"மாயமான்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!" தோழர் மணியம்


இலங்கையின் இன்றைய அரசியல் சு10ழல் சற்றுக் குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்தக் குழப்பம் இலங்கைக்கு மட்டும் பிரத்தியேகமான ஒன்று அல்ல. உலக ரீதியில் ஏற்பட்டுள்ள குழப்பமான சு10ழலின் விளைவே இலங்கையிலும் எதிரொலிக்கிறது எனலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரண்டு மேல்நிலை வல்லரசுகள் உலக அரங்கில் வளர்ச்சி பெற்றன. ஆனால் 90களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியனில் இருந்த சோசலிச அரசு தகர்ந்து போனதுடன்,  அதன் பல குடியரசுகளும் பிரிந்து சென்றன. இந்தச் சு10ழலைப் பயன்படுத்தி அமெரிக்கா ஒரேயொரு மேல்நிலை வல்லரசாக வளர்ச்சி பெற முயன்றது. ஆனால் சீனாவின் அபரிமிதமான பொருளாதார, அரசியல், இராணுவ வளர்ச்சி அமெரிக்காவின் கனவைத் தவிடுபொடியாக்கியது. அத்துடன் முதலாளித்துவப் பாதையில் அடியெடுத்து வைத்த ரஸ்யாவும் (முன்னாள் சோவியத் யூனியன்) தன்னை மீண்டும் பலப்படுத்தத் தொடங்கியது.




இந்த நிலைமைகளால் உலக அரங்கில் புதிய அணிசேர்க்கைகள் ஆரம்பமாகத் தொடங்கின. அதன் தாக்கம் இலங்கை உட்பட பல நாடுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில், சில பிரத்தியேக சூழ்நிலைகளும் இந்த
மாற்றங்களுக்குத் துணை புரிந்துள்ளதை அவதானிக்கலாம்.

1948 பெப்ருவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே
சோசலிச இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரிக் கட்சிகள் செயற்படத் தொடங்கிவிட்டன. ஆனால் இலங்கையின் முதலாளித்துவம்
தரகு முதலாளித்துவ வர்க்கமாக இருந்ததுடன், பிரித்தானிய
காலனித்துவவாதிகளையே சார்ந்தும் இருந்தது. சுதந்திரத்துக்கு சற்று
முன்னர்தான் அது தனது சொந்தக் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை
ஸ்தாபித்தது. அந்தக் கட்சி பிரித்தானிய ஏகாதிபத்திய சார்பானதாகவும், உள்நாட்டில் நிலப்பிரபுத்துவ – பெருமுதலாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்
படுத்துவதாகவும் இருந்தது.

இலங்கை முதலாளித்துவத்தின் இந்தப் போக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இலங்கையின் தேசிய முதலாளித்துவம் ஐ.தே.கவின் விதேசிய சார்பான போக்கை விரும்பவில்லை. எனவே இலங்கை முதலாளி வர்க்கத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு, தேசிய முதலாளி வர்க்கம் தன்னுடன் இணையக்கூடிய
தொழிலாள – விவசாய – மத்தியதர வர்க்கங்களைச் சேர்த்துக்கொண்டு
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க தலைமையில் தனது சொந்தக்
கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தது.இதன் பின்னர் இலங்கையின் அரசியல் காட்சி நிலைமைகள் தெளிவடையத் தொடங்கின.
அதாவது, ஏகாதிபத்தியமும் அதற்கு துணைபோகும் தரகு முதலாளித்துவக் கட்சியான ஐ.தே.கவும் இலங்கை மக்களின் பிரதான எதிரியாக வரையறுக்கப்பட்டன. ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்த
சிறீ.ல.சு.கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் (இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சியும்ää லங்கா சமசமாஜக் கட்சியும்) ஏகாதிபத்திய விரோத,
மக்கள் சார்புக் கட்சிகளாகவும் , தமக்கிடையே நேசசக்திகளாகவும்
இனம்காணப்பட்டன. இந்த நிலைமையில் இன்றளவும் அடிப்படையான மாற்றம் எதுவுமில்லை.

மறுபக்கத்தில், தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
கட்சி ஐ.தே.கவின் ஒரு கிளை போலவும், யாழ்.நிலப்பிரபுத்துவ
மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகவும், இனவாதக் கட்சியாகவும்
செயற்பட்டதால்ää அக்கட்சியும் ஏகாதிபத்திய சார்பு, பிற்போக்குக்
கட்சியாகவே இனம் காணப்பட்டது. அதிலிருந்து பிரிந்து பின்னர்
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் உருவான தமிழரசுக்
கட்சியும் அதே பாதையில் பயணித்ததால், அக்கட்சியும்
அவ்வாறே கருதப்பட்டது.

நன்றி: வானவில் ஜூன் 2017 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...