அரசியலுக்குள் ஒரு கருணா உதயமாகி உள்ளதுடன் ஸ்ரீலங்காவின் எதிர்காலம் இஃப்ஹ}ம் நிஸாம்

அரசியலுக்குள் ஒரு கருணா உதயமாகி உள்ளதுடன் ஸ்ரீலங்காவின் எதிர்காலம்
                                     இஃப்ஹ}ம் நிஸாம்
கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரனின் சமீபத்தைய நகர்வான தமிழர் ஐக்கிய சுதந்திர மkaruna2ுன்னணி என்கிற புதிய அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை சில அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பாராட்டியுள்ளார்கள். கருணா அம்மான் சொல்வதின்படி, புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதின் நோக்கம் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவது மற்றும் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் விதவைகள் மற்றும் போரினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகள் செய்வது என்பனாகும். இந்த கட்சி கிழக்கு - மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் அதில் வாழும் மக்கள் சார்ந்த பிரச்சினைகளிலும் கவனம் செலுத்தும்.


எனினும் சமூகத்தின் சில பகுதியினர், கருணா அம்மான் போன்ற நபர்கள் ஜனநாயக நடைமுறைக்கு மாறாக வேலை செய்தவர்கள் மற்றும் குறிப்பாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருந்தவர்கள் அதனால் இவர்கள் அரசியல் கட்சியின் அங்கமாக இருக்கக் கூடாது என நம்புகிறார்கள்.
கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன், ஒரு உயர்மட்ட இராணுவ தளபதியாகவும் ஒரு சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஆகவும் இருந்தவர். 2004ல் கருணா எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்து தனது துணைத் தனபதியான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் சேர்ந்து பிரிந்து சென்றார். அதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கிற அரசியல் கட்சி மற்றும் ஆயுதம் தாங்கிய இராணுவக் குழுவை உருவாக்கினார், அது கிழக்கு மாகாணத்தில் பலம் வாய்ந்த இராணுவஃ அரசியல் சக்தியாக மாறியது.
எனினும் கருணா ஒரு போலிக் கடவுச்சீட்டில் 2007ல் ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பி ஓடினார், பின்னர் அவர் அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2008ல் ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப் பட்டார். அதன் பின்னர் 2009ல் முந்தைய ஆட்சியாளர்களால் கருணா தேசிய ஒருமைப்பாட்டுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப் பட்டார். இங்கு முக்கியமாக குறிப்பிடுவதற்கு பொருத்தமானது, அரந்தலாவையில் பௌத்த பிக்குகளை படுகொலை செய்தது உட்பட ஏராளமான படுகொலைகளை இந்தப் பிரிவினர் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப் படுகிறது. இதே குழுவினரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்தை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பிள்ளையான் தற்சமயம் சிறையில் உள்ளார்.
கடந்த காலத்தில் குற்றவியல் கும்பலின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பட்டோர் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.கஃஐ.ம.சு.கூ போன்ற கட்சிகளைச் சேர்ந்த சக்திமிக்க அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்கள். கோணவல சுனில், பத்தாகனே சஞ்சீவ, மொரட்டுசமன், நாவலநிஹால், வம்பொட்ட, ஒல்கொட், சண்டிமாலி போன்ற சில பாதாள உலக கோஷ்டிகளைச் சேர்ந்த குற்றவாளிகள் ஒரு குறிப்பிட்ட காலம் அந்தந்த பகுதிகளில் தங்களுக்கு இருந்த அரசியல் ஆதரவு காரணமாக நாட்டை பீதியில் ஆழ்த்தி வந்தார்கள். கோணவெல சுனில் ஐ.தே.க தலைமையுடன் வலிமையான தொடர்புகளைப் பேணிவந்த முக்கியமான ஒரு கோஷ்டித் தலைவன், இவன் 1983ல் வெலிக்கடை சிறையில் இருந்த 53 கைதிகளை கொலை செய்ததுக்கு பொறுப்பானவன் மற்றும் 1982ல் ஒரு 14 வயதுச் சிறுமியை கற்பழித்தும் உள்ளான்.இவன் கொலைக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கொலையாளி என்பது இங்கு குறிப்பிடுவதற்கு முக்கியமானது. இவன் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவினால் முழு தீவுக்குமான சமாதான நீதவானாக நியமிக்கப் பட்டதுடன் 1983 முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டான்.
