அரசின் தனியார்மயப்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக சோசலிசக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்!



இலங்கை கம்யூனிஸ்ட் .கட்சி மாநாட்டில் டியு வேண்டுகோள் இலங்கை கம்யூ.கட்சி மாநாட்டில் டியு வேண்டுகோள்

“சோசலிசக் கட்சிகளின் முன்னுரிமையான சோபணி தமது பலத்தை வலுவாக்கிää இந்த அரசாங்கம் இலங்கை வங்கிää மக்கள் வங்கிää தேசிய சேமிப்பு வங்கி மற்றும் ஊழியர் சேமலாப நிதி (நுPகு)இ ஊழியர்
நம்பிக்கை நிதியம் (நுவுகு) என்பனவற்றைத் தனியார்மயப்படுத்த
எடுத்திருக்கும் முயற்சிகளை எதிர்த்துப் போராடி முறியடிப்பதாகும்”.
எனத் தெரிவித்திருக்கிறார்.

Image result for dew gunasekera




இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியு குணசேகர. கட்சியின் 21ஆவது தேசிய மாநாடு கொழும்பில் செப்ரெம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெற்ற போது அரசியல் அறிக்கையைச் சமர்ப்பித்துப் பேசும்போதே டியு இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், “மேற்படி றுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்தால்ää நாட்டின் முழுப் பொருளாதாரமுமே பாதிப்புக்குள்ளாகும். ஏனெனில் மேற்படி நிறுவனங்கள்தான் அரசாங்கத்துக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் பிரதான நிறுவனங்களாகும்.

2014இல் எமது கட்சியின் 20ஆவது மாநாடு நடைபெற்ற பின்னர், ஏகாதிபத்திய
முகாமில் முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளதை நாம் அவதானித்துள்ளோம். எமது கண்ணோட்டத்தில் இந்த முரண்பாடு
அதிகரிப்பு,  பொருளாதார சமநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பாகவும்,  புதிய சர்வதேசபன்முக பொருளாதார நிலை ஏற்படவும் பங்களிப்பு வழங்கும் எனக் கருதுகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

டியு குணசேகர மேலும் தமது உரையில், கொரிய தீபகற்பம்,  தென்சீனக் கடல் பகுதி, உக்ரேனிய எல்லை என்பனவற்றில் ஏற்பட்டுள்ள புதிய பதட்டமான நிலைகளைக் குறிப்பிட்டதுடன்ää சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்து வருவதையும், டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் அமெரிக்காவின் பொருளாதார –பாதுகாப்புக் கொள்கைகள் நம்பிக்கையற்ற எதிர்காலத்தை நோக்கியிருப்பதையும்
சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர்  மைத்திரி – ரணில் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின்
போதும்,  பொதுத் தேர்தலின் போதும் விரைவான அரசியல் யாப்புச்
சீர்திருத்தங்களைச் செய்வதாக வாக்குறுதியளித்திருந்தார்கள். ஆனால்
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பதில் ஐ.தே.கவுக்கும் சிறீ.ல.சுகவுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் தோன்றியுள்ளன. அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு,
தேர்தல் சீர்திருத்தங்கள்,  பொருளாதாரக் கொள்கைகள் என்பன இன்னும்
தீர்வுகாணப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டில் சீனா,  வியட்நாம்  கியூபா ஆகிய நாடுகளின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தூதுக்குழுக்கள் கலந்து கொண்டன.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...