முதலாவது பொது வேலை நிறுத்தத்தின் 70ம் ஆண்டு நிறைவை நினைவுகூருதல் கே.கே.எஸ்.பெரேரா


  • -ஜூன் 1947ன் பொது வேலைநிறுத்தம் அரச இயந்திரத்தை நடுநிலையாக்கியது: காலனித்துவ pereraஆட்சியாளர்கள் சுட்டதில் கந்தசாமி மரணம்
  • -“ஐக்கிய இராச்சிய அரசாங்க ஊழியர்கள் மற்றும் உலகின் வேறு ஜனநாயகப் பகுதிகள் அனுபவிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கான முழு தொழிற்சங்க உரிமைகளையும் இலங்கை தொழிற்சங்க சட்டம் மற்றும் சிவில் உரிமைகளின் ஆகியவற்றின் கீழ் அங்கீகரிக்கப்படும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்று நாங்கள் உறுதியுடன் பிரகடனம் செய்கிறோம்”.  அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் (ஜி.சி.எஸ்.யு)
  • -சுதந்திரத்துக்கான வாக்குறுதி கிடைக்கும் வரை வேலைநிறுத்தத்தை கையாள்வதற்காக ஒரு விரலைக்கூட நான் அசைக்க மாட்டேன்’ - டி.எஸ்.சேனநாயக்கா
எழுபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சங்க உரிமைகளை அங்கீகரிப்பதற்காக ஸ்ரீலங்காவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டம் பற்றிய ஆய்வு தற்போதைய அரசாங்கங்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது.பிரித்தானிய ஆட்சியின் கீழ் அரசாங்க ஊழியர்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்கவோ அல்லது தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப் படவோ இல்லை. 1947 ஜனவரி அளவில் தொழிற்சங்க உரிமைகளுக்கான அரசாங்க ஊழியர்களின் கிளர்ச்சி காரணமாக ஜனவரி 21ல் அரச சபையில் ஒரு அறிக்கையை அட்டவணைப் படுத்துவது அவசரமாகச் செய்யப்பட வேண்டும் என்று பிரதம செயலாளர் கண்டார்.
லண்டனில் உள்ள காலனித்துவ அலுவலகத்துக்கு பொறுப்பான பிரதம செயலாளர், அந்த விடயம் அந்த அளவுக்கு சிக்கலான பல பிரச்சினைகளை உள்ளடக்கியுள்ளது மற்றும் அத்தகைய அடிப்படைக் கேள்விகளுக்கான முடிவை புதிய அரசியலமைப்பின் கீழ் அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று அறிவித்தார்.
1920ல் அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் (ஜி.சி.எஸ்.யு) ஆரம்பத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களுடனும் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளுடனும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடவேண்டி இருந்தது.
எந்த அரசியல் கட்சியுடனும் இணைப்பை ஏற்படுத்தாதிருந்த பெரும்பாலான ஜி.சி.எஸ்.யு அங்கத்தவர்கள் மார்க்கசிய சிந்தனைகளைக் கொண்ட இரண்டு கட்சிகளான லங்கா சமசாஜக் கட்சி (ல.ச.ச.க) மற்றும் கொம்யுனிஸ்ட் கட்சி (கொ.க) என்பனவற்றின் பக்கம் சாய்ந்தார்கள் முறையே இந்த இரு கட்சிகளினதும் தலைவர்களான கலாநிதி என்.எம்.பெரேரா மற்றும் பீற்றர் கெனமன் ஆகியோர் 1930 களின் நடுப்பகுதியில் இருந்து ஜி.சி.எஸ்.யு வின் செயற்பாடுகளை வழி நடத்தினார்கள். 1940ல் மொத்தமான 36,000 அரசாங்க எழுதுவினைஞர்களில் சுமார் 21,000 பேர் வரை இச்சங்கத்தின் மொத்த அங்கத்தவர்களாகச் சேர்ந்திருந்தார்கள்.
