Sri Lankan rupee weakening steadily; ‘economic reforms urgently needed’




by Hiran H.Senewiratne

Professor of Economics University of Colombo Sirimal Abeyratne said the Sri Lankan rupee is expected to weaken further; it would touch more than Rs 160 to the US dollar level next year, if the government fails to undertake fundamental economic reforms.

"The government has failed to undertake proper economic reforms. Sluggish export growth and the absence of a stable foreign exchange earnings mechanism are among reasons for this plight, Prof Abeyratne told The Island Financial Review.

நாட்டை பாதுகாக்க முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்லுங்கள்"



நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஆபத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியா விட்டால்  உடனே பதவியை துறந்து நல்லாட்சி அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என கூட்டு எதிர்கtissa.V்கட்சி அறிவித்துள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பில்  எதிரணியின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மா மழையே! , மாமுனியே !


எஸ்.எம்.எம்.பஷீர்

மாமுனியே உன்  குறளை - நீ
முற்றிலும் மறுக்க வேண்டும்! 

மழையோ வாழாவெட்டியாய்  
மண்ணினை மறந்து வாழ ,

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (5)


எஸ்.எம்.எம்.பஷீர்.
முஸ்லிம் காங்கிரஸ்  , தனது முஸ்லிம் மாகாண சபைக்கான அரசியல் கோசங்களை seyad bazeerதேர்தல் பிரச்சாரங்களுக்காகவே முன்வைத்து வந்ததனால் , அது பற்றிய நடைமுறைச் சாத்தியங்கள் பற்றிய ஒரு ஆய்வினை அவர்கள் செய்திருக்கவில்லை என்பதையே 1990இல் கொள்ளுப்பிட்டியில் நடந்த இரண்டாவது முஸ்லிம் காங்கிரசின்  உயர்பீட சம்பாசனைகளும் உறுதி செய்தன. ஆனால் மீண்டும் 1994 இல் சந்திரிக்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்து,  இனப் பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசும்  ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார்.
 

Country heading towards economic crisis - Prof. Tissa Vitharana

The county is heading towards a major economic crisis under the present government with its debt burden to be repaid this year lying at USD 4 billion, former Science and Technology Minister Prof Tissa Vitharana said yesterday.

தோல்விகளிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்- முருகபூபதி


மக்கள்  ஆதரவு   அற்ற  எந்த  விடுதலை   இயக்கமும்  இறுதியில்    படுதோல்வியைத்தான்   சந்திக்கும்
கிணற்றுத் தவளைகளுக்கு மீட்சியில்லை
                                        
Rohana_WijeweeraVelupillai_Prabhakaranஇலங்கையில்  1977  இல்  ஜே.ஆர். ஜெயவர்தனா  பதவிக்கு  வந்ததும் தேர்தல்காலத்தில் அவர்  வழங்கிய  வாக்குறுதிக்கு  அமைய  1971 இல்  கிளர்ச்சிசெய்து,  குற்றவியல்  நீதி  ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டு  ஆயுள்கைதிகளாக  இருந்த  மக்கள்  விடுதலை முன்னணியினரை  விடுதலை   செய்தபொழுது,   வடக்கில்  தமிழ் இளைஞர்களின்   தமிழ் தீவிரவாதம்  வளரத்தொடங்கியிருந்தது.
அவர்கள்  மத்தியில்  உருவான  விடுதலை  இயக்கத்தில்  முதலில் பிரபாகரனும்  உமா மகேஸ்வரனும்  இணைந்திருந்தனர்.
தென்னிலங்கையில்  1971   இல் நடந்த  சிங்கள  இளைஞர்களின் கிளர்ச்சி  ஏன்  முறியடிக்கப்பட்டது ? , அந்த  இளைஞர்கள்  எவ்வாறு கைதானார்கள்  என்பதை  அந்த   இயக்கம்  முதல் கட்டமாக ஆராய்ந்தது.
தோல்விகளிலிருந்து  பாடம்  படிக்கவேண்டும்  என்பதற்காக,   மக்கள் ஆதரவு   அற்ற  எந்த  விடுதலை   இயக்கமும்  இறுதியில் படுதோல்வியைத்தான்   சந்திக்கும்  என்ற  பாடத்தை  மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து  கற்றுக்கொள்வதற்காக   ஒரு  தமிழ் நூலை  வெளியிட்டனர்.

