சீனா ஒரு பெரும் பொருளாதார சக்தியாக வளர்ந்திருக்காவிட்டால் உலகில் இன்று என்ன நடந்திருக்கும்? டியு குணசேகர கேள்வி


(சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சி நடந்து அங்கு  ஒரு சோசலிச அரசு ஏற்பட்ட 70ஆவது ஆண்டு (1949 ஒக்ரோபர்  1 – 2019 ஒக்ரோபர 1) நிறைவையொட்டி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  தோழர் டியு குணசேகர நிகழ்த்திய உரையை கீழே தந்திருக்கிறோம்)


சீன மக்கள ; நீண்ட, பெருமைக்குரிய 3600 வருட வரலாற்றுப்
புகழுக்குரியவர்கள். பதிவு செய்யப்பட்ட இந்த வரலாற்றுடன, சீன மக்கள ;
இப்பொழுது தமது பிரமாண்டமான சாதனைகளுடன ; பொன்மயமான
காலகட்டம் ஒன்றினுள் பிரவேசித்துள்ளனர். புதிய சீனாவின்  முதலாவது
திருப்புமுனை புரட்சிகர ஆண்டான 1949இல் தலைவர ; மாஓவின்
தலைமையில் நிகழ்ந்தது. முதல் 31 வருடங ;களில் சீனாவின ; சமூக –
பொருளாதார மாற்றங்கள் சர்வதேச சவால்கள்  மற்றும் உள்நாட்டு குழப்ப
நிலைகள் நிலவிய காலகட்டத்தில் நிகழ்ந்தது. கொரியா,வியட்நாம் போன்ற
நாடுகளில் அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தங்கள்  சீனாவின்
அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க இடையூறுகளை விளைவித்தன. ஐக்கிய
நாடுகள ; சபையில் சீனாவுக்குரிய உறுப்புரிமை 22 நீண்ட வருடங்களாக
தடுக்கப்பட்டு வந்தது. 1971இல் தான் புதிய சீனாவை அமெரிக்க அரசாங்கம்
அங்கீகரித்தது. அந்த நாடு சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்
படுத்தப்பட்டிருந்தது. தடைகள் முற்றுகைகள் ,வியாபாரத்தடை என்பன
அந்த நாட்களில் விதிக்கப்பட்டன. இந்த எதிர ;மறையான சூழ்நிலைகளில் சீனப் புரட்சி முன்னேறிச் சென்றது.சீனாவின் இரண்டாவது திருப்புமுனை 1978இல் நவீன சீனாவின் சிற்பியான
டெங்  சியாவோபிங் தலைமையில் நிகழ்ந்தது. “சீர் திருத்தங்கள் மற்றும்
திறந்து விடுதல்” என்ற புதிய பொருளாதார தந்திரோபாயத்தை சீனா
பின்பற்றத் தொடங்கியது. தனது புதிய பொருளாதார ந்திரோபாயத்துக்காக
சீனா வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் ,சோசலிச நாடுகள் ,வளர்ச்சி பெறும் நாடுகள்  என்பனவற்றின் அனுபவங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. அதேநேரத்தில் அது சீனாவின்  வரலாற்றுச்
சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. அத்துடன் முன்னர் இருந்த தனது சொந்த எதிர் மறையான உள்நாட்டு நிலைமைகளையும் சுய – விமர்சன ரீதியில் மதிப்பீடு செய்தது. சீனா தனது சொந்த தன்மைகளுக்கு ஏற்ற முறையில் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கான பாதையொன்றை வகுத்துள்ளது.

சீனா தற்போதைய தனது நிலையை ஆரம்ப சோசலிச வளர்ச்சிக்கான நிலையாகவே இனம் கண்டுள்ளது. எனவே அது மூன்று தந்திரோபாயங்களான திட்டமிடல்,சந்தை, அரசாங்க தலையீடு
என்பனவற்றின ; கீழ் இரட்டை இயந்திர (பொதுத்துறை, தனியார்துறை)
முறையிலான அபிவிருத்தி முறைமையை முன்னெடுத்து வருகின்றது. அதன ; வளர்ச்சி வேகம் 2010 ஆண்டைய கணிப்பீட்டின்படி எவ்வித இடையூறுமின்றி 8 முதல் 10 வீதமாக இருப்பதுடன, அது உலகின் இரண்டாவது பொருளாதார
சக்தியாகவும் மாறியுள்ளது.

