"யார் பயங்கரவாதிகள்" By Vijaya Baskaran


---------------------------
1983 இனக்கலவரம் நடந்தபின் ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியில் நடமாடத் தொடங்கின.ஏதோ நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது போன்ற ஒரு உணர்வுகளோடு இருந்தோம்.இலங்கை இராணுவமும் சிங்கள மக்களும் எதிரிகளாக தெரிந்தனர்.அவர்களைக் கண்டு அச்சப்பட்டோம்.தென்னிலங்கை செல்லும்போது எந்த சிங்கள மக்களைக் கண்டாலும் ஒரு அச்ச உணர்வு தானாகவே வரும்
காலம் உருண்டோடியது.1986 இல் ரெலோ அமைப்பின் மீது புலிகள் தாக்குதல் நடாத்தியது.அந்த அமைப்பின் உறுப்பினர்களை கொலை செய்தது.அந்த அமைப்பை மீண்டும் இயங்கவிடவில்லை.

புலிகளின் சர்வாதிகாரம் மேலோங்கியது.தானாகவே சரண்டைந்த ஈரோஸ் அமைப்பைவிட சகல அமைப்புகளையும் புலிகள் தடை செய்தனர்.அந்த அமைப்புகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.பலர் கொல்லப்பட்டனர்.பலர் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.இந்தியாவுக்கும் வெளிநாடுகளுக்கும் தப்பி ஓடினர்



எந்த தென்னிலங்கை மக்களை கண்டு அஞ்சினோமோ எந்த இராணுவத்தைக் கண்டு அஞ்சினோமோ அவர்களின் மத்தியில் முப்பது வருட காலம் எம்மால் வாழமுடிந்தது.போய் வர முடிந்தது.
ஆனால் தமிழர்களான புலிகள் ஆதிக்கம் செலுத்தியபகுதிகளில் எம்மால் ஒரு நாள் கூடவாழமுடியவில்லை.ஒரு நன்மை தீமைகளுக்கு போய் வர முடியவில்லை.
இப்போது யார் பயங்கரவாதிகள்?"

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...