இருபத்தியோராவது நூற்றாண்டுசீனாவின் நூற்றாண்டா….? -அண்ணா.நாகரத்தினம்


பிப்ரவரி 20, 2021


திர்கால உலகத்தின் கதை ஆசியாவில் தொடங்குகிறது என்றும், 2030 வாக்கில் 

சீனா உலகின் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் என்றும் 

பல சர்வதேச ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  இந்த நூற்றாண்டு, சீனவின் 

நூற்றாண்டாகத்  திகழும் என சர்வதேச உறவுகளைப் பற்றி ஆராயும் அறிஞர்கள் முன்மொழிந்திருக்கின்றனர்.  அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் இதையே சமீபத்தில் வழிமொழிந்திருக்கிறார். 

இந்த நூற்றாண்டில் உலக நாடுகளின் லைமைச் சக்தியாக  

சீனா மாறுவதற்கான  வாய்ப்புகள் யாவைஅதற்கு சீனா  கொண்டிருக்கும் 

சாதகபாதக அம்சங்கள்என்னென்ன  என்பதைப் பற்றி இக்கட்டுரை விவாதிக்கிறது.

புரட்சிக்கு பிந்தைய சீனா

ஏழுபது ஆண்டுகளுக்கு முன்பு, சீனா மிகவும் ஏழை நாடாக இருந்தது., பல ஏகாதிபத்திய நாடுகளின்கீழ் காலனியாக இருந்து, மோசமான முறையில் ஒடுக்கப்பட்டிருந்தது. 

மாவோவின் தலையிலான புரட்சி வெற்றிபெற்றதை அடுத்து, 1949 ஆம் ஆண்டில் சீன 

மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டமைக்கப்பட்டது.  அதே நேரத்தில்  சர்வதேச அளவிலிருந்து வந்த சவால்களையும் எதிர்கொண்டது. அதற்கு தக்கப்படி பின்னாளில் சீனா அரசியல் பொருளாதார

 கொள்கைகள் மாற்றங்களுக்கு உட்பட்டன.


திட்டமிட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாறியது. தொடக்க காலத்தில் மேற்கத்திய நாடுகள் சீனாவில் பெரிய அளவிலான முதலீட்டை செய்து அதிக இலாபங்களை அள்ளிச் சென்றன.  அதன் விளைவாக சீனா கடுமையான பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது.  அதன் பின்னர் சீனா தனது பொருளாதார வளர்ச்சியை 

மீட்டெடுத்து கொண்டது.  சீனா தனது 800 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து காப்பாற்றியது.  இதன் காரணமாக, உலகில் இருந்த  மொத்த வறுமைக் குறியீட்டுல் 

மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்தது.  மேலும்  உழைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்கள் அதிகரித்தன. மக்களின்  வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தது.  அவர்களின் ஆயுட்காலமும்  உயர்ந்தது. பல நூற்றாண்டுகளாக மிகவும் பின்தங்கியிருந்த சீனா, புதிய ஊக்கத்தையும் எழுச்சியையும் பெற்றது.

உலகமயபொருளாதாரத்தோடு இணைந்த சீனா

சீனாவின் உழைப்புச் சக்தி அபரிமிதமானது.  இதையே மூலாதாரமாக வைத்துக் கொண்டு, சீனா, உற்பத்தியைப் படிப்படியாக வளர்த்தது.  பின்னர் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம்  மிகப்பெரும் நுகர்வோர் சந்தையை உருவாக்கியது. சீனாவின் தேசிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது.  சீனா, ஆண்டுதோறும் இதர நாடுகளோடு ஒப்பிடும்போது அதிகமான வருடாந்திர வளர்ச்சி விகிதங்களைக் கொண்டிருந்தது.

