Saturday, 14 December 2019

சம்பந்தன் பேசிய பொய்யும் மெய்யும்! -புனிதன்

பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்துவிடுவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு நிகராக யாரும் முன்னிற்க முடியாது. அதிலும் அதில் முன்னணியில் நிற்பவர்கள் தலைவர் சம்பந்தனும், அவரது ‘மதியூகி’ சுமந்திரனும் என்றால் மிகையாகாது.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மேற்கொண்ட கேவலமான அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுப் பிரச்சாரங்கள் வரலாற்றில் ஈடு இணையில்லாதவை.
“தமிழர்களின் வாக்குகள் இல்லாமல் கோத்தபாய வென்று காட்டட்டும்” இது சம்பந்தன் விடுத்த சவால்!
“கோத்தா வென்றால் இலங்கையில் இனியொருபோதும் தேர்தல்களே நடக்காது”. இது மதியூகி சுமந்திரன் விடுத்த எச்சரிக்கை!
“கோத்தபாய ஜனாதிபதியானால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உருவாகும். வெள்ளை வான்கள் மீண்டும் ஓடித்திரியும்”. இது ‘சப்றா புகழ்’ சரவணபவன் எம்.பியின் கண்டுபிடிப்பு!
“கோத்தபாயவுக்கு வாக்களிக்கும் தமிழர்கள் சாத்தான்கள்”. இது செல்வம் அடைக்கலநாதன் ஓதிய வேதம்.!
இப்படியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலத்தில் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசினார்கள்.
ஆனால் இவர்களது பொய் புரட்டுகளுக்கு கோத்தபாயவை வெல்ல வைத்ததின் மூலம் இலங்கை மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இப்பொழுது சம்பந்தன் புதிய பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். அதாவது தாங்கள் சஜித் பிரேமதாசவை ஆதரித்தாலும், கோத்தபாய தரப்புடனும் தொடர்பை பேணி வந்ததாக ஒரு புதிய பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதை மக்கள் நம்ப வேண்டுமாம்.
ஆனால் தேர்தல் கூட்டங்களில் சுமந்திரன் என்ன சொன்னார்? தாங்கள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை கோத்தபாய ஏறெடுத்தும் பார்க்காததால்தான் தாங்கள் சஜித்தை ஆதரிப்பது என முடிவு செய்ததாகச் சொன்னார். (சஜித் இவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்காண்டார் போலும்) அதன் அர்த்தம் என்ன? கோத்தாவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டோம் என்பதுதானே? (சில வேளைகளில் தனது மதியூகிக்குத் தெரியாமல் சம்பந்தன் கோத்தாவுடன் தொடர்பு வைத்திருந்தாரோ என்னவோ)
இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் கூறியிருக்கிறார். அதாவது தமிழ் மக்கள் – அதாவது தாங்கள் – இனவாத அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கவில்லை என்று கூறிருக்கிறார். அவர் கூறிய இந்தக் கருத்தில் மிக முக்கியமான ஒரு உண்மை ஒளிந்து இருக்கிறது.
அதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனவாதத்தை பொதுமக்கள் மத்தியில் பரப்பி,
“ராஜபக்சாக்கள் சிங்கள இனவாதிகள், தமிழர்களுக்கு எதிரானவர்கள், தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தவர்கள், தமிழர்களை வெள்ளை வானில் கடத்தி கொலை செய்து முதலைகளுககு உணவாகப் போட்டவர்கள்” போன்ற பிரச்சாரங்களைச் செய்து, தமிழ் மக்களை தவறாக வழிநடத்தி கோத்தபாயவுக்கு எதிராக சஜித்துக்கு பெருந்தொகையில் வாக்களிக்க வைத்தனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.
ஆனால் இப்பொழுது சம்பந்தன் சொல்கிறார், தமிழ் மக்கள் இனவாத அடிப்படையில் சஜித்துக்கு வாக்களிக்கவில்லை என்று!
அப்படியானால் எதற்காக சஜித்துக்கு தமிழ் மக்களை வாக்களிக்க வைத்தனர் என்பதை சம்பந்தன் விளக்குவாரா?
இந்த விடயத்தில் சம்பந்தன் தன்னை அறியாமல் ஒரு விடயத்தை உளறிக் கொட்டியிருக்கிறார். அதாவது தமிழ் மக்களை இன அடிப்படையில் உசுப்பேத்தி அவர்களது வாக்குகளை தமிழ் தலைமைகள் திருடி வந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கக் கோருவது இன அடிப்படையில் அல்ல. வேறு எதற்காக?
ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ள வர்க்க – அரசியல் பாசத்துக்காக! உண்மையை உளறிய தமிழரின் மூத்த, பழுத்த ராஜதந்திரி சம்பந்தன் ‘ஐயா’வுக்கு நன்றி!
Source: Vaanavil 107

No comments:

Post a comment

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களினதும் கட்சிகளினதும் பங்கு பணி என்ன?

இ லங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் ஓகஸ்ற் 05, 2020 இல் நடைபெறவுள்ளது. பலத்த இழுபறிகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையம் இத்திகதியை நிர்...