ஜனநாயகத்தை நசுக்கவும் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் ஒரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – மகிந்த ராஜபக்ஸதற்போதைய அரசாங்கம், ஐநா மனித உரிமைச் சபையின் ஒக்ரோபர் 2015 தீர்மானம் 30ஃ1 ஊடாக அவர்களின் வெளிநாட்டுத் எஜமானார்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று, 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்குப் பதிலாக புதிய ஒன்றை மாற்றீடு செய்யப்படும் என்று. இந்த நோக்கத்துக்காக பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் வரைபு, அரசியல் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது. அதற்கான காரணம் அது பயங்கரவாதம் என்று வரையறை செய்யும் பதம் சட்டபூர்வமான அரசியல் மற்றும் தொழிற்சங்க செயற்பாடுகளையும் அதேபோல ஊடகங்களின் வழியாகத் தகவல்களைப் பரப்புதல் மற்றும் ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்றவை பயங்கரவாத செயற்பாடுகள் என்று பெயரிடப்படுவதுதான். உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், அரசாங்கம் அவர்களின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் ஸ்ரீலங்காப் பிரஜைகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணுவதைத் தடை செய்வதற்கான பிரிவுகள் அதில் அடங்கியுள்ளதாகக் கூறி அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள சட்டம் சாதாரண குடிமக்கள்மீது கடுமையை பிரயோகிக்கும் அதேவேளை அரசியல் எதிரிகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பனவற்றை அடக்குவதற்குப் பயன்படுத்தக்கூடிய விதிகளையும் கொண்டிருப்பதுடன், அதன் உண்மையான விளைவு பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பளிப்பதற்கும் மற்றும் அவர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் வகையில் அவர்களை மிகவும் கருணையுடன் நடத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் அது பயங்கரவாதிகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கிறதே தவிர – பயங்கரவாதத்தை எதிர்க்கவில்லை. எங்கள் குற்றவியல் சட்டம் சாதாரணமாக ஒரு மனிதனைக் கொல்லுபவருக்கு மரணதண்டனையை பரிந்துரைக்கிறது, ஆனால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்படி, நூற்றுக்கணக்கானவர்களையோ அல்லது ஆயிரக்கணக்கானவர்களையோ கொல்லும் ஒரு பயங்கரவாதிக்கு வழங்கக்கூடிய அதி உயர் தண்டனை ஆயள்தண்டனை மட்டுமே. மேலும் ஒரு கொலைக்கு உடந்தையாக அல்லது உதவியாக இருப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் மரண தண்டனை பரிந்துரைக்கப்படும் அதேவேளை முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தில் கொலைக்கு உடந்தையாகவோ உதவியாகவோ இருப்பதற்கு வழங்கப்படும் தண்டனையாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது வெறும் பதினைந்து வருட சிறைத்தண்டனை மற்றும் ரூபா ஒரு மில்லியன் அபராதம் என்பன மட்டுமே. நாட்டின் சாதாரண சட்டம் அதே குற்றங்களுக்குப் பரிந்துரைக்கும் தண்டனையை விட குற்றம் புரிந்த பயங்கரவாதிகளுக்கு குறைவான தண்டனையை வழங்கினால் எப்படி பயங்கரவாதத்தை தடுக்க முடியும்?
