கலைக்கழகத்தின் (Duke University ) உலகளாவிய

 சௌக்கிய கண்டுபிடிப்பு நிலையத்தின் ஆராய்ச்சியின்படி ஜனவரி 19இல்

வெளியிட்ட தகவலில் உயர்ந்த வருமானமுள்ள நாடுகள் 4.2 பில்லியன்

தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள அதேநேரத்தில், கீழ் மத்தியதர

 மற்றும் குறைந்த வருமானமுள்ள நாடுகள் 700 மில்லியனுக்கும் குறைவான

தடுப்பூசிகளுக்கே கோரிக்கை விடுத்துள்ளன. ஒரு நாடு குறைந்தது 1

முதல் 2 வரையான ஆண்டுகளுக்கான விநியோகத்துக்கு முன் கோரிக்கை

விடுக்கலாம் என ஒருவர் வாதிடக்கூடும்.


ஆனால், பெரும்பாலான பணக்கார நாடுகள் தமது தேவைக்கும் மிக

 அதிகமாக முன் கோரிக்கைகள் விடுத்துள்ளன. உதாரணமாக,

- 450 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் தனது

மக்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு முறை தடுப்பூசி ஏற்றக்கூடிய அளவுக்கு

1.85 பில்லியன் தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. - 331 மில்லியன்

 சனத்தொகை கொண்ட அமெரிக்கா, தனது மக்கள் ஒவ்வொருவருக்கும்

 நான்கு முறை தடுப்பூசி ஏற்றக்கூடிய அளவுக்கு 1.21 பில்லியன்

 தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. - 25.5 மில்லியன் சனத்தொகை

 கொண்ட ஆஸ்திரேலியா, தனது மக்கள் ஒவ்வொருவருக்கும் 4.5 தடவைகள்

தடுப்பூசி ஏற்றக்கூடிய அளவுக்கு 115 மில்லியன் தடுப்பூசிகளுக்கு கோரிக்கை

விடுத்துள்ளது.


- மிகவும் அதிகப்படியான கோரிக்கைக்கு உதாரணம் கனடா. 37.7 மில்லியன் 

சனத்தொகை கொண்ட கனடா, தனது மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்பது

தடவைகள் தடுப்பூசி ஏற்றக்கூடிய அளவுக்கு 362 மில்லியன் தடுப்பூசிகளுக்கு

 கோரிக்கை விடுத்துள்ளது. இதனுடன் உலகின் தெற்குப்பக்க நிலைமையை

 ஒப்பிட்டுப் பார்த்தால் மிகவும் பயங்கரமானது. - 6.5 மில்லியன் சனத்தொகை

 கொண்ட தென் அமெரிக்காவிலுள்ள எல் சல்வடோர் நாட்டை எடுத்துப்

பார்த்தால், அந்த நாடு கோரிக்கை விடுத்துள்ள 2 மில்லியன் தடுப்பூசிகளில்

மூன்று பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்ற முடியும்.  - 1.32 பில்லியன் 

 சனத்தொகை கொண்ட ஆபிரிக்க யூனியன் அங்கத்துவ நாடுகள்

கோரிக்கை விடுத்துள்ள 270 மில்லியன் தடுப்பூசிகளில் ஐந்து பேரில்

 ஒருவருக்கு மட்டும் அல்லது சனத்தொகையில் 20 சதவீதத்தினருக்கு மட்டுமே

 தடுப்பூசி ஏற்ற முடியும். - 40 மில்லியன் சனத்தொகை கொண்ட ஈராக்

 கோரிக்கை விடுத்துள்ள 1.5 மில்லியன் தடுப்பூசிகளைக் கொண்டு 

சனத்தொகையில் 4 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும்.


ஏன் மேற்கு நாடுகள் மேலதிகமாக தடுப்பூசிகளை வாங்குகின்றன? அவர்கள்

தடுப்பூசி சந்தையில் தமது ஏகபோகத்தை நிலைநாட்டும் திட்டமொன்றை

வைத்திருப்பதாகச் சில செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு வைத்திருந்தால் சந்தையைத் தமது கட்டுப்பாட்டில்

 வைத்திருப்பதுடன் விலையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

 வருங்காலத்தில் அவர்கள் தமது “மேலதிகமான” தடுப்பூசிகளை வறிய

 நாடுகளுக்கு கூடுதலான விலைக்கு விற்கவோ அல்லது அதைப் பயன்படுத்தி

 அரசியல் பேரங்களில் ஈடுபடவோ முடியும்  மறுபக்கத்தில், தடுப்பூசி

 தேசியவாதம், தடுப்பூசி முற்றுகை, என்பனவற்றின் மூலம் மேற்கத்தைய

 பொருளாதாரங்கள் டொலர் இல்லாத, வங்கி பரிமாற்ற சக்தி இல்லாத

நாடுகளை தடுப்பூசி பெறுவதினின்றும் தடுக்க முடியும். 


