இலங்கையிலும் இந்துத்துவாவா?


இந்தியாவின் மத்திய பிரதேச அரசாங்கம் இலங்கையில் இதிகாச கதாநாயகன் ராமனின் மனைவி சீதைக்கு பிரமாண்டமான அளவில் ஒரு கோவில் எழுப்பவுள்ளது. இதற்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.
(ஏற்கெனவே மலையகத்தில் சீதைக்கு ஒரு கோவில் இருக்கிறது) இந்தக் கோவில் அமைப்பதற்கான வேண்டுகோள் 2012இல் அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவின் சான்சிப் பிரதேசத்தில் பௌத்த கற்கைகளுக்கான
பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்குச் சென்ற வேளையில்
மத்திய பிதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகானால்  விடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர்
அவர் இலங்கைக்கு விஜயம் செய்து கோவில் அமைப்பதற்கான இடத்தைப் பார்த்துச் சென்றிருந்தார்.

பெரும்பாலும் சீதை தீக்குளித்ததாகச் சொல்லப்படும் இடத்திலேயே இக்கோவில் அமையவுள்ளது. இந்தக் கோவில் அமைக்கும் விடயத்தில் இந்துத்துவ தலைமை வெறி அமைப்பான ஆர்எஸ்எஸ்சின் தலைவர் ராம் மாதவ் பெரும் அக்கறை காட்டுவதாகத் தெரிய வந்துள்ளது. இலங்கையிலும் இந்துத்துவ வெறியைக் கிளறுவதற்கான அத்திபாரமோ?

மூலம் : வானவில் ஆணி 2016

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...