பயிரை மேய்ந்த வேலிகள்..(27) By Raj Selvapathi

3896_n
**********************************************
(மாணவிகள் கொல்லப்பட்டமை தொடபில் அரசாங்கத்தின் பதில்)

வள்ளிபுனம் பெண்கள் பயிற்சி முகாமின் மீது நடத்தப்பட்ட விமானத்தக்குதல்களில் 53மானவிகள் அந்த முகாமில் இருந்த ஏனையோர் என மொத்த்ம் 62 பேர் கொல்லப்பட்டும் 129 பேர் படுகாயங்கள் அடைந்த இந்த துயரசம்பவத்துக்கு கொழும்பை மையாமாக இயங்கும் ஊடகங்களும் , சர்வதேச ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கமல் விட்டன. அன்றைய தினம் கொழும்பில் நடந்த இன்னும் ஒரு சம்பவமே இதற்காக காரணமாக அமைந்தது. பாகிஸ்தானின் 60வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொள்ளுபிட்டிக்கு வந்த பாக்கிஸ்தான் தூதுவர் பஷீர் வாளி மொஹம்மட் புலிகளின் கிளைமோர் தாக்குததலுக்கு உள்ளானார்.


அதிஸ்டவசமாக உயிர்தப்பிய மொஹமட்டை பாகிஸ்தான் உளவாளி என்றும் தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசின் இனவழிப்பு நடவடிக்கைக்கு தேவையான இராணுவ உபகரணங்களையும் தொழில்துட்ப, நிபுணத்துவ உதவிகளை பாக்கிஸ்தான் வழங்குகின்றது எனவும் புலிகள் ஆதரவு ஊடகங்கள் குற்றம் சாட்டியிருந்தன. அத்துடன் வன்னிப்பகுதியில் தாக்குதல்களை நடத்தும் போர்விமானங்களின் விமானிகளாக பாகிஸ்தானியரே பணியாற்றுகின்றனர் எனவும் அவரக்ள் குற்றம் சாட்டியிருந்தனர்.

(விமானத்தாக்குதல் தொடர்பான சர்வதேச சமுகத்தின் எதிர்வினையும் அதன் பின் நிகழ்தவையும் இத்தொடரில் இருந்து சற்று விலகி செல்வதாலும் மிக நீண்டு கொண்டே செல்வதாலும் அதனை இத்துடன் நிறுத்துகின்றேன்.)

மறுநாள் இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தனவுடன் இணைந்து செய்தியாளர் மாநாட்டில் வள்ளிபுனம் விமானத்தாகுதல் தொடர்பாக விளக்கமளித்தார். ”அது அநாதைகள் இல்லம் அல்ல. அதற்கான எந்த சான்றுகளும் அங்கு காணப்படவில்லை. 2004ல் இருந்தே நாங்கள் அந்த இடத்தை அவதாணித்து வருகின்றோம். அது உண்மையில் புலிகளின் பயிற்சி மற்றும் இடைத்தங்கள் முகாமாகும்” என அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறினர்.
விமானத்தாக்குதலின் பின் புலிகள் எவ்வாறு அங்கிருந்து தப்பிச்செல்கின்றனர் பாருங்கள் எனக்கூறி ஒரு காணொளிக்காட்சியையும் திரையிட்டனர். ஆனால் அங்கு சென்ற செய்தியாளர்கள் சிலர் இந்த காணொளிகாட்சியில் எல்லா இடமும் பசுமையான காடுகளாகவே தெரிகின்றது எனக்கூறினர்.

புலிகள் 1347 பாடசாலை மாணவர்களை கட்டயமாக போர்பயிற்சிக்கு அழைத்து சென்றுள்ளனர். எங்களை பொறுத்தவரை அவர்கள் புலிகள் தான். காட்டுக்குள் பாடசாலை மாணவிகள் பெண்புலிகளின் சீருடை போன்று முழுக்காட்சட்டையுடனும் இடை பட்டியும் அணிந்திருந்து கொண்டு என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என கேள்வி எழுப்பியதுடன் ஐ.நா சிறுவர் நிதியம், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரின கருத்துக்களை ஏற்க முடியாது என கூறினார்.

விமானப்படையின் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சிலவா “We have monitored this site for more than two years. According to ground and air surveillance and intelligence, this site was being used as a military and a transit camp. We cannot comment on the training programme which was conducted on this site, but we are sure of our target,” எனறு கூறி தமது தாக்குதலை நியாயப்படுத்தினார்.

விமானத்தாக்குதலுக்குள்ளான அந்த இடம் செஞ்சோலை என அழைக்கப்படும் ஆதரவற்ற சிறுவர்கள் தங்கும் இல்லம் அல்ல. அது நடனமிட்டான்குளம் எனவும் அதனது GPS 9°21’0″ N and 80°39’0″ E எனவும் கூறினார்.

அத்துடன் தங்கள் தரப்பை நியாயப்படுத்த பல கேள்விகளையும் முன்வைத்திருந்தார்.

1.இங்கு சிறுவர்கள் நிரந்தரமாக தங்க வைக்கப்படுவர்கள் என்றால் பங்கர் பாதுகாப்பு ஏன் செய்யப்படவில்லை?

2.கொல்லப்பட்ட அனைவரும் மாணவிகளா? ஆசிரியர்கள் எவரும் இல்லையா? எப்படி?

3.கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேரும், 18-20 வ யதுகளில் உள்ள பாடசாலை மாணவிகள் இருக்கின்றனரே. அப்படியென்றால் செஞ்சோலையில் தங்கி இருந்த யாரும் கொல்லப்படவில்லையா?

