ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்
சிறிசேன ஆட்சியின் மயக்கநிலை மிகவும் உயர்வாக இருப்பது ராஜபக்ஸ குலத்தினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பாக உள்ளது.
சிங்கராஜ தமித்தா - தெல்கொட
பாகம் - 1
“உங்களுக்கு
பல்வேறு விஷயங்களை வழக்கமாகச் சொல்லிவிட்டு அதை மூன்று நாட்களுக்குப்
பின்னர் மறந்துபோகும் அந்த ஆட்களைப் போன்றவர்களல்ல நாங்கள்…நாங்கள்
வித்தியாசமானவர்கள் என்
பதை
உலகம் அறியவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் - அதாவது நாங்கள் சொல்வதையே
செய்கிறோம் என்பதை நாங்கள் செயல்படுத்தப் போகிறோம்.” - ஹர்ஷா டீ சில்வா,
ஸ்ரீலங்கா வெளிவிவகார பிரதி அமைச்சர் , ‘த நஷனல் ஜோகிறபிக்’ (நவம்பர் 2016)
இதழுக்கு சொன்னது.

அரசியல்
என்பது ஒரு தலைவரின் வெளிப்படுத்தும் திறமையினால் உருவாக்கப் படுகிறது.
அது முழுவதும் செய்கையிலும் மற்றும் குறித்த இலக்கை அடைவதிலுமே
தங்கியுள்ளது, ‘நீங்கள் சொல்வதையே செய்வது, நீங்கள் செய்யப் போவதையே
சொல்வது” ஸ்ரீலங்காவின் தற்போதைய வெளிவிவகார பிரதி அமைச்சர் சொன்னதின்
பொழிப்புரை இது. அது நல்ல நோக்கங்களை பற்றியதல்ல ஆனால் நல்ல விளைவுகளைப்
பெறுவதைப் பற்றியது. அது வெளியாட்களை மகிழ்விப்பதல்ல, இறுதியாக அது உங்கள்
சொந்த மக்களை மகிழ்விப்பதாக, அவர்களது அபிலாசைகளை திருப்திப் படுத்துவதாக,
அவர்களுக்கு மீள் உத்தரவாதம் வழங்குவதாக, அவர்களைப் பாதுகாப்பதாக மற்றும்
அவர்களின் நலன்களை முன்னேற்றுவதாகவும் இருப்பதே ஆகும். ஸ்ரீலங்கா அரசியலில்
ஒரு விடியல் ஆரம்பமாகிவிட்டது என்பது அடிப்படையான ஒரு உண்மை.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, ஆகியோருடனான ஐதேக -
ஸ்ரீலசுக கூட்டணி அரசாங்கம் இப்போது இரண்டு வருடங்களாக அதிகாரத்தில்
உள்ளது. இந்த அரசாங்கம் வரவேற்கப்பட்டது, வெளிநாட்டில் கூட
கொண்டாடப்பட்டது, அதன் நல்ல நோக்கம் மற்றும் மனித உரிமைகள்,
சிறுபான்மையினரின் அக்கறைகள், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மை
என்பனவற்றுக்கான இதயபூர்வமான அர்ப்பணிப்புக்காக அமெரிக்கா, ஐரோப்பிய
ஒன்றியம், இந்தியா மற்றும் மேற்குலக ஊடகங்கள் என்பனவற்றிடம் இருந்து
பிரகாசமான பாராட்டுக்களை சம்பாதித்தது. எனினும் உள்நாட்டில் இந்த
பாராட்டுகள் அதிர்வுகளை ஏற்படுத்த தவறிவிட்டன, இந்த நிருவாகத்தின் சாதனை
பலத்த விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இப்போது அதிருப்தி, விசனம்,
தற்போதைய ஏமாற்றம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய ஆழமான கவலை என்பனவற்றுடன்
இணைந்த ஒரு எதிர்ப்பு அலையே காணப்படுகிறது.
