‘வானவில்’ ஜெமினிக்கு அஞ்சலி

 


2001 ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மன் - 2001 ஸ்ருட்காட் நகரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘தேனீ’ இணையத்தளத்தின் நிறுவனர் 22.01.2021 இல் காலமாகினார். புங்குடுதீவினை பிறப்பிடமாகக் கொண்ட இவருக்கு 56 வயதாகின்றது.

இலங்கையிலிருந்து 1985 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்த இவர் மிகுந்த சமூக அக்கறை கொண்டவராக விளங்கினார். அதனால் ஆரம்ப காலங்களில் பொதுவாக எல்லா தமிழ் இளைஞர்கள் போலவேää தமிழ் தேசியவாத கருத்தியலின் மீது ஈடுபாடு காட்டினார்.


ஈரோஸ் இயக்கத்தின் ஆதரவாளராகவும் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களுடன் நல்ல நட்புறவும் பூண்டிருந்தார். அத்தோடு நின்றுவிடாது எழுத்துத்துறையிலும் கால் பதித்தார்.

ஜேர்மனியிலிருந்து ‘தேனீ’, ‘அக்னி’ என்ற சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார். பின்னர் 2001 ஆம் ஆண்டு ‘தேனீ’ என்ற இணையத்தை ஆரம்பித்தார். இலங்கை சமூகää அரசியல் நிலவரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது என்பதற்கும் அப்பால், இலங்கையில் புரையோடிருக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆழமான கருத்துக்களையும் கொண்டுசெல்ல வேண்டுமெனபதிலும் ‘தேனீ’ இணையம் முனைப்பாக செயற்பட்டது.

குறிப்பாக புலிகளின் கொலைக் கலாச்சாரத்தை தயவுதாட்சண்யமின்றி விமர்சிப்பதில் 2009 ஆண்டு வரை முன்னணியில் நின்ற சுதந்திரமான ஒரேயொரு ஊடகமாக ‘தேனீ’ இணையம் விளங்கியது. மேலும் இலங்கையிலிருந்து புலம்பெயர் சமூகம்வரை மாற்றுக்கருத்துக் கொண்ட அனைவருக்குமே ‘தேனீ’ களம் அமைத்துக் கொடுத்திருந்தது.

மிகக்குறுகிய காலத்திலேயே நாளாந்தம் பல ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் இணையமாக ‘தேனீ’ வளர்ச்சி அடைந்தது. ‘தேனீ’ இணையத்தில் வெளியாகும் கருத்துக்களை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினையும் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தொடர்ச்சியாக ‘தேனீ’ மீது மிரட்டல்கள் விடுத்தும், அவதூறுகளையும் வசைகளையும் பொழிந்தனர். ஆனால் துணிச்சல் மிகுந்த ஜெமினி சகலவற்றிற்கும் முகங்கொடுக்க தயாராகவே இருந்தார். முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் பின்னர் நிம்மதிப்  ருமூச்செறிந்தவர்களில் ஜெமினியும் ஒருவர். 

‘வானவில்’ பத்திரிகை 2011 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கிய போதுää ‘வானவில்’ கட்டுரைகளை மறுபிரசுரம் செய்துää வானவில்லிற்கு பரந்த அறிமுகத்தை ‘தேனீ’ இணையம் ஏற்படுத்திக் கொடுத்ததை நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்து, ‘வானவில்’ ஜெமினிக்கு அஞ்சலி செலுத்தி நிற்கின்றது.

No comments:

Post a Comment

தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா-– இணைப்பேராசிரியர் சோம்தீப் சென் (Somdeep Sen)

Home கண்ணோட்டம் தற்போது உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்துத்துவா அக்டோபர் 1, 2022 இ ந்தியாவின் இந்து வலதுசாரிகள் நீண்ட காலமாக உலகம் ...