சர்வதேச நீதிபதிகளுக்கான கோரிக்கையால் உள்ளக விசாரணையையும் இழக்கும் அபாயம் : என்கிறார் டிலான்
இலங்கையின் அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில்
ஆலோசனை வழங்கும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ அல்லது அதன் ஆணையாளர் நாயகத்திற்கோ அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, முப்படையினர் தவறு செய்திருந்தால் அத்தருணத்தை அடிப்படையாக வைத்து உள்நாட்டு சட்டங்களுக்கமையவே விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர சர்வதேச சட்டங்களுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்படும் சம்பிரதாயம் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கலாநிதி தயான் ஜயதிலக மேலும் தெரிவித்திருப்பதாவது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் ஷெய்ட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை பயங்கரமானதாகும்.
சர்வதேச நீதிபதிகள் மற்றும் சர்வதேச கண்காணிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தோடு இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் "சர்வதேச சட்டங்கள்" உள்ளீர்க்கப்பட வேண்டுமென்றும் இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்திலான சரத்துக்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிபதிகளுக்கான கோரிக்கையால் உள்ளக விசாரணையையும் இழக்கும் அபாயம் : என்கிறார் டிலான்
தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை கோருவதன் மூலம் உள்ளக விசாரணையே இடம்பெறாமல் போகும் அபாயம் காணப்படுகின்றது. இந்த விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யதார்த்தமாகவும், நுட்பரீதியாகவும் செயற்படவேண்டுமென நான் யோசனை முன்வைக்கிறேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதைப்போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவி இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை கண்டறிய முயற்சிக்கின்றோம். ஆனால் இவ்வாறு சர்வதேச நீதிபதியை கோருவதன் மூலம் அந்த முயற்சிகளும் பயனற்று போய்விடும் என்று அஞ்சுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணை பொறிமுறையில் ஈடுபடுத்த அரசியலமைப்பில் இடமில்லை. அரசியலமைப்பை மீறி எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.thenee.com/040716/040716-1/040716-2/040716-2.html
No comments:
Post a Comment