சுதந்திரக் கட்சியின் உள் முரண்பாடும் ஆடு நனைகிறது என்று அழுகின்ற ஓநாய்களும்! !


அரசியல் நிருபர்

 வானவில் ஆடி 2015

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள் முரண்பாடு ஏற்பட்டிருப்பது இப்பொழுது
ஒரு இரகசியமான விடயமல்ல. அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும்
அக்கட்சியின் நலன் விரும்பிகள் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும்
இரகசியமல்ல. அது அவர்கள் உட்கட்சி விவகாரம் என்றபடியால் ஏனைய
கட்சியினர் அது பற்றி பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்வதில்லை.
ஆனால்ää வேண்டாத விருந்தாளி ஒருவர் அதுவும் அந்தக் கட்சியை சர்வசதா
காலமும் எதிர்த்து வந்த கூட்டத்தின் பிரதிநிதி ஒருவர்ää அந்தக் கட்சிக்குப்
புத்திமதி சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல தமிழர்களின் இன்றைய தானைத் தலைவரும்  உலகின் மிகச் சிறந்த இராஜதந்திரியும் அரசியல் சாணக்கியருமான  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (அவரது கீர்த்திக்கான அடைமொழிகள் யாவும் தமிழ் ஊடகங்களால் காலத்துக்கு காலம் சூட்டப்பட்டவையாகும்). அவரது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை


யைப் பார்ப்பதற்கு முன்னர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். சிறீலங்கா சுதந்திரக் கட்சி 1951ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்டது
என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் அக்கட்சியை முதன்முதலாக உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றியவர்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தந்தையார் டி.ஏ.ராஜபக்சவும் ஒருவர்.

பின்னர் சிறீமாவோவின் ஆட்சிக்காலத்தில் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகேகாதரர் ஜோர்ச் ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் சிறீமாவோவின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராகவும்ää சிரேஸ்ட அமைச்சராகவும் பணி புரிந்தார். மகிந்த ராஜபக்ச 1970ஆம் ஆண்டு இலங்கையிலேயே மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான ஒருவராவார்.
ஐ.தே.கவை விட்டு பண்டாரநாயக்க வெளியேறி வந்ததிற்குக் காரணம்
அக்கட்சி பின்பற்றிய ஏகாதிபத்திய சார்பு தேச விரோதக் கொள்கைகளே. அதன் காரணமாகவே மக்களின் ஆதரவைப் பெற்று மிகக் குறுகிய காலத்தில் 1956இல் சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி பண்டாரநாயக்க தலைமையில் அரசு
அமைத்தது. பண்டாரநாயக்க தனது ஏகாதிபத்திய விரோத கொள்கைகளுக்கு
இணங்கவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று முகமாகவும்
பல தீவிரமான ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் காரணமாகவே பிற்போக்கு சக்திகள் அவரை 1959 செப்ரெம்பரில் படுகொலை செய்தன. அவரது மரணத்தின் பின்னர் அவரது
மனைவி சிறீமாவோ கட்சியின் தலைவியாகவும் நாட்டின் பிரதமராகவும்
மக்கள் செல்வாக்குடன் பல தடவைகள் பதவிகள் வகித்தார். அவரும் தனது
கணவரின் ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையே தீவிரமாகப்
பின்பற்றினார்.

அவருக்குப் பின்னர் அவர்களது குடும்பத்தில் இருந்து தலைமையை ஏற்க
ஆளில்லாதபடியால் (மகன் அனுர ஐ.தே.கவில் சங்கமமாகியிருந்தார்)
சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்று தனது கணவருடன் சிறீலங்கா மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடாத்தி வந்த தனது கனிஸ்ட புத்திரி சந்திரிகாவை திரும்பவும் கட்சிக்குக் கொண்டு வந்து கட்சியின் தலைவியாகவும் நாட்டின் தலைவியாகவும் தலைமைத்துவம் வகிப்பதற்கு தாயார் சிறீமாவோ வழிவகுத்தார். (சந்திரிகவின் கணவர் விஜேகுமாரதுங்க முன்னதாக ஜே.வி.பி. கொலைகாரர்களால் கொல்லப்பட்டிருந்தார்)

