இப்படியும் சில அரசியல் புரட்டர்கள்!- மெய்ஞானி

சோவியத் புரட்சியின் தளகர்த்தர் மாமேதை லெனின் அவர்கள் பல நூற்றுக்கணக்கான அரசியல் கட்டுரைகளை எழுதிச் சென்றிருக்கிறார். அவரது கட்டுரைகளில் மிக
முக்கியமானது “அரசும் புரட்சியும் ”  என்ற கட்டுரையாகும். அக்கட்டுரையின் தொடக்கத்தில் அவர் மிக முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது வரலாற்றில்
ஆளும் சுரண்டல் வர்க்கங்களுக்கு எதிராக முக்கியமான போராட்டங்களை நடாத்திய மக்கள் தலைவர்களை கொடுங்கோலர்களாக வர்ணித்த முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் அவர்கள் இறந்த பின்பு அவர்களது கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக
அவர்களை பரம சாதுக்களாக,  அகிம்சாமூர்த்திகளாக, வர்க்க சமரசவாதிகளாக வர்ணிப்பதுண்டு என அவர் குறிப்பிட்டார். அவர் சொன்னதுபோல லெனின் இறந்து பின்னர்

அவரது வாரிசான ஸ்டாலினும் இறந்த பின்பு அதிகாரத்தைக் கைப்பற்றிய குருசோவ் திரிபுவாதக் கும்பல் லெனினது அத்தனை புரட்சிகரத்தன்மைகளையும் இருட்டடிப்புச் செய்து அவரை ஒரு பரம சாதுவாகää புத்தராக காந்தியாக மாற்றியது. இந்த விதமான அரசியல் புரட்டல்களும் மோசடித்தனங்களும் அன்று மாத்திரம் அல்ல இன்றும் தொடர்ந்து நடைபெற்ற
வண்ணம் உள்ளது. அதற்கு ஒரு உதாரணம் இதோ:

இவ்வருடம் ஏப்ரல் 07ஆம் திகதி எமது அன்புக்குரிய தோழர் நெடுந்தீவு சின்னத்தம்பி சண்முகநாதன் எதிர்பார்க்காத வகையில் மரணித்தார். அவர் உயிருடன் இருந்த காலத்தில் அவரது மகிமையை உணராத பலர் அவர் இறந்த பின்பு அவர் மீது அவரது உறவினர்கள் ஊரவர்கள் மட்டுமின்றி அவருடன் பழகியவர்கள் அத்தனைபேரும் செலுத்திய
மரியாதையைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போயினர்.

அவரது நினைவைப் போற்றி பல செய்திகள் கட்டுரைகள் என்பன ஊடகங்களில் வந்தன. நினைவஞ்சலிக் கூட்டங்களும் நடந்தன. இந்த நிகழ்வுகளில் உண்மையான மணிகளுடன்
சில பதர்களும் சேர்ந்து கொண்டன.

இவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தோழர் சண்முகநாதனுடன் பழகியதை வைத்துக்கொண்டு அவரைப் போற்றுவது போலப் பசாங்கு செய்துகொண்டு அவர் பின்பற்றிய உண்மையான கொள்கைகளைத் திரிபுபடுத்தி அவர் மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர்.
தோழர் சண்முகநாதன் இறப்பதற்குச் சில காலம் முன்னர் புலம்பெயர் இடதுசாரிகளுக்கான வேண்டுகோள் ஒன்றை எழுதி வீட்டில் வைத்துள்ளார். அதன் கையெழுத்துப் பிரதி அவரது
குடும்பத்தினரிடம் உள்ளது. அதன் பிரதியொன்று கனடாவில் செயல்படுகின்ற

இலங்கை இடதுசாரிகள் கூட்டமைப்பு ’என்ற அமைப்பிடமும் உள்ளது. அந்தக் குறிப்பில் தோழர் சண்முகநாதன் வழமையாக அந்த இடதுசாரிகள் கூட்டமைப்புத் தோழர்களிடம் கூறிய
கருத்துக்களையே திரும்பவும் எழுதியுள்ளார்.

