புல்லுக்குள் நெல்லுப் பிடுங்கும் மைத்திரி! பி.வீரசிங்கம்


இலங்கை ஒரு விவசாய நாடு. இங்கு நெல்வயல்களில் புல்லுப் பிடுங்குவது குறித்து அனைவருக்கும் தெரியும். நெல் வளருவதானால் அது அவசியம். ஆனால் இதே நாட்டில் சிலர் புல்லுக்குள் நெல் பிடுங்கும் வேலையிலும் ஈடுபடுகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் எதிரிகள் என நினைத்து சிலர் மீது எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் அப்படித்தான்  பார்க்கின்றனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தன்மீது விசுவாசம் காட்டாத, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொகுதி அமைப்பாளர்கள் மீது மைத்திரி தொடர்ச்சியாகப் பதவி பறிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னர் சிலரின் தொகுதி அமைப்பாளர் பதவிகளைப் பறித்தார். இப்பொழுது மேலும் இருவரின் அமைப்பாளர் பதவிகளைப் பறித்துள்ளார். அவர்களில் ஒருவர் கட்சியின் மத்துகம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம, மற்றையவர் நுவரெலிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே. இவர்களுடன் சேர்த்து இதுவரை ஏழு அமைப்பாளர்கள் மைத்திரியால் பதவி பறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மாத்தறை அமைப்பாளரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெரும, மைத்திரி மீது வெறுப்புக் கொண்டு தனது அமைப்பாளர் பதவியை தானாகவே ஏற்கெனவே ராஜினாமா செய்திருந்தார்.

மைத்திரியால் தொடர்ச்சியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைப்பாளர்கள் அனைவரும் கட்சிக்காக நீண்டகாலமாக உழைத்த,  பலத்த வாக்குவங்கி உள்ளவர்களாவர். இதேநேரத்தில் மைத்திரியை அரசியல் தந்திரங்கள் மூலம் ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்கவுக்கு கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியை மைத்திரி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதையிட்டு சந்திரிக மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக சினம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்குக் காரணம் கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.  பண்டாரநாயக்கவினதும் அவரது மனைவி சிறிமாவோ
பண்டாரநாயக்கவினதும் புதல்வியாகவும்ää இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்த தனக்கு கட்சியில் உயரிய பதவி  ஒன்றை வழங்காது சாதாரணமான தொகுதி அமைப்பாளர் பதவியை வழங்கியதையிட்டு சந்திரிக கடுப்பில்
இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் மைத்திரி ஜனாதிபதியாக வந்த ஆரம்ப காலங்களில் கட்சி விவகாரங்கள் குறித்தும், அரச விவகாரங்கள் குறித்தும் சந்திரிகவினது ஆலோசனைகளைக் கேட்டு வந்தார் எனவும்ää இப்பொழுது அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதால் அதனாலும் சந்திரிக மைத்திரி மீது விசனம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எதுஎப்படியிருப்பினும்ää மைத்திரி, சந்திரிக இருவரும் சிறீ.ல.சு.கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள் என்பதே பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களினதும்ää நாட்டு மக்களினதும் கருத்தாக இருக்கின்றது. ஏனெனில் இருவரும் சதித்தனமான முறையில் கட்சிக்குத் தெரியாமல் கட்சியின் பிரதான விரோதியான ஐ.தே.கவுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதுடன்ää அடுத்து வந்த பொதுத் தேர்தலிலும் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு ஐ.தே.கவின் வெற்றிக்கு ஆதரவளித்து சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளனர்.


கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் கட்சிக்கு வழங்கிய ஆணைக்கு மாறாக கட்சியின் ஒரு பகுதியினரை ஐ.தே.கவுடன் கூட்டரசாங்கத்திலும் இணைத்துள்ளனர். அதுமாத்திரமின்றி,இனிமேலும் அவ்வாறு செய்வதற்கே முயற்சிக்கின்றனர். இருவரினதும் இந்த நடவடிக்கைகளை கட்சியை அழிக்கும் துரோகச் செயலாகவே கட்சி உறுப்பினர்கள் பார்க்கின்றனர்.
கட்சியினதும் நாட்டினதும் நலனை முதன்மைப்படுத்துவதை விட மகிந்த ராஜபக்ச என்ற ஒரு தனிமனிதனை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் நடவடிக்கைகள் கட்சியை இருந்த இடம் தெரியாமலே அழித்துவிடும்  என்பதே பலரினதும் கருத்தாக உள்ளது. இதனால் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களும் இவர்கள் இருவர் மீதும் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனாலேயே மகிந்த தலைமையிலான எதிரணி மீது நாளுக்குநாள் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அதன் பிரதிபலிப்பை நடந்து முடிந்த சில கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் வெளிப்படுத்தியுள்ளன. உள்ள10ராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கும் போது அரசின் மீதான முழு வெறுப்பையும் வெளிப்படுத்துவதற்கு மக்கள் காத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே அத்தேர்தல்களை ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அரசு இழுத்தடிக்கின்றது. ‘மா புளித்தால் அப்பத்துக்கு நல்லது’ என தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல அரசு எவ்வளவுக்கு எவ்வளவு இத்தேர்தல்களை இழுத்தடிக்கிறதோää அவ்வளவுக்கு தேர்தலில் அது படுதோல்வியைத் தழுவும் என்பது திண்ணம்.

Source: vaanavil October 2017

No comments:

Post a Comment

UK Health Secretary “wilfully negligent” for ignoring warnings that pandemic is overwhelming National Health Service- by Tony Robson

In his Downing Street press briefing Wednesday, Conservative Health Secretary Sajid Javid dismissed warnings made by health professionals th...