ரணில் முயற்சி தோற்றதற்காக கண்ணீர் வடிக்கும் சுமந்திரன்! -புனிதன்


அண்மையில் நடைபெற்ற  அமைச்சரவைக் கூட்டமொன்றில்
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பது சம்பந்தமான
தீர்மானம் ஒன்றை முன் வைப்பதற்குபிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயன்றார்.ஆனால் அவரது அரசின் பங்காளிக் கட்சிகள் மட்டுமின்றிää அவரது சொந்தக் கட்சியினர் சிலரே அவரது அந்த முயற்சியை எதிர்த்ததால் ரணில் பின்வாங்க வேண்டி ஏற்பட்டுவிட்டது. இவ்வளவு காலமும் கண்ணை
மூடிக்கொண்டு இருந்துவிட்டு ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி
அறிவிக்கப்படவிருந்த சூழலில் ரணில் இப்படியொரு திட்டம் போட்டதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம் ஐ.தே.க. சார்பில் ரணில் அல்லது சஜித் பிரேமதாச
இருவரில் யார் ஜனாதிபதி தேர்தலில் போடடியிட்டாலும் நிச்சயமாகத்
தோல்விதான் என்ற பயம். இரண்டாவது காரணம், ஐ.தே.க.சார்பாக சஜித்தையே தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள்
வலுத்து வருவதால்,  அதன் காரணமாக கட்சி இரண்டாக உடையக்கூடிய
நிலையிலிருந்து தப்புவதற்கான நரித்தந்திரம்.மூன்றாவது காரணம், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டால் பிரதமருக்கே அதிகாரம் கிடைக்கும். அப்படியான ஒரு சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சில முஸ்லீம் மற்றும் மலையகக் கட்சிகளின்
ஆதரவுடன் தானே பிரதமராகப் பதவி வகிக்கலாம் என ரணில் போட்டுள்ள
கணக்கு.

Image result for sumanthiran mp

நான்காவது காரணம், தற்போதைய நிலையில் ஜனாதிபதி ஒருவர் தெரிவு
செய்யப்படுவதில் சிறுபான்மை இனங்களின் வாக்குகள் தீர்மானிக்கும்
சக்தியாக இருக்கின்றன. எனவே ஜனாதிபதி முறையை ஒழித்துவிட்டால்
சிறுபான்மை இனங்களில் தங்கி நிற்கத் தேவையில்லை என்ற பேரினவாத
சூழ்ச்சி எண்ணம். ஆனால் ரணில் போட்ட திட்டத்தை அவரது கட்சியினர்,  சஜித் பிரேமதாச அணியினர் உட்பட அனைவரும் எதிர்த்ததால் அவர் மண்கவ்வ வேண்டி வந்துவிட்டது.

இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில்ää ஐ.தே.கவுக்கும் தமிழ்
தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே தரகராகச் செயற்படும் எம்.ஏ.சுமந்திரன் ரணிலின் திட்டம் நிறைவேறாமல் போனதையிட்டு தெரிவித்திருக்கும் மனவேதனைதான். அரசியல் அமைப்புக்கு 20ஆவது திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என அவர் தன் உள்ளக்கிடக்கையை
வெளியிட்டிருக்கிறார்.

“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என ஒரு முதுமொழி உண்டு. அதுபோன்றதே சுமந்திரனின் மன ஆதங்கமும். ஜனாதிபதி தேர்தல் நடந்து அதில் மகிந்த சார்பானவர் வெற்றிபெற்றால், 2015இல் இருந்து தாங்கள் நடத்தி வரும் ஆட்டம் முடிந்துவிடும் என்ற கவலை அவருக்கு.
தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் சில தீய
அம்சங்கள் இருந்தாலும்,பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சிறுபான்மை
இனங்களுக்கு பேரம் பேசும் சாதகமான அம்சமும் இருக்கின்றது. அந்த சக்தியை மக்களிடமிருந்து பறிக்க வேண்டும் என்பதுதான் பேரினவாத ஐ.தே.க. தலைவர் ரணிலின் எண்ணம். ஆனால் சிறுபான்மை இனமொன்றின் பிரதிநிதியாக இருக்கும் சுமந்திரனும் அதில் உடன்படுவது விந்தையாக இருப்பினும், அதுதான் அவர்கள் இரு தரப்பினதும் வர்க்க – அரசியல் ஒற்றுமையாகும்.

அது எப்படியென்றால்ää ஜனாதிபதி முறை இல்லாமல் போனால் சிறுபான்மை இன மக்களுக்குத்தான் நஸ்டம். அவர்களது பேரம்பேசும் சக்தி இல்லாமல் போய்விடும். ஆனால்ää தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கு அதனால் எதுவித நஸ்டமும் இல்லை. ஏனெனில் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் தமது குறிப்பிட்ட உறுப்பினர்களை
வைத்துக்கொண்டு பதவிக்கு வரும் அரசாங்கத்துடன் (அவர்களது தெரிவு
பெரும்பாலும் ஐ.தே.கதான்) பேரம்பேசி தமக்கான வசதி வாய்ப்புகளைப்
பெற்றுக்கொள்ள முடியும்.

அவர்களின் கருத்துப்படி மக்களிடம் பேரம்பேசும் சக்தி இருக்கக்கூடாது.
ஆனால் அது தம்மிடம் மட்டும் இருக்க வேண்டும் என்பதே. ரணில், சுமந்திரன் போன்றவர்கள் மக்களை முட்டாள்கள் என்று நினைப்பதன் விளைவே இதற்கெல்லாம் காரணம்.

மூலம்: வானவில் இதழ் 105

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...