ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு, திறமையாக தீட்டப்பட்ட திட்டமா?


இறுதியாக அச்சில் வார்க்கப்பட்டுவிட்டது. பல மாதங்களாக இடம்பெற்ற ஊகங்கள் மMahinda in meetingற்றும் முடிவெடுக்காமல் காலம் கடத்தியதின் பின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தனது ஐம்பது வருட அரசியல் வாழ்வில் ஒருபோதும் மேற்கொண்டிராத ஒரு செயற்பாட்டினை நோக்கி நடைபோடுகிறார் போலத் தெரிகிறது : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (எஸ்.எல்.எப்.பி) இருந்து பிரிந்து செல்ல முயலுகிறார்.
கடந்த வாரம் பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் ஒரு அலுவலகத்தை திறந்த ராஜபக்ஸவின் முடிவு அவரது அரசியல் வாழ்வின் அடுத்த கட்டத்துக்கான சமிக்ஞை என்றே தோன்றுகிறது. அடுத்த சில வாரங்களில் ஒரு தனியான அரசியல் அமைப்பு உருவாவதற்கான சாத்தியம் உள்ளது, ஆரம்பத்தில் உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் நோக்கத்தை கொண்டது, ஆனால் முரண்பாடாக தேர்தல்களுக்கான அழைப்பு இன்னும் விடப்படவில்லை. இந்த தொடர் நிகழ்வுகள், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததை தொடர்ந்து ராஜபக்ஸ ஓரங்கட்டப்பட்டதின் விளைவாக ஒன்றின் பின் ஒன்றாக நடந்தேறியவை. எனினும் ஆரம்பத்தில் குறைந்தபட்சம் ஜனாதிபதி தேர்தல் முடிந்த உடனேயே அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடையே ஒரு நம்பிக்கை நிலவியது.

தோல்வியடைந்த வேட்பாளர்கள்
எப்படியாயினும் கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் முயற்சி செய்தபோதிலும் அது நடைபெறவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிறிய கட்சிகள் ஜனாதிபதியை விட ராஜபக்ஸதான் கூட்டமைப்பின் உண்மையான தலைவர் என்ற தோற்றப்பாட்டை மேலுயுயர்த்தியதுடன் மற்றும் ராஜபக்ஸ அவர்களே பொதுத் தேர்தல் மூலம் பாராளுமன்றத்துக்குள் வருவதற்கு திட்டமிட்டதுடன் மற்றும் அவர்தான் பிரதமமந்திரி வேட்பாளர் என்று உறுதிப்படுத்தும் விதமாக மறைமுகமாக ஆதரவு அழைப்புக்களை விடுத்ததும் ஜனாதிபதியை சந்தோஷப்படுத்தவில்லை.

அது நன்கு திட்டமிட்ட மூலோபாய விளைவுகளுக்கு மாறாக மனக்கிளர்ச்சியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தொடர் முடிவுகளை மேற்கொள்ள வழி வகுத்தது. ஜனாதிபதி சிறிசேன அவரது சொந்த கட்சிக்காரர்களாலேயே முற்றுகையிடப்பட்டதும், அவர் ராஜபக்ஸவை பிரதமராக தான் நியமிக்கப் போவதில்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார், அதன்பின் தேசியப் பட்டியல் ஊடாக ராஜபக்ஸவின் வேட்பாளர்களை பாரளுமன்றத்துக்கு நியமிப்பதற்கு மாறாக, தனது விசுவாசிகளை நியமனம் செய்தார், அவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வியடைந்த வேட்பாளர்கள்.
அப்போது முதல் சிறிசேன – ராஜபக்ஸ உறவு ஒரே மாதியாக ஒருபோதும் இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து எஸ்.எல்.எப்.பி இரண்டு முகாம்களுக்கும் இடையே பிரிவினை வரிகள் காணப்பட்டன, கட்சியின் உயர் பீடத்தை சேர்ந்தவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை இந்தப் பிளவு ஆழமாக விரிவடைந்திருந்தது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தகுதியினால் ஜனாதிபதி சிறிசேன, கட்சி அலுவலர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் மிகவும் முக்கியமாக கட்சியின் தீர்மானம் மேற்கொள்ளும் மத்திய குழுவின் பெரும்பான்மையான அங்கத்தினர்கள், போன்ற முக்கிய கட்சிப் பிரமுகர்களின் விசுவாசத்திற்கு தலைமையேற்றுள்ளார்.