இது மற்றைய  நாடுகளுக்கு எதிரான புதிய ஏகாதிபத்திய ஆயுதமாகும். ஈரான்

 மீதான  அமெரிக்காவின்  சட்ட விரோதமான பொருளாதாரத் தடை

 காரணமாக  ஏற்கெனவே  அவர்களால் வாழ்க்கையைப் பாதுகாக்கும்ிPநு

 மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியாத நிலையில், இப்பொழுது

தடுப்பூசியையும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில்

 அவர்களிடம் சர்வதேச வர்த்தகத்துக்கான பொது நாணயமான டொலர்

 இல்லாததுடன், சர்வதேச வங்கிப் பரிமாற்ற சேவையும்

 தடுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் சர்வதேச வங்கிப் பரிமாற்றத்துக்கு

அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படும் SWIFT இலக்கம் தேவை.

இஸ்ரேல் தனது முழுச் சனத்தொகைக்கும் குறுகிய காத்துக்குள் தடுப்பூசி

 ஏற்றிட, மறுபக்கத்தில் இனவாத சுவருக்கு அப்பால் உள்ள பாலஸ்தீன மக்கள்

 இந்த உயிர் காக்கும் தடுப்பூசியைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.


அமெரிக்காவில் தடுப்பூசியை வழங்குவதில் சமூக இனவாதம் சமூக 

இனவாதம் சமூக இனவாதம் அமெரிக்காவில் பெப்ருவரி மத்தி வரை

அண்ணளவாக தினசரி 1.5 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

ஆனால் நகரப்புறங்களிலுள்ள வௌ;ளையரல்லாத மக்களுக்கு தடுப்பூசி

வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்பட்டதற்கு சான்றுகள் உள்ளன.


இதைப் பின்னோக்கிப் பார்த்தால் இதற்கு இனவாதத்தினதும் பொருளாதார

ஒடுக்குமுறையினதும் வரலாற்று ரீதியான வேர்கள் இருப்பதைக் காண

 முடியும்.லொஸ் ஏன்ஜெல்ஸ் பகுதி தகவல்களின்படி, கறுப்பர்கள், ஆபிரிக்க

 அமெரிக்கர்கள், லத்தீனியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி

 வழங்கப்பட்டதைவிட, வௌ;ளையர்கள் மற்றும் ஆசியர்களுக்கு

 வழங்கப்பட்ட தடுப்பூசியின் விகிதாசாரம் தொடர்ந்து அதிகமாக இருந்து

 வந்துள்ளது.


- அமெரிக்க சனத்தொகையில் 16 வயதுக்கு மேற்பட்ட கறுப்பர்கள் மற்றும்

ஆபிரிக்க அமெரிகர்களின் தொகை 9 சதவீதமாக இருந்தபோதிலும்,

அவர்களில் 5.2 வீதம் பேருக்கே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

- சனத்தொகையில் 46 வீதமாக இருக்கும் 16 வயதுக்கு மேற்பட்ட

 லத்தீனியர்களில் - 23 வீதம் பேருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்குப் பிரதான காரணம், தடுப்பூசி போடுவதற்கான வசதியைப் பெறுவதில்

வறிய சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகையில், அந்தப்

புறக்கணிப்பு வௌ;ளையர்களுக்கு இல்லாதிருப்பதுதான். இதே

 நிலைமைதான் சிக்காக்கோவிலும் இருக்கின்றது. கார்டியன் செய்திப்

பக்திரிகை தெவிக்கும் தகவலின்படி,தொழில்நுட்பத் தடைகள், போதிய

மருந்தகங்கள் இல்லாமை என்பன காரணமாக வௌ;ளையர் அல்லாத

சிக்காக்கோவாசிகள் தடுப்பூசி போடுவதற்குப் பதிவு செய்வதில் பெரும்

சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். 


