உலகம் நீண்ட காலத்துக்கு கொரோனா வைரஸுடன் வாழ பழக வேண்டியிருக்கும் – திஸ்ஸ விதாரண


ஜனவரி 16, 2021

லங்கையில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவலாக பரவியுள்ளது. பலரும் நோய்த் தொற்றுக்கான காவியாக இருக்க முடியும் என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தல் தொடர வேண்டும், ஆனால் இப்போது சமூக அடிப்படையிலான அணுகுமுறையும் அவசியம். கொவிட்19 வைரஸ் இன்னும் பல பகுதிகள், கிராமப்புறங்கள் மற்றும் நகரங்கள் போன்ற அதிக நெரிசலான பகுதிகளுக்கு பரவக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் மக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க அரசாங்கம் ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.


உதாரணமாக, அரசு மருத்துவமனையில் உள்ள கிளினிக்கில் நோயாளிகள் தங்கள் மருந்துகளைப் பெறுவதற்காக மருத்துவமனையில் கூட்டத்தை உருவாக்குகிறார்கள். சுகாதாரத் துறையின் பணியாளர்களை இந்த விடயத்தில் பயன்படுத்துவது நல்லது. நோயாளிகளுக்கு அவர்களின் மருத்துவப் பதிவுகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளபடி தேவையான மருந்துகளை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சரியான திகதியில் வழங்க முடியும்.

சமூக நடவடிக்கைகள் ஒன்லைன் முறையில் நடத்தப்பட்டால் இந்த கொவிட்19 ஆபத்தைக் குறைக்க முடியும். இங்கிலாந்தில் கொவிட்19 வைரஸின் புதிய திரிபு தோன்றியது. இது அதிக அளவில் பரவக்கூடியது. இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்திலிருந்து வருகின்ற அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளன. இலங்கையும் அவ்வாறு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனால் இங்கிலாந்தில் வசிப்பவர்கள் மறைமுகமாக இங்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கி இங்கிலாந்தில் இருந்து எமது நாட்டுக்கு வருகை தந்தவர்கள் முறையாக இன்றும் இனங்கானப்படவில்லை என்பது கவலைக்குறியது.

தொற்றுநோய்களின் போது இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட அனுமதிக்கக் கூடாது. இலங்கை உட்பட உலகம் நீண்ட காலமாக வைரஸுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெளிவாகி வருகிறது. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வைரஸின் தன்மையையும் அதன் பரவல் முறையையும் சரியாகப் புரிந்து கொண்டு, தாங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்தால், வைரஸ் தானாகவே ஒழிந்து விடும். தற்போதைய தகவலின்படி மனித சுவாச பாதை வழியாக மட்டுமே பரவுகின்றது.

எல்லோரும் பின்வரும் சுகாதார விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதில் சுகாதார கல்வி திட்டம் கவனம் செலுத்துகிறது. வீட்டிற்கு வெளியே முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைப்பிடித்தல், சவர்க்காரம் கொண்டு தண்ணீரில் கைகளை அடிக்கடி கழுவுதல், குறிப்பாக வேறு எவரும் தொட்ட பொருளை தொடக் கூடாது. இந்த ஆலோசனைகளை எல்லோரும் ஒரு பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த செய்தி நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டையும் அடைய வேண்டும்.

தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அதை ஒவ்வொரு மாணவரின் மனதிலும் பதிய வைக்க வேண்டும். ஒரு சிறிய குழந்தை கூட புரிந்து கொள்ளும் வகையில் கார்ட்டூன்களுடன் மூன்று மொழிகளிலும் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டுள்ளேன். நான் 100,000 துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளேன். எனது கட்சியான ல.ச.ச.கட்சியின் உதவியுடன் எனது திறனுக்கு ஏற்றவாறு விநியோகித்தேன். சுகாதாரத் திணைக்களம் அந்த துண்டுப்பிரசுரத்தை அச்சிட்டு விநியோகிக்கலாம். வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்த திட்டத்திற்கு முழுமையாக பங்களிக்க வேண்டும்.

கொவிட் 19 வைரசை அகற்றுவதற்கான ஒரு தேசிய பிரசாரம் உருவாக வேண்டும், அனைவரும் அதில் ஈர்க்கப்பட வேண்டும். கட்சித் தலைவர்களின் குழு ஒன்று நிறுவப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் இது விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒருவரையொருவர் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். ஆனால் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராடும் ஒரு தேசமாக ஒன்று சேர வேண்டும். கிராமங்களில் கொவிட் எதிர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்குங்கள். மீதமுள்ள கிராமம் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ முடியும். பொது சுகாதார உத்தியோகத்தர், சுகாதார தாதிமார் சுகாதாரக் கல்வியில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் சொல்வதைக் கேட்டு ஒரு கூட்டுறவு மனப்பான்மையுடன் செயற்பட வேண்டும்.

விலங்குகளினூடாக கொரோனா பரவக் கூடிய வாய்ப்புள்ளது. இது தொடர்பிலும் அரசு கண்காணிக்கப்பட வேண்டும். ஆனால் இறுதித் தீர்வு ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான தடுப்பு மருந்தை உருவாக்கி, ஒவ்வொரு நபருக்கும் முறையாக நோயெதிர்ப்பு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தது 80வீதம் மக்கள் நோய்த்தடுப்பு செய்யப்பட வேண்டும். இது உலகிற்கு ஒரு புதிய வைரஸ் என்பதால் தடுப்பு மருந்தை அடிக்கடி பயன்படுத்துவது அவசியமாக இருக்கலாம்.

மிக விரைவாக உருவாக்கப்பட்ட பல்வேறு தடுப்பூசிகளை முழுமையாக பரிசோதிக்க நேரம் இல்லை. ஆனால் இரண்டுமுறை தடுப்பூசி வழங்கப்பட்டு பாதுகாப்பின் கால அளவை சரியாக தீர்மானிக்க முடியும். ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்காவிட்டால், இன்னும் பல தடுப்பூசிகளை ஏற்க வேண்டியது அவசியம்.

இறுதியாக, கொவிட்19 இனால் இறந்தவர்களை அடக்கம் செய்யாதது தொடர்பான சர்ச்சைக்குரிய கேள்விக்கு நான் ஏதாவது சொல்ல வேண்டும். ஒரு விஞ்ஞானியாக எனது பார்வையில், ‘ட்ரான்ஸ்மிஷன் வோட்டர்’ ஆபத்து மிகவும் தொலைவில் இருப்பதால் அடக்கம் செய்ய அனுமதிக்கலாம். கொவிட் நோயாளியின் மரணத்துடன் இறந்த உடலில் வைரஸின் பரவல் நிறுத்தப்படும். அதற்கு முன்னர் எந்த வைரஸ் இருந்திருந்தாலும் அது சில மணிநேரங்களில் இறந்திருக்கும். ஆனால் நிச்சயமாக ஒரு நாளுக்குள் சமுதாயத்திற்கு ஆபத்து இல்லை என்பதை உறுதிப்படுத்த இதுவரை எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...