அதற்கும் மேலாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் ஈர்க்கக் கூடியதாகவும், நீடித்த தன்மையுடைதாகவும் இருந்தது. எனவே, அந்நிய முதலீட்டை ஈர்த்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்தது.   மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் மேலும் வளர்ந்தது. மேற்கு நாடுகளில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.  நாளடைவில், மேற்கு நாடுகள் நீண்ட காலமாக சீனாவின் ஏகபோக உரிமையை ஏற்றுக் கொண்டிருந்தன.  2008 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி தொடங்கியதிலிருந்து, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45% வருவாயை சீனா ஈட்டியது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாகவும், அதன் அரசியல் நிலைத்தன்மை உறுதிமிக்கதாகவும் இருந்தது.

சீனாவின் இத்தகைய விரைவான வளர்ச்சி, உலகப் பொருளாதாரத்தின் முக்கியமான உந்துசக்தியாக மாறக்கூடும் என நம்பப்பட்டது. அவ்வாறே, சீனா உலகின் மிகப்பெரிய அல்லது இரண்டாவது பெரிய பொருளாதார நிலையை எட்டியது.  சீனாவின் இத்தகைய வளர்ச்சி மேற்கத்திய நாடுகளுக்கு அச்சத்தை ஊட்டின.  என்றாலும், மேற்கு நாடுகளும் பொருளாதார உறவுகளில் ஒன்றோடொன்று ஆழமாக இணைந்திருந்தன. இத்தகைய சர்வதேச உறவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நிலைத்தன்மையை  உருவாக்கிக் கொண்டது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியலில் ஸ்திரத்தன்மை கொண்டிருந்தது. சீனாவின் இந்த வளர்ச்சியை மேற்கத்திய நாடுகளால் பல ஆண்டுகளாக எந்த வகையிலும் தடுக்க முயற்சிக்க வில்லை.

சீனாவின் இத்தகைய வளர்ச்சி என்பது உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிறுவப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு வளர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவும், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்தைக் கேள்விக் கேட்கவோ அல்லது  அமெரிக்க தலைமையிலான புதிய உலக ஒழுங்கில்  தலையிடவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கத்திய நாடுகளுடனான நீண்டகால நட்புறவைக் கொண்டிருந்தது அதன் முக்கியச் செயல் தந்திரமாகும். சீனாவின் எழுச்சியானது,  அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான விரோதத்தை அதிகரிக்க செய்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா, சீனாவை  இஸ்லாமிய தீவிரவாதத்தை விட கடுமையான அச்சுறுத்தலாகப் பார்த்தது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு அச்சுறுத்தலாக சீனா இருப்பதாக உணர்ந்தது.

இருந்தபோதிலும், உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சீனா, அதன் பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அபரிமிதமாக வளர்ச்சியை அடைந்தது. அதேபோல உலகலாவிய பொருளாதார மாற்றத்திற்கு உத்துசக்தியாகவும் மாறியிருக்கிறது.

இனி, சீனா எவ்வாறு உலகப் பொருளாதார அமைப்பின் ஈர்ப்புமையமாகவும்,  புவிசார்ந்த அரசியலின் செயலூக்கியாகவும் மாறுவதற்கான அடிப்படையைக் கொண்டிருக்கிறது என்பதையும் அதற்காக, சீனாஅரசு வகுத்துள்ள குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்களையும், முதலில் பார்க்க இருக்கிறோம்.

மேக் இன் சைனா திட்டம்

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு உற்பத்திதான் முதுகெலும்பாக விளங்குகிறது. இதுதான் சீனாவின் தாரக மந்திரம். சீனா எப்போதுமே உற்பத்தித் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகின்றது.  சீனாவின் தொழில்துறையும், தொழில்நுட்பத் துறையும் ஒருங்கிணைந்த வகையில் வளர்ந்து வருகின்றன.  இதனால் சீனாவின் உற்பத்தித் துறைச் சார்ந்த வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இருந்தாலும் சீனப் பொருளாதாரம் வலுவானதாக இல்லை என்று கருதப்படுகிறது.  புதிய கண்டுபிடிப்புகளின் போதாமையும், வளங்களை முழுமையாகவும் திறனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளாமையும், டிஜிட்டல் மயமாதலில் தீவிரமின்மையும் இதற்கான காரணங்கள் ஆகும். இத்தகைய பலகீனங்களை களையும் நோக்கில், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் அனைத்து உற்பத்திச் சக்திகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என சீனா உறுதி கொண்டுள்ளது.