அப்பத்திரிகை தெரிவிக்கையில், “சிக்காக்கோ சனத்தொகையில் கறுப்பு

 இனத்தவர் 30 சதவீதமாகும். ஆனால் கொவிட் தொற்றைப் பொறுத்தவரையில்

 அவர்களில் 60 வீதமானோரை அது பாதித்திருக்கிறது. அத்துடன்,

 வைத்தியசாலைகள் பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை உணவுப்

 பற்றாக்குறை பற்றாக்குறை மற்றும் சமத்துவமின்மைகள் காரணமாக

 கொவிட் - 19 இந்தச் சமூகங்களின் ஆரோக்கியத்தை வெகுவாகப்

 பாதித்துள்ளது. முதற்கட்ட தடுப்பூசி . முதற்கட்ட  தடுப்பூசி . முதற்கட்ட

 தடுப்பூசி சுகாதாரத்துறை ஊழியர்கள், நீண்டகால பராமரிப்பு

 நிலையங்களில் உள்ளோர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கே

போடப்பட்டுள்ளது. அவர்கள் வசதியான வசதியான பகுதிகளில்

 வசிப்பவர்களும், வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்களுமாவர் பகுதிகளில்

 வசிப்பவர்களுமாவர்…”


ஆபிரிக்க அமெரிக்கர்களைப் பொறுத்தவரையில், வுரளமநபநந (ஆபிரிக்க

– அமெரிக்க இன ஆண்கள் மீது அமெரிக்க சுகாதாரத்துறை நடத்திய ஒரு

இரத்தப் பரிசோதனை) பரீட்சார்த்தம் என்பது வரலாற்று ரீதியான

 பொருளாதார மற்றும் மருத்துவ சமத்துவமின்மைக்கு குறிப்பிடக்கூடிய ஒரு

 உதாரணமாகும்.


அது இந்த புதிய கொவிட் - 19 விடயத்திலும் தொடர்கின்றது. கலிபோர்னியா

 பொதுக் கொள்கை நிறுவனம் 2020 ஒக்ரோபரில் வெயிளிட்ட 

அறிக்கையின்படி, இந்த மாகாணத்தில் உள்ள ஆபிரிக்க அமெரிக்கர்களில் 29

சதவீதத்தினர் மட்டுமே “நிச்சயமாக” அலலது “பெரும்பாலும்” கொவிட் - 19

தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.


அதேநேரத்தில் அங்கு 54 வீதமான லத்தீனியர்களும், 60 வீதமான

வௌ;ளையர்களும், 70 வீதமான ஆசியர்களும் இந்தத் தடுப்பூசியைப்

பெற்றுள்ளனர். வரலாற்றுத் தொடர்ச்சி காரணமாகவும், தடுப்பூசி

 நிலையங்களை அணுகுவதற்கு சரியான வழிகள் இல்லாமை

காரணமாகவும், வறிய மக்களைக் கொண்ட இந்தச் சமூகங்களும்,

 வௌ;ளையர் அல்லாதவர்களும் தடுப்பூசிக்கான போராட்டத்தில் நிச்சயமான

இழப்பாளர்களாகவே இருக்கின்றனர்.


சீனாவின் உலகளாவிய தடுப்பூசி ஒருமைப்பாடு ஒருமைப்பாடு சீனா

 கோவாக்ஸ்சின் ஆரம்ப தடுப்பூசிப் பட்டியலில் இல்லாதபோதும், மில்லியன்

கணக்கான தடுப்பூசிகளை உலகம் முழுவதும் - குறிப்பாக உலகின் தெற்குப்

பகுதிக்கு அனுப்பியுள்ளது. சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யி அவர்களின்

 கூற்றுப்படி, சீனா பெப்ருவரி நடுப்பகுதி வரை, சோமாலியா, ஈராக், தென்

சூடான், பலஸ்தீனம் உட்பட 53 வளர்முக நாடுகளுக்கு தடுப்பூசிகளை

 அன்பளிப்பாக வழங்கியுள்ளது. 22 நாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதியும்

 செய்துள்ளது.அத்துடன், 10 நாடுகளுடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி 

 சம்பந்தமான  கூட்டுத் திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. 


அதேநேரத்தில், உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க,

10 மில்லியன் தடுப்பூசிகளை கோவாக்ஸ்சுக்கு வழங்கியுள்ளது.

