நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் புலிகளைப் பற்றி என்ன சொல்ல வருகிறார்?- சுப்பராஜன் வானவில், மாசி 2016

இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்மின்
(Eric Solheim )நடவடிக்கைகளைபார்க்கும்போது, மனிதருக்கு இலங்கை பற்றி
இலங்கையருக்கே இல்லாதளவு அக்கறை  நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் தடை விதிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்த இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
லக்ஸ்மன் கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே நான் கருதுகிறேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அரசியல்
தலைவர்களும் இராஜதந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடுமுறைதான் முக்கிய காரணம் என்ற போதிலும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமரை புலிகள் படுகொலை செய்ததையும் இந்தத் தடையின் போது கனடிய அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்கும் என நம்பலாம். புலிகளைப் பல நாடுகள் தடை செய்த பின்னரும், அந்தத் தடை செய்யப்பட்ட நாடுகளிலேயே புலிகள் அடாவடித்தனங்களிலும், கட்டாய பண
வசூலிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அவர்களை இந்த நாடுகள் தடை செய்யாமல் வந்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.


ஏனெனில், கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு வைபவத்தில் அவர்
உரையாற்றுகையில், ‘தமிழர்களின் உரிமைகளைச் சிங்களவர்கள் தாங்களாகவே ஒருபோதும் தர மாட்டார்கள்’ எனக் கூறியதாக ஒரு செய்தி வெளியானது. அதாவது ‘
பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் தரமாட்டார்கள், போராடித்தான் பெற வேண்டும்’ எனவும் இதை அர்த்தப்படுத்தலாம்.
தற்போது புலிகளால் கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், புலிகளுக்கெதிரான போரில் வேறெவரையும் விடக் கூடுதலான இராஜதந்திர வெற்றியை இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஈட்டித் தந்தவருமான லக்ஸ்மன் கதிர்காமர் மீது
அவதூறான குற்றச்சாட்டொன்றை சொல்கெய்ம் முன்வைத்திருக்கிறார்.


யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘உதயன்’ 2016 ஜனவரி 14ஆம் திகதி நாளிதழில் பின்வருமாறு அவர் கூறியதாக இவ்வாறு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது:
“ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டமை சமாதானத்தை ஏற்படுத்த தடையாக இருந்தது. இந்த  செய்வதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை காண
வழியேற்பட்டிருக்கும்”.

சொல்கெய்மின் கருத்தை ஆராயப் புறப்படுவதற்கு முன்னர் ஒரு கருத்தைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். அதாவது, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா,
அவுஸ்திரேலியா, கனடா உட்படப் பல நாடுகள் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்திருந்த நேரத்தில், எரிக் சொல்கெய்மின் நோர்வே மட்டும்
அவ்வாறு (இன்றுவரை) தடை செய்யவில்லை. சொல்கெய்மின் தற்போதைய கூற்றைப் பார்க்கும் போது, நோர்வே அப்படித் தடை செய்யாமல் விட்டதற்கு இவர்தான்
காரணகர்த்தாவாக இருந்திருப்பாரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

சொல்கெய்மின் கருத்துப்படி கனடாவைத் தவிர மற்றைய நாடுகள் புலிகளைத் தடை செய்வதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் முக்கிய பங்கு ஆற்றியிருந்தார் என்பது உண்மையே. கனடா புலிகளைத் தடை செய்த நேரத்தில் லக்ஸ்மன் கதிர்காமரைப் புலிகள் தீர்த்துக்
கட்டியிருந்தனர். புலிகளையும், கனடாவில் இயங்கிய உலகத் தமிழர் அமைப்பையும் கனடிய அரசாங்கம் தடை செய்ததிற்கு அந்த இரு அமைப்புகளும் கனடாவில் செயற்பட்ட
விட்டிருந்தால் என்னென்ன ‘கூத்துகள்’ஆடியிருப்பார்கள் என்பதை ஒருவர்
எண்ணிப் பாhத்தாரென்றால், சொல்கெய்மின் கருத்தின்; விபரீதத்தைப் புரிந்து கொள்ளலாம்.