சபையின் தலைவராக இருந்த கௌரவ டி.எஸ் சேனநாயக்கா அவர்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “ எந்த ஒரு சூழ்நிலையின் கீழும் அரசாங்க ஊழியர்கள் அரசியல் உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை மற்றும் அரசாங்கம் தொழிற்சங்கங்களை உத்தியோகபூர்வமாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.
                                    டைம்ஸ் ஒப் சிலோன் - ஜனவரி 26, 1947
இந்த அறிக்கையினால் தூண்டப்பட்ட அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கத்தின் கPieter-Keunemanண்டிக் கிளை, மந்திரிகள் சபையிடம் இந்த உரிமைகளை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு அனுமதிக்கும்படி  கோரிக்கை விடுக்கும்படி அரச சபை அங்கத்தவர்களிடம் விண்ணப்பித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த விண்ணப்பம் பிரதம செயலாளருக்கு அளவுக்கு மீறிய எரிச்சலூட்டியதால் அவர் உடனடியாக கண்டி மற்றும் தலைமை அலுவலக தொழிற்சங்க உத்தியோகத்தர்களுக்கு ஒரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து, அந்த தீர்மானத்தை திரும்பப் பெறாவிட்டால் கண்டி தொழிற்சங்க கிளையை தடை செய்யப் போவதாக அச்சுறுத்தினார்.
பிரதம செயலாளரின் இந்த உயர்மட்ட அணுகுமுறை அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கத்தின் தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வலுப்படுத்தியதுடன் தீவளாவிய பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன் தேவை ஏற்பட்டால் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கருத்தின் முடிவில் அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் மார்ச் முதல் வாரத்தில் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க வாரம் ஒன்றை ஒழங்கு செய்யதது. இந்த வாரத்தில் நாடு முழுவதிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன் பிரச்சாரத்தை நிறைவு செய்யும் வகையில் கொழும்பில் ஒரு பிரமாண்டான ஊர்வலம் நடத்தப்பட்டது.
அரசாங்க ஊழியர்களின் முதன் முதலான ஆர்ப்பாட்ட ஊர்வலம்
வரலாற்றில் முதல்முறையாக அவர்கள் அப்போதைய செயலகத்தில் இருந்து நகர மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் இலங்கை அரசாங்க ஊழியர்களின் உரிமைகள் பற்றிய புதிய பிரகடனம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டார்கள் (அதைத்தான் நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளோம்).
காலனித்துவ அரசின் ராஜாங்க செயலாளருக்கு கேபிள்கள் மற்றும் குறிப்புகள் அனுப்பப் பட்டன மற்றும் அரச சபை மற்றும் பொதுச் சபை என்பனவற்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன. பிரதம செயலாளர் இந்த நாளைய உள்ளுர் ஆட்சியாளர்களைப் போல தங்கள் தூக்கத்திலிருந்து விழித்து  வரவிருக்கும் நிகழ்வுகளின் காட்சியை எப்படித் தடுப்பது என்று சிந்திக்கலானார்.
ஜி.சி.எஸ்.யு வின் தலைமையின் கீழுள்ள அரசாங்க சேவைகள் சங்கம் பல கூட்டங்களை நடத்தியது அதில் ல.ச.ச.க மற்றும் கொம்யுனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்.எம், கொல்வின் மற்றும் கெனமன் போன்றவர்கள் கருத்தியல் ரீதியாக அல்லது கட்சி அரசியல் என்றில்லாமல் ஆனால் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பேச்சாளர்களாக அழைக்கப் பட்டார்கள்.
இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் மேலும் மேலும் தொழிற்சங்கங்கள் இணைந்ததினால் அது கணத்தாக்கம் பெற்றது மற்றும் மே 1947 மே மாதத்தில் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த வெகுஜனங்களின் ஒன்று சேர்ந்த ஒரு வெடிக்கும் பிரிவாக மாறியது. அச்சமடைந்த தொழில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  தொழில் பிணக்கு, தடுப்பு, விசாரணை மற்றும் தீர்வு மசோதா என்கிற ஒரு மசோதாவை தாக்கல் செய்தார், எனினும் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது. (சட்டங்கள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன, ஆனால் அழுத்தங்கள் காரணமாக அரச சபை நாட்களில் கூட அதைக் குறைக்கவோ அல்லது நீர்த்துப்போகவோ செய்யப்பட்டது).
தோல்வியினால் நகரமுடியாமல் தவித்த அரசாங்கம் அடுத்ததாக இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தது, பிரபலமான வெகுஜன செயற்பாட்டை அடக்கும் நோக்கத்துடன் ஒன்றும் மற்றும் காவல்துறையினருக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் பொதுசன பாதுகாப்பு சட்டம் மற்றும் பொலிஸ் (திருத்தப்பட்ட) சட்டம் என்பனவே அவை, அத்துடன் சட்டமூலம் நிறைவேற்றுவதற்கான மூன்று வாசிப்பையும் ஒன்றரை மணி நேரத்திற்குள்ளேயே விரைவாக நிறைவேற்றி முடித்தது. இதற்கிடையில் வேலைநிறுத்தம் தனியார் துறைகளில் வெடித்தது. மோட்டர் பொறியியல், 27 நிறுவனங்களைச் சேர்ந்த தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்கள், தானிய களஞ்சியம் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் என்பனவற்றை சேர்ந்த தொழிலாளர்களும் கூட வெளி நடப்புச் செய்தார்கள்.
ஆளுனர் அந்த நேரம் மிகவும் கவலை அடைந்திருந்தார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் அனைவரும் அந்த செயற்பாட்டில் உடனடியாக இணைந்து விடும் வாய்ப்பு உள்ளதோ என அச்சமடைந்து, அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்தால் வேலை நீக்கம் செய்யப் படுவதுடன் ஓய்வூதிய உரிமைகளையும் இழக்கவேண்டி நேரிடும் என அச்சுறுத்தி மே 22ல் ஒரு அறிக்கையை பிரசுரித்தார். அனைத்து அச்சுறுத்தல்களையும் புறக்கணித்த அரசாங்க ஊழியர்களின் 18 தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து காலிமுகத் திடலில் ஒரு மிகப்பெரும் பொதுக்கூட்டத்துக்கு மே 28ல் அழைப்பு விடுத்தன.T B Illangaratne,
அந்தக் கூட்டத்துக்கு ரி.பி. இலங்கரத்னா தலைமை தாங்கினார் ( பின்னாளில் இவர் ஸ்ரீ.ல.சு.கவின் முக்கிய பிரமுகராகவும் மற்றும் பண்டாரநாயக்காவின் அரசாங்கங்களில் அமைச்சராகவும் இருந்துள்ளார்), பிரதம செயலாளரால் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் தெரிவிக்கப் பட்டிருந்தது, மே 28 கூட்டத்தின் பிரதான ஏற்பாட்டளாராக அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் இருந்த போதும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்து வெளியாட்கள் மற்றும் அரச ஊழியர் அல்லாதவர்களால் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன என்று.
