தலைவர் பதவியை இராஜினாமா செய்து தான் ஒரு ஜனநாயகவாதி என்பதை நிரூபித்தவர்தான் தோழர் சோமவன்ச அமரசிங்க


வீ.ஆனந்தசங்கரி     
எனது மிக நீண்டகால நண்பர்களில் ஒருவரான சோமவன்ச அமரசிங்கவின்  மரண somawansaசெய்தி எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அவர் ஆரம்பகாலங்களில் தமது கட்சியை பல வழிகளிலும் உயர்த்துவதற்கு காரணமாக இருந்தவர். ஜே.வி.பி யின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சியை ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்புவதற்கு அரும்பாடுபட்டவர்.  ஜே.வி.பி யின் அரசியல் குழு உறுப்பினர்கள் 14 பேரில் 13 பேர் கொல்லப்பட இவர் மட்டுமே உயிர் தப்பினார் என எண்ணும்போது இவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அளவிட்டு கூற முடியாது. அந்த துயர சம்பவத்துக்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டே தமது கட்சியை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினார். எமதுஇனப்பிரச்சினை சம்பந்தமாக நான் அவருடன் பல முறை கலந்துரையாடியுள்ளேன்.இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜே.வி.பி யின் பங்களிப்பின்றி தீர்வு காண முடியாதென்பதை அவரிடமும் கூறியுள்ளேன்.

கிளர்ச்சியாளர்களின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த பின்பும் அந்த அமைப்பை ஜனநாயக ரீதியில் எப்படி கட்டியெழுப்பலாம் என்ற பாடத்தை இவரிடம்; இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். 20 வருடங்களாக  கட்சியின் தலைவராக இருந்து கட்சியை கட்டியெழுப்பியவர் கட்சியில் தனக்கெதிராக சர்ச்சை கிளம்பியபோது தலைவர் பதவியில்  இருந்து இராஜினாமா செய்து தான் ஒரு ஆயுதப் போராளி மட்டுமல்ல மிகப்பெரிய ஜனநாயகவாதி என்பதையும் நிரூபித்தவர். அண்மையில் நான் சந்தித்தபோது கூட இனப்பிரச்சினை சம்பந்தமான தீர்வில் அக்கறையுடன் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருந்தவர்.

நாட்டிற்குத் தேவையான ஒரு நல்ல வழிகாட்டியை நாம் இழந்துவிட்டோம். தோழர் சோமவன்ச அமரசிங்க அவர்களின் மறைவு எமது தேசத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரின் உற்றார் உறவினர்களுக்கும், அவரின் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவைனை பிரார்த்திக்கிறேன்.
வீ.ஆனந்தசங்கரி    
Source:  http://www.thenee.com/170616/170616-1/170616-2/170616-3/170616-3.html
  செயலாளர் நாயகம் - த.வி.கூ

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...