ஈழத் தமிழர் அரசியல் ஒரு யானைக்கால் நடேசன்



அவுஸ்திரேலியாவில் பதின்மூன்று வருடகாலம் நான் முன்னின்று நடத்திய உதயம் ziegeஇருமொழி (தமிழ் – ஆங்கிலம்) மாதப்பத்திரிகை வியாபார ரீதியில் 25000 டொலர்கள் செலவுடன் வெளியாகியது.
ஒவ்வொரு வருடமும் வியாபாரரீதியில் நட்டத்தையே எதிர்நோக்கியது. விளம்பரதாரர்களின் ஆதரவுடன் வெளியானபோதிலும் நட்டம் தவிர்க்கமுடியாதிருந்தமைக்கு அவ்வேளையில் இங்கு புலிகள் இயக்கத்தின் தீவிரமான எதிர்ப்பிரசாரங்களும் முக்கிய காரணம். உதயத்திற்கு விளம்பரம் தருபவர்களை எச்சரித்தல், அதில் எழுதுபவர்களின் குடும்பத்தினருக்கு அழுத்தங்கள் பிரயோகித்தல், கடைகளில் இருந்து உதயம் இதழ்களை ஆட்களை அனுப்பி துக்கிவீசச்செய்தல் முதலான தமக்குத்தெரிந்த அராஜக கைங்கரியங்களில் ஈடுபட்டனர்.
வருடாந்தம் கிட்டத்தட்ட 5000 டொலர்கள் வரையில்; நட்டம் வந்தது..உதயம் மாத இதழாக வெளியாகியதுடன் இலங்கை தமிழக படைப்பாளிகளும் அதில் எழுதினார்கள். தமிழ்நாட்டிலிருந்து எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா உட்பட வேறு சிலரும் எழுதினார்கள். ஒரு கம்பனியாக பதிவுசெய்து அதன் நிருவாகப்பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தமையால் எதிர்நோக்கப்பட்ட நட்டத்தையும் ஏற்றுக்கொண்டேன்.


திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்



திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் விட்டுச் சென்ற நினைவுகளின் ஒரு பக்க தரிசனம்
எஸ்.எம்.எம்.பஷீர்  

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு".   -குறள்-

காலம் சென்ற திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள் 2016 மார்ச் 20  இல் தெற்கு இலண்டனில் உள்ள ஒரு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பின்னர் , அவரின் உடல் இந்துமத வழக்கப்படி வட கிழக்கு சர்ரே மயானத்தில் (Surrey crematorium) தகனம் செய்யப்பட்டது. உலகின் ஒரு மூலையில் , ஒரு இன சமூக வரலாற்றின் இயங்கு தளத்தில் தனது பாத்திரத்தை பதித்த ஒரு  பெண்மணியின் இயற்கை எய்தல் ஆயிரக்கணக்கானோரின் இறுதி அஞ்சலியுடன்  ஆயிரம் மைல்களுக்கப்பால் முடிவுக்கு வந்தது. 

தமிழினி: போராட்டக்களத்திலிருந்து எழுத்துக்களத்திற்கு நகர்ந்த பயணம்.- அ ராமசாமி .




