அர்ச்சுனா மகேந்திரன் விலகுவாரா? விலக்கப்படுவாரா? பாதுகாக்கப்படுவாரா? -பாரி


சர்ச்சைக்குரிய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ச்சுனா மகேந்திரனின் பதவிக்காலம் யூன் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன் பின்னர் அவரது பதவிக் காலத்தை நீடிக்கக்கூடாது என்ற கோரிக்கை அரசாங்கத்தை நோக்கிப் பலமாக விடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் வரலாற்றில் இப்படியான பலமான கோரிக்கை வேறு எந்தவொரு
அரச நிறுவனத் தலைவருக்கெதிராகவும் விடுக்கப்பட்டது கிடையாது. மகேந்திரனுக்கு எதிராக இப்படியான ஒரு கோரிக்கை விடுக்கப்படுவதற்குப் பிரதான காரணம்ää அவர் மத்திய வங்கி பிணை முறி வழங்கிய விடயத்தில் தனது பதவியைப் பயன்படுத்தித் தனது மருமகனுக்கு சலுகை வழங்கினார்


என்பதாகும். அதைவிட மேலும் பல குற்றச்சாட்டுகளை சிவில் சமூகம் மகேந்திரன் மீது சுமத்தி இருக்கிறது. இப்படியான குற்றச்சாட்டுகள் வந்தவுடனேயே மகேந்திரன் நேர்மையான மனிதராக இருந்தால் பதவியைத் துறந்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர்
குற்றச்சாட்டுகளை மறுத்துக்கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்க முயல்வதுடன்ää ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரைப்
பாதுகாப்பதற்குப் படாதபாடுபடுகின்றனர்.

மகேந்திரனைப் பதவி விலகும்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மட்டும் கோரவில்லை. அப்படி அவர்கள் மட்டும் கோரியிருந்தால் அது அரசியல் நோக்கம் கொண்டது என இலேசாகத் தட்டிக் கழித்திருப்பார்கள். அவரைப் பதவி விலகும்படி கோருபவர்களில் சிவில் சமூகம் முக்கியமானது. அதுமட்டுமல்லää அரசாங்கத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் அமைச்சரும்ää கட்சியின் செயலாளருமான எஸ்.பி.திசநாயக்க உட்படப் பல அமைச்சர்களும் கூடக் கோரி இருக்கின்றனர். அத்துடன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அவருக்குப் பதவி நீடிப்பு வழங்கக்கூடாது எனக் கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி கட்சியின்
தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருக்கிறது.

தூய்மையான ஆட்சியை மக்களுக்கு வழங்குவதே தனது ஒரேயொரு நோக்கம் என்று சொல்லி வரும் ஜனாதிபதி மைத்திரிää மக்களின் கோரிக்கைக்கும்ää தனது சொந்தக் கட்சியினரின் வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து மகேந்திரனுக்குப் பதவி நீடிப்பு வழங்காமல் விடுவாரா அல்லது தனது பதவியைப் பாதுகாப்பதற்காக ஊழல்கார ஐக்கிய தேசியக்  கட்சியினருடன் கைகோர்ப்பாரா என்பது யூன் மாதக் கடைசியில் தெரிந்துவிடும். இன்றைய மைத்திரி –
 ரணில் அரசாங்கம் ஊழலை ஒழித்து நல்லாட்சியை வழங்கப் போவதாகச் சொல்லித்தான் பதவிக்கு வந்தது.

ஆனால் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய வங்கி ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யாது அவரது பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்ய அனுமதித்துள்ளதுடன் அவருக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி பதவி நீடிப்பு வழங்கவும் முயற்சிக்கின்றது. 
அதுமட்டுமல்லää மகிந்த தனது குடும்பத்தவர்களுக்கு அரச உயர் பதவிகளை வழங்கினார் எனக் குற்றஞ்சாட்டிய இன்றைய ஆட்சியாளர்கள் தமது உறிவினர்கள் பலரை வெளிநாட்டுச் சேவைகளுக்கும் அரச உயர் பதவிகளுக்கும் நியமித்து வருகின்றனர்.

மகிந்தவின் 10 வருட ஆட்சியில் நடந்தாகக் கூறப்படும் ஊழல்ää மோசடி அதிகாரத் துஸ்பிரயோகம் என்பனவற்றைப் பட்டியல் இடுபவர்கள் தமது ஒன்றரை வருட ஆட்சியில்
நடந்த சீர்கேடுகளை அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்ää தாம் கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் விடயம் விளங்கும்.
-
-பாரி

வானவில் (16.06.2016)

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...