மீண்டும் ஆரம்பமாகியுள்ள சீன விரோத கூச்சலின் பின்னணி என்ன?- எஸ்.கணேசவேல்

 இலங்கை தமிழர்களின் அரசியலிலும், ஊடகங்களிலும் சீன விரோதம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது. இந்த சீன விரோதப் போக்கின் பொதுவான அடிப்படை இலங்கைத் தமிழர்களின் நிலப்பிரபுத்துவ பழமைவாதம் ஏகாதிபத்திய சார்புப் போக்கு என்பனவற்றின் மீது தோன்றிய கம்யூனிச விரோதப் போக்கே. தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய ஜீ.ஜீ.பொன்னம்பலம் வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பு நிலப்பிரபுத்துவவாதி.

 

அவர் 1956 பொதுத் தேர்தலின் போது பருத்தித்துறை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்ட பொன்கந்தையாவுக்கு எதிராக அல்வாய் மாலுசந்தியில் நடைபெற்ற தமிழ் காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது,கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் வெற்றி பெற்றால் கோயில்களை இடிப்பார்கள்ää நளம் பள்ளுகளை கோயிலுக்கை போக விடுவார்கள்எனப் பகிரங்கமாகவே பேசினார். பின்னர் தமிழ் காங்கிரசிலிருந்து பிரிந்துபோய் தமிழரசுக் கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் பொன்னம்பலத்துக்கு குறைந்தவர் அல்லஅவர் வெளிப்படையாக சாதிவாதம் கம்யூனிச எதிர்ப்பு பேசாவிட்டாலும், வரும்  பொன்னம்பலத்தின் அடிச்சுவட்டையே பின்பற்றினார்.

 

தமிழரசுக் கட்சி 1956 இல் பண்டாரநாயக்க அரசு கொண்டுவந்த தனிச்சிங்களம்சட்டத்தை வைத்தே தனதுமொழிப் பிரச்சினைஅரசியலை நடத்தியது. பண்டாரநாயக்க அரசாங்கம் கொண்டுவந்த அந்தச் சட்டத்தை இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி,, லங்கா சமசமாஜக் கட்சி என்பனவும் தீவிரமாக எதிர்த்தன. ஆனால் அந்தக் கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட செல்வநாயகம் விரும்பவில்லை. மாறாக அந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே செல்வநாயகத்தின் கட்சி எப்போதும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டது. செல்வநாயகத்தின் மருமகன் காலஞ்சென்ற .ஜே.வில்சன் ஒரு பிரபலமான அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர். அவரே தனது மாமனார் செல்வநாயகத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிபபிடும்போது, அவருக்கு மார்க்சியம் என்றால் கசபபான விடயம்எனக் குறிப்பிடுகிறார்.

 

சாதிப் பிரச்சினையிலும் செல்வநாயகம் பொன்னம்பலம் போல வெளிப்படையாகச் சாதி பேசாவிட்டாலும் இரட்டை நிலைப்பாட்டிலேயே நின்றார். 1960 களில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தியபோது தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையிலும்ää அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் செல்வநாயகம் அந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்வைக்காண முன்வரவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம்.நான் ஒரு கிறிஸ்தவன். எப்படி சைவர்களின் பிரச்சினையில் தலையிடுவது?’ என்பதே. அப்படியானால் சைவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ் சமூகத்துக்கும் நீங்கள் தலைவராக இருக்க முடியாதே?

இந்த அடிப்படைகள்தான் தமிழ் அரசியல்வாதிகளின் கம்யூனிச எதிர்ப்புக்கும் சீன எதிர்ப்புக்கும் காரணம்அதனால்தான், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டு எல்லை யுத்தம் நடந்தபோது தமிழ் அரசியல் தலைமைகள் ஒருதலைப்பட்சமாக சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்அப்பொழுது செல்வநாயகத்தின் மகன் சிலரைச் சேர்த்துக் கொண்டு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போய் கொழும்பு துறைமுகத் தொழிற்சங்க உறுப்பினர்களால் விரட்டப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. செல்வநாயகத்துக்கு சொந்தமான. கோவை மகேசன் என்ற பிராமணரை ஆசிரியராகக் கொண்டு வெளியான சுதந்திரன் பத்திரிகை சீன எதிர்ப்பு,கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்களையே தனது தலையாய பணியாகச் செய்து வந்தது.

அந்த நேரத்தில் யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த ஹரன் என்ற பிராமணரும்,கொழும்பிலிருந்து வெளிவந்த ‘வீரகேசரிபத்திரிகையின் ஆசிரியராக இருந்த வாஸ் என்ற இந்தியாவைச் சேர்ந்த இன்னொரு பிராமணரும்ää சீனாவுக்கு எதிராக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தமது பத்திரிகைகளில் எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கொண்டு தமிழ் மக்களின் மனங்களில் விசமூட்டினர்.