4.இவர்கள் அநாதை பிள்ளைகள் என்றால் இவர்களுக்கு பெற்றோர்கள் எங்கிருந்து வந்தனர்?
5.அநாதை இல்லத்தில் இராணுவ பயிற்சி வசதிகள் ஏன் செய்யப்பட்டது?#

6.முல்லைத்தீவின் பல பாடசாலைகளில் கற்பவர்கள் என்றால் பாடசாலைக்கு போகாமல் இங்கே அந்த மாணவிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
என கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றிருந்தார்.

விமானத்தாகுதலுக்கு உள்ளான மாணவிகள் உண்மையில் புலிகளின் செஞ்சோலை அநாதைகள் இல்லத்தில் இருந்தவர்களா அல்லது புலிகளால் கட்டாய ஆயுத பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டவர்களா? என்கின்ற வாத பிரதிவாதங்கள பூதாகரமாக வெடித்த அதே வேளை தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்தில் கொந்தளிப்பும் அதிருப்தியும் மக்கள் மத்தியில் எழுந்தது.

ஆத்திரமடைந்த மக்கள் கிளிநொச்சியில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு அலுவலகத்தின் முன் குழுமினர். பரவிபாஞ்சானில் இருந்த புலிகளின் சமாதான செயலகம் மற்றும் மகிளீர் அரசியல்துறை செயலகம் முன்பாகவும் மக்கள் கூடி புலிகளுக்கு நெருக்கடியை கொடுக்க முயன்றனர். காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளிலும் மக்கள் கூடத்தொடங்கினர். கிளிநொச்சி நகரம் இப்போது மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. புலிகளின் காவல்துறை மக்களை சேரவிடாமல் தடுப்பதில் முனைப்புடன் செய்ற்பட்டுக்கொண்டிருந்தனர்.

இறுதியாக புலிகளின் கல்வி கழக பொறுப்பாளர் பேபி சுப்பிரமணியம் என அழைக்கப்படும் வே. இளங்குமரன் பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தின் நிதிப்பங்களிப்புடன் பத்து நாள் தலைமத்துவ பயிற்சிக்காக செஞ்சோலை வளாகத்தில் தங்கியிந்த முல்லத்தீவு மாவட்டத்தில் உள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளே கொல்லப்பட்டார்கள் என ஒப்புக்கொண்டார்.

இவரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து. இன்னும் சில நாட்களில் பரீட்சைக்கு தோற்ற வேண்டிய மாணவிகள் அதற்கு தயாராக அனுமதிக்கப்படாமல் எப்படி இருவார கால முதலுதவி-தலைமைத்துவ பயிற்சிக்காக இங்கே தங்க வைக்கப்பட்டார்கள் என்ற அரச தரப்பினர் கேள்வியெழுப்பினர்.

இந்த கேள்விக்கு பேபியிடம் மட்டுமல்ல இம்மாணவிகளை அங்கு அனுப்பி வைத்த கல்வி அதிகாரிகளிடம் கூட விடை இருக்கவில்லை.

தாங்கள் வலையக்கல்வி பணிப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது தமக்கு அது என்ன பயிற்சி என்று தெரியவில்லை எனவும் யாரால் அப்பயிற்சி நடத்தப்பட்டது என்பது பற்றியும் தெரியாது என தம்மிடம் கூறினார்கள் என ஐ.நா சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஜொன்னெ வான் ஜேர்பன் இப்போது தெரிவித்திருந்தார்.
அதே வேளை மாகாண கல்வி பணிப்பாளர்விசாகலிங்கம் தான் இதனை பற்றி அறிந்திருக்காமையினால் எதனையும் கூறமுடியத நிலையில் இருப்பதாக கூறினார்.
ஆனால் 42 மாணவிகள் கொல்லப்பட்டு 104 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், உடையார் கட்டு மகா வித்தியாலய மாணவிகள் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமைந்துள்ளனர் எனவும் இப்பாட சாலையை சேர்ந்த கனகரட்ணம் நிருபா, கனகரட்ணம் நிதுசா என்கின்ற இரட்டை சகோதரிகளும் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்து இறந்த மாணவிகளின் விபரத்தினையும் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாருக்கு முல்லைத்தீவு வலையக்கல்வி பணிப்பாளர் அரியரட்ணம் அனுப்பி வைத்திருந்தார்.
ஐ.நா சிறுவர் நிதியத்துக்கு அரச தரப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன். அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சியில் இருந்த ஐ.நா பிரதிநிதியும் சிறுவர் நிதிய கிளிநொச்சி காரியாலய தலைமை அதிகாரியுமான பெனி புறூனை ( Penny Brune) நெருக்கடிக்குள்ளாக்க முயனறனர். இவர் நியூயோக்கில் உள்ள தங்களது தலைமையகத்தை தவறாக வழிநடத்தினார் எனவும் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் ஓய்வு பெறும் வயதை கடந்தும் ஏன் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் இவர் பணியாற்றுகின்றார்? என்றும் கேள்விகளை தொடுத்தனர். கிளிநொச்சி கரடிபோக்கில் இவர் எப்படி வீடு ஒன்றை கட்டினார்? எனவும் அவர்கள் கேட்டிருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழர் புனர்வாழ்வு கழகத்துக்கு கண்ணிவெடி பாதுகாப்பு வசதிசெய்யப்பட்ட ( Anti Mine Blanket) வாகனத்தை வழங்கினர் என பெனி புறூன் மீது அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொடரும்..

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...