பாராளுமன்றத்தில், சமூகத்தில், வீதிகளில், பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் ஏன் வீடுகளில் கூட, வன்முறைகள், பயங்கரவாதம், அட்டூழியங்கள், கொலை, மிரட்டிப் பணம் பறித்தல், அச்சுறுத்தல் மற்றும் ஒழுங்கீனம், சட்டமின்மை, சட்ட ஒழுங்குகளை அவமதித்தல் போன்றவற்றின் காரணத்தால் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அரசியல் என்பது கெட்டது அல்லது அழுக்கானது என்கிற கருத்து நிலவுகிறது. இதேபோல பெரும்பாலும் குற்றவாளிகளான அரசியல்வாதிகள் நாட்டினை அதி உயரத்துக்கு இட்டுச் செல்வதற்கான வழிகளைக் காட்டுவதற்கான தெளிவான பார்வை, முன்னறிவுத் திறன், அறிவுக்கூர்மை, அர்ப்பணிப்பு, பிறருக்கு உதவும் இயல்பு, நம்பிக்கை, இரக்கம், பாசம் மற்றும் சமூகம் சார்ந்த ஏனைய நடவடிக்கைகள் என்பன இல்லாமல் இருக்கிறார்கள்.
அரசியலில் திறமை வாய்ந்தவர்கள் இல்லாததினால் பிரச்சினைகளுக்கு நிலையான பயனுள்ள தீர்வுகளை காண்பதற்கு இயலாத காரணத்தால், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை அடக்கும் முயற்சிகளாக அரசாங்கத்தை சோந்தவர்கள்  வன்முறைகள், கட்டாயப்படுத்தல்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். எனது கண்ணோட்டத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக எல்லா வகையான குற்றவாளிகளும் பாராளுமன்றத்திற்கு, மாகாணசபைகளுக்கு மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கு செல்வதற்கு வசதியாக அவற்றின் வாயில்கள் விரியத் திறந்து விடப்பட்டுள்ளன. அரசியல் வன்முறைகள் நிறுவனமயமாக்கப் பட்டுள்ளதோடு அது சமூகத்தில் எதிர்மறையான ஒரு தாக்கத்தையும் உருவாக்கியுள்ளன.
இதன் காரணமாக அரசியலில் உள்ள குற்றவாளிகள் அரிதான வளங்களின் விநியோகத்தை அநியாயமாகக் குறைத்து அதன் காரணமாக சுய மையமான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் என்பன நிகழ்வதற்கான வழிகளை அதிகரித்து, அதிகம் மையப்படுத்தப்பட்ட வன்முறையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளார்கள். இவை எல்லாவற்றினதும் விளைவுகளால், பல அரசியல்வாதிகள் நாட்டில் மக்களுடைய பொது வளங்களை நியாயமான, திறமையான வழிகளில் பயன்படுத்தாமல் இருப்பது உட்பட பொதுச் சேவைகள் விநியோகத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் அந்தவித ஆர்வமும் இல்லாமல் இருப்பதினால் ஆட்சிக்கு ஆபத்தான நெருக்கடி உருவாகியுள்ளது.
அதற்கு மேலதிகமாக கடந்த பல தசாப்தங்களாக இந்த வகையான அரசியல்வாதிகள் தற்போதைய கல்வி முறையின் உற்பத்திகளாக உள்ளனர். பள்ளி மாணவர்கள் கூட வன்முறையை பயன்படுத்துகிறார்கள் இது ஒருவேளை தற்போதைய கல்வி முறை ஒழுக்கம், மற்றும் நல்ல மரியாதையான கண்ணியமான குடிமக்களை உருவாக்காததுதான் காரணமாக இருக்கலாம், ஏனென்றால் அவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் காணும் தலைவர்களின் நடத்தைகளை தவறான முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆகவே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில்; ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், தலைவர்கள் சரியான உதாரணமாக தங்களை அமைத்துக் கொள்வது அவசியம். ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில் இடம்பெற்ற ஜனநாயக அரசியல், வலிமையான, ஒழுக்கமுள்ள நல்ல கட்டமைப்புள்ள மனித சமூகத்தை உருவாக்கியிருந்தது என்பதை நான் இங்கு சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்.
புத்தர் சொல்வதின்படி குற்றவாளிகள் அரசியலுக்குள் நுழையும்போது, வாழ்வதற்கு உரிமையுள்ள இடம், பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் ஏழைகள் கௌரவமாக வாழ்வதற்கு தேவையான வளங்கள் என்பனவற்றை வழங்குவதில் ஆட்சியாளர்கள் தோற்றுவிடுவார்கள். அப்படியான ஒரு சமூகத்தில் வறுமை, வன்முறை மற்றும் குற்றங்கள் என்பன பெருகும் ஏனென்றால் -
 “இந்த வழியில், துறவிகள், ஏழைகள் ஆகியோருக்கு பணம் கொடுக்கப் படாததினால் வறுமை பெருகும் ஏனென்றால் வறுமை செழிக்கும் போது, களவும் தழைத்தோங்கும்;, களவு தழைத்தோங்கும்போது ஆயுதங்களும் தழைத்தோங்கும், ஆயுதங்கள் தழைத்தோங்கும்போது கொலைகளும் தழைத்தோங்கும்” - புத்தர்.
