மிஷெல் பஷ்லேயின் அறிக்கை உண்மையான கள நிலைமையைப் புறக்கணிக்கின்றது -தினேஷ் குணவர்தன

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷெல் பஷ்லே (Michelle Bachelet)  யின் அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமை பற்றிய யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை என்றும், இலங்கை அடைந்துள்ளமுன்னேற்றங்கள் குறித்து அது முறையாக ஆராயவில்லை என்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து வெளிவரும் சண்டே ஒப்சேர்வர் ( Sunday Observer) பத்திரிகைக்கு, 14.02.2021 அன்று அளித்த பேட்டியில் அமைச்சர், ஏன் இந்த குற்றச்சாட்டுகள் களத்தின் உண்மை நிலைபற்றி ஆராயாமல் செய்யப்படுகின்றன என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். நாங்களும் ஐ.நா.வின் ஓர் அங்கத்துவ நாடாக இருப்பதால், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற இலங்கை ஈடுபாடு காட்டும் பகுதிகள் குறித்து இலங்கை அரசு ஏற்கனவே பதிலளித்தும், மேலதிக விளக்கங்களைத் தெரிவித்துமுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச விவகாரங்களில் ஏனைய நாடுகளைப் போலவே இலங்கை கூட்டுப்புரிந்துணர்வை கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் குணவர்த்தனதெரிவித்தார். மிகக் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில்சீர்குலைக்கும் நடவடிக்கையைச் செய்வதை விட, எமது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான இறையாண்மை மற்றும் ஜனநாயகத்திற்கான கொள்கைகளுக்கான எங்களது அழைப்பு முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

கேள்வி: ஜெனீவாவில் எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சவாலை எதிர்கொள்ள அரசாங்கம் எவ்வாறு தயாராக உள்ளது?


பதில்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (OICHR) தனது வருடாந்தஅறிக்கையில், வழமைபோல் பல முக்கிய பயனுள்ள மற்றும் உண்மைத் தன்மைமிக்க பகுதிகளைக் புறக்கணித்து, பொதுவான பரிந்துரைகளைச் செய்துள்ளது. நாங்கள் இணை அனுசரணையிலிருந்து விலகிக்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையினது தீர்மானம் 30ஃ1 இன் முக்கிய பகுதி உட்பட, எழுப்பப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகளுக்கு எமதுவெளிவிவகார அமைச்சு பதிலளித்துள்ளது. எனினும், அரசாங்கத்தின் எல்லாவித உள் விவகாரங்கள் குறித்துச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஏனைய விடயங்கள் மற்றும் கடந்த ஆண்டு நாங்கள் அளித்த உறுதிமொழிகளுக்கு அமைவாக நாங்கள் தொடர்ந்து இருந்து வருகிறோம். இந்த விவகாரத்தில் எந்த விதமான தொடர்புமில்லை என்று நாங்கள் கருதுகின்ற ஜனாதிபதித் தேர்தல்முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. 

இலங்கை ஒரு நீண்டகால பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. ஓர்அறுதிப் பெரும்பான்மையுடன் புதிய பாராளுமன்றத்தை மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஜனாதிபதிக்கு ஒரு வலுவான ஆணை கிடைத்துள்ளது.

நாங்கள் ஆசியாவின் மிகப்பழமையான ஜனநாயகங்களில் ஒன்றாக இருக்கிறோம். ஐ.நா. உயர்ஸ்தானிகர் அறிக்கையில் உள்ள சிறிய உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் குறிப்புக்கள் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்புஎன்பதை ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக் கொண்டுள்ள போது, பின்னர் எமது யுத்த வீரர்களால் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை சில தரப்பினர் தவறாக அர்த்தப்படுத்த ஏன் முயற்சிக்க வேண்டும்?

பதில்: மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக உலகநாடுகளால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை தோற்கடித்தது. சில மேற்கத்திய நாடுகளிடமிருந்து ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் தவறான வழிகாட்டுதலையும் கற்பனையான ஆலோசனைகளையும் வழங்குவதன் மூலம், புலம்பெயர்ந்தவர்கள் போன்ற பல்வேறு தரப்பினரும் பிரச்சினைகளை எழுப்ப முயன்று வருகின்றனர்.