ஆனால் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட சொல்கெய்மிக்கு மட்டும் இந்த உண்மை தெரியாமல் போனது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது. அதாவது, இலங்கையை பாசிசவாதப் புலிகளிடமிருந்து மீட்பதற்காக இலங்கையின் தேசபக்த சக்திகள் நடாத்திய போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய லக்ஸ்மன் கதிர்காமரை சொல்கெய்ம் குறை கூறுவது என்பது, அவரை மட்டும் அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, முழு
இலங்கையர்களையே அவமதிப்பதாகும். ஆனால், அவர் சொல்வது போல கதிர்காமரின் நடவடிக்கைகளால் புலிகள் கோபம் அடைந்தார்கள் என்பதும், அதனால் அவரைக் கொலை
செய்தார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் மீது அவர்கள் ஏன் கோபம் கொண்டார்கள்? சொல்கெய்ம் சொல்வது போல சமாதான முயற்சிகளுக்கு அவர் இடையூறாக
இருந்தார் என்பதற்காகவா? இல்லவே இல்லை. தமது காட்டுமிராண்டித்தனமான யுத்தத்திற்கும், பாசிச நடவடிக்கைகளுக்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில்
இருந்து தாராளமாகப் பணமும், ஏனைய உதவிகளும் பெறுவதற்கு கதிர்காமர் தடையாக இருக்கிறார் என்றே அவர்  மீது புலிகள் சினம் கொண்டனர்.


இதுதான் உண்மை. ஆனால் சொல்கெய்மோ பிரபாகரனை ஒரு சமாதான விரும்பியாகக் காட்ட முனைகிறார்! கதிர்காமர் புலிகளைத் தடை செய்வதற்கு நடவடிக்கை
எடுத்திருக்காவிட்டால், பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்;த்தைகளுக்கு வந்திருப்பார் என்ற கருத்துப்படச் சொல்கிறார்!! ஆனால் உண்மை என்ன? இந்திய முயற்சியால் இலங்கையின்
நான்கு போராளிக் குழுக்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுத்தப்பட்டு, திம்புவில்
அந்த நான்கு இயக்கங்களும் இலங்கை அரசுடன் பேசுவதற்கும் இந்தியா
ஏற்பாடு செய்தது. ஆனால் புலிகள் என்ன செய்தார்கள்? ஐக்கியத்தை விரும்பிய மற்றைய மூன்று இயக்கங்களையும், அதன் தலைவர்கள் போராளிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக
இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்தார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு தன்னால்
முடியுமான அளவில் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக, அப்போதைய அமெரிக்க சார்பு வலதுசாரி ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை அடிபணிய வைத்து, இந்திய
-
 இலங்கை உடன்படிக்கையை ஏற்படுத்திய இந்திய அரசின் சமாதானப் படையை எதிர்த்துப்
புலிகள் நம்பிக்கைத் துரோகப் போர் செய்ததுடன், அந்நாட்டின் தலைவர் ராஜீவ் காந்தியையும் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர். ஒருவேளை ராஜீவின் தயார்
இந்திரகாந்தி, சீக்கியப் பயங்கரவாதிகளால் முன்னரே கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால், அவரையும் புலிகளே தீர்த்துக்கட்டியிருப்பார்கள். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்ததற்காக, ‘வளர்த்த கடா மார்பில் பாய்வது போல’ தம்மை வளர்த்துவிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களான அமிர்தலிங்கம்,
யோகேஸ்வரன் போன்றோரையும், எண்ணற்ற இதர தமிழ் தலைவர்களையும் கூட புலிகள் தீர்த்துக் கட்டினர். ‘தந்தை செல்வா’ என தமிழர்களால் அழைக்கப்படும்
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அன்றைய காலகட்டத்தில் உயிருடன் இருந்திருந்தால், அவரையும் பிரபாகரன் தீர்த்துக் கட்டியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.


