இலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் பின்நோக்கும் என்ன?

லங்கையில் கிறிஸ்தவர்களின் பெருநாளான ஈஸ்டர் – ஏப்ரல் 21ந் திகதி – ஞாயிற்றுக்கிழமையன்று சில தேவாலயங்களிலும், தலைநகர் கொழும்பிலுள்ள சில நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாத சக்திகளினால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் – தற்கொலைத் தாக்குதல் உட்பட – முன்னூறுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து ஆராயப் புகுமுன்னர், இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட, காயமடைந்த அனைத்து மக்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கும் ‘வானவில்’ சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களே இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் காத்தான்குடியில் பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் பின்பற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமாக இன்னொரு மதக் கோட்பாட்டைப் பின்பற்றும் ஒரு பள்ளிவாயிலை அங்கு நடத்தி வந்ததாகவும், அங்கு வைத்தே சிலருக்கு பயங்கரவாதப் பயிற்சி வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.


இந்த தாக்குதல்கள் முழுக்க முழுக்க உள்ளுர் செயற்பாடு என சில அமைச்சர்கள் உட்பட பலர் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டனர். ஆனால் இந்த தாக்குதல்களுக்கு “ஐ.எஸ்” என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பு உரிமை கோரிய பின்னரே, பிரதமர் ரணில விக்கிரமசிங்க, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் உட்பட பலர் இந்த தாக்குதல்களுக்கு சர்வதேச பின்னணி இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்த ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பு உலகம் முழுவதையும் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்காகப் போரிடும் ஓர் அமைப்பு எனக் கூறப்படுகிறது. இவ்வமைப்பில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். இவர்கள் பல நாடுகளில் செயற்படுவதுடன், சிரியாவில் ஆசாத்தின் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையாகப் போரிட்டு அதில் அண்மையில் தோல்வியும கண்டுள்ளனர்.
உலகில் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்த காரணத்தால் விரக்தியும் கோபமும் அடைந்த இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது என்ற ஒரு கருத்து இருக்கிறது. அதேநேரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் சவூதி அரேபியாவும் இணைந்து தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியிருக்கக்கூடும் என்ற இன்னொரு கருத்தும் இருக்கிறது.
எது எப்படியிருந்த போதிலும் ஐ.எஸ். அமைப்பு என்பது நாசகரமான ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இரண்டு கருத்துக்கு இடம் இல்லை. ஏனெனில் அவர்களின் குறி எப்பொழுதும் அப்பாவிப் பொதுமக்களாகத்தான் இருந்து வந்திருக்கிறது. கடந்த வருடமும் இந்த அமைப்பு இந்தோனேசியாவிலும், பிலிப்பைன்சிலும் தேவாலயங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி பலரைக் கொலை செய்தது. மறுபக்கத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உடன் பிறப்பாக ‘வெள்ளை பயங்கரவாதமும்’ பிறப்பெடுத்திருப்பதை அண்மையில் நியூசிலாந்தில் இரு முஸ்லீம் பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களும், அமெரிக்காவில் அடிக்கடி நடக்கும் குண்டுத் தாக்குதல்களும், ஐரோப்பாவின் சில நாடுகளில் நடந்த தாக்குதல்களும் நிரூபித்து நிற்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றவுடன் இதை யார் செய்திருப்பார்கள் என்பது பற்றி அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பலவிதமான கருத்துக்கள் வலம் வரத்தொடங்கின. சிலர் அமெரிக்காதான் இதன் பின்னணியில் உள்ளது என ஊகம் வெளியிட்டனர். வேறு சிலர் இந்தியாதான் பின்னணியில் இருந்திருக்கலாம் என கருத்து வெளியிட்டனர். இன்னும் சிலர் பாகிஸ்தானை சந்தேகித்தனர். இந்த ஊகங்களில் ஒரு வேடிக்கை என்னவெனில், நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத்தான் தூக்கும் என்ற கணக்காக, எதற்கெடுத்தாலும் ராஜபக்சாக்கள் மீது பழிபோடும் தமிழ் தேசியத்தில் ஊறித்திளைத்த ‘கல்தோன்றி மண் தோன்றாத காலத்தில் தோன்றிய’ நமது மூத்த தமிழ் குடியின் சில வீரர்கள் இந்த தாக்குதல்களையும் ராஜபக்சாக்கள்தான் (நல்லவேளையாக டக்ளசை இதில் சேர்க்கவில்லை) பின்னணியிலிருந்து செய்திருக்கின்றனர் என டமாரம் அடித்தனர்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் என்னவெனில், தாக்கப்பட்ட மூன்று தேவாலயங்களான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு சென் செபஸ்தியன் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் ஆலயம் என்பன தமிழ் கிறிஸ்தவர்கள் அதிகம் செல்லும் ஆலயங்கள் என்பதாகும். எதற்nடுத்தாலும் ஒரு இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகுவதை பாரம்பரிய நடைமுறையாக வரித்துக் கொண்ட வியாதி இது.