November 04, 2015

ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக் கேட்டதுண்டு. அவரது முகம் நிழற் படங்களாகப் பார்க்கக் கிடைத்தது இந்த ஜனவரி முதல் தான். முகத்தைக் காட்டியபோதுதான் தனது பெயர் தமிழினி ஜெயக்குமரன் என்றும் தானொரு ஈழப் போராளி என்றும் சொன்னார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகநூல்-வழியாகப் பல தடவை உரையாடியிருக்கிறோம். உரையாடல் ஆரம்பித்தால் ஒருமணிநேரத்துக்குமேல் போகாது.  

வட்டுக்கோட்டைத் தீர்மானங்களைக் கைவிட்ட தமிழ் மக்கள் பேரவை!- பாலா


வட மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன்இணை  த்தலைமை வழங்கும்‘தமிழ்
மக்கள் பேரவை’ புதிய அரசியல் அமைப்புக்கான தனது யோசனைகளைப் பகிரங்கப்படுத்தி
இருக்கிறது. அந்த யோசனைகள்அடங்கிய நீண்ட அறிக்கையின் சாராம்சம், வடக்கு கிழக்கில்
வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு சமஸ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். சமஸ்டிக்கோரிக்கை என்பது தமிழரசுக் கட்சியினால் 57 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது இன்று அரசியலில் ஈடுபட்டிருக்கும் பலருக்குத்
தெரியுமோ என்னவோ?ஆனால், விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கிய, தமிழரசுக்
கட்சியை பிரதான அங்கத்துவக் கட்சியாகக் கொண்டிருக்கிற  தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக இதுவரை தனது யோசனை எதையும்
முன்வைக்கவில்லை. தற்போதைய மைத்திரி–  ரணில் அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒட்டி உறவாடி வருவதால்,‘அரசு எதைத் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம், அல்லது
ஒன்றையும் தராவிட்டாலும் பரவாயில்லை ’  என்று கருதி வாளாவிருக்கிறார்களோ தெரியவில்லை.

வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! நல்லாட்சியில் நம்பிக்கை இழப்பு!!


நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை
தெரிவித்துள்ளது.

இலங்கையில் 22,254 தமிழ் பௌத்தர்கள்!


இலங்கையில் 2012இல்
மேற்கொள்ளப்பட்ட ஒரு குடிசன
மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும்
22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ்
பௌத்த குருமாரும் இருப்பதாகத்
தெரிய வந்துள்ளது. இவர்களில் 470
பேர் வடபகுதியில் இருக்கின்றனர்.


1956 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் நடைபெற்று வந்த வலதுசாரிச் சதிகள்! - நமது அரசியல் நிருபர்



சிறீலங்கா சுதந்திரக் கட்சி (சிறீ.ல.சு.க.) வலதுசாரிகளின் பிடியில் சிக்கியுள்ளதால் அதன் எதிர்காலம் குறித்து தேசப்பற்றுள்ள அனைவரும் கவலைக்குள்ளாகி உள்ளனர். ஏனெனில், 1948 பெப்ருவரி 4ல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரான 67 ஆண்டுகளில் சிறீ.ல.சு.க தலைமையிலான அரசுகள் ஆட்சியில் இருந்த ஏறத்தாழ 35 வருடங்களிலேயே தேசத்துக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் காரணமாகவே நவீன வரலாற்றில் இலங்கை உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்க முடிந்தது.

சிறீ.ல.சு.வவை 1951ல் ஆரம்பித்தவர்களில்இரண்டு முக்கியமானவர்கள் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் (சந்திரிகவின் தந்தை), டி.ஏ.ராஜபக்சவும் (மகிந்த ராஜபக்சவின் தந்தை) ஆவர்.பண்டாரநாயக்கவை பிற்போக்கு சக்திகள் 1959ல் படுகொலை செய்த பின்னர், அவரதுமனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க கட்சியையும், நாட்டையும் தனது கணவரின் அடிச்சுவட்டில் சிறப்பாக வழிநடத்தினார்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (4)





எஸ்.எம்.எம்.பஷீர்.