தொழிற்சங்க உரிமைகள் பற்றிய சட்டங்கள்
தொழிற்சங்க உரிமைகள் பல சட்டங்களின் கீழ் வழங்கப்பட்டன. ஒரு சங்கத்தை, தொழிற்சங்கச் சட்ட விதி 1935ம் வருட இல.14ன் படியும் மற்றும் தொழிற்சங்கச் சட்டம் 1948ம் வருட இல.15 வது சட்டத்தின்படியும் பதிவு செய்யலாம். அரசியலமைப்பின் 14ம் விதிப் பிரகாரம் அது ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டு ஒரு பிரஜையின் அடிப்படை உரிமையின்படி ஒரு தொழிற்சங்க அங்கத்தவராகலாம். 1999ம் ஆண்டின் திருத்தம் இல. 56ன்படி தொழில்துறைச் சர்ச்சை சட்டம், கூட்டாக பேரம் பேசும் உரிமைகள் என்பன அனுமதிக்கப்பட்டன. தொழில்துறை பிணக்குகள் சட்டம் பிரிவு 32 ஏ, சொல்வது, எந்த ஒரு தொழில் வழங்குனரும் தன்னிடம் அங்கத்துவம் வகிக்கும் ஒரு தொழிற்சங்கத்தில் அங்குள்ள வேலையாட்களில் 40 விகிதமானவர்கள் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவர்கள் சார்பாக அத் தொழிற்சங்கம் பேரம் பேசுவதை நிராகரிக்க முடியாது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) மாநாட்டின் விதிகள் 87 மற்றும் 98 என்பன ஏற்பாட்டு உரிமை மற்றும் கூட்டுப் பேரம் என்பனவற்றின் சங்க சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்குகிறது.
பிரதம செயலாளர் வெளியிட்ட ஒரு செய்தியில், அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கம் மே, 28ல் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் பேரணியில் அரசாங்க கொள்கைகளக்கு மாறாக அரசாங்க சேவையில் இல்லாத பலர் உரையாற்றியிருந்தார்கள் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. அது மேலும் தெரிவித்திருந்தது தொழிற்சங்கம்; அரசாங்கத்தின் கொள்கையை குறைமதிப்பீடு செய்யும் நோக்குடன் நேரடி செயற்பாட்டில் இறங்கி வேண்டுமென்றே பிரச்சாரம் நடத்துவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே சங்கத்தின் அங்கீகாரம் வாபஸ் பெறப்படுகிறது என்று. சங்கத்தின் உத்தியோகத்தர்கள் சிலர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். சங்கம் அந்தச் செய்தியை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, வேலை நிறுத்த நிலை மிகவும் மோசமடைந்தது, மற்றும் மே 31 ந்திகதி அளவில் நல்லதொரு தொகையான 18,000 வரையான அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்கள் வீதிக்கு வந்தார்கள்.
ஆளுனர் மற்றும் அமைச்சர்களுடனான ஒரு சந்திப்பின் பின்னர் பிரதம செயலாளர் வேலை நிறுத்தக்காரர்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்தார், அதிகாரமற்ற சங்கங்களின் சார்பாக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு மேலதிக செயற்பாடும் ஒழுங்கு மீறலாகவே கருதப்படும் மற்றும் ஜூன் 3 ந் திகதிக்குள் அவர்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து தாமாகவே விலகிக் கொண்டதாகக் கருதப்படும் என்று அந்த எச்சரிக்கை தெரிவித்தது.
அவர் மேலும் தெரிவித்திருந்தது, அரசாங்கத்துடன் ஒத்துழைக்க விரும்பும் உத்தியோகத்தர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவது பற்றிய பிரேரணையை தான் கருத்தில் கொள்ள தயாராக இருப்பதாக. அது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியது, ஜூன் 3ல்; அதிகமான தனியார் துறை ஊழியர்கள்; இணைந்து கொண்டார்கள். அரசாங்கத் துறைகள், தபால் அதிபர், மற்றும் றெயில்வே என்பனவற்றில் இருந்து இன்னும் அதிகமானவர்களை வரவழைப்பதற்காக அரசாங்கம் விரைவாக ஆறு தொழிற்சங்க அதிகாரிகளை மீண்டும் பதவியில் சேர்த்துக் கொண்டது.The-Times-of-Ceylon-1
வேலை செயபவர்களுக்கு இலவச போக்குவரத்து, உணவு, மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை அரசாங்கம் வழங்கியது, அதேவேளை கல்கிஸ்ஸ ஹோட்டல் ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டார்கள்.