“இரண்டு
வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த ஒவ்வொருவரும் ஒரு மாற்றத்திற்காக
தாங்கள் நல்லாட்சியான அரசாங்கத்தை வேண்டி யகபாலனயவிற்கு (சிறிசேன
பிரச்சாரத்தின் கருத்தைக் கவரும் சொற்றொடர்) வாக்களித்ததாகச் சொன்னார்கள்.
இப்போது அப்படிச் செய்ததாக சொன்ன எந்த ஒருவரையும் காண்பது அரிதாக உள்ளது.
நாங்கள் எந்த வகையான மாற்றத்தை பெற்றுவிட்டோம் என மக்கள் கேட்கிறார்கள்?”
அப்படிச்
சொன்னார் கடந்த 15 வருடங்களாக பேரூந்து சாரதியாக இருக்கும் சிசிர. அவர்
“ராஜபக்ஸவின் ஊரான” ஆழமான தென்பகுதியை சேர்ந்தவராக இருந்தபோதிலும் கடந்த
இரண்டு தேர்தல்களிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகவே
வாக்களித்தார்.
“
இப்போது பாருங்கள் நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று
விரும்புகிறேன். எதுவும் நடக்கவில்லை” என்று புலம்புகிறார் சிசிர. “இரண்டு
வருடங்கள் கழித்தும் இன்னும் அவர்கள் திரு. மகிந்தவின் தவறு என்றேதான்
சொல்கிறார்கள். அபிவிருத்தி? என்ன அபிவிருத்தி? அவர்கள் செய்யும் ஒரே
விடயம் அவர் ஆரம்பித்ததை செய்வதுதான்”.
சமீபத்தில்
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முந்தி சமூக ஊடகங்களில் ராஜபக்ஸவின் தவறான
செய்கைகள்தான் முற்றாக இடம்பிடித்திருந்தன. அதிலிருந்து அவற்றின் கவனமும்
மாறிவிட்டது. அது இனிமேல் ராஜபக்ஸ பற்றி பேசாது. மாறாக அதில் கிளம்பும்
விவாதங்கள் முற்றாக யகபாலன, அதன் தலைவர்கள் பற்றியும் மற்றும் அவர்கள்
வாக்களித்த நல்லாட்சியை வழங்க இயலாமை பற்றியதாகவுமே உள்ளது.
சிங்கள
ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்தும் செய்திகளின்
கருப்பொருள் குறிப்பாக பிரபலமான எண்ணங்களை வெளிப்படுத்துவதாக உள்ளன. இந்த
கதைகள் தெரிவிப்பது, சூனிய வேட்டை நடத்துவது, இறந்த உடல்களை தோண்டி
எடுப்பது, ராஜபக்ஸக்களை சிறையில் அடைப்பதும் பின்னர் விடுவிப்பதும்,
யானைகளை வைத்திருந்ததுக்காக பௌத்த பிக்குகளை கண்டிப்பது, தண்டனை
வழங்கப்பட்ட பயங்கரவாதிகளை விடுவிக்கும் அதேசமயம் ஊனமுற்ற படை வீரர்களைத்
தாக்குவது, முன்னாள் பயங்கரவாத அமைப்புகளை வரவேற்பது மற்றும் முன்னாள்
பயங்கரவாத தலைவர்களை புகழ்வது போன்ற செயல்களைப் புரியும் ஒரு நிருவாகத்தைப்
பற்றியே.
புகழ்பெற்ற
படை வீரர்கள் மற்றும் சேவை தளபதிகள், நாடு முழவதும் யுத்த வீரர்கள் எனப்
புகழப்படும் மனிதர்களை ஒழுங்காக நீதிமன்றத்துக்கு இழுப்பதும் சிலவேளைகளில்
சிறையில் அடைப்பது போன்ற காட்சிகள் வழக்கமான ஒரு விந்தையாக மாறிவிட்டது.
