பயிரை மேய்ந்த வேலிகள் –(12)-(13) -: ராஜ் செல்வபதி


(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)

வன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.

கிளிநொச்சி- முல்லைத்தீவு நகரங்களை அண்டிய கிராமங்களில் உள்ள இளைஞர்கள் காடுகளில் தஞ்சமடையும் போது ஒரு விதமான பிரச்சினைக்கு முகம் கொடுத்தார்கள் என்றால் காடுகளை எல்லையாக கொண்ட கிராமங்களில் இருந்தவர்கள் வேறு விதமான ஆபத்துகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

பயிரை மேய்ந்த வேலிகள்- 9, 10 &11 ராஜ் செல்வபதி

(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை புகழ்ந்த மக்கள்)
Fence 9அதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின் நிற்கவில்லை. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும், காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும் இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.

பயிரை மேய்ந்த வேலிகள்..(8) -: ராஜ் செல்வபதி


(முறிக்கப்பட்ட கோடாரி காம்புகள்)

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில வாழ்ந்த மக்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.புலிகள் மற்றும் அவர்களின் நேரடி குடும்பத்தினர்.

2.போராளிகுடும்பத்தினர்.

3.மாவீரர்குடுப்பத்தினர்.

4.புலிகள் அமைப்பில் பல்வேறு பணிகளில் இருந்த பணியாளர்கள்.

5.வியாபாரம் போன்ற தொழில் நிமிர்த்தம் புலிகளுடன் இணக்கமாக செயற்பாடாதோர்.

பயிரை மேய்ந்த வேலிகள்..(6)-(7) ராஜ் செல்வபதி

( பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்)

fence-6மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்காக  தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருண்ட நாட்களில் நடந்த பலவிடயங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.
வீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.

"Political and religious leadership crisis of a Sri Lankan minority" By Latheef Farook


2016-08-15 23:24:32

Who represent the Muslim community in the government? The shocking answer is “NONE”.   
One may ask “how could the Muslims complain as there are several Muslim ministers and deputy ministers in the government”. Yes there are many Muslim ministers, but they do not represent the community as most of them entered into deals and got into the government. For example, the presence of Sri Lanka Muslim Congress, SLMC, in the government is deceptive as they contested under UNP tickets and entered Parliament.
It all started when the founder leader of SLMC, the late M. S.M. Ashraf exploited his position to make demands from the Sinhala political parties in return for support in forming governments.The Sinhala political leaderships, often blackmailed and let down by the SLMC leadership, exploited the leadership crisis after Ashraf’s death by picking up one group to promote against the other.  

பயிரை மேய்ந்த வேலிகள்..(3) ராஜ் செல்வபதி


  பிள்ளைகளுக்காக தமது உயிரை பணயம் வைத்த தாய்மார்கள்


மக்கள் குறிப்பாக தாய்மார்கள் தங்களை பிள்ளைகள் கடத்தி செல்லப்படுவதை தடுப்பதற்கா தங்களால் முடிந்தளவுக்கு போராடினர். அந்த இருணட நாட்களில் நடந்த பலவிடையங்கள் இப்போதும் அச்சமூட்டுபவை.

வீட்டினுள் புகுந்த புலிகள் தனது மகனை பிடித்து இழுத்துசென்று வாகனத்தில் ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரான போது அவனது தாய் வாகனத்தின் குறுக்கே விழுந்து படுத்து அவர்கள் செல்வதைதடுக்க முயன்றார். ஆனாலும் இரக்கமற்ற அந்த வாகனசாரதி அந்த பெண்ணின் கால்களில் வாகனத்தை ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். கால்கள் முறிந்த நிலையில் மகனயும் தொலைத்துவிட்டு அந்த பெண் வெறுமனே கண்ணீருடன் தனது மிகுதி நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று.

"Fences had devoured the Crops" -Part 3 - By Rajh Selvapathi (பயிரை மேய்ந்த வேலிகள்.)


 ( திருமணதோஷத்தால் பீடிக்கப்பட்ட ஆண்களும் பெண்களும்)
பொதுவாக ஒரு வயதுவந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் ஏதோ ஒரு தோசத்தினார் பீடிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டு சாத்திர சம்பிரதாயப்படி தோஷநிவர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

"‎பயிரை_மேய்ந்த_வேலிகள்"‬.(4) By Raj Selvapathi

(பிள்ளை பிடிக்கு உதவிய பிரித்தானிய தந்திரம்)

போர் முனைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இழப்புகளால் பெருமளவில் ஏற்பட்ட ஆள் அணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புலிகள் அத்தனை வழிகளையும் கையாளத் தொடங்கி இருந்தனர். பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரத்தை போலவே அவர்களும் இங்கு பிரித்தாளும் தந்திரத்தை பிரயோகித்தனர்.

"Fences had devoured the Crops" (2) By Rajh Selvapathi


(கருணைகொண்ட திருமணபதிவாளர்கள்.)