“இந்த வேலை நிறுத்தத்தை தீர்க்கும்படி நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” - டைம்ஸ் ஒப் சிலோன் - 3 ஜூன் 1947.
செயற்பாடின்றி இருப்பதற்காக மந்திரி சபையை பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் தாக்கின. ஆளுனர் இராஜதந்திர ரீதியில் அசாதாரண நகர்வை மேற்கொண்டு தொழிற்சங்க தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார், இந்த நடவடிக்கையின் பின்னர் பிரபலமான கொலன்னாவ அரசாங்க தொழிற்சாலை, தும்புத் தொழிற்சாலைகள் மற்றும் புகையிரத திணைக்களத்தின் இரத்மலான தொழில்பட்டறை என்பனவற்றை சேர்ந்த தொழிலாளர்களும் கூட வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டார்கள். பொது வேலை நிறுத்தம் இப்போது பூரணமடைந்தது.
அதிகாரிகள், வீதிகளில் ரோந்து செய்வதற்கு அரச கடற்படையினரின் உதவியை கோரினார்கள்.
மோதல் தீர்மானங்கள் இடம்பெறும்போது அந்த பழைய நல்ல நாட்களில் இப்படியான நெருக்கடியான சூழ்நிலைகளில் குடிமக்கள் பங்கெடுக்கும் பழக்கம் இருந்தது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த சில ஆண்கள் ( அப்போது டொலர் வளையம் இல்லாதபடியால் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பு அவசியப்படவில்லை) தலைமை நீதிபதி சேர். ஜோண் ஹாவர்ட் தலைமையில் கொழும்பு வை.எம்.சி.ஏயில் ஒன்று கூடினார்கள், அதேவேளை  அரச சபை அங்கத்தவரான ஆர்.ஈ ஜெயதிலகாவும் அதில் இணைந்து, அரச சபையின் விசேட அமர்வு ஒன்றை நடத்தும்படி டி.எஸ்.சேனநாயக்காவுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் டி.எஸ் காலனித்துவ அலவலகத்தில் இருந்து சுதந்திரம் தொடர்பான அறிகுறி ஏதாவது வருகிறதா எனப் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார். தந்திரோபாய அரசியல்வாதியின் அணுகுமுறை “சுதந்திரம் பற்றிய வாக்குறுதி எதுவும் வழங்காவிட்டால் இந்த வேலை நிறுத்தத்தைக் கையாள்வதற்கு நான் எனது விரலைக்கூட அசைக்க மாட்டேன்” என்பதாக இருந்தது.
அந்த நாளில் அவர் வெற்றி பெற்றார் முன்கூட்டியே சுதந்திரம் வழங்குவது பற்றிய வாக்குறுதி அவருக்கு கிடைத்தது மற்றும் அரச சபை அங்கத்தவர்களுக்கு ஜூன் 6ல் ஒரு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார் அன்றைய தினம் மீதமாக இருந்த துறைமுகத் தொழிலாளர்களும் வெளியே வந்தார்கள் டி.எஸ் அந்த நிலைமைக்கு தலைமை ஏற்றார்.
அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்த முன்னணியில் பிளவுகள் தோன்றின, அரசாங்க சேவைச் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் தங்கள் பதவியை இராஜினாமாச் செய்தார்கள்.
டி.எஸ் தலைமை ஏற்கிறார்
ஜூன் 4ல், சபையின் தலைவர் டி.எஸ்.சேனநாயக்காவின் கீழ் மந்திரிசபை ஒன்று கூடியது மற்றும் அனைத்து அதிகாரங்களும் டி.எஸ் மற்றும் பிரதம செயலாளர் சி.எச் கொலின்ஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டதD.S. Senanayakeு. அவரது முதற் செயற்பாடு வேலை நிறுத்தக்காரர்கள் பேச்சு வர்hத்தைக்கு விட்ட அழைப்பை நிராகரித்தது மற்றும் அவர்கள் வேலைக்கு திரும்பினால் அவர்களை நன்கு உபசரித்து அவர்கள் கோரிக்கைகளை கவனிப்பதாக ஒரு விண்ணப்பத்தையும் விடுத்தார். இந்தப் பிரச்சினையில் பொதுமக்களின் எண்ணம் பிளவுபட்டதாக இருந்தது.