ஆனால் அவரது அந்தக் குறிப்பை வெளியிட்ட சில ஊடகங்கள் அவர் சொன்னவற்றுடன் அவர் சொல்லாததையும் பின் இணைப்பாகச் சேர்த்து மோசடி செய்துள்ளன. அப்படிச் சேர்க்கப்பட்ட விடயங்களை எடுத்துப் பார்த்தால் அதை எழுதியவர்களின் கபட நோக்கத்தைப்
புரிந்து கொள்ளலாம். அதில் ஒன்று, ரொட்ஸ்கிசம், நவீன திரிபுவாதம்,  மாஓஇஸம் என்ற சித்தாந்த வேறுபாடுகள் இனி தேவையில்லை என்பது சண்முகநாதனின் கருத்து என்பது. இது
தோழா சண்முகநாதனின் இவை சம்பந்தமான தெளிவான நிலைப்பாட்டை
மறுப்பதாகும். உண்மை என்னவெனில் எல்லா மார்க்சிச – லெனினிசவாதிகளையும் போலவே ரொட்ஸ்கிசவாதத்துக்கும் நவீன திரிபுவாதத்துக்கும் எதிரான போராட்டத்தின் மூலமே மார்க்சிசம் - லெனினிசம் வளர்ச்சி பெற்றது என்பதுதான் .


தோழர் சண்முகநாதனின் அசையாத கருத்தாகும். அதேநேரத்தில் இந்தச் சித்தாந்த வேறுபாட்டை வைத்துக்கொண்டு பொதுவான போராட்டங்களில் மார்க்சிச – லெனினிசவாதிகள் மேற்கூறிய போக்குள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவதை நிராகரிக்கக்கூடாது என்பதுமாகும். (நா.சண்முகதாசனுடன் நாம் முரண்பட்ட விடயங்களில் இதுவும் ஒன்றாகும்) இரண்டாவது விடயம் ; இனிமேலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆயுதப் போராட்டம் மூலம்தான் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது தவறு என்பது தோழர் சண்முகநாதனின் கருத்து என்பதாகும். இதுவும் ஒரு திரிபுபடுத்தப்பட்ட கருத்தாகும். நவீன திரிபுவாதிகள் மக்களின் புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களை முற்றுமுழுதாக நிராகரித்துää வெறுமனே பாராளுமன்றப் பாதையை மட்டும் வலியுறுத்தியபடியால்தான்ää புரட்சிவாதிகள் மார்க்சிசத்தின் அடிப்படை விதிகளில் ஒன்றான ‘சுரண்டும் வர்க்கம் எந்தப் பலாத்காரத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தை நீடித்து வைத்திருக்கிறதோ அதே பலாத்காரத்தைப் பயன்படுத்தியே பாட்டாளிவர்க்கமும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் ’ என்ற கருத்தை வலியுறுத்த வேண்டி வந்தது. ஆனால் தில் நடைமுறை ரீதியிலான விடயம் என்னவெனில் ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் எந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும் என்ற விடயத்தை எப்பொழுதும் மக்களின் எதிரிகள்தான் தீர்மானித்து வந்திருக்கிறார்கள்.