அந்த நோய் அவர்களை விட்டு இன்னமும் நீங்கவில்லை. வீரகேசரியில் தற்பொழுதும் அடிக்கடி சீன எதிர்ப்புக் கட்டுரைகள் வருவது ஒரு நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. அண்மையில் கூட ஜனவரி 17 ஆம் திகதிய வீரகேசரியில் ஒரே நாளில் சீனாவுக்கு எதிராக இரண்டு கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன. அதேதினம் புலம்பெயர் நாடொன்றில் இருந்து புலி ஆதரவாளர்களால் நடத்தப்படும்

செத்த வீட்டு இணையத்தளம் ஒன்றிலும் சீனாää பாகிஸ்தான்ä, இலங்கை ஆகிய நாடுகளைச் சம்பந்தப்படுத்தி விசமத்தனமான கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாத தற்செயல் நிகழ்ச்சிகள் அல்ல.

இவர்களது சீன எதிர்ப்புப் பிரச்சாரம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1956 இல் பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்ததும் முதல் செய்த வேலை,, கட்டுநாயக்கவில் இருந்த பிரித்தானிய விமானப்படைத்தளத்தையும், திரிகோணமலையில் இருந்த பிரித்தானிய கடற்படைத்தளத்தையும் வெளியேற்றியதாகும்.

பண்டாரநாயக்கவின் இந்த தேசபக்த நடவடிக்கை குறித்து அந்த நேரத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் பிரித்தானியா தனது படைகளை வெளியேற்ற வேண்டாம் என பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணிக்கு தந்தி அனுப்பினார். (உண்மையான இந்தியக் காந்தி “வெள்ளையனே வெளியேறு என கோசமிடää இந்த ஈழத்துப் போலிக் காந்தி “வெள்ளையனே வெளியேறாதே எனக் கோசமிடுகிறார்)

அது மட்டுமின்றிää சீனாவுக்குக் கொடுப்பதற்காகவே பண்டாரநாயக்க அரசு திரிகோணமலை கடற்படைத் தளத்திலிருந்து பிரித்தானியரை வெளியேற்றியது என தமிழரசுக் கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் நடந்த கதையோ வேறு. திரிகோணமலையில் உள்ள சீனன்குடாவில் உள்ள எண்ணெய் குதங்கள் தமிழசுக் கட்சியினரின் நட்பு நாடான இந்தியாவுக்கு 99 வருடக் குத்தகைக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி ஆதரித்த கடந்த நல்லாட்சி அரசு

அவர்களது இன்னொரு நட்பு நாடான அமெரிக்காவுக்கு திரிகோணமலைத் துறைமுகத்தில் சில வசதிகள் செய்து கொடுக்க முன்வந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி சொன்னது போல அன்றிலிருந்து இன்று வரையும் சீனாவுக்கு அங்கு எவ்வித உரிமைகளும் வழங்கப்படவே இல்லை. இலங்கையில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே போர் நடந்த காலத்தில் இந்தியாää அமெரிக்காää பிரித்தானியா,

இஸ்ரேல்ää ரஸ்யாää பாகிஸ்தான் உட்பட எல்லா மேற்கத்தைய நாடுகளும் இலங்கை அரசுக்கு இராணுவ தளபாடங்களிலிருந்துää இராணுவ ஆலோசனை வரை சகல உதவிகளும் வழங்கியிருக்கின்றன. ஆனால் நமது தமிழ் தேசியவாதிகளோ சீனா மட்டும்தான் தமக்கெதிராக இலங்கை அரசுக்கு உதவியது எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்த பொழுது அதில் கலந்துகொண்டு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எவ்விதமான சம்பந்தமும் இல்லாமல், விடயத்துக்குப் புறம்பான முறையில் சீன எதிர்ப்பு வாந்தி எடுத்தார்.

இந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் சீன விரோதப் பிரச்சாரத்துக்கு அடிப்படையாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இவர்களிடம் நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றியுள்ள கம்யூனிச  எதிர்ப்பு மனப்பான்மை.இரண்டாவது, இப்பொழுது ட்ரம்ப்பின் அமெரிக்கா மோடியின் இந்தியாவை தனது இளைய கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டு, அந்தக் கூட்டில் யப்பான்ää அவுஸ்திரேலியா என்பனவற்றையும் இணைத்துக் கொண்டுää “இந்தோ – பசுபிக் கூட்டு என்ற பெயரில் சீனாவுக்கு எதிராக ஒரு இராணுவக் கூட்டை உருவாக்கியுள்ளதால்ää அவற்றின் எடுபிடிப் பிரச்சாரகர்களாக தமிழ் தேசிய அரசியல்வாதிகளும்ää தமிழ் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு முன்னணியில் நிற்கின்றனர். இவர்களின் வழிகாட்டிகளாக இந்திய ஊடகங்கள் ஏற்கெனவே தமது ‘பணியை ஆரம்பித்துவிட்டன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது ஏகாதிபத்தியம் என்பது மலையிலிருந்து தரையை நோக்கி உருண்டு செல்லும் பாறை. அந்தப் பாறையுடன் இலங்கைத் தமிழர்களின் தலைவிதியைப் பிணைத்து வைத்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

Source: Vaanavil 121 January 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...