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மேலும் அவசியப்படுவது, காவல்துறை மற்றும் ஆயுதப்படைகள் என்பன சந்தேக நபர்களை மிகுந்த அக்கறையுடன் நடத்த வேண்டும் என்று. ஆயுதப் படைகளினால் ஒரு பயங்கரவாத சந்தேக நபர் கைது செய்யப்பட்டால் அவரை 24 மணித்தியாலங்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையத்திலுள்ள காவல்துறைப் பொறுப்பாளரிடம் கையளிக்க வேண்டும். அந்த பொறுப்பதிகாரி அந்த நபரின் உடலில் காயங்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அவரை ஒரு சட்ட வைத்திய அதிகாரியின் முன் சிகிச்சைக்காகவோ அல்லது அறிக்கைக்காகவோ முன்நிறுத்த வேண்டும். இந்தக் கைதினைப் பற்றி 24 மணித்தியாலங்களுக்குள் மனித உரிமைகள் ஆணையகத்தில் அறிவிக்க வேண்டும், எனவே அவர்கள் அந்தக் கைது காரணமாக சந்தேக நபரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியும். இந்த நாட்டின் பயங்கரவாத வரலாற்றில் பயங்கரவாதிகளின் குடும்பம் முழுவதும் கொல்லப்பட்டது என்று கூறப்படுவதற்கு மாறாக, ஒரு பயங்கரவாத சந்தேகநபர் கைது செய்யப்படும் வேளையில், கைது செய்யும் அதிகாரி தனது அடையாளத்தை சந்தேக நபருக்கும் மற்றும் சந்தேக நபரின் அடுத்த உறவினர் அல்லது நண்பர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். பயங்கரவாத சந்தேகநபரின் அடுத்த உறவினருக்கு இன்றைய நிலையைப் போன்ற ஒரு சூழ்நிலை நிலவும் சந்தர்ப்பத்தில் பயங்கரவாத சந்தேக நபரைச் சந்திப்பதற்கு நியாயமான வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது, அவரது அடுத்த உறவினர் அடுத்த தற்கொலைக் குண்டுதாரியாக மாறுவதற்கு அவரிடம் அறிவுரைகள் கேட்கும் சூழ்நிலையை இது ஏற்படுத்தக்கூடுமல்லவா. கைது செய்யப்பட்ட நேரத்திலிருந்து சந்தேக நபரின் நலன்புரி சேவைகள் எல்லாவற்றிலும் மேலாக முன்னுரிமை பெறுகின்றன.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் 48 மணித்தியாலங்களுக்கு இடையில் நீதவவான் முன்பாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நீதவான் சட்டத்திற்கு அமைய சந்தேக நபரது நலன்கள் மற்றும் நலன்புரி சேவைகளை தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டும். ஒரு சந்தேக நபரை இரண்டு வாரங்களுக்கு மட்டுமே தடுப்புக்காவலில் வைக்க முடியும் மற்றும் இந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட வேண்டுமாயின் அது நீதவானின் அனுமதியுடன் மட்டுமே முடியும். சந்தேக நபரின் மொத்த தடுப்புக் காவல் கால அளவு எட்டு வாரங்களுக்கு மேல் நீட்டிக்கப்படக்கூடாது. இதற்கு முரண்பாடாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிரிஏ) ஒரு சந்தேக நபரை மூன்று மாதங்கள் வரை தடுப்புக்காவலில் வைக்க முடியும் மற்றும் இதை 18 மாதங்கள் வரை நீட்டிக்கவும் முடியும். தற்போது முன்மொழியப் பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு சந்தேக நபரை குற்றவியல் நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் ஆறு மாதங்கள் வரை சிறையில் வைக்க முடியும், மற்றும் இந்தக் கால அளவு ஒரு உயர் நீதிமன்றக் கட்டளையின்படி மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க முடியும். இந்த நீட்டிக்கப்பட்ட காலத்திற்குள் கிரிமினல் வழக்குகள் எதுவும் தொடரப்படவில்லையாயின் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட வேண்டும். எனினும் பிரிஏ யின்படி சந்தேக நபர் பற்றிய விசாரணை முடிவடையும் வரை அவரைக் காவலில் வைக்க முடியும். முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியப்படுவது, மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் நீதவான்களுக்கு தடுப்புக்காவல் மற்றும் சிறைவைக்கப் பட்டுள்ள எல்லா இடங்களுக்கும் அறிவித்தல் எதுவுமின்றி வருகைதந்து பயங்கரவாத சந்தேக நபர்களது நலன்களைக் பார்வையிட முடியும் மற்றும் சந்தேக நபர்களக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவும் வேண்டும். இந்தச்சட்டத்தின்படி சிறைவைக்கப் பட்டிருப்பவர்மீதான வழக்கு ஒரு வருடத்துக்குள் முடிக்கப்படவில்லையாயின் குற்றவாளியை பிணையில் விடுவிப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு கட்டாயமான தேவை உள்ளது.