சமீபத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகிய
இருவரையும் ஊழல், மோசடி, மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்களை
எதிர்கொண்டதாகக் கருதப்பட்டது. பொதுமக்களின் மனதில் இது யகபாலனயின் ஒரு
அம்சமாக மாறியது, சிறிசேனவை அரசியல் ரீதியாக சேதப்படுத்தும் அம்சமாக இதைக்
கண்டபடியால் ஊழல் மற்றும் மோசடி ஆணைக்குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை
மறுதலிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
புதிய
அரசாங்கத்தின் பேரணி முழக்கங்களில் ஒன்றாக இருந்தது நல்லிணக்கம் ஆகும்.
இப்போது அது அரசாங்கத்தின் முகத்தையே திருப்பித் தாக்கும் பூமாரங் ஆக
மாறியுள்ளது. மேற்கொள்ளப்படும் சமரச அணுகுமுறைகளுக்கு மாறாக, ஒன்றில் தமிழ்
புலம் பெயர்ந்தவர்களோ அல்லது வடக்கில் உள்ள செல்வாக்கு மிக்க தமிழ் சமூகமோ
காண்பிக்கும் சமிக்ஞைகள் பிரிவினைவாதம் என்கிற மொழியை கைவிட்டதாகத்
தெரியவில்லை. 2016 நவம்பர் இறுதியில் காலஞ்சென்ற பயங்கரவாத தலைவரும் தமிழீழ
விடுதலைப் புலிகளின் நிறுவனருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளைக்
கொண்டாட நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினார்கள். இது அந்த நிகழ்வில் எவராவது
பங்குபற்ற முயற்சித்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
என்று அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையையும் மீறி நடைபெற்றது. அதற்கு முந்தைய
மாதத்தில் முந்தைய எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களால் காவல் துறையினர் மற்றும்
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது ஒரு தொடரான வாள் வெட்டு சம்பவங்கள்
நடத்தப்பட்டன. இது ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறையினரால்
இரண்டு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்
நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதற்கு முதல் ஜூலை மாதத்தில் யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தில் வரவேற்பு விழா ஒன்றில் வன்முறை வெடித்ததால் பத்து
மாணவாகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதுடன் பல்கலைக்கழகமும்
மூடப்பட்டது. அந்த விழாவில் சிங்கள கலாச்சார சடங்குகள் பயன்படுத்த
முயன்றதால் அந்த சம்பவம் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்
தலைவர்களின் பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகளின் தன்மைகள் கூட அநேக
சிங்களவர்களை அதிருப்திக்கு உள்ளாக்குகிறது. வடக்கிலுள்ள வாக்காளர்களை
சமாதானப்படுத்தும் அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு அவாகள் அனுப்பும்
சமிக்ஞைகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. புதுவருட நிகழ்வொன்றில் ஐதேகவுக்கு
அதன் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட
அறிக்கை ஒன்றிற்கும் தமது கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லவேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டது, அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் நன்மைகளை
வலியுறுத்தும் முன்பு பிரபாகரனின் தலைமைத்துவத்தை கீழ்கண்டவாறு
புகழ்ந்தார்: “ எங்கள் ஜனாதிபதிகள் அனைவருடனும் ஒப்பிடும்போது பிரபாகரனின்
தலைமைத்துவத்துக்கு நிகரானவர்கள் எவருமில்லை”.

ஒட்டுமொத்தமாக
இந்த நிகழ்வுகள் சிங்கள் பெரும்பான்மையினரின் பொதுவான உணர்வுகளைத் தூண்டி
விட்டிருக்கின்றன, பிரிவினைவாதம் உயிருடன் ஆரோக்கியமாக உள்ளது மற்றும்
சிறிசேன நிருவாகம் அதற்கு எதிர்ப்பின்றி இல்லையென்றால் இணக்கமாக உள்ளது
என்று அவர்கள் கருதுகிறார்கள். நல்லிணக்கம் என்பதின் இறுதியான கருத்து
எதிர்ப்பான காரணிகளை அல்லது சமூகங்களை ஒன்று சேர்ப்பது என்பதாகும்.