சந்திரிகாவின் 11 வருட ஆட்சிக்காலம் தனது தந்தை ண்டாரநாயக்கவினதும்
தாயார் சிறீமாவோவினதும் ஆட்சிக் காலத்தை விட வித்தியாசமானது. அவர்
தமது பெற்றோர் பின்பற்றிய தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுää ஏகாதிபத்திய சார்பு
மேற்குலகிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு கிழக்குலகிற்கும் இடையே
ஊசலாடுபவராகää சமரசம் செய்பவராக இருந்தார். அதன் காரணமாகவே அவரால் பாசிசவாதப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல முடியமலும் இருந்தது. அதுமாத்திரமல்லாமல்ää அவரது இந்த ஊசலாடும் கொள்கை காரணமாகவே மேற்குலக சக்திகள் புலிகளுக்குச் சார்பான நோர்வேயின் எரிக் சொல்கேய்ம் போன்றவர்களை சமாதான தூதுவராக நியமித்து அவர் மூலம் இலங்கை அரசையும் புலிகளையும் சம நிலையில் வைத்துப் பேணவும் முடிந்தது.
சந்திரிகாவின் இந்த நிலைப்பாட்டுக்கு அவரது வெளிநாட்டு அமைச்சராகப் பதவி வகித்த – பின்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட – மேற்கத்தைய சார்பான லக்ஸ்மன் கதிர்காமரும் ஒரு காரணம்.

அதனால்தான் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு தீராத தலைவலி
கொடுத்து வந்த மேற்கத்தைய வல்லாதிக்க சக்திகள் அதுபோல சந்திரிகாவுக்கு எவ்வித நெருக்கடிகளையும் கொடுக்கவில்லை. அதுமாத்திரமில்லாமல் சந்திரிகா அரசின் வேண்டுகோளை ஏற்று
பல மேற்கு நாடுகள் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத்
தடையும் செய்தன. மறுபக்கத்தில் தமது நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் இருந்தன.
(இதைத்தான் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளுவது ’
 என்ற இராஜதந்திரம் எனச் சொல்வார்கள் போலும்) மறுபக்கத்தில் தமது முன்னைய தலைவர்கள் யாரும் பின்பற்றாத வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தனும் சந்திரிகாவுடன் மிகவும்
அந்நியோன்யமான உறவுகளை அவரது ஆட்சிக் காலத்தின் போது
கொண்டிருந்தார். (பின்னர் புலிகளின் தந்திரோபாயம் காரணமாக அந்த
உறவைச் சம்பந்தன் முறித்துக் கொள்ள வேண்டி வந்தது. இப்பொழுது புலிகள்
இல்லாதபடியால்ää மீண்டும் சம்பந்தன் - சந்திரிகா  தேன்நிலவு ஆரம்பமாகியுள்ளது) அந்த உறவு தமிழ் மக்களுக்கு ஏதாவது சிறு உரிமைகளைத் தன்னும் பெற்றுக் கொடுப்பதற்காக அல்ல. தனிப்பட்ட
முறையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காவே. (இதுபற்றி சந்திரிகாவே தனிப்பட்ட முறையில் தனது நெருங்கிய சகாக்களிடம் ஒரு சமயத்தில் புலம்பியதாகக் கதை உண்டு)

சந்திரிகாவுக்குப் பின்னர் மகிந்த சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் நாட்டின்
ஜனாதிபதியாகவும் பதவி ஏற்றார். அவரது தலைமைத்துவக் காலத்தில் அவர்
புலிகளின் வழமையான தந்திரங்களுக்கு இடம் கொடுக்காமல்ää அவர்களை
முற்றுமுழுதாகத் துவம்சம் செய்தார். அத்துடன் பண்டாரநாயக்கவும் அவரது
மனைவி சிறீமாவோவும் பின்பற்றியது போல தீவிரமான ஏகாதிபத்திய விரோதக் கொள்கைகளையும் பின்பற்றினார். (இதை அவர் முற்றுமுழுதான மன விருப்பத்தின் பேரில் செய்தாரா அல்லது மேற்கு வல்லாதிக்க சக்திகள் கொடுத்த நெருக்கடி காரணமாக அந்த நிலைப்பாட்டை எடுத்தாரா என்பது ஆராய்வுக்குரியது)