‘குளோபல் ரைம்ஸ்’ பத்திரிகை பெப்ருவரி 14இல் வெளியிட்ட தகவலின்படி,

குறைந்தது 40 நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றோ அல்லது

அன்பளிப்பாகவோ, 561 மில்லியன் சீனத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

 அவற்றில் சில பிரதான நாடுகள் ஆனவை: 

பெரு (38 மில்லியன்), மெக்சிக்கோ (35 மில்லியன்), இந்தோனேசியா (122.8

மில்லியன்), பிலிப்பைன்ஸ் (25 மில்லியன் - கூடுதலாக 0.6 மில்லியன்

 அன்பளிப்பு), துருக்கி (50 மில்லியன்), பிரேசில் (120 மில்லியன்), சிலி (60

 மில்லியன்). ஏனைய நாடுகள் கொலம்பியா, உருகுவே, மியன்மார், மலேசியா,

 தாய்லாந்து, லாவோஸ், மொரக்கோ, எகிப்து, சிசிலீஸ், சிம்பாப்வே, செனகல்,

 ஈகுவடோரியல் கினியா ஆகியனவாகும்.


ஐரோப்பாவைப் பொறுத்தவரையில், பிரித்தானியாவுக்கு அடுத்ததாக

 கூடுதலான அளவு தடுப்பூசி ஏற்றிய நாடான சேர்பியா சீனத் தடுப்பூசியைப்

 பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியன் சீனத் தடுப்பூசிகளுக்கு இதுவரை

 அங்கீகாரம் வழங்காத போதிலும், அந்தக் கூட்டமைப்பில் உள்ள முதலாவது

 நாடாக ஹங்கேரி சீனத் தடுப்பூசியைப் பெற்றுள்ளது.


சீனத் தடுப்பூசியின் வெற்றியானது, உலகம் பரந்த ரீதியில் அதன்

 உண்மையான ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. மேற்கு நாடுகள் இது

 பற்றி கேடுகெட்ட சநதேகமும், பொறாமையும் படுவது ஆச்சரியமான

 ஒன்றல்ல. சீன தடுப்பூசியின் நம்பகத்தனமை குறித்து அவை

ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புகின்றன. (கடந்த வருடம் அமெரிக்கா

 இவ்வாறுதான் “வு+ஹானில் உள்ள இராணுவ பரிசோதனைக் கூடத்தில்

இருந்துதான் இந்த தொற்றுக் கிருமி பரவியது” எனப் பிரச்சாரம் செய்தது)

எப்படியிருந்த போதிலும், கடந்த இரண்டு மாதங்களில் சீன தடுப்பூசிக்கு

ஆதவளிக்கும் வகையில், சில உலகத் தலைவர்கள் ஒளிப்படங்களுக்கு காட்சி

கொடுத்து சீனத் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களின் சிலரின்

விபரங்கள் வருமாறு:

- சிசிலீஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவான்

- துருக்கி ஜனாதிபதி ரேவ்யிப் எர்டோகன்

- இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ

வைடோடோ

- ஐக்கிய அரபுக் குடியரசின் பிரதமர் ஸேக்

மொகமட் பின் ரஸீட் அல் மக்ரூம்

- ஈகுவடோரியல் கினியா ஜனாதிபதி

ரியோடோரோ ஒபியாங்நிகுயிமா

எம்பாசோகோ

- சேர்பியன் ஜனாதிபதி அலெக்சாண்டர்

வூசிக்

- ஜோர்டான் பிரதமர் பிசேர் அல்-

காசோநெஹ்

- சிலி ஜனாதிபதி செபஸ்தியன் பினேரா

மேலும் பல உவகத் தலைவர்களும்,

அரசாங்க உயரதிகாரிகளும்.

ஏன்? பல நாடுகள் மேற்கத்தைய தடுப்பூசி ஏகாதிபத்தியத்திடமிருந்து

 தற்காப்புத் தேடுவதுடன், உலகின் தென் பகுதிக்கு சீனத் தடுப்பூசி

 பொருத்தமாக இருப்பதினாலும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கடுமையான

 குளிர்நிலைத் தேவை, தொழில்நுட்பம், அதிக விலை என்பனவற்றைக்

 கொண்ட பைஃஸர் மற்றும் ஆர்என்ஏ தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில்,

சீனாவின் தடுப்பூசி விலை மலிவானதும், சுலபமாகப் பெறக் கூடியதுமாகும்.

மேற்கு நாடுகளின் தடுப்பூசி இனவாதம், ஏகாதிபத்தியம், தவறான

 முகாமைத்துவம் என்பன காரணமாக தடுப்பூசி அபிவிருத்தியிலும்,

 விநியோகத்திலும், தடுப்பூசியைப் பெறுவதிலும் பெரும் குழறுபடிகள்

 நிகழ்ந்துள்ளது.