முதலில் உற்பத்தித் துறையை உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொண்டு ஒரு வலுவான பொருளாதாரக் கட்டுமானத்தை உருவாக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கயுள்ளது. இதற்கு  புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துடைமை ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் ஒரு வலுவான தேசத்தைக் கட்டமைக்க இயலும் என நம்புகிறது.

மேலும் இத்திட்டம் வணிகப் பரிவர்த்தனையை நவீனமயமாக்கி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடுகளை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்காக தொழில்நுட்பத்துறையில் சீனா, ‘சீனாநெட் அமைப்பு’ என்ற ஒரு வலைப்பின்னலைக் கட்டமைத்துள்ளது. இது செயற்கை நுண்ணறிவுத் திறங்களைக் கொண்ட ஒரு மூடுண்ட டிஜிட்டல் அமைப்பாகும். இந்த அமைப்புறை, குறைந்த செலவு,  வேகத்தை அதிகரித்தல்,  திறமையான வணிக விரிவாக்கம் ஆகியவற்றிற்காக பணமில்லாத பரிவர்த்தனையை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு, புதிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே, சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய திறனுள்ள பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கமுடியும் என்று சீனா உறுதியாக நம்புகிறது.

சீனாவின் குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள்

மேற்குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, சீனா, 2015  ஆம் ஆண்டில் தனது குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை வகுத்துள்ளது.  முதலாவது திட்டத்தின்மூலம், 2020 களில் சீனாவை ஒரு பெரிய உற்பத்தி சக்தியாக மாற்றுவது, தொழில்மயமாக்கலை துரிதமாக்கி, உற்பத்திச் சக்திகளை ஒருங்கிணைப்பது, உற்பத்தியில் டிஜிட்டல் மயமாக்கலை அதிகரிப்பது, உலகளவிய போட்டியை வலுப்படுத்துவது, தயாரிப்பு தரத்தை பெரிதும் மேம்படுத்துவது, டிஜிட்டல்மயமாக்கல், இணையம் மற்றும் உற்பத்தியின் தகவல்மயமாக்கல் ஆகியற்றில் முன்னேறுதல் ஆகிய செயலுக்திகளை வகுத்துள்ளது.

இரண்டாவது திட்டம், 2025 ஆம் ஆண்டில் உற்பத்தியின் தரத்தை பெரியளவில் மேம்படுத்துவது, புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, தொழிலாளர் உற்பத்தித்திறனை அதிகரிப்பது, தகவல் தொழில்நுட்பத் துறையை தொழில்துறையுடன் ஒருங்கிணைப்பது போன்ற இலக்குகளைக் கொண்டிருக்கின்றது. மேலும் சர்வதேச அளவில் சீனாவின் இத்தகைய தொழில்துறைத் தொகுதிகளை வலுவான முறையில் போட்டியிடுதல், மேலும் உலகளாவிய உழைப்பு பிரிவினை மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் சீனாவின் நிலையை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய இலக்குகளை முன்வைத்துள்ளது.

மூன்றாவது திட்டம், 2035 ஆம் ஆண்டுகளில் சர்வதேச உற்பத்திச் சக்திகளிடையே சீனா ஒரு இணைப்பு கண்ணியாக திகழ்வது, புதுமை திறன்களை பெரிதும் வளர்த்தெடுப்பது,  உற்பத்திச் சார்ந்த  முக்கிய துறைகளில் வளர்ச்சியை எட்டுவது, சர்வதேச அளவில் போட்டித்தன்மையை கணிசமாக அதிகரிப்பது, போன்றவை. அதாவது சீனா மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்களில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது போன்றவற்றை முதன்மைப்படுத்துகிறது.