மூன்றாவது விடயம், இலங்கையில் இனி ஒரு புதிய மார்க்சிசக் கட்சியை ஆரம்பிப்பதை விடுத்து இருக்கின்ற கட்சி ஒன்றுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்பது தோழர் சண்முகநாதனின் கருத்து என்பதாகும். இதுவும் மிகவும் தவறானதாகும். தோழர் சண்முகநாதன் இடதுசாரி அரசியலுக்கு வந்தபோது, சர்வதேசரீதியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சித்தாந்த முரண்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிளவு ஏற்பட்டிருந்தது. இரண்டு பிரிவுகளில் சண்முகநாதன்
திரிபுவாதப் பிரிவை நிராகரித்து புரட்சிகரப் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின்னர் அப்பிரிவின் பொதுச் செயலாளராக இருந்த சண்முகதாசன் இடது தீவிர
சந்தர்ப்பவாதப் பாதையைப் பின்பற்றிய காரணத்தால் அவரை நிராகரித்துவிட்டு
கட்சியின் பெரும்பான்மையினர் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி என்ற புதிய கட்சியை 1972இல் உருவாக்கியபோது தோழர் சண்முகநாதனும் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். இருக்கின்ற கட்சி ஒன்றுடன் இணைந்து கொண்டால் போதுமானது என்ற கொள்கையை சண்முகநாதன் பின்பற்றுபவராக இருந்திருந்தால் அன்றே அவர் இந்த பிரிவுகளில் ஒரு நிலை எடுக்காமல் விட்டிருக்கலாம்.

இது சம்பந்தமாக அவரது நிலைப்பாடு கனடாவிலுள்ள தோழர்களுக்கு நன்கு தெரியும். ஒருமுறை இலங்கையிலுள்ள கம்யூனிஸ்ட் அணி ஒன்றுடன் நாம் உத்தியோகபூர்வமாக இணைந்து வேலை செய்தால் என்ன என்ற கேள்வி எழுந்தபோதுää தோழர் சண்முகநாதன்
அதை முழுவதுமாக நிராகரித்தார். அங்குள்ள இடதுசாரிக் கட்சிகளுடன் தோழமைபூர்வமான உறவுகளைக் கொண்டிருப்பதில் தவறில்லை. அது அவசியமானதும் கூட. ஆனால் அவற்றில்
நாம் அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளும் அளவுக்கு இலங்கையில் தற்போதைய சுழ்நிலையில் உண்மையான மார்க்சிச – லெனினிச கட்சி எதுவும் இல்லை என்பதே அவரதும் கனடாவில் வாழ்கின்ற ஏனைய இலங்கைத் தோழர்களதும் நிலைப்பாடு. எனவே தோழர் சண்முகநாதன் கூறியதாகப் பரப்பப்பட்ட கருத்துகள் தவறானவை என்பதே உண்மையாகும்.

இது ஒருபுறமிருக்கää தோழர் சண்முகநாதன் காலமான பின்னர் கனடாவில் இருந்து
வெளிவரும் பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியää பல வருடங்களுக்கு முன்னர் தோழர் சண்முகநாதனுடன் ஒரே அமைப்பில் இருந்த ஒருவர் (பின்னர்  அவர் பிற்போக்கு தமிழ் தேசியவாதத்துடன் கைகோர்த்துச் சென்றுவிட்டார்) சண்முகநாதன் மீது எவரும் செய்யத் துணியாத அபாண்டமான கருத்து ஒன்றை அவர்மீது திணித்து அவர்மீது சேறு பூச
முயன்றிருக்கிறார். அதாவது தோழர் சண்முகநாதன் தன்னுடன் ஒருமுறை கதைக்கும்போது, தமிழீழத்தை ஏற்றுக் கொண்டார் என அந்த நபர் கூறியிருக்கிறார். சண்முகநாதன்
இல்லாதபடியால் இப்படியெல்லாம் அவர் பற்றி எழுதுவதற்கு இப்படியானவர்களுக்குத் துணிவு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயம், தோழர் சண்முகநாதன் ஒருபோதும் தமிழீழம் என்ற கருதுகோளை ஏற்றுக் கொண்டவரல்ல என்பது. அவர் இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேசக் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்த 1975ஆம் ஆண்டுதான் அக்குழு “தமிழ் பேசும் மக்களே தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராகப் போரிடுவீர்!” என்ற வரலாற்று முக்கியத்துவமுள்ள அறைகூவலை விடுத்தது. பின்னர் அதே ஆண்டு அக்கட்சி ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற பரந்த வெகுஜன அமைப்பு ஒன்றை உருவாக்கியதுடன் அதன் முதலாவது பொதுச் செயலாளராக தோழர் சண்முகநாதனை நியமனம் செய்தது. பின்னர் அம்முன்னணியில் இணைந்து வேலை செய்த சில தோழர்கள் முன்னணியில் பெயரை தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ எனப் பெயர் மாற்றம் செய்தனர். அப்பொழுது தமிழகத்தில் தங்கியிருந்த தோழர் சண்முகநாதனுக்கு இது தெரியாது. பெயர் மாற்றம் செய்வதற்காக நடாத்தப்பட்ட மாநாட்டு அறிக்கை கூட இன்னொரு ஈழ விடுதலை இயக்கம் நடாத்தி வந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் மூலம்தான் தோழர் சண்முகநாதனுக்குக் கிடைத்தது!