மேற்கத்தைய பிரதான ஊடகங்கள் சீன தடுப்பூசியின் நம்பகத்தன்மை

 குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்ற அதேவேளையில்,

 பைஃஸர் தடுப்பூசி போட்ட 23 நோர்வேஜிய முதியவர்கள் இறந்தது பற்றி

 பெரிதாக எதுவும் பேசுவதில்லை. எந்தவொரு ஊடகமும் விமர்சனபூர்வமான

விஞ்ஞான ஆய்வுகளை வெளியிடுவதில்லை. பெப்ருவரி 12 வரை ஏறத்தாழ 43

 மில்லியன் பேர் பைஃஸர் அல்லது மொடேர்னா த:ப்பூசியைப் பெற்ற

பின்னர் அவர்களில் 16,000 பேருக்கு (10,000 பேரில் 3 பேருக்கு) பாதகமான

விளைவுகள் ஏற்பட்டதாகத் தெரிய வந்தது. அமெரிக்காவில் இந்த

 தடுப்பூசிகளைப் போட்ட 929 பேர் மரணித்துள்ளனர். இந்த மரணங்களுக்கு

 மேற்படி தடுப்பூசிகளே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது.


காரணங்கள் என்னவாக இருந்தபோதிலும் மேற்கத்தைய ஊடகங்கள்

 இதுபற்றி மௌனமாக இருந்தன. அப்படியானால் நாம் என்ன செய்ய

 வேண்டும்? உலகம் முழுவதுமுள்ள இனவாத எதிர்ப்பு, சமூக, சமாதான, சமூக

 நீதிக்கான இயக்கங்களிலுள்ள செயற்பாட்டாளர்கள் மேற்கத்தைய

 நாடுகளிலுள்ள இராட்சத மருந்து கொம்பனிகள் தமது நாடுகளிலுள்ள

வௌ;ளையரல்லாத மக்கள் மீதும், உலகம்  முழுவதுமுள்ள வறிய நாடுகள்

 மீதும் மேற்கொள்ளும் இனவாத மற்றும் தடுப்பூசி ஏகாதிபத்திய

 செயற்பாடுகளை விமர்சிப்பதை அதிகரிக்க வேண்டும்.


தடுப்பூசி நியாயத்துக்கான ஒரு பரந்தளவிலான இயக்கத்தை ஆரம்பித்து

மேற்கு நாடுகளையும் அவற்றின் பல்தேசிய மருந்து கொம்பனிகளையும்

 பிடித்து பொறுப்புக் கூற வைக்க வேண்டும் என பலர் கோருகின்றனர். அதில்

 ஆர்வத்துடன் பங்குபற்றி ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு முன்வருமாறு

 சமூகங்களையும், உலகின் தெற்குப் பகுதியையும், சீனாவையும்

 அழைக்கின்றனர்.


பிளவுபட்டால் நாம் பிளவுபட்டால் நாம் வீழ்வோம், பிளவுபட்டால் நாம்

 வீழ்வோம், ஒன்றுபட்டால் நாம் வெல்வோம்! நாம் ஒன்றுபட்டால் நாம்

 வெல்வோம்! ஒன்றுபட்டு விரைவானதும், கூடுதலாக வழங்கக் கூடியதும்,

 கூடுதல் சமத்துவமானதுமான முறையில் உலகம் முழுவதுமுள்ள

 சமூகங்களுக்கு தடுப்பூசியை வழங்கக்கூடிய உலகளாவிய

ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும்.


(இந்தக் கட்டுரையை எழுதியுள்ள லீ ஸியு ஹின் (டுநந ளுரை ர்in) தேசிய

 குடியேற்ற ஒருமைப்பாட்டு வலையமைப்பு, சீன – அமெரிக்க ஒருமைப்பாட்டு

 வலையமைப்பு, அத்துடன் இரண்டு நாடுகளினதும் கல்வி மற்றும் சமூக

 செயற்பாட்டாளர்களை அடிமட்டத்தில் கலந்துரையாட வைக்கும்

மின்னணு - மருத்துவ கூட்டமைப்பு ((National Immigrant Solidarity Network, the China-U.S.

 Solidarity Network and eMedical Alliance) என்பனவற்றின் தேசிய

 ஒருங்கிணைப்பாளராவார். தற்பொழுது அவர் சமூக அடிப்படையிலான

 நீதியான உலகளாவிய தடுப்பூசி இயக்க நடவடிக்கைகளில்

 ஈடுபட்டிருக்கிறார்) 

Source: vanavil 123  ( March 2021)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...