மாவீரர் நாள் புனித நாளா? விஜய பாஸ்கரன்மாவீரர் நாளை புனித நாளாக கொண்டாடுமாறும் அதை அரசியல் கலப்பின்றி கொண்டாடுமாறும் மாவை சேனாதிராசா அறிக்கை விட்டுள்ளார்.
புலிகளை வைத்தே அரசியல் ஆதாயம் தேடுமுகமாக அவரே அறிக்கைவிட்டு அரசியல் கலப்பு வேண்டாம் என்கிறார்.என்ன வேடிக்கையான அறிக்கை.இவரது அறிக்கை எந்த வகையில் நியாயமானது? அவரது கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் நாட்டை விட்டே விரட்டியதை மறந்துவிட்டுப் பேசுகிறார்.
அமிரத்லிங்கம்,யோகேஸ்வரன்,சரோஜினி யோகேஸ்வரன்,நீலன் திருச்செல்வம் ,தங்கதுரை இப்படி பலரை பலியெடுத்த கூட்டத்தினரை எதற்காக புனிதப்படுத்துகிறார்? இவரே அவர்களால் விரட்டப்பட்டவர்.அவர்களுக்கு அஞ்சியே வாழ்ந்தவர்.அவரே இப்படிச் சொன்னால் எப்படி?
இப்படி இவர் அறிக்கை விடுவதால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கவேண்டி உள்ளது.அமிர்தருக்கு உரிய கதிரையில் இவரே உட்கார்ந்தவர்.இதுபோலவே சம்பந்தரும் தங்கதுரையின் கதிரையில் உடகார்ந்தவர்.
புலிகள் என்ன புனிதர்களா? கண்முன்னே சொந்த சகோதரர்களை வீதியிலே எரியும் நெருப்பிலே உயரோடு எரித்தவர்கள்.பெற்றவர்கள் முன்னாலேயே பிள்ளைகளை துடிதுடிக்க கொன்றவர்கள்.எத்தனை குழந்தைகளை கொன்றார்கள்? இவர்கள் புனிதர்களா?மாவீரர்களா? மாவை சேனாதிராசா எந்த அடிப்படையில் புலிகளை புனிதர்கள் என்கிறார்?


கென் பாம்.டொலர் பாம்,அனுராதபுரம் என எத்தனை கிராமங்களில் ஏதும் அறியாத அப்பாவி கிராம மக்களை கொன்று குவித்தார்கள்.ஏறாவூர்,காத்தான்குடி படுகொலைகள் எவ்வளவு கொடூரமானவை.இப்பேர்பட்ட கொலைகாரகூட்டத்தை எந்த அடிப்படையில் புனிதர்கள் என அழைப்பது?
மகிந்தா ஆட்சிக்கு வராமல் இருந்தால் இவரது ஆயுளும் சிலவேளை முடிந்திருக்கலாம்.இவரே யாழ் மண்ணில் கால் வைத்திருக்க முடியாது.அப்படி ஒரு காலம் இருந்ததை மாவை மறந்துவிட்டார்.
அரசியல் காரணங்களை புறந்தள்ளி நன்றி சொல்ல வேண்டியவர்கள் மகிந்தா,கோத்தபாய,சரத் பொன்சேகா ஆகியோருக்கு மட்டுமே நன்றி சொல்ல வேண்டும்.அதுதான் நியாயம்.
புலிகளின் கடந்தகால கொடுமைகள் ஒரு கறை படிந்துள்ள வரலாறு.உலக வரலாற்றில் விடுதலையின் பெயரால் மக்களை கொடுமைப்படுத்திய ஒரே அமைப்பு புலிகளே.மாவை அவர்களை வைத்து அரசியல் இலாபம் அடைய முயற்சிக்கிறார்.
புலிகள் என்றதும் நினைவுக்கு வருவது பயங்கர அனுபவங்களே.அவர்கள் கொலைகாரர்கள்.அவ்வளவுதான்.

No comments:

Post a Comment

உலகம் உற்றுநோக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு--எம்.ஏ.பேபி

அக்டோபர் 16, 2022 சீ னக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு ஒக்ரோபர் 16ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. இதில...