புலிகளின் மீளுருவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்த நாடுகள் புலிகள் மீதான தடையினை இந்த வேளையில் கூட புதுப்பிக்கின்றன என்பதை, நாங்கள் மறந்துவிடக்கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளமைத்தலிலும், அந்தப் பகுதிகளில் இயல்பு நிலையை மீளக்கொண்டு வருவதிலும், இலங்கை பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.

கேள்வி: இந்த மனித உரிமை மீறல்கள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஏன் இவ்வளவு காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன? ஐ.நா. மனித உரிமைப் பேரவை தீர்மானம் 30ஃ1 இற்கு அமெரிக்காவுடன் சேர்ந்து இணை அனுசரணை வழங்கும் முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவு என்பது இதற்கு முக்கியமானதாக அமைந்ததா?

பதில்: முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள், எங்கள் நாட்டுக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைப்பேரவை தீர்மானம் 30ஃ1 இற்கு அனுசரணை வழங்குவதற்கு வழிவகை செய்துள்ளது. 30 வருடங்களின் பின்னர் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்து, எமது பாதுகாப்பு படையினர் வெற்றியைக் கொண்டு வந்தனர். எமது உள்ளக விவகாரங்களில் தீர்ப்புகள் வழங்க, வெளிநாட்டு நீதிபதிகளுக்கு அழைப்பு விடுவது என்பது எமது அரசியலமைப்பில் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஐ.நா.மனித உரிமைப் பேரவை அமர்வில், தீர்மானம் 30/1 இற்கான இணை அனுசரணையிலிருந்து நாங்கள் வெளியேறிய போது, இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு மீறல்கள் எனப்படுபவை தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கும் உள்நாட்டு பொறிமுறைக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையேற்று விசாரிப்பாரென ஜனாதிபதி உறுதியளித்தார்.

எமது பாதுகாப்பு படையினரால் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தைப் பாராட்டியவர்களின் யதார்த்தங்களுக்கு புதிய தொடக்கத்தினை வழங்கும் வகையில், பிரபு நேஸ்பி (Lord Naseby ) யால் பாராளுமன்றப் பிரதிநிதிகளின் கருத்துக்கூறும் சபை (ர்ழரளந ழக ஊழஅஅழளெ) யில் வெளியிடப்பட்டதும் மேற்கோள் காட்டப்பட்டவைகளையும் உள்ளடக்கியதாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தின் இரகசிய அறிக்கைகள் அமைந்துள்ளன.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற வடக்கில் உள்ள சில தமிழ் அரசியல் கட்சிகளும், இலங்கை மீது சுமத்தப்படும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகத் தெரிகிறது. இதுபற்றி உங்கள் கருத்துக்கள்?

பதில்: வடக்கிலும் கிழக்கிலும் மற்றும் ஏனைய பகுதிகளிலும் வாழும் எமது நாட்டு மக்களின் அன்றாட அபிவிருத்தி, சிறந்த வாழ்வாதாரம் மற்றும் சிறந்த எதிர்கால வாய்ப்புக்கள் என்பன அவர்களது (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) குறிக்கோளாக அல்லாது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எப்போதும் ஒரு தீவிர நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றனர். மேற்கத்தைய நாட்டுத் தலைநகரங்களில் உள்ள குழுக்களிடம் அரசியல் ஆதரவு பெறும் முயற்சியில் பொய்களுடன் தங்கள் அரசியல் கட்டமைப்பில் அவர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர்.

எனினும், எமது யுத்த வீரர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முன்னால் கொண்டு வரவேண்டுமென அழுத்தம் கொடுக்கும் வடக்கிலுள்ள இதே தமிழ் தலைவர்கள் தான், 2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து, பொது எதிரணி வேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டுமென வடக்குக் கிழக்கில் உள்ள மக்களுக்கு அழைப்பும் விடுத்தனர். வடக்கில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களின் இரட்டை நிலைப்பாடும் சில மேற்குலக நாடுகளினால் முன்வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும் இதற்கு மிகவும் ஒத்த தன்மையாக உள்ளது. 2009 இல் பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர், மனித உரிமை மீறல்கள் தொடர்பான இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் எமக்கு எதிராக சுமத்தப்படுகின்றன.

இலங்கைக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்க “சேனல்  4” (“Channel 4”) என்ற இன்னுமொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. எனினும், எங்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் திட்டவட்டமாக மறுத்து பதிலளித்துள்ளோம்.