பண்டா செல்வா பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகளை நிறுவுவதைப் பற்றிய முன்மொழிவுகளைக் கொண்ட பிராந்திய சபைகளுக்கான வரைபு மசோதா  ஒன்றினை (Draft Regional Council Bill ) பண்டாரநாயகா செல்வநாயகத்திடம் (தமிழரசுக் கட்சியிடம் ) பரிசீலிக்கும்படி கூறி இருந்தார். அத்துடன் சமஷ்டி அமைப்புமுறை அல்லது பிராந்திய சுயாட்சியை ஏற்படுத்துவது சாத்தியமற்றது என்பதையும்  பண்டாரநாயக தமிழரசுக் கட்சியிடம் வலியுறுத்தி இருந்தார்.

அதன் அடிப்படையிலேயே பண்டா செல்வா ஒப்பந்தம் உருவானது என்பது வரலாறு. ஆனால் பண்டாரனாயகா ஏற்கனவே  வரைவு மசோதாவில் முன்வைத்த அம்சமான  "வடமாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது இரண்டுக்கு கூடிய பிராந்திய சபைகளாக அமையும்." என்ற வரைபு ஏற்பாடுகள் , இரு தரப்பினரின் பேச்சுவார்த்தைகளின் பின் பண்டா செல்வா ஒப்பந்தத்தின்  சரதுக்களாக (Clause) மாறியது. 

ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள், முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, முன்னைய ஆட்சியில் ஊடக சுதந்திரம் முழுமையாக இருக்கவில்லை என்பதே. ஆனால்  தற்போதைய ஆட்சியாளர்கள் அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மீது கடுஞ்சினங்கொண்டு அதனை வெளிப்படுத்தும் விதத்தினைப் பார்த்தால், முன்னைய ஆட்சியின் ஊடக சுதந்திரம் பற்றி கதைப்பதற்கு இவர்கள் அருகதையே
இல்லாதவர்களாக தெரிகிறார்கள். அத்துடன் இவர்கள் குற்றஞ்சாட்டும் ஊடகங்கள், முன்னைய சர்வாதிகார  ஆட்சிக்கு துணைபோனவை எனவும் இனவாதத்தினை தூண்டுகின்றன  எனவும்  கூறி  இவர்கள் தங்கள் ஆவேசமான பகிரங்கப் பேச்சுகளுக்கு நியாயம் கற்பிக்கவும் முயல்கிறார்கள்.

இவ்வருடத்தில் மாத்திரம் இலங்கையின் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க குறைந்தது மூன்று
தடவைகளாவது ஊடகங்களைக் கடிந்தும் எச்சரிக்கை செய்தும் விடுத்த செய்திகள்
ஊடகங்களிலேயே வெளிவந்துள்ளன. இதேவேளை, இம்மாதம் உயர் கல்வி அமைச்சர், லக்ஷ்மன் கிரியெல்ல செய்தியாளர்களை தூற்றியிருக்கிறார்.

இந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவாத நாடா?

மார்ச் 18, 2016

Neo colonialism 2
ந்தியாவின் இந்துத்துவ வலதுசாரி அரசாங்கமும், இலங்கையின் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கமும் இரு நாடுகளுக்கிடையிலும் செய்து கொள்ள உத்தேசித்துள்ள ‘பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்’ (Economic and Technical Cooperation Agreement – ECTA) என்ற பெயரிலான உடன்படிக்கைக்கு இலங்கையின் தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகள் மத்தியிலும், மக்களிடத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால். இந்தியாவின் தொழில்நுட்ப வல்லுனர்கள் இலங்கையின் தொழில்நுட்ப, விஞ்ஞானத்துறையில் ஆதிக்கம் செலுத்தவும், நமது பொருளாதாரத்தை இந்தியா கட்டுப்படுத்தவுமான சூழல் நிச்சயம் ஏற்படும் என்ற காரணத்தாலேயே, இலங்கையர்களில் கணிசமானோர் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (3)