ஆனால் வெறுமனே இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் இந்தத் தாக்குதலைச் செய்திருந்தாலும், இதற்கு ஒரு சர்வதேசப் பின்னணி இருந்திருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அந்த சர்வதேச சக்தி ஐ.எஸ்.தான் என்றாலும் கூட, அந்த அமைப்புக்கும் பின்புலமாக சில வல்லமை வாய்ந்த உலக சக்திகள் செயற்படுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏனெனில் ஐ.எஸ்சை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார் என்ற விடயம் அவர்கள் சிரியாவில் ஆசாத்தின் அரசாங்கத்துக்கு எதிராகப் போரிட்ட போது அம்பலத்துக்கு வந்தது.
இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பழிதீர்க்கும் எண்ணம் மட்டும் இருந்ததாக நாம் கருதிவிட முடியாது. இதன் உண்மையான நோக்கம் இலங்கையில் இன – மத முரண்பாடுகளைத் தோற்றுpவிப்பதன் மூலமும், இலங்கைக்கு வருவாய் ஈட்டித்தரும் உல்லாசப் பிரயாணத்துறையை சீர்குலைப்பதன் மூலமும் இலங்கையை நிலைகுலைய வைப்பதாகும்.
இத்தகைய செயற்பாடுகள் இன்றுமட்டும் புதிதாக ஏற்பட்டவை அல்ல. இலங்கையில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் 1956 இல் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கம் ஒன்று என்று ஏற்பட்டதோ அன்றே ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களைப் பார்த்தால் அது தெரிய வரும்.
தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்ததிற்காக 1959 இல் பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்டார்.
பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவரது துணைவியார் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசை இராணுவச்சதி மூலம் கைப்பற்றுவதற்கு 1962 இல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைப் பத்திரிகைத்துறையில் ஏகபோகம் வகித்த லேக்ஹவுஸ் நிறுவனத்தை (இன்றைய பிரதமர் ரணிலின் குடும்ப சொத்து) தேசியமயமாக்க முயன்றபோது 1964 இல் சிறீமாவோவின் அரசு நாடாளுமன்ற சதி மூலம் கவிழ்க்கப்பட்டது.
1970 இல் மக்களின் அமோக ஆதரவு பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த இடதுசாரிகளையும் உள்ளடக்கிய சிறீமாவோ தலைமையிலான அரசை ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் தூக்கி எறிவதற்கு ஜே.வி.பி. இயக்கத்தின் போர்வையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்த முயற்சி தோல்வியடைந்த பின்னர், தமிழ் பிற்போக்கு தலைமைகளின் மூலம் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் முடுக்கிவிடப்பட்டு நாடு 30 வருடப் பேரழிவைச் சந்தித்தது.
மிகக்கடுமையான பிரயத்தனங்களின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், போரை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்ச அரசை கவிழ்ப்பதற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையைப் பயன்படுத்தி பலமான முயற்சி எடுக்கப்பட்டது.
இந்த முயற்சிகளுக்கெதிராக ராஜபக்ச அரசு உறுதியாக நிற்பதைக் கண்ட வல்லாதிக்க சக்திகள் அவரது அரசில் பிளவை ஏற்படுத்தி 2015 இல் நடைபெற்ற ஜனதிபதித் தேர்தலைப் பயன்படுத்தி ராஜபக்ச அரசை வீழ்த்தினர்.
ஆனால், சதிகாரர்களின் சூழ்ச்சியை மக்கள் ஏற்கவில்லை என்பதை அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும் எடுத்துக்காட்டின. அதுமட்டுமல்ல, ராஜபக்சவிடமிருந்து பிரித்தெடுத்து ஜனாதிபதியாக்கிய மைத்திரிபால சிறிசேனவே நாட்டு மக்களின் மனநிலையை உணர்ந்து திரும்பவும் ஏகாதிபத்திய அடிவருடியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தனது அணிக்கு வந்துவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் அடுத்து வர இருக்கின்ற மூன்று தேர்தல்களிலும் – மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றில் தற்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தை மக்கள் தோற்கடித்து, மகிந்த ராஜபக்ச தலைமையிலான தேசபக்த