மாணவ அமைப்புகள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளித்த அதேவேளை தொழில் நிபுணர்கள் அரசாங்கத்துக்கு உதவுவதாக வாக்குறுதி வழங்கினார்கள். நெருக்கடியான நிலையை உணர்ந்த தொழிற் சங்கங்கள் புதிய கோரிக்கைகளை முன் வைத்தன, அமைச்சர்களின் இராஜினாமாக்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், பிரதம செயலாளரை பதவி நீக்கி மறு தேர்தல் நடத்தும்வரை, கட்சி சார்பற்ற பிரஜைகள் தலைமையில் இடைக்கால அரசை நிறுவும்படி கோரினார்கள். டி.எஸ் தீர்க்கமாகச் செயற்பட்டார், இலங்கை பாதுகாப்பு படையின் ஒரு படைப் பிரிவு கடமையில் ஈடுபடும்படி பணிக்கப்பட்டது, அவர்கள் வீதிகளில் அணிவகுப்பு நடத்தினார்கள். அத்தியாவசிய சேவைகளை நடத்துவதற்கான உதவியாளர்கள் பட்டியல் ஒன்றை அரச அதிகாரிகள் தொகுத்தார்கள். அந்த நாளில் மிகவும் சக்திவாயந்த தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ குணசிங்காவுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியதினால் அவர் தனது தொழிற்சங்கமான இலங்கை வர்த்தக சங்கம் ( வெள்ளைக் காலர் வகுப்பினர்) வேலை நிறுதத்தில் ஈடுபடாது என்று அறிக்கை வெளியிட்டார்.
ஆயுதப் படையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோரின் கணிசமான செயற்பாடுகள் இடம் பெற்றபோதும் வேலைநிறுத்த நிலமை அப்படியே இருந்தது. ஒரு இறுதிக்கட்ட காட்சி அமைப்புக்காக டி.எஸ் வழிகளை அமைப்பதில் செயற்பட்டு வந்தார். சட்ட நகர்வு உறுதியாக அமலாக்கப்பட்டு வந்தது. தனிமையான வேலை நிறுத்தக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள். புகையிரத சேவையை முடமாக்கும் தகுதி பெற்ற தெமட்டகொட புகையிரதத் தொழிலாளர்கள் வேலைத் தலத்தின் உள்ளேயே இரவு பகலாக அடைக்கப்பட்டு அரசாங்கத்தால் போஷிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களை வெளியே கொண்டு வருவதில் தொழிற்சங்கத் தலைமை தோல்வி கண்டது. எனினும் அரசாங்க சேவையாளர்கள் இப்போது உடையும் நிலைக்கு வந்திருந்தார்கள். அவர்களின் மன உளைச்சலைத் தீர்க்கும் வகையில் ஆச்சரியப்படும்படி ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது, இறுதி முயற்சியாக பேஸ்லைன் வீதி வழியாக  தொழில் பட்டறைக்கு ஒரு ஊர்வலம் நடத்தி அவர்களை அதில் இணைந்து கொள்ள அவர்களைத் தூண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது, அந்த முயற்சி தோல்வியடைந்தது.
அடுத்ததாக ஜூன் 5ல், கொம்பனி வீதி டிமெல் விளையாட்டு மைதானத்தில் இருந்து கொலன்னாவ தொழிற்சாலையை நோக்கி  ஒரு பெரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது, அங்கு வேலை நிறுத்தக்காரர்கள் அனைவரும் பி.ப 1 மணியளில் ஒன்றுகூடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர் அந்த தூரத்தை அடைவதற்கு காவல்துறையின் அனுமதியைப் பெற்ற பின்னர். தங்கள் சேரிடத்தை அடைவதற்கு ஒரு ஊர்வலத்தை ஏற்படுத்தினார்கள். ஒரு பத்தாயிரம் அளவிலான வலிமையான தொழிலாளர் படை பாடல்கள் பாடியபடியும் பைலா ஆட்டம் ஆடியபடியே நடந்தார்கள்.
ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே அனுமதி வழங்கப்பட்ட பாதையில் இருந்து விலகி தெமட்டகொட வேலைப்பட்டறையை விரைவாக அடைவதற்காக வேறுபாதையில் நடந்தார்கள், காவல்துறையினரின் தாக்குதல் நடத்தப்படலாம் என்கிற அச்சம் காரணமாக வலிமையான துறைமுக ஊழியர்கள் முன்னால் நிறுத்தப்பட்டார்கள்.
முதல் முறையாக இந்த போராட்டத்தில் ஒரு அரசியல்வாதியான கலாநிதி என்.எம்.பெரேரா சில இடதுசாரி தலைவர்களுடன் காட்சிக்கு வலிமை சேர்ப்பதற்காக  அதற்கு தலைமை ஏற்றிருந்தார், அது ஒரு தனித்துவமான காட்சி அதையும் விட மேலாக அது ஒரு தனித்துவமான நிகழ்வு.
கந்தசாமி கொல்லப்பட்டார்: கலாநிதி என்.எம்.பெரேரா காயமடைந்தார்
ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் ட்ரக் வண்டிகளில் ஏற்றப்பட்டு மருதானை காவல்துறை வளாகத்திலிருந்து பேஸ்லைன் வீதியை நோக்கி கொண்டு செல்லப்பட்டார்கள். டி.எஸ். அனைத்து பொறுப்புக்களையும் காவல்துறை  கண்காணிப்பாளர் நாயகத்திடம் (ஐ.ஜி.பி) விட்டிருந்தார். அவர் இந்த நாளைய ஊடுருவும் அரசியல்வாதிகள் மற்றும் பயந்த கோழைத்தனமான ஆமாம் சாமி பாதுகாப்பு தலைமைகளைப்போலில்லாமல் தேவையான செயற்பாட்டை உடனடியாக மேற்கொள்பவர்.
திட்டமிட்டபடி துறைமுகக் கும்பல் குறிப்பிட்ட இடத்தை கடக்கும்வரை காத்திருந்த காவல்துறை  அதன்பின் ஆர்ப்பாட்டக்காரார்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது. அதில் தலையிட அந்த இடத்துக்குச் சென்ற என்.எம்.பெரேரா மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, தலையில் காயங்களுடன் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். மோசமான குண்டாந்தடிப் பிரயோகத்தின் பின்பும் கூட கூட்டத்தைக் கலைக்க முடியாமல் தோல்வி கண்டதால் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவு செய்யப்பட்டது. பல சுற்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு ஒரு சிலரைக் காயப்படுத்தியதோடு கந்தசாமி என்கிற வெள்ளைக் காலர் வேலையாள் கொல்லப்பட்டார், அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்,ஒரு துப்பாக்கிக் குண்டு அவரது இடது கண் ஊடாகச் சென்று அவரது மூளையை சிதைத்திருந்தது. போராட்டத்தின் முதுகெலும்பு ஒரு துப்பாக்கிக் குண்டினால் உடைக்கப்பட்டது, அடுத்த நாள் ஒன்றுகூடிய தொழிற்சங்கத் தலைவர்கள் நீண்ட கலந்துரையாடல் நடத்தியதின் பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிடுவது என்று தீர்மானித்தார்கள்.
ஆளுனர் சேர் ஹென்றி மேசன் முரே, ஜூன் 18ல் அரச சபையின் ஒரு விசேட அமர்வைக் கூட்டி நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்படுவதாக அறிவித்தார்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
courtesy : thenee.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...