விசாரணைக் கட்டத்தில் கூட, பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு சிறப்பு நிவாரணம் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உத்தேசச் சட்டம் தெரிவிப்பது ‘ சந்தேக நபரின் செயல்களால் மரணமோ அல்லது கடுமையான உடற் காயங்களோ ஏற்படவில்லையாயின் அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்புச் சேவை தீவிரமாகப் பாதிக்கப்படவில்லை என்றால் மற்றும் மற்ற விஷயங்களுக்கு இடையில் அவர் நெஞ்சறிந்து வருந்துவதுடன் பகிரங்கமாக வருத்தத்தை வெளிப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் மற்றும் ஒரு புனர்வாழ்வுத் திட்டத்தில் பங்கேற்பதாகவும் இருந்தால் சட்டமா அதிபர் ஒன்றில் குற்றவியல் நடவடிக்கைகளை இடை நிறுத்தலாம் அல்லது குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறலாம். யாருக்கும் தீங்கு செய்யாத ஒருவர் மற்றும் அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து எதுவும் விளைவிக்காத ஒருவரை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரமுடிவது எப்படி? நடைமுறையில் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களைச் சேகரிப்பது மிகவும் கடினமாக உள்ளது ஏனெனில் நாட்டில் நிலவும் குழப்பமான நிலமைகள் காரணமாக இது நிகழ்கிறது. ஒரு பயங்கரவாத சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தண்டிக்கப்படலாம் ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்கவில்லை மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்கவில்லை என கருதுவது பொருத்தமற்றது அது செய்த குற்றங்களுக்குப் போதுமான சாட்சியங்கள்
இல்லையே தவிர அவர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை அவர் செய்யவில்லை என்பதல்ல.
குற்றம் சாட்டப்பட்டவர், சட்டமா அதிபர் தனக்கு எதிராகச் சாட்டப்பட்டுள்ள குற்றங்களை இடைநிறுத்த அல்லது திரும்பப் பெறவதற்காக, தான் செய்யாத ஒன்றுக்காக பச்சாத்தாபப் படவேண்டும் மற்றும் தான் தீங்கு செய்யாதவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும் என்று அவசியப்படுவது போன்ற நடவடிக்கைகளை முன்னிறுத்துவதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறது. இத்தகைய வினோத விதிகள் பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவில் உள்ளது சாதாரண சட்டத்தின் மூலம் பயங்கரவாத சந்தேகநபர்கள் மீது வழக்குத் தொடருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு ஒப்புதல் அளிப்பதே ஆகும் இதற்கு ஒரு உயர்வான சாட்சியம் தேவைப்படுகிறது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் நாம் பெரும்பாலும் அடையக்கூடியது என்னவென்றால் பயங்கரவாதத்தின் மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனைக்குப் பதிலாக பயங்கரவாதத்தை ஒடுக்குவதுதான், அதனால்தான் அத்தகைய சட்டங்கள் அதன் முதன்மையான நோக்கத்தை அடையும் வகையில் கடுமையானதாக இருக்கவேண்டும்.. 1979ம் ஆண்டு ஐதேக அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு கடுமையான சட்டம் என்கிற உண்மையைப் பற்றி விவாதத்துக்கு இடமில்லை. ஆனால் அத்தகைய சட்டங்கள் இல்லை என்றால் எங்களிடமிருந்த உலகம் என்றுமே கண்டிராத மிகக் கொடூரமான பயங்கரவாதிகளை நாம் கையாண்டிருக்கச் சாத்தியம் இருந்திருக்காது.
தற்போது முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை விதிக்கப்பட்டதின் பின், பயங்கரவாதத்தை பகிரங்கமாக கண்டிப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விதிகள், மற்றும் வன்முறைகள் பற்றி பகிரங்க கண்டனம் தெரிவித்தல் போன்ற தண்டனைக் குறைப்பு காரணிகளைக் கருத்தில் கொள்வதன் மூலம் அவரது தண்டனை குறைக்கப்படலாம். அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உண்மையில் பயங்கரவாதிகளுக்கு ஒரு விரிவான நிவாரணப் பொதியாகவே உள்ளது. முன்மொழியப்பட்டிருக்கும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால்;, உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னர் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தீவிர முயற்சிகளுக்கு அது தீவிர இடையூறினை ஏற்படுத்தும். இந்த நாடு மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை எதிர்கொண்டிருப்பதால் 1947 பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் அல்லது 1979 பயங்கரவாத தடைச் சட்டம் என்பனவற்றில் எந்த ஒரு மாற்றத்தையும் மேற்கொள்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும். பயங்கரவாதிகளின் உரிமைக்கு மேலாக பொதுமக்களின் உயிர் வாழ்வதற்கான உரிமைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ஸ – எதிர்க்கட்சித் தலைவர்

மூலம்: தேனீ http://theneeweb.net/?p=6187


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...