சக்திகளின் அரசாங்கமொன்றை உருவாக்குவார்கள் என்ற நிலை தெளிவாகத் தோன்றியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, அழிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி, மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, நாட்டில் இராணுவ ஆட்சியொன்றுக்கு அடித்தளம் இடுவதே தற்போது இலங்கையில் நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் நோக்கமுமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை. சில சர்வதேச சக்திகள் இன்றைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்கு உதவுவதாக நாட்டுக்குள் நுழைய முற்படுவதையும், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலங்கையர்களான எம்மாலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதையும் பார்க்கையில் சில வெளிநாட்டுச் சக்திகளின் நோக்கம் தெளிவாகின்றது.
ஆனால், சதிகாரர்களின் சூழ்ச்சியை மக்கள் ஏற்கவில்லை என்பதை அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களும் எடுத்துக்காட்டின. அதுமட்டுமல்ல, ராஜபக்சவிடமிருந்து பிரித்தெடுத்து ஜனாதிபதியாக்கிய மைத்திரிபால சிறிசேனவே நாட்டு மக்களின் மனநிலையை உணர்ந்து திரும்பவும் ஏகாதிபத்திய அடிவருடியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தனது அணிக்கு வந்துவிட்டார்.
இந்தச் சூழ்நிலையில் அடுத்து வர இருக்கின்ற மூன்று தேர்தல்களிலும் – மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றில் தற்போதைய ஐ.தே.க. அரசாங்கத்தை மக்கள் தோற்கடித்து, மகிந்த ராஜபக்ச தலைமையிலான தேசபக்த சக்திகளின் அரசாங்கமொன்றை உருவாக்குவார்கள் என்ற நிலை தெளிவாகத் தோன்றியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு, அழிவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி, மக்களை அச்சத்தில் ஆழ்த்தி, நாட்டில் இராணுவ ஆட்சியொன்றுக்கு அடித்தளம் இடுவதே தற்போது இலங்கையில் நடத்தப்பட்டுள்ள குண்டுத் தாக்குதல்களின் பின்னணியும் நோக்கமுமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை. சில சர்வதேச சக்திகள் இன்றைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கைக்கு உதவுவதாக நாட்டுக்குள் நுழைய முற்படுவதையும், இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளை இலங்கையர்களான எம்மாலேயே தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதையும் பார்க்கையில் சில வெளிநாட்டுச் சக்திகளின் நோக்கம் தெளிவாகின்றது.
இதிலிருந்து இலங்கை பாதுகாப்புத்துறையில் பெரும் ஓட்டை இருப்பது தெரிகிறது. சமீபத்தைய குண்டு வெடிப்பின் பின்னர் நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து வெடிப்பொருட்கள் மீட்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. அப்படியானால் இதற்கு முன்னர் ஏன் அவைகள் பாதுகாப்புத்துறையினரால் கண்டறியப்படவில்லை. பாதுகாப்புத்துறையில் ஓட்டை இருந்ததால் தானே அவை கண்டறியப்படவில்லை?
எனவே, இப்பொழுது செய்ய வேண்டிய விடயம், முதலாவது, இந்தத் தாக்குதல்களின் அரசியல் நோக்கம் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். இரண்டாவது விடயம், இலங்கையின் பாதுகாப்புத்துறையில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும். மூன்றாவது விடயம், தற்போதைய சம்பவங்களை வைத்து மக்கள் மீது கெடுபிடிகளை அதிகரித்து அவர்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்குப் பதிலாக அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இன – மத நல்லிணக்கத்தை உருவாக்கி எதிர்காலத்தில் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாபெரும் கடமையை ஏகாதிபத்திய சக்திகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, போதை வஸ்துக் கும்பலுடனும், பயங்கரவாத அமைப்புகளுடனும் கூடிக்குலாவும் இன்றைய ஐ.தே.க. அரசால் ஒருபோதும் செய்ய முடியாது.
பரந்துபட்ட மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்குவதின் மூலமாகவும், அந்த இயக்கத்தின் ஊடாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதின் மூலமாகவுமே இதைச் சாதிக்க முடியும்.

மூலம்: வானவில் இதழ் 100 -2019

No comments:

Post a Comment

61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட லுமும்பாவின் பல்- இந்து குணசேகர்

   Courtesy: Wikipedia  பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட கொங்கோவின் விடுதலை நாயகன் பற்றிஸ் லுமும்பாவின் (Patrice Lulumba ) ‘பல்’ 61 ...