கேள்வி: ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்வுகளில், சொந்த நலன்களைக் கொண்ட சக்திகளால் முன்வைக்கப்படும் எந்தவொரு சவாலையும் கூட்டாக எதிர்கொள்ள நட்பு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: அணிசேரா இயக்கத்தின் ஒரு முன்னோடியாக, கொமன்வெல்த் (Commonwealth ) மற்றும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான சங்கம் (ளுயுயுசுஊ) ஆகியவற்றின் ஓர் உறுப்பினராக, எமது நட்பு நாடுகளின் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் இலங்கை எப்போதும் வென்றுள்ளது.

இலங்கை 60 வருடங்களுக்கு மேலாக செய்து வரும் அர்ப்பணிப்பு, ஐக்கிய நாடுகள் வலையமைப்பிற்கு உதவி புரிவதற்கு பங்களிப்பும் செய்துள்ளது. கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவதற்காக, நேர்மையானதும் நியாயமானதுமான ஒரு விவாதம் எங்களுக்கு வழங்கப்படுவது சாத்தியமாகவிருந்தால், எங்கள் கருத்து பெரும்பான்மையினரால்  ஏற்றுக்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆனால், நாம் முன்னர் செய்தது போன்று வெளிநாட்டு தூதுக்குழுவினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள், கூடுவதற்கோ, கலந்துரையாடுவதற்கோ, பேசுவதற்கோ அல்லது பிரச்சனைகளை விவாதிப்பதற்கோ இயலாத ஒரு காணொலி வாயிலான மாநாடகவே, ஐ.நா. மனித உரிமைப்பேரவை கலந்துரையாடல்களை பெப்ரவரி 22ந் திகதியிலிருந்து ஜெனீவாவில் நடத்த உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கேள்வி:  “ஜெனீவா சவாலை” (“Geneva challange”) தோற்கடிக்க, அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் வேறுபாடுகளைக் பொருட்படுத்தாது கைகோர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: ஏனைய நாடுகளைப் போலவே சர்வதேச விவகாரங்களிலும் இலங்கை ஒரு கூட்டு புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும். எமது தாய்நாட்டைப் பாதுகாக்க இறையாண்மை மற்றும் ஜனநாயகத்திற்கான கொள்கைகளுக்கான எங்களது அழைப்பு, மிகக் குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் சீர்குலைப்பதற்காக வேலை செய்வதை விட, முன்னுரிமை கொண்டதாக இருக்க வேண்டும்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பஷ்லேயின் அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க என்ன காரணம்? அவர் தனது ஆணைக்கு அப்பால் சென்று விட்டார் என்ற கருத்து அரசுக்கு உள்ளதா?

பதில்: அடைந்துள்ள முன்னேற்றத்தை அறிக்கை முறையாக ஆய்வு செய்யாததின் காரணமாக, இந்த அறிக்கையானது உண்மையான கள நிலைமையை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இதுவே பல பிரச்சனைகளுக்கு அடித்தளமாக உள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளை நாங்கள் பார்த்தால், உலகம் இந்த மாதிரி ஈடாட்டம் காணவில்லை. எனினும்,கோவிட்-19 நிலைமையை இலங்கையால் கட்டுப்படுத்த முடிந்தது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு மத்தியில், மக்களின் உயிர்கள் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் எமது நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கோவிட்-19 பெருந்தொற்று நிலைமையின் போது இதுவே மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகின்றது.

உண்மை நிலை பற்றி ஆராயாமல் ஏன் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்று எனக்குப் புரியவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் வேண்டுமென்றே இது மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஈடுபாடு காட்டும் பகுதிகள் குறித்து நாங்கள் பதிலளித்தும், மேலதிக விளக்கங்களைத் தெரிவித்துமுள்ளோம்.

ஐ.நா. அமைப்பின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதன் மூலம் நாங்கள் ஐ.நாவின் உறுப்பினர்களாக இருக்கின்றோம்.

கேள்வி: உங்களைப் பொறுத்தவரை, சில மேற்கத்திய சக்திகள் எதற்காக நமது போர் வீரர்களுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்?