ராஜபக்ஸ முகாம்
ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கத்தில் பதவிகள் வகிக்கும் பிரதி அமைச்சர்கள் குழுவொன்று இன்னமும் ராஜபக்ஸவின் முகாமிலேயே உள்ளனர். அதன் காரணமாக அவர்களை காலப் போக்கில் தன்பக்கம் திருப்பலாம் என்கிற நம்பிக்கையினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஜனாதிபதி கைவிட்டுள்ளார். அப்படி இருந்த போதும், யோசித்த ராஜபக்ஸ வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டதுடன், இந்த பிரதி அமைச்சர்களில் சிலருக்கு ராஜபக்ஸவுக்கு ஆதரவாக இணக்கமற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் தைரியம் வந்துள்ளது. இது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியை நிர்ப்பந்திப்பதற்கு ஏற்ற ஒரு முக்கியமான கருப்பொருளாக அமையலாம்.
அது அப்படி இருந்தாலும், ராஜபக்ஸ முகாம் தனக்கு மக்களின் ஆதரவு மற்றும் கட்சியின் வலையமைப்பில் உள்ள அடிமட்டத்தினரின் ஆதரவு இருப்பாக கோரிக்கை விடுகிறது. இந்தக் கோரிக்கை நியாமானது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு சில கூறுகள் உள்ளன. முதலாவதாக ராஜபக்ஸவின் ஈர்க்கும் தன்மை மற்றும் எளிமையான நடைமுறை, மக்களிடம் நட்பு பாணியிலான பொதுசன தொடர்புகள் என்பன வெகுஜனங்களை பெரிதும் பிரியப்படுத்தியுள்ளன, விசேடமாக எஸ்.எல்.எப்.பி தலைவராக அவர் நீண்டகாலம் பதவி வகித்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமாக உழைத்துள்ளார்.

இரண்டாவதாக அவர் பதவியில் இருந்த காலத்தில் அடிமட்டத்தினரிடையே ஒரு விசுவான வலையமைப்பை ராஜபக்ஸ அயராது உழைத்து வளர்த்திருந்தார், அதுமட்டுமன்றி அவர் கீழ் மட்ட அரசியல் முறையான உள்ளுராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை பதவியேற்க வைப்பதிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தார். இந்தப் பிரதிநிதிகள் தங்கள் அரசியல் வாழ்க்கையில் ராஜபக்ஸவுக்கு பெரிதும்  கடன்பட்டிருப்பதாக அவருக்கு சத்தியம் செய்து கொடுக்கவும் மற்றும் அவருடன் சேர்ந்து போராடாவோ அல்லது அவருடன் சேர்ந்து வீழ்வதற்கோ தயாராக உள்ளார்கள்.

ஆகவே எப்பொழுதும் மதிநுட்பமாகச் செயல்படும் அரசியல்வாதியான ராஜபக்ஸ உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள் என்கிற படையின் ஆதரவு தனக்கு உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தார், எனவே வரப்போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் வடிவத்தில் தனது வலிமையான தேர்தல் செயல்திறனை விளக்குவது தனக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு என அவர் கருதுகிறார். உண்மையில் ராஜபக்ஸ முகாமில் உள்ளவர்களின் மனநிலை உற்சாகமாகவே உள்ளது, மற்றும் அதேவேளை எஸ்.எல்.எப்.பி யில் ஏற்படும் எந்தப் பிளவும் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு (யு.என்.பி) மட்டுமே உதவப் போகிறது எனபதை உணரவும் அவர்கள் தயாராகவே உள்ளார்கள், பிரதான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை தாங்கள் வெற்றி கொண்டு அதை மூன்றாவது இடத்துக்கு தள்ளிவிட முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். காலமும் மற்றும் இறுதிப் பரீட்சையும் - தேர்தல்கள் - மட்டுமே அத்தகைய  நம்பிக்கை வீண்போகவில்லை என்பதைச் சொல்ல வேண்டும்.