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (3)
எஸ்.எம்.எம். பஷீர்
1980களின் முற்பகுதியில் கிழக்கிலே தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஆங்காங்கே துளிர்விடத் தொடங்கினாலும்  முஸ்லிம்கள்  தனித்துவ அரசியல் பிரக்ஞை கொண்டவர்களாக அல்லது தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியினை முழு அளவில் ஆதரிப்பவர்களாக இருக்கவில்லை . தேசிய அரசியல் நீரோட்டத்தில் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பவர்களாக முஸ்லிம்கள் இருந்த நிலையில் , முஸ்லிம் காங்கிரஸ் 1981 களில் தோற்றம் பெற்றது. எனினும்  முஸ்லிம் மக்களின் ஆதரவு பெற்ற ஒரு கட்சியாக 1980 களின் பிற்பகுதியில் , குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னரே, அது பரிணமித்தது.  முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் நம்பிக்கையுடன் செயற்படும் சூழல் அப்பொழுதுதான் கனிந்து காணப்பட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னரே 1988 இல் தான் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கட்சியாகப் பதிவு செய்யுமளவு வீரியம் பெற்றிருந்தது என்பதையும் , அதற்கான சூழல் கனிந்து காணப்பட்டது என்பதையும்   இங்கு கவனிக்க வேண்டும். இக்கட்டுரை தொடரில் ஏற்கனவே குறிப்பட்டது போல இந்திய ஒப்பந்தமே வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மிக முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் அனாதரவுத் தன்மையை  , "அடிமைச் சாசனம்" எனப்பட்ட இந்திய அரசின் ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை அஸ்ரப் தனது அரசியல் விழுதாக பயன்படுத்திக் கொண்டார்.  

தமிழினியின்; சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “ - நடேசன்


இளம் வயதில் வெதரிங் ஹைட் ஒரே நாவலை தந்துவிட்டு இறந்த எமிலி புரண்டே ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார் (Wuthering Heights – Emily Brontனூ’) அதுபோல் தமிழினியின் சுயசரிதையும் ஈழத் தமிழர்களால் பலகாலம் பேசப்படும். அரசியல் போராட்டத்தை இப்படி எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்பதோடு நமக்கு தவறுகளைப் புரிந்து கொள்ளும் பாலபாடமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன்

அரசியல்

முப்பது வருடகால தமிழ் விடுதலைப் போராட்டத்தை மகோன்னத போராட்டமாகவும் அதன் தலைவரை கடவுளுக்கு நிகராகவும் வைத்து எதுவித விமர்சனமற்ற போராட்டமாக எடுத்துச் சென்றோம். ஆனால் போராட்டம் 2009 இல் முற்றாக ஆவியான பின்பு இயக்கத்தில் வெவ்வேறுகாலங்களில் இருந்தவர்கள் நாவல்களாக எழுதினார்கள்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (2)




எஸ்.எம்.எம்.பஷீர்.
முஸ்லிம் மாகாண சபையே முஸ்லிம் மக்களுக்கு தாயகத்தையும் சுய நிர்ணய உரிமையையும் வழங்கும் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும்  தங்களின் முஸ்லிம் மாகாண சபைக்கான கோரிக்கையைகை விடமாட்டோம் என்றும் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் கருத்து வெளியிட்டிருக்கிறார் , மிக முக்கியமாக தமிழர் தரப்பில் முன் வைக்கப்படும் சுய நிர்ணய உரிமை கோட்பாட்டிற்கும்  ,  தாயக் கோட்பாட்டிற்கும் (திம்பு கோட்பாட்டின் கோட்பாடுகளில் மிக முக்கிய இரண்டு  அம்சங்கள் )  அமைவாகவே அவர் அந்தக் கருத்தை முன்வைத்திருப்பதை வெளிப்படையாகவே  அவதானிக்கலாம். ஏனெனில் அவர் தமது கோரிக்கையை முஸ்லிம் காங்கிரசின் கருத்தாகவே முன் வைத்திருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை அவர் முஸ்லிம் காங்கிரசின் அதி உயர் பீடத்துக்கு  கொண்டு போக முன்னரே , அதுவே முஸ்லிம் காங்கிரசின் கருத்தென்றும் , தவிசாளர் என்ற வகையில் , அவரின் கருத்தே கட்சியின் கருத்து என்று வலியுறுத்தி இருந்தார்.