இறுதியாக, 2049 வாக்கில், புதிய சீனாவைப் படைப்பது. இதில் உற்பத்தித் துறையானது மேலும் ஒருங்கிணைக்கப்பட்டு, உலகத்தில் உள்ள அனைத்து உற்பத்தி சக்திகளை விடவும் சீனா முன்னிலை வகிக்கும் என்றும் இதன் மூலம் சரவதேச அளவில் மிகவும் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைப்புகளை உருவாக்குவது என்றும் சீனா தனது இறுதி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், சீனா அதிஉயர் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த உற்பத்தித்துறையில் உலகளாவிய வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

தொழில்நுட்பத்தில் சீனாவின் வளர்ச்சிப் போக்கு

இனிவரும் காலம், நான்காம் தொழில்புரட்சியின் காலமாக இருக்க போகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய அலை வீசுகின்றது.  இந்தத் துறையில் முழுமையான வளர்ச்சியை எட்டுவதும் அதன் மூலம் ஒரு வலுவான உற்பத்தி, விநியோகம் ஆகிய  துறைகளை உருவாக்க சீனா திட்டமிட்டிருக்கிறது.

சீனா தனது 1.4 பில்லியன் குடிமக்களின் அனைத்து விவரங்களையும் மீப்பெரும் தரவுகளாகச் சேகரித்து வருகின்றது. இந்தத் தரவுகளை உள்ளீடுகளாகப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு அமைப்பை வளர்த்தெடுக்கவும் மாற்றியமைக்கவும்  திட்டமிட்டிருக்கிறது.

சீனா உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அமுல்படுத்துவத்தில் மும்முரம் காட்டிவருகின்றது.  இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் சீனா தனது பொருளாதாரக் கட்டுமானத்தை முழுமையாக மறுநிர்மாணம் செய்துகொள்ளமுடியும் என நம்புகிறது.

சீனா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறது, மரபியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், ரோபாட்டிக்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சியை உருவாக்குகிறது. நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களான ஹவாய் மற்றும் ZTE ஆகியவை உலகளாவிய நிறுவனங்களாக மாறி வருகின்றன. ஹூவாய் உலகின் ஆறாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இதில் 170,000 தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொலைதொடர்பை விரிவுப்படுத்தியுள்ளது. சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களில் 75,000 தொழிலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளது.

எனவேதான், ‘செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் தரவு என்பது பெட்ரோலியமாக இருந்திருந்தால், சீனா சவுதி அரேபியாவாக இருக்கும்’ என்று ஒப்புவமையுடன் கை ஃபூ லி என்பவர் தனது ‘செயற்கை நுண்ணறிவு வல்லரசுகள்:- சீனா, சிலிக்கான் பள்ளதாக்கு, மற்றும் புதிய உலக ஒழுங்கு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய வர்த்தக விரிவாக்கத்திற்கான சாலைத் திட்டங்கள்

சீனா தனது அனைத்துத் திட்டங்களையும் மேற்கண்ட புதிய சீனாவினை உருவாக்குவதற்கான நோக்கத்தோடு இணைக்கப்படுகின்றன. ‘புதிய பட்டுப் பாதைத் திட்டம்’ (Silk Road Economic Belt) என்ற திட்டமும் ‘ஒரே பிராந்தியம் ஒரே சாலை’ என்ற திட்டமும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படும் திட்டங்களாகும்.

முதலில் புதிய பட்டுப்பாதை திட்டத்தைப் பற்றி பார்ப்போம். பட்டுப்பாதை என்பது பழம்பெருமை வாய்ந்த சாலையாகும். முன்பு, சீனாவிலிருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் நடைபெற்ற தரைவழியிலான வர்த்தகத்தில் முக்கியமான சாலை இதுதான். இந்த தரைவழி வர்த்தகத்தில் சீனாவின் பட்டு முக்கிய வர்த்தக பொருளாக விளங்கியதால் இதற்கு பட்டு சாலை என பெயர் வந்தது. இந்த சாலை சீனா, இந்தியா, பெர்சியா, அரேபியா, எகிப்து, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்டு இருக்கிறது.