இந்த கணக்குக்கூட்டல் காரணியில் மற்றொரு பிரச்சினையும் விளையாட்டுக்கு தயாராகி வருகிறது என்பதை பலரும் மறந்துவிட்டார்கள்: அதுதான் தேர்தல்கள் முறை. அடுத்த தேர்தல்கள் பிரத்தியேகமாக முற்றிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடக்கப் போவதில்லை, ஆனால் அது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் மற்றும் தொகுதி முறை என்பனவற்றுக்கு இடையேயான ஒரு கலப்பு முறைத் தேர்தலாக இருக்கப் போகிறது. இந்த முறையின்படி உயர்ந்தபட்ச எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு அதன் காரணமாக ஸ்திரமான பெரும்பான்மையை ஒரு உள்ளுராட்சி அங்கத்தில் கொண்டிருப்பதற்கு அனுமதி வழங்குகிறது, இது ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் ஒற்றைப் பெரிய கட்சியாக களமிறங்கினால் திரும்பவும் அவர்களுக்குச் சாதகமாகச் செல்லக்கூடிய ஒரு காரணியாகும்.

ராஜபக்ஸ பிரிவு உள்ளுராட்சி தேர்தல்களை ஒரு அடிக்கல்லாகப் பயன்படுத்தி திரும்பவும் அதிகாரத்துக்கு வருவதற்கு முயற்சிக்கிறது என்றால் அவர்கள் பல தடைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். வெகு சமீபத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி சிறிசேன வெகு தெளிவாக விளக்கியிருந்தது, அதிருப்தியாளர்களை கையாளும் விடயத்தில் இதே மட்டத்திலான சகிப்புத் தன்மையை தான் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதில்லை மற்றும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ப்படும் என்று. எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேற்றல்களை நெய்வதற்கு தறிகள் தயாராக உள்ளன.

எஸ்.எல்.எப்.பி (எஸ்) மற்றும் எஸ்.எல்.எப்.பி (எம்) பிரிவுகள்
அத்தகைய நடவடிக்கைகள் ஆரம்பத்தில் ராஜபக்ஸ பிரிவினருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து அவர் பக்கம் சாய்ந்துள்ள உள்ளுராட்சி மன்ற அங்கத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படலாம். அதன்பின்னர் சவுக்கடி அதிருப்தி பிரதி அமைச்சர்கள் மீது விழலாம். அதுதான் ராஜபக்ஸவுக்கு நடக்கப்போகும் உண்மையான பரீட்சை: ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மற்றும் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதையும் எதிர்கொள்ளும் அதேவேளை தன்னுடன் தொடர்ந்து இருக்கப் போகிறவர்கள் யார் என்பதை ராஜபக்ஸ தீர்மானிக்கும் தருணம். உண்மையில் இதற்கான சாத்தியத்தை ராஜபக்ஸ ஏற்கனவே எதிர்பார்த்துள்ளதாகத் தெரிகிறது, ஏனென்றால்; புதிய கட்சியை உருவாக்குவதை நியாயப்படுத்துவதற்காக “எனது விசுவாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டால் அவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டுமே” என்று அவர் கேட்கிறார்.
இத்தகைய நெருக்கடிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒன்றும் புதியதல்ல. 70களின் பிற்பகுதியிலும் மற்றும் 80களின் ஆரம்பத்திலும் இது நடந்துள்ளது, எஸ்.எல்.எப்.பி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் யு.என்.பியின் கைகளினால் பாரிய தோல்வியினைச் சந்தித்து மற்றும் அதைத்தொடர்ந்து திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்ட பொழுது, கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரிபால சேனநாயக்கா பெறுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை திருமதி.பண்டாரநாயக்கா எதிர்க்கவேண்டியிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எஸ்.எல்.எப்.பி (எஸ்) மற்றும் எஸ்.எல்.எப்.பி (எம்) என இருபிரிவாக பிளவடைந்தது மற்றும் டார்லி வீதியில் இருந்த கட்சியின் தலைமைச் செயலகத்தைக் கைப்பற்றுவதற்கு இரு குழுவினரிடையேயும் சட்டப் போராட்டமும் இடம்பெற்றது.

