பயிரை மேய்ந்த வேலிகள் (26)- ராஜ் செல்வபதி

4158_n
**********************************************
(சர்வதேச சமூகத்தினரின் எதிர்வினைகள்.)

இப்போது விமான குண்டு வீச்சுகுள்ளான வள்ளிபுனம் பயிற்சி முகாம் மீண்டும் செஞ்சோலையாக மாற்றப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் இருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் செய்தியாளர் கூட்டம் ஒன்று அவசரமாக நடந்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் செஞ்சோலை மாணவிகள் மீதான இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்தார்.


விமானத்தாகுதல் இடம்பெற்ற வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமில் காயப்பட்டவர்கள்128பேர் உடனடியாக புதுக்குடியுருப்பு வைத்தியசாலைக்கு 13 பேரும், கிளிநொச்சி வைத்திய சாலைக்கு 63 பேரும், முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு 52 பேரும் அனுப்பப்ட்டனர். 53 இறந்த மாணவிகளின் உடல்கள் பிரதான முகாமுக்கு முன் இருவரிசைகளில் அடுக்கப்பட்டிருந்தன. மேலே வேவு விமானம் சுற்றியவண்ணம் இருந்தது. ஒரு பதட்டமான நிலையில் அப்பகுதி காணப்பட்டது.

ஏனைய பயிற்சி முகாம்களுக்கும் செய்தி பரவியிருந்தது. அங்கிருந்த மாணவர்களும் மாணவிகளும் முகாமை உடைத்துக்கொண்டு வெளியேறியிருந்தனர். வீதிகளாலும், காணிகளுற்கூடாகவும் ஓடிய வண்ணம் இருந்தார்கள். மீண்டும் பிடித்துவிடுவார்களா என்ற பயமும் மாணவர்கள் மத்தியில் இருந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் முகாம்களை நோக்கி சென்று மாணவர்களை மீட்க தொடங்கினர். தொலைவிடங்களை சேர்ந்த மாணவர்கள் தெரிந்த பாதையில் வீடுகள் நோக்கி ஓடிய வண்ணம் இருந்தனர்.

புலிகள் கிளிநொச்சியில் இருந்த இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும், ஐ.நா அதிகாரிகளுக்கும் சிறுவர் இல்லம் மீது விமானப்படையினர் தாக்குதல் நடத்திவிட்டதாக அறிவித்திருந்தனர். அவர்களின் ஊடக வலையமைப்பினூடாக உலகம் முழுவதும் இந்த செய்தியை பரவச்செய்தனர். அதிகாரமும் ஊடக பலமும், பணமும் இருந்தால் எவ்வளவு பெரிய பொய்யையும் உண்மையாக்கி சரித்திரத்தில் இடம் பெறச்செய்யலாம் என்பதற்கு வள்ளிபுனத்தில் அரங்கேற்றப்பட்ட இந்த வன்கொடுமையே மிக சிறந்த சாட்சியாக அமைந்தது.
தகவலறிந்து அவ்விடத்துக்கு சென்ற ஐக்கியநாடுகள் சிறுவர் நிதிய அதிகாரிகளில் ஒருவரான ஆன் வெனமென் ( Ann M Veneman ) இவ்வாறு கூறினார். “These children are innocent victims of violence”
அவ்வமையத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜொன்னெ வான் ஜேர்பன் (Joanne Van Gerpen) “We don’t know what was in the surrounding areas as we are not experts in military matters. But UNICEF officials were familiar with this compound when it was run as a childrens home, sometime ago. How or what it has been used for since then we do not know,” எனக்கூறியிருந்தார்.

அங்கு சென்ற போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் உல்ஃப் ஹென்றிக்சன் ( Ulf Henricsson) “My monitors up in Kilinochchi visited the area. They saw the premises that was definitely bombed by the Sri Lankan air force. They couldn’t find any sign of military installations or weapons I think we counted 12 bombs which was confirmed. They were mostly fragmentation bombs which explode in the air and spread out a lot of pellets or fragments. They were dropped at premises that have been or is said to be an orphanage although at that time it was not used as such because there were no children there. According to the LTTE, it was used to train young women in first aid. Nobody was left when we came to the site, but obviously people have been killed there. I cannot count the number. I doubt it was 61, as claimed by the LTTE for several reasons.” அப்போது அறிவித்திருந்தார்.

நியூயோர்க்கில் ஐ.நா பேச்சாளர் Orla Clinton தனது செய்திக்குறிப்பில் ” “What we know at the moment is that these seem to have been students between 16 and 18, A-level students, from the Kilinochichi and Mullaittivu areas, who were on a two-day training course in first aid,” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இலங்கை விவகாரத்தில் முக்கிய பங்காற்றிய இந்தியா, அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பியயூனியன், ஜப்பான் போன்ற முக்கிய நாடுகள் எதுவும் உடனடியாக கருத்துகள் எதனையும் கூறாமல் மௌனம் காத்தன.

புலிகளோ குண்டுத்தாக்குதல் நடந்த இந்த பகுதியில செஞ்சோலை வளாகம் மட்டுமல்லாமல் வேறு நான்கு ஆதரவற்றோர் இல்லங்களும் இருந்ததாக கூறி அதன் விபரங்களை வெளியிட்ட னர்.

1.சுனாமி மற்றும் போரால் பாதிக்கப்பட்ட 160 பிள்ளைகள் தங்கியிருக்கும் பாரதி பெண்கள் இல்லம்.

2.செவிபுலன், கட்புலன் இழந்த 78 பிள்ளைகள் தங்கி இருந்த இனியவாழ்வு இல்லம்.

3.சுனாமி மற்றும் போரால் பாதிக்கப்பட்ட வேறு 60 பெண்பிள்ளைகள் தங்கியிருந்த வசந்தன் சிறுவர் இல்லம்.

4.130 சிறுவர்கள் தங்கியிருந்த செந்தளிர் இல்லம்.

இவை அனைத்தும் இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களாக இருந்ததுடன் இந்த பகுதி ஒரு சமாதான வலையம் எனவும் இச்சமாதான் வலையத்தினுள்ளேயே விமானப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறினார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமனற குழு விடுத்த அவசர செய்திக்குறிப்பில் ” Attack on Sencholai childrens’ home as “not merely atrocious and inhuman – it clearly has a genocidal intent.The heavy aerial bombardment on the premises clearly indicates that the attack was premeditated, deliberate and vicious,” என்று கூறியதுடன் சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் இந்த இன அழிப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் கூறினர்.

தொடரும்..

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...