நீதி க(வி)தைகள்-2




அண்ணலார்
அமர்ந்திருக்க
அருகே தோழர்கள்
சூழ்ந்திருக்க :


பிரேத ஊர்வலம்
தனைக் கடக்க 
எழுந்து நிற்கிறார்
அண்ணலார்

ஏறிய புருவங்கள்,
ஏனோ என விளிக்க   

"பிணம் பேதமற்றது!
சடலம் சமயமற்றது !
சங்கை சமத்துவமானது"


எஸ்.எம்.எம்.பஷீர்

அண்ணலாரே ! இது ஒரு யூதனின் ஜனாஸா" என்றோம். அதற்கு  நபி ( ஸல்) அவர்கள், 'இவர் மனிதரில்லையா?', ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்" எனக் கூறினார்கள். ( புகாரி ஹதீஸ் 1311-1313 -புத்தகம் 23  )

நீதி க(வி)தைகள்


எஸ்.எம்.எம். பஷீர்


ஏசுவே !
"மனுஷ பாவங்கள் நீக்க"  -நீ
சிலுவை  சுமந்தாய் ;

LTTE in Scandinavian countries during the peace talks in Octoober 2003 (Some Exclusive Photographs)



LTTE  members in Scandinavian countries during the Peace Talks in 2003






A ‘useless, useless’ £10million peace envoy: Blair slammed by Middle East leaders over role as negotiator By TOM BOWER



Following end of his premiership Blair became the new Middle East envoy.

  • He was given a home, 12 members of staff and a fleet of armoured cars
  • Living in Jerusalem he had access to private jet and expenses
  • Brimming with confidence, he ignored the limitations imposed on his role 
To Blair, his appointment as the Middle East envoy opened a glorious new chapter in his life. In Jerusalem, he would have everything he enjoyed: the sun, a Mediterranean lifestyle and status. But his reputation took a dive when he delivered a eulogy in January 2014 at the funeral of the former Israeli prime minister Ariel Sharon

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !


எஸ்.எம்.எம்.பஷீர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து பொதுமக்களின்  அபிப்பிரயாயங்களை அறிந்து கொள்ள நியமிக்கப்பட்ட குழு இலங்கையின் பல north eastபாகங்களுக்கும் சென்று அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மூலமாகவும் மற்றும் எழுத்து மூலமாகவும் சமர்ப்பணங்களைப் பெற்று வருகிறது. இக்குழுவினர்  உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக கிழக்கு மாகாணத்திற்கும் சென்ற வாரம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இக்குழுவினர்  நாடுதழுவிய அமர்வுகளின் மூலம் பெறப்படும் அரசியல் யோசனைகளை உள்வாங்கி அறிக்கையொன்றைத் தயாரிக்கவும்  அத்துடன் சிபார்சுகளைப் பரிந்துரைக்கவும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவினால் கோரப்பட்டுள்ளனர். இதற்கான அனுமதியை பிரதம மந்திரி அமைச்சரவையிடமிருந்து பெற்றுள்ளார். இக்குழுவினரின் அறிக்கைகள் மற்றும் சிபாரிசுகள் என்பன அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை உப குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அமைச்சரவை உப குழுவின் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று  நம்பப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பானமையைப் பெற்று இறுதியில் சர்வஜன் வாக்கெடுப்பு மூலமே சட்டவாக்கம் நடை பெறும் .

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...