இன்று உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடாக சீனா திகழ்கிறது. அது
மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இருக்கின்றது.
அது மிகப்பெரிய 20 றில்லியன் டொலர்  வெளிநாட்டு நாணய மாற்று
கையிருப்பைக் கொண்டுள்ளது. அது மிகப்பெரிய 50 வீத தேசிய சேமிப்பைக்
கொண்டுள்ளது. வெளிநாட்டு அபிவிருத்தி முதலீடுகள் சீனாவுக்குள் பெருமளவில் சென்றவண்ணம் உள்ளன. கல்வி , துறைசார்  பயிற்சி
மற்றும் தொழில்நுட்பத்திறன் என்பனவற்றைக் கொண்ட 900
மில்லியன் பலமிக்க மக்கள் வேலைச் சக்தியை சீனா கொண்டிருப்பதுடன,
உயர்ந்த வாங்கும் சக்தி கொண்ட 300 மில்லியன் நடுத்தர வர்க்கம் கொண்ட
நுகர்வுச் சந்தையையும் அது கொண்டிருக்கிறது.

எனவே, உண்மையான பலம் என்பது அதன ; தொழிலாளர் சக்தியே தவிர
மூலதன சக்தியல்ல. எனது பார்;வையில் டெங்சியாவோபிங்கின் பொருளாதார தந்திரோபாயம் என்பது மனித வள அபிவிருத்தி மற்றும் உள் ள கட்டமைப்பு  அபிவிருத்தி என்ற இரண்டு பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டது என நினைக்கிறேன் . டெங் 10,000 மாணவர்களை உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவது என்ற
துணிகரமான முடிவை எடுத்தார்.
.
கட்டுடைப்பு செய்த இந்த தந்திரோபாயமான தீர்மானம் சீனாவின் பொருளாதாரத்தை வேகமாக நவீனமயப்படுத்துவதற்கு வழிவகுத்தது.
சீனாவின் மூன்றாவது திருப்புமுனை அதன்  பொருளாதார வளர்ச்சி
வரலாற்றின்  பிந்திய காலத்தில் ஜனாதிபதி சி ஜின் பிங் தலைமையில்
2013இல் ஆரம்பிக்கின்றது. இதன் தந்திரோபாய தீர்மானமானது ஒரு தடம், ஒரு பாதை என்ற முயற்சியின்  ஊடாக ஆசியா, ஆபிரிக்கா மற்றும்
ஐரோப்பாவிலுள் 70இற்கும் மேற்பட்ட நாடுகளுடன ; ஒத்துழைப்பை
ஏற்படுத்துகின்றது. இது சர்வதேச அரங்கின் பொருளாதார வரலாற்றில்
முன்னெப்போதும் நடைபெற்றிராத மிகப்பெரும் வளர்;ச்சித் திட்டமாகும்.
இது இதன் பங்காளர்கள் அனைவருக்கும் வெற்றிக்கு – வெற்றி
என்ற திட்டமாகும். எழுந்து வரும் யூரோ – ஆசிய கண்டத்தின் மூலம்
உருவாகும் பொருளாதார வலயம் உலகத்தின் முகத்தையே மாற்றப்
போகின்றது.

சீனாவின் பொருளாதார அபிவிருத்தி முயற்சியின் சமீபத்தைய வரலாற்றை
நோக்குகையில், இது உலகப் பொருளாதாரத்தின் முன்னோடியான
ஆசியா உருவாக்கிய கூறு என நான் கருதுகின்றேன்  இது வரலாற்றின்
சக்தியாகும்.  எனவே. சீனப் புரட்சி எல்லாத் தடைகளையும் தாண்டி முன்னேறிச் செல்கிறது. சீன அரசாங்கம் 800 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து விடுவித்தது முன்னுதாரணம் காட்ட முடியாத ஒரு சாதனையாகும். சீனா வறுமை இல்லாத ஒரு நாடாக உருவாகியிருப்பது மனிதகுல வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத ஒரு சாதனையாகும்.
சீனா, திட்டமிட்டபடி 2050இல் ஒரு செழிப்புமிக்க, நவீன சோசலிச நாடாக
உருவெடுக்கும் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமுமில்லை.

நான் எனது பேச்சை, 1924இல் லெனின் தான்  இறப்பதற்கு முன்னர்
தத்துவார்த்தரீதியாக வழங்கிய ஒரு மேற்கோளுடன் முடிக்கின்றேன். அவர்
சொன்னதாவது: “சீனப் புரட்சி நிகழும்போதுதான் சோவியத் யூனியனில்
சோசலிசம் உத்தரவாதப்படுத்தப்படும்”. ஆனால் அவரது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக 25 ஆண்டுகள் கழித்து 1949 ஆம் ஆண்டிலேயே சீனப் புரட்சி நிகழ்ந்தேறியது. வரலாறு என்பது எப்பொழுதும் வித்தியாசமானது. அதற்கென நெடுஞ்சாலைகள் கிடையாது.எனது பேச்சின்  முடிவில் உங்களிடம் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன ;. அதாவது, சீனப் புரட்சி நடைபெறாமல் இருந்துää சீனா ஒரு புதிய பொருளாதார சக்தியாக இன்று உருவெடுக்காமலும் இருந்திருந்தால்,இன்று உலகம் எப்படி
இருந்திருக்கும்?

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...