பதில்: முழு தேசத்தின் சார்பாகவும் எமது போர் வீரர்கள் செயல்பட்டனர். தமிழ் அரசியல் தலைவர்களுக்குக்கூட அவர்கள் பாதுகாப்பு வழங்கினார்கள். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவோ அல்லது சர்வதேச போர் நீதிமன்றத்தின் முன் அவர்களை கொண்டு வரவோ நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. மனிதாபிமான நடவடிக்கையில் எமது போர் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். எனவே, எமது யுத்த வீரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெறுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.

கேள்வி: பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவில்லை என்ற கவலைகள் எழுப்பப்பட்டுள்ளனவா?

பதில்: இழைக்கப்பட்ட எந்தவொரு அநீதி தொடர்பாக நீதித் துறையின் உதவியை எந்த ஒரு குடிமகனும் நாடலாம். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு அப்பாலும் அவர்கள் போகலாம். அத்துடன் பரணகம (Paranagama ) அறிக்கை மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (டுடுசுஊ) அறிக்கையின் பிரகாரமும் அவர்கள் செயற்படமுடியும். மேலும், அவரது ஃ அவளது சொந்த ஆதாரங்களை எவரும் தனியாக கொடுக்க முடியும்.

கேள்வி: பெப்ரவரி 8ந் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் பாராளுமன்றத்தில் அரசியல் பழிவாங்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: சமர்ப்பிக்கப்படக்கூடிய பகிரங்க அறிக்கைகள் எப்போதும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். பாராளுமன்றம் விரும்பும் பட்சத்தில், இந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவும் முடியும். எனினும், இவை அனைத்தும் பாராளுமன்றம் வழங்கும் நேரத்தில் தங்கியுள்ளன.

கேள்வி: அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மூலமாக பாராளுமன்றத்தின் பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் குடியியல் உரிமைகளை பறிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இது தொடர்பாக உங்கள் கருத்துக்கள்?

பதில்: முதலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, அதனை சபாநாயகர் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் இந்த அறிக்கையில் என்ன உள்ளடங்கியுள்ளது என்பது பற்றி நாம் விவாதிக்கலாம். அறிக்கையை படிக்காமல் முடிவுகளில் குதிப்பதை விட, எது மிக முக்கியமானது என்பதை அறிந்து கொள்வது மக்களின் உரிமை.

கேள்வி: ஜனாதிபதி கட்சிக்கு தலைமை தாங்க வேண்டுமென அமைச்சர்  விமல் வீரவன்ச உள்ளுர் வாரப்பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்த அவரது கருத்துக்காக, விமல் வீரவன்ச பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென இலங்கை பொதுஜன பெரமுனா (SLPP ) பொதுச் செயலாளர் சகர காரியவாசம் (Sakara kariyavasam) அண்மையில் ஓர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது பற்றி நீங்கள் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: இவை எப்போதும் விவாதங்களின் மூலம் கடக்கக்கூடிய உட்கட்சி விவகாரங்களாக இருக்கின்றன என்பதை நான் அவைத்தலைவர் என்ற வகையில் (டுநயனநச ழக வாந ரழரளந) கூற விரும்புகிறேன்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படையின் (STF ) பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவலைகளை எழுப்பியுள்ளன. இதுபற்றிய உங்கள் பார்வைகள்?

பதில்: இந்த மாதிரியான முடிவுகளை  எடுப்பது முழுக்க முழுக்க பாதுகாப்பு அதிகாரிகளைப் பொறுத்தது. பாதுகாப்பினை வழங்குவதற்காக வெவ்வேறு மக்கள் வெவ்வேறு எண்களுடன் வெவ்வேறு பிரிவுகளையும் கொண்டிருக்கிறார்கள். எனவே, எந்தவொரு விஷயமும் கருத்திலெடுக்கப்படுவதாக இருந்தால், அது சபாநாயகரைப் பொறுத்தது.

கேள்வி: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் பல முக்கிய நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்ற ஊகங்கள் உள்ளன. இந்த துயர சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை  தாமதமின்றி கைது செய்ய அரசாங்கத்தால் முடியுமா?

பதில்: ஆணைக்குழு நீண்ட காலமாகவே உட்கார்ந்து கொண்டிருந்தது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இது பொதுமக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரிய வேண்டும். நீதித்துறை செயல்முறையால் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால், அதுவும் விவாதிக்கப்படும்.

பேட்டி கண்டவர்: உடித குமாரசிங்க பேட்டி கண்டவர்: உடித குமாரசிங்க

(Uditha Kumarasingha )

தமிழில்: வானவில் 
No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...