தோழர் சண்முகநாதனுக்குத் தெரியாமல் பெயர் மாற்றம் செய்துää அவரது பொதுச்
செயலாளர் பதவியையும் இல்லாமல் செய்த சம்பவத்தை விடää முன்னணி தமிழீழம்
என்ற கருத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக விசனமுற்ற தோழர் சண்முகநாதன்ää பின்னர் அந்த முன்னணியுடனான தொடர்புகளை அறுத்துக் கொண்டார். அவர் எப்பொழுதும்
தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் தாரக மந்திரமானää இன்றைக்கும் சரியாகப்
பொருந்தக்கூடிய “தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக” என்ற கருத்திலேயே ஊன்றி நின்றார். அதுமட்டுமல்லää தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை மீண்டும்
புனருத்தாரணம் செய்வது பற்றியும் தோழர்களுடன் கலந்துரையாடி வந்தார். அதற்காக சிறிது காலம் இலங்கையில் சென்று தங்கியிருந்து வேலை செய்யவும் ஆலோசித்திருந்தார். அதுமட்டுமின்றி அவர் கனடாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர் நடைபெற்ற வி.உருத்திரகுமாரனின் ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ’ தேர்தலில் வாக்களிக்கும்படி அவரை உறவினர்கள்நண்பர்கள் எனச் சிலர் வலியுறுத்தியும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

நிலைமை இப்படியிருக்க, அவர் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறுவது எத்தகைய மோசடித்தனம்? எத்தகைய கபடத்தனம்? எத்தகைய சேறு பூசுதல்?

அதுமட்டுமின்றி, அந்தக் கட்டுரையை எழுதிய நபர் தோழர் சண்முகநாதன் கனடாவில் வசித்த காலத்தில் தனது முன்னைய மார்க்சியத் தோழர்களைச் சந்திக்க விரும்பாமல் இருந்தார் என இன்னொரு சரடையும் அவிழ்த்து விட்டுள்ளார். அவர் மார்க்சியத் தோழர்களைச் சந்திக்க விரும்பாமலா அங்கு செயல்பட்டு வருகின்ற இலங்கை இடதுசாரிகள் கூட்டமைப்பில்
அங்கத்தவராக இணைந்து வேலை  செய்தார்? அல்லது அங்குள்ள முற்போக்கு சக்திகளால் நடாத்தப்படுகின்ற ‘வானவில்’என்ற பத்திரிகையின் ஆசிரிய குழு உறுப்பினராகச் செயற்பட்டார்?

இந்த மாதிரிக் கட்டுரைகளை எழுதும் நபர்கள் தமது சீரழிவுகளை நியாப்படுத்த உண்மையான நேர்மையான செயற்பாடுள்ள தோழர் சண்முகநாதன் போன்ற

இந்த இடத்தில் இன்னொரு ஊடக அயோக்கியத்தனம் குறித்தும் பிரஸ்தாபிக்க
வேண்டியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அக்கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஈ.பி.டி.பி. கட்சியின் உள் விவகாரங்களை ஓரளவுக்கு  அறிந்திருந்தவர்களுக்கு அவரது விலகல்
ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பிருந்தே
சந்திரகுமாருக்கும் கட்சித் தலைமைக்குமான இடைவெளி பற்றி பேசப்பட்டு வந்திருக்கிறது.
திரு.சந்திரகுமாரும் தனது விலகல் பற்றி அறிவித்தாரேயொழியää என்ன காரணத்தால்
தான் ஈ.பி.டி.பியை விட்டு விலகுகிறார் எனத் தெளிவாக எதனையும் தனது அறிக்கையில் கூறியிருக்கவில்லை.