கலாநிதி.தயான் ஜயதிலகா - கல்விமான், இராஜதந்திரி மற்றும் அரசியல்வாதி
கருணாவை நான் ஒரு ஹரோவாகவே கருதகிறேன். அவர் பிரபாகரனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார் அதன்படி அவரை தோற்கடிக்க உதவியதுடன் நாட்டையும் காப்பாற்றினார்.   நான் அவரது புதிய கட்சியை பாராட்டுவதோடு, கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடையே ஒரு கூட்டணி உருவாவதையும் எதிர்பார்க்கிறேன். இந்த இரண்டு தலைவர்களும்தான் பங்காளிகளாக சேருவதற்கு நம்பகமானவர்கள், நிலையான சமாதானத்தையும் மற்றும் ஒரு உண்மையான ஸ்ரீலங்காவாசி என்கிற அடையாளத்தை தேடுவதிலும் ஒரு பொறுப்பானதும் அறிவார்ந்ததுமான பங்களிப்பை வழங்குவதற்கு ஏற்றவர்கள் என்பதை இந்த நாட்டின் பெரும்பான்மையான பிரஜைகளிடம் நிரூபித்துள்ளார்கள்.

கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து, நிறைவேற்று பணிப்பாளர், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம்
ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் உரிமை உள்ளது: அவர்கள் எங்கள் வாக்குகளைப் பெற அருகதை உள்ளவர்களா என்பதை தீர்மானிப்பது எஞ்சி உள்ள நாங்கள்தான். குற்றவாளிகள் சட்டத்தின்படி அச்சமோ அல்லது சலுகைகளோ இல்லாமல் கையாளப்பட வேண்டும்.
சந்திம வீரக்கொடி, அமைச்சர், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய எரிவாயு
கருணா அம்மான் ஒரு புதிய கட்சியை உருவாக்குவது ஒரு முழுத் தோல்வியில் முடியப் போகிறது.  கருணா இப்போது எல்.ரீ.ரீ.ஈ யில் இல்லாவிட்டாலும், அவரது சித்தாந்தம் பலருக்கும் பொருத்தப்பட்டதாக இல்லை. என்னைப் பொறுத்தவரை தென்பகுதியைச் சேர்ந்த ஒருவன் என்கிற வகையில் எங்களுக்கு வித்தியாசமான சித்தாந்தம் உள்ளது. அவர் ஒரு கட்சியை ஆரம்பிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
 கலாநிதி.ஜெகான் பெரேரா - நிறைவேற்று பணிப்பாளர், தேசிய சமாதானப் பேரவை
ஒரு நீதிமன்றின் முன்னால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை ஒருவரை குற்றமற்றவர் என்றே கருதப்பட வேண்டும் என்பது நன்கு அறியப்பட்ட சட்ட தத்துவம் ஆகும். நீதிமன்றத்தின் முன்பாக கருணா குற்றவாளி என்று இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, மற்றும் அவற்றில் சில குற்றச்சாட்டுகள் நீதிமன்றம் முன்பாக எடுத்துக்nகொள்ளப் பட்டுள்ளன.யுத்த நேரத்தில் கிழக்கில் சரணடைந்த 600 காவல்துறையின் காவலர்களை  படுகொலை செய்ததுக்கு இவர்தான் பொறுப்பு என்றொரு நம்பிக்கை உள்ளது, ஆனால் இந்தக் குற்றத்திற்காக அவர் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.இதே வழியில் இன்று தீவிர அரசியலில் உள்ள பல முன்னணி அரசியல்வாதிகள் மீதும் கிரிமினல் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டள்ளன. இவற்றில் சில குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் முன்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. எனினும் ஒரு நீதிமன்றத்தின் முன்னால் குற்றவாளி என்று நிரூபிக்கப் படாதவர்களுக்கு தீவிர அரசியலில் ஈடுபடும் சுதந்திரம் உள்ளது மற்றும் அவர்கள் நாட்டில் தொடர்ந்தும் தலைமைப் பொறுப்புகளை வைத்துக் கொண்டுள்ளார்கள்.
ரஞ்சித் மத்தும பண்டார, அமைச்சர். பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம்
முந்தைய இராணுவ ஆட்சியை கைவிட்டு ஜனநாயக வழியில் இணைவதை பெரிதும் வரவேற்க வேண்டும். இராணுவ ரீதியாக தொடர்பு பட்டிருப்பதை விட ஜனநாயக நடவடிக்கைகளுக்கு வருவது கருணாவால் மேற்கொள்ளப் பட்டிருக்கும் நல்லதொரு நகர்வு என்றே நான் நம்புகிறேன். அது ஒரு நல்ல நடவடிக்கை என்றே நான் நினைக்கிறேன்.
Source: http://www.thenee.com/120317/120317.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...