ஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக ஐ.தே.க. அரசாங்கம் செஞ்சோற்றுக் கடனாக சம்பந்தனுக்கு கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் கட்சித் தலைவர் என்ற ரீதியிலும் சபாநாயகரின்
யோசனைக்கமையவே விசேட அமைச்சரவை அங்கீகாரத்துடன் பூரண
வசதிகளுடன் கூடிய உத்தியோகபூர்வ வாசஸ்தலம் பெற்றுக் கொடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருக்கிறார்.

சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வரையில் இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தைப் பயன்படுத்தத்தக்க கூடிய வகையிலேயே அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு-07, மஹகம சேக்கர மாவத்தையில் பீ.12 இலக்கத்தையுடைய இந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலம் எதிர்க்கட்சித் தலைவருக்காக  போதும் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவி
வகித்த காலத்தில் அது எதிர்க்கட்சித் தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக அமைந்திருக்கவில்லை.




தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுக்கு பிரத்தியேகமானதொரு
வாசஸ்தலமாகவே அவ்வீடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு கடமை புரிவதற்கு ஐந்து ஊழியர்கள் கொடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான கொடுப்பனவுகள் வீடு மற்றும் அதன் வளாகப் பகுதியின் பராபரிப்பு போன்ற செயவினங்கள் பாராளுமன்ற விவகார அமைச்சினூடாக செலவிடப்படுகின்றது. இந்த விசேட அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் முஓ 2330 மற்றும் முழு 6339 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரண்டு வாகனங்களும் அவருக்குப் பெற்றுக்  கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான எரிபொருளாக மாதாந்தம் 600 லீற்றர் பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. இந்த வீடு ஒன்றரை ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ளது. 2017,ல் இவ்வீடு 350 மில்லியன் (35 கோடி) ரூபா செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிமாருக்குமே அரசு உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக் கொடுக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கோ, கட்சித் தலைவர்களுக்கோ இது காலவரை உத்தியோகபூர்வ இல்லங்கள் பெற்றுக் கொடுக்கப்படவில்லை எனவும் இது கடந்த அரசாங்கத்தின் தவறான முன்மாதிரியெனவும் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், முன்னைய அரசின் தவறான முன்மாதிரி எதிர்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்குக் காரணமாக அமையலாம் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். என்றாலும் இது அமைச்சரவைத் தீர்மானமாக இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாதிருப்பதாகவும் மற்றொரு அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலமே அதனை மாற்றியமைக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார். 
Source; Vaanavil 109 January 2020 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...