பின்னர் சந்திரிக குமாரதுங்க ஜனாதிபதியானதும், ஜே.ஆர்., பிரேமதாச போன்ற ஐ.தே.க. தலைவர்கள் போல அல்லாது, உண்மையாகவே அவர் புலிகளுக்கு சமாதானக் கரம் நீட்டினார். ஆனால் அவரது இதயசுத்தியான இந்தச் சமாதான முயற்சியைக் கண்டு
மிரண்ட புலிகள், அவரையும் மனித வெடிகுண்டு மூலம் கொல்ல முயன்று முடியாமல் போய், அவரது ஒரு கண்ணை நிரந்தரமாகவே பறித்தெடுத்தனர். பின்னர் மகிந்த ராஜபக்ச
ஜனாதிபதியானதும் அவரையும் கொலை செய்வதற்குப் பல தடவைகள்
முயன்றார்கள். ஆனால் இறுதியில் அவரது கையாலேயே பிரபாகரனும் அவரது சகாக்களும் இறுதி முடிவைத் தழுவிக் கொண்டனர். அதுமட்டுமல்ல. இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு சாதாரண அமைச்சராக இருந்த நேரத்திலேயே, அவரையும் கொலை செய்ய புலிகள் முயன்றிருக்கிறார்கள். அதற்குப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் கைதுசெய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்த ஒருவரை, ஜனாதிபதி மைத்திரி அண்மையில் மன்னித்து
விடுதலை செய்ததை சொல்கெய்ம் நிச்சயமாக அறியாமல் இருக்கமாட்டார். அன்று மைத்திரி புலிகளால் கொலை செய்யப்பட்டிருந்தால், மகிந்தவை வீழ்த்துவதற்கு நோர்வே உட்பட்ட
மேற்கத்தைய சக்திகள் வேறொருவரைத்தான் தேட வேண்டியிருந்திருக்கும்.



இவ்வாறெல்லாம் செயற்பட்ட பாசிசப் புலிகளும், அவர்களது தலைவர் பிரபாகரனும், லக்ஸ்மன் கதிர்காமரின் செயலால் கோபமடைந்துதான் சமாதான முயற்சிகளில் பங்குபற்றாமல் போனார்கள் என சொல்கெய்ம் சொல்வது, முழுப் பூசனிக்காயை ஒரு கவளம் சோற்றில் மறைக்கும் பிரயத்தனமே தவிர வேறல்ல.இன்னும் சொல்லப்போனால், சொல்கெய்ம்மின் நல்ல நண்பரும், புலிகளின் அரசியல் ஆலோசகரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் அணிக்குத் தலைமைதாங்கியவருமான அன்ரன்
பாலசிங்கம், தனது சமாதான முயற்சிகளை பிரபாகரன் விரும்பவில்லை என பலரிடம் அங்கலாய்த்தது போல, சொல்கெய்ம்மிடமும் அங்கலாய்க்காமல் விட்டிருப்பார் எனத் தோன்றவில்லை.

புலிகளின் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட, அந்த இயக்கத்தில் அன்றைய காலகட்டத்தில் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த ‘கருணா அம்மான்’கூட, சமாதானத் தீர்வு எதனையும் எட்டாமல் பார்த்துக் கொள்ளும்படி பிரபாகரன் தன்னிடம் கூறியதாக, அன்ரன் பாலசிங்கம் தனக்குத் தெரிவித்ததாகப் பகிரங்கமாகவே
கூறியிருக்கிறார். இவ்வளவு விடயங்கள் இருக்கக்கூடியதாக, சொல்கெய்ம் பிரபாகரனையும், அவரது சகாக்களையும் சமாதானப் பிரியர்களாகக் காட்ட முனைவது, சொல்கெய்ம்முக்கு இலங்கை சம்பந்தமாக இன்னமும் நிகழ்ச்சி ஏதாவது இருக்கிறதோ என்ற
ஐயத்தைத்தான் தோற்றுவிக்கிறது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...