"ஞானசாரதேரரின் கின்னஸ் சாதனை! "- பேரின்பன்



இலங்கையின் அண்மைக்கால இ வரலாற்றில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் நிகழ்த்திய சாதனையே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இடம்
பிடித்திருக்கிறது. ஞானசாரதேரர் மீது பல வழக்குகள் இருந்ததுடன் நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பிடிவிறாந்தும் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேரர் எதற்கும் அஞ்சாமல் சுமார் ஒருமாத காலம் வெற்றிகரமாகத் தலைமறைவாக இருந்துள்ளார். இலங்கையின் வரலாற்றிலேயே அகிம்சையைப் போதிக்கும் ஒரு மதத்தின் குருவைப் பிடிப்பதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வெட்கக்கேடு நடந்திருக்கிறது. இருந்தும் தேரரைப் பிடிக்க முடியவில்லை. பின்னர் தேரர் தாமாகவே முன்வந்து நீமன்றத்தில் சரணடைந்து தனது தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சட்டத்தை மீறியும் நீதிமன்றத்தை அவமதித்தும் செயற்பட்ட ஞானசார தேரருக்கு உடனடியாகவே பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சினிமாவில் வரும் காட்சிகள் போல ‘நல்லாட்சி’ நடைபெறும் ஒரு ‘ஜனநாயக’ நாட்டில் நடந்தேறியுள்ளன.


ஞானசாரதேரரின் விவகாரத்தில் விடைகாண வேண்டிய பல விடயங்கள் பொதிந்துள்ளன.முதலாவது விடயம்ää ஞானசாரதேரரின்
முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை இனங்களுக்கெதிரான செயற்பாடுகளை
ஆட்சியில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் சரி,  எதிர்க்கட்சியினர் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி, ஒருபோதும் நேரடியாக வன்மையாகக் கண்டிக்கவில்லை. இனங்களுக்கடையில் குரோதத்தைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப்
பொதுவாகவே சொல்லிக்  கொண்டிருந்தனர். இரண்டாவது விடயம்ää தேரரைக் கைது செய்வதற்கு 5 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தும்ää பொலிசாரால் ஏன் அவரைக் கைது செய்ய முடியவில்லை. அந்தளவுக்கு இலங்கைப் பொலிசார் திறமையற்றவர்களா அல்லது
பொலிசாரின் கைகளை மறைமுகமாக யாராவது கட்டிப் போட்டிருந்தார்களா?

ஞானசாரதேரரை ஜாதிக ஹெல உருமயவின் தலைவரும்,  அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தான் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனால்தான் பொலிசாரால் அவரை அணுக முடியவில்லை எனவும்,  லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய பின்னர்தான்,அவரை அவசரம் அவசரமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் காட்சி அரங்கேறியுள்ளதை தெளிவாகப் பார்க்க முடிகிறது. சம்பிக்க மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எவ்விதமான அக்கறையும் செலுத்தியதாகத் தெரியவில்லை. தமது அமைச்சர் ஒருவர் குறித்து நாட்டின் முக்கியமான அரசியல் கட்சியின் தலைவரும்ää முன்னாள் அமைச்சருமான ஒருவர் சுமத்திய குற்றச்சாட்டுக் குறித்து அரச தலைவர்கள் பாராமுகமாகப் பொறுப்பின்றி இருப்பது ‘நல்லாட்சி’யில் எந்த வகையைச் சேர்ந்தது என்று தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுசுகித்திருக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் காத்திரமாகச் செயற்படாமல் தமது கடமையைத் தொடர்ந்தும் தட்டிக்கழித்தே வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க நாட்டின் நீதித்துறையையும்,  காவல்துறையையும் ஏமாற்றிய ஞானசாரதேரர் சரணடைந்த உடனேயே அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண பிரசை ஒருவர் இவ்வாறு நடந்துகொண்டால் அவருக்கும் இவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுமா? வரலாற்றை எடுத்துப்பார்த்தால் நிச்சயமாக இல்லை.மொத்தத்தில் ஞானசாரதேரரின் விவகாரத்தை எடுத்து நோக்கினால்,  கடந்த பல வருடங்களாகவே அவர் இனங்களுக்கடையில் குரோதத்தை உருவாக்குவதற்காக மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிரதான அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும் தெரிந்திருந்தும்ää
அவைகள் அதுபற்றி ஏனோதானோ என்றுதான் இருந்து வந்துள்ளன.
குறிப்பாகச் சொல்லப்போனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
துணையின்றி தேரர் இவ்வளவு துணிச்சலாகவும்,  தொடர்ச்சியாகவும்
செயற்பட்டிருக்க முடியாது. -

மூலம் : வானவில் ஜூன் 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...