பயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi



(அச்சுறுத்தப்பட்ட மாணவர்களும் மக்களும்.)

 3508_n

விமானத் தாக்குதல் நிகழ்தமையை அடுத்து அங்கு சென்ற பெற்றோரின் வேதனைகள் சொல்லிடங்காதவை. கணவனை இழந்து தனது வருமானத்தில மூன்று பிள்ளையை வளர்த்த விசுவமடு தாய் தனது மூத்தபிள்ளைக்கு ஒன்றும் ஆகிவிடாக்கூடாது என கடவுளிடம் வேண்டிக்கொண்டு தேடினார். உயிரற்று கிடந்த மகளை துக்கி எடுத்து அழுது புலம்பியபடி வீடு கொண்டு செல்ல அந்த தாய் முயன்றமை மிக கொடுமையான காட்சியாக இருந்தது.
இரட்டை பிள்ளைகளின் தந்தையும் தனது குழந்தைகளை தேடினார் ஒரு மகளை பிணமாக கண்டவர் மற்றவராவது தப்பிவிடக் கூடாதா என்று பரிதவித்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. தந்தை, தாயின் எதிர்கால கனவுகள் பிணங்களாக உடல் சிதறிக்கிடந்தனர். அந்த தந்தையின் வேதனைமிக்க கதறலை கண்டவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஜீரணிக்க முடியாத துன்மாகவே அது இருக்கும்.



தாயக விடுதலைக்காய் களம்காணப்போகின்ரோம் என புறப்பட்டவர்களில் குடும்ப வாழ்வில் திளைத்தமையும், நிழல் அரசாங்க நிர்வாகமே எதிர்காலம் என இருந்தவர்களின் ஆயுதயுத வேட்க்கை பல ஆயிரம் பச்சிளம் சிறார்களின் வாழ்வை இல்லாதொளித்தது. சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போரிடும் ஆற்றலுடையோரை அரசியல், சட்டம், நிர்வாகம், காவல், நிதி, புனர்வாழ்வு, புலனாய்வு என காப்பாற்றியவர்களால் புலிகளின் தலைமையால் மக்களின் பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் இருந்தது.

1995ல் இடம்பெயர்ந்து புலிகளின் நிழல் ஆட்சிக்குள் வாழ்ந்து 2002ம் ஆண்டு யாழ் திரும்பிய இரண்டு பிள்ளைகளின் தாயிடம் “யாழ்ப்பாணத்தை இயக்கம் பிடித்தால் நல்லது தானே”, என்று சொன்னபோது “ஏன் இயக்கம் பிள்ளைகளை அள்ளிக் கொண்டு போகவே?, அவங்களின் போக்கு வரவர மோசம்” என்று சட்டென பதிலத்தார். அநத பெண்மனியின் வார்த்தைகள் ஒரிரு வருடங்களிலேயே இப்போது நிதர்சனமாகியிருந்தது. அவர் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் பல பெற்றோரின் மனநிலை அவ்வாறே காணப்பட்டது.
ஆனால் இன்றுவரை துன்பச்சுமையுடன் அடிப்படைகள் இழந்து வாழ்பவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வடக்கு, மன்னார் மாந்தை, பகுதிகளை சேர்ந்த அப்பாவி மக்களே. எங்கோ எவர்களாலோ தொடங்கப்பட்ட இன விடுதலை என்ற கொடிய யுத்தத்தினாலும், அதனை மையமாக வைத்து பின்னப்பட்ட தமிழ்தேசிய அரசியலினதும் பலிக்கடாக்களாக இன்றுவரை இம்மக்களே இருக்கின்றனர்.

இப்போது காயமடைந்த மாணவைகளுக்கான சிகிட்சைக்கு உதவ ஐ.நா முன்வந்தது. ஐ.நாவின் சிறுவர் நிதியத்தின் கிளிநொச்சி தலைமை அதிகாரி பெனி புறூனே போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் கிளிநொச்சி பிரதிநிதி மாத்தி வனியொன்பா (Matti Vanionpa) சென்று வைத்திய சாலைகளில் சிகிட்சை பெற்றுவரும் மாணவிகளை சந்தித்திருந்தார். சிகிட்சைக்கு தேவையான மருந்து மற்றும் எரிபொருள் தடையினறி கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மிக மோசமாக காயமடைந்த மாணவிகளை மேலதிக சிகிட்சைக்காக அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு கொண்டு செல்லவும் முயன்றார்.
ஆனால் அதனை ஏற்க புலிகள் மறுத்தனர். அத்துடன் யார் வந்து கேட்டாலும் இந்த மாணவிகளை முதலுதவி மற்றும் தலைமைத்துவ பயிற்சிக்கே, தாங்களாகவே விரும்பி சென்றதாக கூறுமாறு ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், மக்களுக்கும் புலிகள் அறிவுறுத்தினர். ஒரு மாபெரும் அவல நிகழ்வின் உண்மையை மறைக்கும் முயற்சியில் அவர்களின் ஊடகங்கள் சர்வதேச அளவில் முயன்றுகொண்டிருந்த அதேவேளை, புலிகளின் அரசியல்துறையினரும் புலனாய்வு துறையினரும் தங்கள் பங்கிற்கு அதற்கான முயற்சியில் கிளிநொச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

காயமடைந்து சிகிட்சை பெற்றுவந்த மாணவிகளிடம் சென்று தங்களுக்கு ஆயுதபயிற்சி வழங்கப்படவில்லை எனவும் மருத்துவ முதலுதவி பயிற்சியே வழங்கப்பட்டது என்று கூற வேண்டும் அச்சுறுத்ததொடங்கினர். அத்துடன் அவலசாவடைந்த மற்றும் காயமடைந்த இந்த மாணவிகளின் உறவினர்களும் அவ்வாறே கூறவேண்டும் எனவும் பணித்தனர்.
மேலதிக சிகிட்சைக்கு மாணவிகளை அனுப்புவதில் வைத்தியர்களுக்கும், புலிகளுக்கும் இழுபறி நிலை தோன்றியபோது, ஐ.நாவும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரும் இப்போது மேலதிக சிகிட்சைதொடர்பில் புலிகளை வற்புறுத்த தொடங்கியிருந்தனர். போரில் காயமுற்று உயிருக்காக போராடிக்கொண்டிருப்பவர்களுக்கான சிகிட்சைக்கு அனுமதிக்க மறுப்பது சர்வதேச போர் விதிகளை மீறிய செயல் என புலிகளுக்கு புரிய வைக்க முயன்றுகொண்டிருந்தனர்.

சற்று சினமடைந்த புலிகள் படுகாயமடைந்த மாணவிகளை மேலதிக சிகிட்சைக்கு அனுப்பும் யோசனைகள் எதனையும் கொண்டிருக்க வேண்டாம் என வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க முயன்றார்கள். ஆனால் முல்லைத்தீவு வைத்திய சாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவிகளில் மிக மோசமாக உயிருக்கு போராடிய மூன்று பேரை வைத்தியசாலை பணிப்பாளர் வவுனியாவுக்கு வைத்திய சாலைக்கு துணிச்சலுடன் அனுப்பிவைத்துவிட்டார். இதன் தொடர் விளைவாக அந்த வைத்திய சாலை பணிப்பாளர் சிரமங்களை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
வவுனியாவுக்கு மேலதிக சிகிட்சைக்காக சென்ற மூன்று மாணவிகளும் அவசர சிகிட்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தொடரும்..

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...