‘புதிய பட்டுபாதை திட்டம்’ சீன அதிபர் ஜி ஜிங்பிங்கால் தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இது ஒரு மாபெரும் பொருளாதார, வர்த்தக வலைப்பின்னலாகும். மேலும் சீனாவை மையப்படுத்திய மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

இந்தப் புதிய திட்டம் வெற்றியடைந்தால், கிழக்கத்திய நாடுகள் மற்றும் இதர உலக நாடுகளின் மையக் கேந்திரமாக சீனா உயரும் என்று கருதப்படுகிறது. அது சீனாவிற்கு மாபெரும் வெற்றியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்திட்டம், ஆசிய நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை பெருக்குவதற்கான திட்டம் என்றும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கே வர்த்தகத்தில் ஆசிய நாடுகள் சவாலாக இருக்கும் என்றும் சீன அரசு அறிவித்தது. இந்த புதிய பட்டுப்பாதை திட்டத்திற்காக சீன அரசு சுமார் 214 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

சீனாவின் அடுத்த பெரிய திட்டம்  ‘ஒரே பிராந்தியம் – ஒரே சாலை’ (One Belt, One Road ) என்ற திட்டமாகும். இது 2013 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. இது முக்கிய பொருளாதார மையங்களான துறைமுகங்கள், இரயில்வே பாதைகள், சாலைகள், குழாய்வழிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றை இணைக்கிறது. மேலும் தென் கிழக்காசியா, மத்திய ஆசியா, வளைகுடாப் பகுதி ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகியவறை தரை மார்க்கமாகவும்,  கடல் மார்க்கமாகவும் இணைக்கும் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அது மட்டுமல்ல, இது அண்டார்டிக், ஆர்க்டிக், ஆப்பிரிக்கா, பசிபித் தீவுகள் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்குவதன் மூலம் மாபெரும் யூரேசிய கண்டத்தை உருவாக்கும் போர்த்தந்திரத்துடன் இணைக்கப் பட்ட மெகா திட்டமாகும்.

இதற்காக சீனா, 126 பில்லியன் டாலர்களிய ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக சுமார் 80 நாடுகள் மற்றும் பல பன்னாட்டு அமைப்புகள், சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சீனாவின் மகத்தான அரசியல் நிகழ்ச்சி நிரலான இந்த ஒரே பிராந்தியம் – ஒரே சாலை திட்ட முன்முயற்சியை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி நோக்கங்களோடு  இணைத்துள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் சீனா

மேற்கண்ட திட்டங்கள் பிராந்திய அளவில் வர்த்தகத்தைப் பெருக்கும் சீனாவின்  முயற்சிகளுக்கு மிகப்பெரிய அடித்தளமாக விளங்கும் என சீனா கூறுகிறது.  இப்போது சீனா, உலக அளவில் முதன்மையான வர்த்தக நாடாக உள்ளது. உலகிலேயே மிகவும் அதிகமாக ஏற்றுமதி செய்யக்கூடிய நாடும் சீனாதான். உலக நாடுகளுக்கு பல்வேறு பொருட்களை சீனா ஏற்றுமதிச் செய்கிறது. அதிலும் உற்பத்தித் துறையைச் சார்ந்த பொருட்களைத்தான் மிகுதியாக ஏற்றுமதி செய்கிறது. இதில் முன்னிலை வகிப்பது டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஆகும். மேலும் விலையுயர்ந்த உலோகங்கள், ரப்பர் டயர்கள், ஒயர்கள், வீடியோ உபகரணங்கள், குறைந்த மின்சக்தியால் இயக்கும் உபகரணங்கள், பொம்மைகள், தேயிலை, மரங்கள், தாதுக்கள், பேப்பர், சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோலியம் போன்ற பொருட்களையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.


Source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...