இதேபோல 90களின் ஆரம்பத்தில் பண்டாரநாயக்கா உடன் பிறப்புகளான அனுர மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரிடையே கட்சித் தலைமைக்கான சச்சரவு இடம்பெற்றது. கட்சி எதிர்கட்சியில் இருந்தபோது அனுர நீண்டகாலமாக அதற்காக கடுமையாக உழைத்துள்ளதினால் தனது கோரிக்கையை முன்வைத்தார், அதேவேளை சந்திரிகா ஸ்ரீலங்கா மகாஜனக் கட்சியை நிறுவுவதற்காக தனது கணவர் விஜய குமாரதுங்கவுடன் கட்சியை விட்டு வெளியேறியிருந்தார் மற்றும் விஜய கொல்லப்பட்டதுடன் தனது இரண்டு இளம் பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

இருந்தபோதும் திருமதி.பண்டாரநாயக்க அந்தச் சண்டையில் சந்திரிகா குமாரதுங்க வெற்றி பெறுவதையே விரும்பினார், ஆனால் அந்தச் சண்டையில் மகிந்த ராஜபக்ஸ அனுரவின் பக்கமே உறுதியாக நின்றார், குமாரதுங்க மற்றும் ராஜபக்ஸ இடையேயான கோபம் ஆரம்பமாவதற்கு அதுதான் பல வழிகளிலும் காரணமாக இருந்தது. கட்சித் தலைமைப் பதவி குமாரதுங்காவிடம் சென்ற பின்னர் விரக்தியில் அனுர எஸ்.எல்.எப்.பியைவிட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து ஜனாதிபதி டி.பி. விஜயதுங்காவின் கீழ் ஒரு குறுகிய காலம் அமைச்சராகச் சேவையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள்
எஸ்.எல்.எப்.பியில் உள்ள நெருக்கடிகள் பெரிய அளவிற்கு இல்லாவிட்டாலும் சமமான விகிதாச்சாரத்தில் உள்ளது என்பதில் ஐயமில்லை. அதேவேளை கட்சியில் உள்ள விரிசல்கள் ஓரளவு வெளிப்பட்டது 2015 ஜனவரியில் ராஜபக்ஸ தோல்வியடைந்த சில காலத்துக்குள்தான், ஜனாதிபதி சிறிசேன கட்டுப்பாட்டை மேற்கொள்வதில் காட்டிய அலட்;சியம் மற்றும் ராஜபக்ஸவிற்கு  தனது வீழ்ச்சியினால் ஏற்பட்ட தயக்கம் உட்பட சூழ்நிலைகளின் ஒருங்கிணைப்பு காரணமாகவே கட்சி ஒருமித்து இயங்கி வருகிறது. விரைவிலேயே அத்தகைய தடைகள் ஒதுக்கித் தள்ளப்படும். மூத்த எஸ்.எல்.எப்.பி யினர் அதேபோல கட்சிக்கு சார்பாக நிற்கும் வாக்காளர்கள், கட்சியானது கடந்தகால நெருக்கடிகளில் இருந்து மீண்டு 2001ல் ஒரு குறுகிய காலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்த காலத்தை தவிர கிட்டத்தட்ட 1994 முதல் 2015 வரையான காலம்வரை கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்தது என்கிற உண்மையை மனதில் கொள்ளவேண்டும். இன்றுகூட பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்.

நல்லதுக்கோ அல்லது கெட்டதுக்கோ தெரியவில்லை, ஒரு பிரிவினர் தோல்வியை ஒப்புக்கொள்ளாத வரை எஸ்.எல்.எப்.பி ஒரு பெரிய பிளவை எதிர்நோக்கும் ஒரு விளிம்பில் நிற்கிறது – மற்றும் இந்தக் கட்டத்தில் அது அசாத்தியம். இந்த அரசியல் அதிர்வுகள் யாவும் தங்களின் முடிவை அடைந்தால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழு நேரமும் அதன் பழைய மகிமையை திரும்பப் பெற முடியும் ஏனென்றால் ஸ்ரீலங்காவுக்குத் தேவை ஒரு வலிமையான அரசாங்கம் மட்டுமல்ல ஒரு வலிமையான எதிர்க்கட்சியும் கூடத்தான்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
மூலம் தேனீ 
http://www.thenee.com/190216/190216-1/190216-2/190216-2.html 

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...