"ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கத்தரித்து ஒரு சர்வாதிகாரி உருவாகிறார்! "கொழும்பிலிருந்து பி.வ


இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக எச்சரிக்கை!! இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக எச்சரிக்கை!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கää ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதங்களுக்கு கீழே இருக்கும் கம்பளத்தை வலிமையுடன் இழுப்பதற்கான உத்தரவை துணிவுடன்
விடுத்திருக்கிறார் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொல்லுரே தெரிவித்திருக்கிறார். ஜனவரி 22ஆம் திகதி சோசலிச கூட்டமைப்பின் (Socialist Allainace)
ஊடகவியலாளர் மாநாடு பொரளையிலுள்ள டாக்டர் என்.எம்.பெரேரா நிலையத்தில்
நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே கொல்லுரே
இவ்வாறு குறிப்பிட்டார்.


மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் "“ஜனாதிபதி சிறிசேனவின் அதிகாரத்தின்
கீழ் இருக்கின்ற சில அமைச்சுகளை விக்கிரமசிங்க தனது அதிகாரத்தின் கீழ்
எடுத்திருக்கும் செயல் நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறுவதாகவும்ää ஜனநாயக
விரோதமானதாகவும் இருக்கின்றது. தன்னிச்சையாகவும்ää ஜனநாயக விரோதமாகவும் செய்யக்கூடாத பிரதமரின் இச்செயல்கள் அவரது சர்வாதிகாரப் போக்கையே எடுத்துக் காட்டுகிறது.” விக்கிரமசிங்க தனது நண்பர்கள் பிணைமுறி மூலம் பெருந்தொகையான
பணத்தைச் சுருட்டுவதற்கு உதவியிருப்பதுடன்ää அது சம்பந்தமாக ‘கோப்’ (COPE) விசாரணை செய்து நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு
அனுப்பியதன் மூலம் நாடாளுமன்ற நெறிமுறைகளையும் மீறியிருக்கிறார் என
கொல்லுரே கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார்.

சோசலிச கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார அங்கு கருத்துத் தெரிவிக்கையில் “ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
அதிகாரங்களைப் படிப்படியாக அபகரித்து வருவதுடன்ää அவரைக் கீழ்மைப்படுத்தும்
இயக்கத்தையும் முன்னெடுத்து வருகின்றார்.

பிணைமுறி விவகாரம் பற்றிய ‘கோப்’ அறிக்கைக்கு சவால் விடும் வகையில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்த வண.தின்னியவெல பாலித தேரோவை லங்கா
வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களில் ஒருவராக அரசாங்கம் நியமித்திருக்கும்
செயல்ää உண்மையில் அவர் ரணில் விக்கிரமசிங்க சார்பாகச் செயல்படுகிறார்
என்பதைக் காட்டுவதுடன் ரணில் விக்கிரமசிங்கவும் மனுச் செய்த பிக்கு தனது
கேவலமான கைப்பாவை என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அபிவிருத்தி அதிர்ஸ்ட இலாபச்சீட்டின் விலையை 30 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக
ஜனாதிபதி குறைக்கää அதை மீண்டும் 30 ரூபாவுக்கே கூட்டியதின் மூலம்
நிதியமைச்சர் ரவி கருணநாயக்க ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு எதிராகச்
செயற்படுகின்றார்” என வாசுதேவ சாடினார். சோசலிசக் கூட்டமைப்பின் இன்னொரு
பங்காளிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ
விதாரண கருத்துத் தெரிவிக்கையில் “அரச வங்கிகளுக்கு மேலாக கூடுதலான
தனியார் வங்கிகளுக்கு இடமளிப்பதின் மூலம் நாடு மிக விரைவில் பெரும் பொருளாதார
நெருக்கடி ஒன்றுக்கு முகம் கொடுக்கப் போகிறது. அமெரிக்காவில் 2005 – 2009
காலகட்டத்தில் தனியார் வங்கிகள் சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டதால்
இதேவிதமாக நெருக்கடியை எதிர்நோக்கி வீழ்ச்சியைச் சந்தித்தன” எனக் கூறினார்.

- கொழும்பிலிருந்து பி.வ
மூலம்: வானவில் மார்ச் 2017


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...