இருந்தும் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருக்கும் மற்றும் வடக்கிலுள்ள தமிழ்
சிறுபான்மையினருக்கும் இடையில் பாலம் போடப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம்
எதுவும் இல்லை, ஏதாவது இருக்குமென்றால் அவர்களுக்கு இடையே உள்ள பிளவு
விரிவடைந்து கொண்டே போவதுதான் இடம்பெறுவதாகத் தெரிகிறது.
தற்போதைய
பிரசங்கத்தில் விலங்குகளின் நலன்கூட ஒரு உணர்வுபூர்வமான அரசியல்
பிரச்சினையாக மாறியுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் யானைகளை பௌத்தர்களின்
மத ஊர்வலமான பெரஹராவில் பயன்படுத்துவதற்கு எதிராக ஏராளமான பிரச்சாரங்கள்
கிளம்பியுள்ளன. யானைகள் பௌத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு
பகுதியாக பலப்பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன மற்றும் இந்த
பிரச்சாரங்கள் கடுமையான உணர்வுகளை எழுப்பி வருகின்றன. ஆர்வலர்களிடமிருந்து
கிளம்பும் அழுத்தங்கள் யானைகளை கொடுமைப் படுத்துவதாக குற்றம்சாட்டி பௌத்த
பிக்குகளை கண்டிக்கவும் வழி வகுத்துள்ளன. ஆங்கில சமூக ஊடகங்கள்
போஷாக்கின்மை மற்றும் மோசமாக நடத்;துவது என்பனவற்றில் இருந்து இந்த யானைகளை
காப்பாற்றும்படி பிரதானப்படுத்தும் அதேவேளை சிங்கள சமூக ஊடகங்கள்
வெளிநாட்டவர்கள் மற்றும் பௌத்தர் அல்லாதவர்களின் மதிக்கப்படும் மரபுகளுக்கு
எதிரான செயல்களுக்கு எதிராக ஒரு தாக்குதலை நடத்துகின்றன. இதன் விளைவாக
எழும் பரவலான முணுமுணுப்புகளும் மற்றும் ஆழமான சந்தேகங்களும் மீண்டும்
ஒருமுறை ஸ்ரீலங்கா சமூகத்துக்குள் விரிசல்களை தீவிரப்படுத்தி பற்ற
வைக்கின்றன.
இந்த
சந்தேகம் எழுப்பப்பட்டது, சாதாரண ஒரு பிக்குவால் அல்ல, ஆனால் கொழும்பில்
உள்ள மிகவும் செல்வாக்கான கங்காராமய பௌத்த ஆலயத்தின் தலைமைக் குருவால்.
கொழும்பில் நடைபெற்ற கண்கவர் நவம் பெரஹரா விழாவில் பேசுகையில் வண. கலபொட
ஞ}னிசார, பௌத்தத்துக்கு உள்ள அச்சுறுத்தல் பற்றி எச்சரிக்கை செய்தார்: “சில
சக்திவாய்ந்த குழுக்கள் டொலர்களைச் செலவழித்து விலங்குகளுக்கு
இழைக்கப்படும் கொடுமை பற்றி பேசி மெதுவாக வெற்றி பெறுவதை நான்
பார்க்கிறேன். நாங்கள் அனைவரும் இந்த நாட்டை தொண்டு நிறுவனங்களிடம் இருந்து
பாதுகாப்பதற்காக ஒன்றாகக் கரம் கோர்த்து செயற்படுவோம்”.
ஐக்கிய
தேசியக்கட்சியின் பிரமுகரும் மற்றும் ரணில் விக்கிரமசிங்கா மற்றும் அவரது
குடும்பத்தினருடன் நீண்டகால பிணைப்பைக் கொண்டவருமான இந்த குருவின்
வார்த்தைகள் மிக முக்கியமாக எதை குறிப்பிடுகின்றன.
(தொடரும்)Source: thenee.com
http://www.thenee.com/240117/240117-1/240117-2/240117-3/240117-3.html
No comments:
Post a Comment