"தலையாரியே திருடனுக்கு நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கும் விசித்திரம்! " -- இரத்தினம


இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் இலங்கை
மத்திய வங்கி ஆளுநராக தனது நெருங்கிய நண்பரான அர்ச்சுனா
மகேந்திரன் என்பவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்தார்.
அவரோ நாட்டின் முதுகெலும்பான மத்திய வங்கியை தனது சொந்த
வீட்டுச் சொத்தாகப் பாவித்து பிணை முறிகள் ஊடாக பல கோடி
ரூபாபணத்தைச் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.இந்த விவகாரம் முதலில் சில மத்திய வங்கி அதிகாரிகளினாலும்,பின்னர் பொருளாதார
வல்லுனர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு, பின்னர்பல்வேறு அரசியல் கட்சிகளினதும் பேசுபொருளாகி, இறுதியில் அரசாங்கமே ஜே.வி.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட
‘கோப்’ விசாரணைக்குழு அறிக்கையின் மூலம் நிரூபணமாகிவிட்டது.
இருந்தும்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்ää அவரது ஐக்கிய
தேசியக் கட்சி சகாக்களும், அர்ச்சுனா மகேந்திரனை
குற்றமற்றவராக, தூய்மையானவராகக் காட்டப் படாதபாடுபடுகின்றனர்.



ஒரு பக்கத்தில் நிறைவேற்று ஜனாபதிமுறைமையை ஒழித்து சகல
அதிகாரங்களையும் நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டும் எனச்
சொல்லிக்கொண்டுää மறுபக்கத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க
சமர்ப்பிக்கப்பட்ட கோப்அறிக்கையை ரணில் சட்டமா அதிபருக்கு அனுப்பி நாட்டின் அதியுயர்ந்த சட்டவாக்க சபையான நாடாளுமன்றத்தை
அவமரியாதைக்கு உள்ளாக்கியுள்ளார்.

இன்னொரு பக்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய
வங்கி பிணைமுறி விவகாரம் பற்றி விசாரணை செய்வதற்கென
மூவரடங்கிய ஆணைக்குழு ஒன்றை நியமித்திருக்கிறார். அந்த
ஆணைக்குழு விசாரணைக்கென மூன்றுமாத காலம் எடுத்துää மேலம்
இந்த விவகாரம் சம்பந்தமான விசாரணையை மேலும் இழுத்தடிக்கப் போகின்றது என்பது ஒருபுறமிருக்கää ஜனாதிபதி நாடாளுமன்றத்திலும் சட்டமா அதிபரிலும் நம்பிக்கை இல்லாமலா தான் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறார் என்ற கேள்வியும் எழுகின்றது.
இது ஒருபுறமிருக்கää இந்த விவகாரத்தில் இன்னொரு வேடிக்கையான விடயமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த மத்திய வங்கி பிணைமுறி விற்பனையால் அரசாங்கத்துக்கு எந்தவிதமான இழப்பும்
ஏற்படவில்லை என உலக ஏகாதிபத்திய வட்டிக்கடையான
உலக வங்கி தெரிவித்துள்ளதாக கொழும்பு தினசரி ஒன்று செய்தி
வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையால் கொள்ளைக்காரனுக்கு
தலையாரியே நற்சாட்சிப் பத்திரம் கொடுத்த கதையாகத்தான் இது
இருக்கும்.

உலக வங்கியுடன் அநேகமாக உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு பல கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன.இலங்கைக்கும் அவ்வாறான
கசப்பான அனுபவங்கள் உண்டு.1953இல் அப்போதைய டட்லி
சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்த ரணிலின் மாமனாரான ஜே.ஆர.ஜெயவர்த்தன, உலக வங்கியின்
ஆலோசனையைக் கேட்டுத்தயாரித்த வரவு செலவுத் திட்டத்தால் அதற்கெதிராக நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்ததின் விளைவாக, பிரதமர் டட்லி பதவியைத் துறந்து நாட்டை விட்டே தலைதெறிக்க ஓடிய ‘மகத்தான’
வரலாறு இலங்கைக்கு இருக்கிறது.

அதற்குக் காரணம்ä நாட்டு மக்களின் இடுப்புப் பட்டியை இறுக்கும்படி அரசாங்கங்களுக்கு உலக வங்கி வழமையாகக் கூறும் அறிவுரைதான் காரணம். தற்போதைய இலங்கை அரசாங்கம் ஏகாதிபத்திய விசுவாசம் மிக்க அரசாங்கம் என்றபடியால்ää உலக வங்கி மத்திய வங்கி பிணைமுறி
விவகாரத்தில் நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்துக்கு எதிராக இந்த அரசாங்கத்துக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருந்தால்  அதில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

- இரத்தினம
Source: Vaanavil March 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...