ஆனால் மூன்றாவது நபர் ஒருவர் சந்திரகுமார் விலகலுக்கான காரணங்கள் எனச் சொல்லிää ஈ.பி.டி.பி. தலைமையின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கி கொழும்பிலிருந்து வெளிவரும் ‘தமிழ் மிரர்’பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். அக்கட்டுரையை சில இணையத்தளங்களும் மறுபிரசுரம் செய்தன.

எவரும் இப்படியான கட்டுரைகளை எழுதி வெளியிடுவதற்கு இலங்கை போன்ற ஓரளவு
ஜனநாயகம் நிலவும் நாட்டில் சுதந்திரம் உள்ளது. ஆனால் இந்தக் கட்டுரையில்
உள்ள பிரச்சினை என்னவென்றால்ää கட்டுரை எழுதியவரின் பெயர் என
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த பிரபல்யமிக்க ஒரு மனித உரிமை மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஒருவரின் பெயரைப் போட்டதுதான்.
அவரது பெயரில் இந்தக் கட்டுரை வந்ததும் பலருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. ஏனெனில் அந்த மனித உரிமைச் செயல்பாட்டாளருக்கும் தனியான அரசியல் பார்வைää செயல்பாடு எல்லாம் உண்டு. ஈ.பி.டி.பி. கட்சி பற்றியும் பார்வை உண்டு. ஆனால் அவர் இவ்வாறு அரசியல் கட்சிகளை பகிரங்கமாக விமர்ச்சித்து ஒருபோதும் எழுதியவரல்ல.
எழுதக் கூடியவரும் அல்ல. எனவே பலரும் இந்தக் கட்டுரை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் விழித்துக் கொண்ட அவர் தமது பக்கம் பற்றிய நியாயத்தை
வலியுறுத்துவதற்காக சந்திரகுமாருக்குச் சார்பான யாரோ தனது பெயரை நம்பகத்
தன்மைக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டார்.

இந்த விவகாரம் குறித்து தமிழ் மிரர் பத்திரிகையுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்தக் கட்டுரை கிளிநொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிய வந்தது. அதிலிருந்தே இந்தக் கட்டுரை எழுதியவரின் கபட நோக்கம் அம்பலமானது. இன்று இலத்திரனியல் ஊடகங்களில் யாரும் எப்படியும் எழுதலாம் என்ற வரையறை இல்லாத நிலைமை
தோன்றியுள்ள சூழலில் சிலர் அதைத் தமது கீழ்த்தரமான நோக்கங்களுக்காகத்
துஸ்பிரயோகம் செய்கிறார்கள். இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில்
நான் மேலே குறிப்பிட்ட விடயங்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் தம்மை முற்போக்காளர்கள் மாற்றுக் கருத்தாளர்கள் நடுநிலைமையாளர்கள் என்று நாமம் பூண்டவர்கள். வலதுசாரிகளோ மக்கள் விரோதிகளோ இவ்வாறு செய்தால் அது அவர்களது இயல்பு என்று விட்டுவிடலாம்.
ஆனால் தம்மை மக்களுக்குச் சார்பானவர்கள் என்று சொல்லிக்கொண்டு இத்தகைய மோசடிகளில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது.

இப்படியான மோசடியாளர்களை உடனுக்குடன் அம்பலப்படுத்தி மக்கள் முன் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது உண்மையான ஜனநாயக ஊடகங்களின் கடமையாகும். வானவில் ஆனி  2016

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...