எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுரை அருணாசலம் (79) டென்மார்க்கில் காலமானார்

எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளருமாகிய குமாரதுரை அருணாசலம் அவர்கள் தனது 79 வது வயதில் டென்மார்க்கில் காலமானார். தனது சிறுவயதில் தமிழரசுக் கட்சியினூடாக அரசியலில் காலடி பதித்த இவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் வரை ஓயாது அரசியல் பாதையினைத் தொடர்ந்தார். குமாரதுரை அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் போசகராகவும் ஆலோசகராகவும் இறுதிவரை செயற்பட்டார். அன்னார் கிழக்கின் பெருந்தலைவர்களில் ஒருவரான  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சடங்குகள் எதிர்வரும் சனியன்று டென்மார்க்கில் இடம்பெறும்.
மேலதிக விபரங்களுக்கு:
மதி குமாரதுரை : 00 4527890091

Source:  

No comments:

Post a Comment

சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் காலமானார்

  செப்டம்பர் 16, 2022 சி ரேஷ்ட ஊடகவியலாளரும், ஈழத்து முக்கிய திறன் ஆய்வாளர்களில் ஒருவருமான கே.எஸ். சிவகுமாரன் காலமானார். 1936 ஒக்டோபர் 01ஆம்...