2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

காஸ்மீரில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம்!-- -விவேக்


காலஞ்சென்ற பிரபல இந்திய எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் எழுதிய சிறுகதைகள் சில "குங்குமப்பூ ’என்ற சிறுகதைத் தொகுதியாக வெளிவந்துள்ளன. அந்தத் தொகுதியில் உள்ள "குங்குமப்பூ ’என்ற சிறுகதையில் இந்தியாவின் காஸ்மீர் பள்ளத்தாக்கு ஒன்றில் சிவப்பு நிறத்தில் குங்குமப்பூக்கள் நிறையப் பூத்திருக்கின்றன. அந்தப் பூக்கள் ஏன் சிவப்பாக இருக்கின்றன என ஒரு வயோதிப மாதுவிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு அந்த மாது பதிலளிக்கையில், முன்னொரு காலத்தில் காஸ்மீர் விடுதலைக்காகப் போராடிய மக்கள் அந்த நிலத்தில் சிந்திய பெருந்தொகையான இரத்தம் காரணமாக அந்த இடத்தில் பூக்கும் பூக்கள் இரத்தச்சிவப்பில் இருப்பதாக அவள் கூறுகிறாள்.

பயிரை மேய்ந்த வேலிகள் – பகுதி 1 – ராஜ் செல்வபதி ( True stories of LTTE's Child Soldiers by Raj Selvapathi)

(Students who met the death angels )

( மரண தூதர்களை நேரில் சந்தித்த மாணவர்கள்)

2006ற்குப்  பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற மாணவர்கள் அனைவரும் தற்காப்பு மற்றும் முதலுதவி பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். பயிற்சிக்காலம் இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களாக இருந்ததது. அவ்வாறு பயிற்சிக்காக செல்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அல்லது நிரந்தரமாக புலிகள் அமைப்பில் சேர்ந்துகொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். தொடக்கத்தில் மாவீரர் குடும்பங்கங்களை சேர்ந்தவர்களுக்கும், போராளிக்குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் விலக்களிக்கப்பட்டிருந்தது. 

"THE MUSLIMS FINALLY MADE A DECISIVE MOVE TO JOIN THE PADA ......." By Noor Nizam

THE MUSLIMS FINALLY MADE A DECISIVE MOVE TO JOIN THE PADA YATRA FROM KEGALLE, MAWANELLA AND THIHARIYA.

The Muslims finally made a decisive move to joint the Pada Yatra from Kegalle, Mawanella and Thihariya. Many Muslims were seen in the march flowing into Colombo. This is how leading newspapers reported on this new political phenomenon. The Island Newspapers today (02.08.2016) reported this as: Quote. …..

‘தோழர்” விக்கிரமபாகுவின் செஞ்சோற்றுக் கடன்! -சுப்பராஜன்


Dr.Wickramabahu Karunaratne
ரு காலத்தில் தன்னைத் தீவிர இடதுசாரிப் புரட்சியாளராகக் காண்பித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளராக மாறிவிட்டாரோ என்று சந்தேகப்படும்படி நடந்து வருகிறார். அண்மைக்காலமாக அவர் விடுத்துவரும் அறிக்கைகள் இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

சேர்.பொன்.இராமநாதனை விமர்ச்சனத்துக்குள்ளாக்கிய பாரதியாரும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும்! – சித்தார்த்தன்



JYC-600x450
லங்கையின் தேசியத் தலைவர்களில் ஒருவரான சேர்.பொன்.இராமநாதன் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு கருத்து, அவர் தனது குருநாதர் ஆறுமுகநாவலர் போல யாழ்.சைவ வேளாள மேட்டுக்குழாமின் பிரதிநிதியாகச் செயற்பட்டவர் என்ற மார்க்சியர்கள் அவர் சம்பந்தமாகக் கொண்டிருக்கும் கருத்து. அதேநேரத்தில், அவர் சைவத்துக்காகவும், தமிழுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் பெரும் பங்களிப்புச் செய்தவர் என்பது இன்னொரு பகுதியினரின் கணிப்பு. இன்று யாழ்.பல்கலைக்கழகத்தின் பிரதான பிரிவுகள் அமைந்திருக்கும் திருநெல்வேலியிலுள்ள முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரிக் கட்டிடமும், நுண்கலைப் பிரிவு அமைந்திருக்கும் மருதனார் மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியும் அவரது கல்விக்கான கொடைகளாக அடையாளம் காட்டப்படுகின்றன. அன்றைய காலகட்டத்தில் அவர் கல்விக்காக ஆற்றிய சேவை அளப்பரியது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் இனவாதக் கொத்தளமாகிறதா? -கிருஸ்ணா


fight-racism
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாறு ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ கதையாக மீண்டும் ஒருமுறை நடந்து முடிந்திருக்கிறது.
இவ்வருட விஞ்ஞானபீட புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது அங்கு கல்வி பயிலும் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம், இன ஐக்கியத்தையும், நாட்டின் கல்வி முன்னேற்றத்தையும் அவாவி நிற்கும் அனைத்து சக்திகளையும் பெரும் விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.

த.ஜெயபாலனின் “வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” நூல் பற்றிய விமர்சனம்


எஸ்.எம்.எம்.பஷீர்

"ஆயுதம் ஏந்தாத புலிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்க வில்லை. அவர்களிடம் ஆயுதம் இல்லாதபடியால் அவர்கள் பாரிய அழிவு எதனையும் நேரடியாக ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால் ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காதது மட்டுமல்ல அவர்களை மிகவும் பலவீனமாக்கி நிர்க்கதியான நிலைககுத் தள்ளி உள்ளனர் ; அவர்களிடம் ஆயுதமும இருநத்ததால் அவர்கள் ஏற்படுத்திய அழிவு மிகக் கொடுமையானதாகவும் ஈடுசெய்ய முடியாததாகவும் உள்ளது."             தம்பிராஜா ஜெயபாலன்
                                                      (“வட்டுக்கோட்டையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை” )

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...