“இரத்தக்கண்ணீர் வடித்த சம்மந்தன்” சம்மந்தன் !" தோழர் கா .வீரகத்தி


8697

காலங்காலமாக சுதந்திர தின வைபவங்களை, குடியரசு தின வைபவங்களை பகிஷ்கரிக்குமாறும் கறுப்புக்கொடி ஏற்றுமாறும் தேசிய கொடிகளை எரிக்குமாறும் தமிழ் மக்களை தூண்டியவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.
அமைச்சர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொண்டபோதெல்லாம் கறுப்புக்கொடி காட்டி ய துடன் இளைஞர்களையும் தூண்டிவிட்டவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.
தமிழ் மக்கள் மத்தியிலே ,குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தியிலே அரச விரோத, சிங்கள விரோத கருத்துக்களை ஆழமாக பதித்தவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.
தமது அரசியல் எதிரிகளை ,அரசியலில் தமக்கு ஜாரியாக இருந்தவர்களை துரோகிகள் என வரையறுத்தவர்களில் ஐயா சம்மந்தனும் அடங்குவார்.


அத்துடன் மட்டும் நிற்காது, “துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லை”  என மேடைகளிலே பகிரங்கமாக முழங்கினார்கள் .அதாவது, இளைஞர்களே !துரையப்பா போன்றவர்களை கொன்று தள்ளுங்கள்! என மறைமுகமாக உத்தரவிட்டதன் மூலம், தமிழ் அரசியலிலே வன்செயலிற்கு வித்திட்டவர்களில் ஐயா சம்மந்தனும் ஒருவர்.

மாறி மாறி வந்த அரசாங்கங்களின் மதி கெட்ட தனங்களும், சம்மந்தன் போன்றோர் வித்திட்ட வன்செயலும் , எத்தனையோ உயிர்களை காவு கொண்டது .ஐயா சம்மந்தனின் குடும்பமோ இந்தியாவில் மாளிகைகளிலே ! இவர்களால் தூண்டி விடப்பட்டவர்களோ கல்லறைகளிலே!
கடந்த கால வரலாறு இவ்வாறு இருக்க , அண்மையிலே நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கெடுத்துள்ளார் ஐயா சம்மந்தன். நல்ல விடயம். இலங்கை எமது நாடு, எனவே இலங்கையின் சுதந்திர தினத்தில் கட்டாயம் பங்கெடுத்திருக்க வேண்டும். ஐயா சம்மந்தன் அவர்கள் பங்கெடுத்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஆவது ஐயா சம்மந்தன் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தமிழர் பிரச்சினையானது படிப்படியாக தீர்க்கப்பட வேண்டும் என எண்ணுபவர்களுக்கு, தமிழிலே தேசியகீதம் பாடியமையானது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அப்படியானால் எங்கள் சம்மந்தன் ஐயா அவர்களுக்கு எதற்காக கண்கள் குளமாகியது ? இரத்தக்கண்ணீர் படத்திலே, எம் .ஆர். ராதா எவ்வாறு தனது கடந்த கால தவறுகளை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தாரோ, அவ்வாறு தான் ஐயா சம்மந்தனும் வடித்தாரோ என பலரையும் எண்ண தோன்றுகிறது.

“தமிழ் இளைஞர்கள் மத்தியில் வன்செயலை தூண்டினேன் ! வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக இனக்குரோதத்தை வளர்த்தேன் ! சந்திரிக்கா அம்மையாரிடம் குண்டுதுளைக்க முடியாத வாகனத்தையும், பாதுகாப்புக்கு விசேஷ அதிரடிப்படையையும், கோடிக்கணக்கான பணத்தையும் பெற்ற நான், சமஷ்டிக்கு ஒவ்வான சந்திரிக்காவின் தீர்வை குழப்பியடித்த தன்மூலம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தேன்!!

எனது மக்களின் அழிவிற்கு நானும் காரணமாக இருந்தேன் ! தமிழ் மக்கள் மத்தியில் அரச விரோத பேச்சுக்களை முழங்கிய அதே வேளை, ஆட்சியிலிருந்த அரசுகளுடன் நல்லுறவை பேணி சலுகைகளை பெற்றேன் !

எனது துரோகத்திற்கு மன்னிப்பு ஏது ? எனக்கு நிம்மதி ஏது ? எனக்கு நிம்மதி ஏது ?
பிரபா ! நீ சென்றுவிட்டாய் , இப்போ நான் துரோகிப்பட்டம் பெற்று இங்கிருந்து அழுந்துகிறேன்!”


Source: salasalappu

No comments:

Post a Comment

Oxfam report “Inequality Kills”: Billionaires racked up wealth while millions died during the pandemic by Kevin Reed

  The global charity Oxfam released a briefing on Monday entitled “Inequality Kills” in advance of the World Economic Forum State of the Wor...