அதுவே அவரது ஆட்சியை மேற்கத்தைய சக்திகள் தீவிரமாக எதிர்க்கக்
காரணமாகியது. அதனாலேயேää உள்நாட்டு - வெளிநாட்டுச் சக்திகள் ஒன்றிணைந்து இவ்வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஒரு ஆட்சி மாற்றத்தைச் செய்ய வழிவகுத்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் தமிழ் - முஸ்லிம்
பிற்போக்கு சக்திகளுக்கும் ஒரு பங்கு இருந்தது. எப்பொழுதுமே சிறீலங்கா
சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளை கடுமையாக எதிர்த்து வரும்
தமிழ் தலைமைகளின் வழி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது முன்பு அவர்களுக்குக் கசப்பாக இருந்த சுதந்திரக் கட்சியின்  தலைவர்
ஜனாதிபதியாக இருக்கும் - ஆனால் யதார்த்தத்தில் ஐ.தே.க. அரசாக உள்ள -
அரசை ஆதரிக்கின்றது. இதற்கு முன்னர் சுதந்திர இலங்கையில் தமிழர்களின் முதல் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம்,  எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,
அ.அமிர்தலிங்கம், வே.பிரபாகரன் ஈறாக எவருமே சுதந்திரக் கட்சி
தலைமையிலான அரசுகளை ஆதரித்தது கிடையாது. தமிழ் தலைமைகளின்
தொடர்ச்சியான ஏகாதிபத்திய ஆதரவுப் போக்கே அதற்குக் காரணம்.

இப்பொழுது சுதந்திரக் கட்சிக்குள் முரண்பாடு தோன்றியுள்ளதற்குக் காரணம்
அதன் தற்போதைய தலைவராக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரை வழிநடாத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகவும்ää சுதந்திரக் கட்சியின் பாரம்பரியமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் கைவிட்டதும் அதன் முன்னைய தலைமைகளால் ஒருபோதும் செய்ய நினைக்காத வகையில் அதன் பரம வைரியான பிற்போக்கு ஐ.தே.கவுடன் கூட்டுச் சேர்ந்ததுமாகும்.

அதன் காரணமாகவே சுதந்திரக் கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளைக் காலம் காலமாக ஆதரித்து வந்த அதன் ஆயிரக்கணக்கான அங்கத்தவர்களும் அக்கட்சியை ஆதரிக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் கட்சியின் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் மகிந்த ராஜபக்சவின் பின்னால் அணிதிரண்டு நிற்கின்றனர்.

இத்தகைய ஒரு நிலையில்தான் அண்மையில் நாடாளுமன்றத்தில்
உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் “
சிறீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கையில் உள்ள மிதவாதமான கட்சி எனினும்
இதனைக் கைப்பற்றுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் தொங்கிக்
கொண்டு சிலர் இருக்கின்றனர். பிழையானவர்களின் கைகளில் சுதந்திரக்
கட்சி சென்றுவிடக்கூடாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்


காலம் காலமாக பண்டாரநாயக்க அவர் மனைவி சிறிமாவோ மகிந்த ராஜபக்ச என முன்னைய சுதந்திரக் கட்சித் தலைமைகளை எல்லாம் கர்ணகடூரமாக எதிர்த்து அவர்களை எல்லாம் தமிழர்களின் பரம விரோதிகளாகவும் ஐ.தே.கவே தமிழர்களின் நண்பன் எனவும் காட்டி வந்த தமிழ்த் தலைமை இப்பொழுது சம்பந்தனின் வாயால் மைத்திரியின் தலைமைக்கு நற்சான்றுப் பத்திரம் வழங்கியுள்ளதுடன் சந்திரிகவுடனும் கூடிக்குலாவ ஆரம்பித்துள்ளது எனின் அவர்கள் இருவரும் சுதந்திரக் கட்சியை இன்னொரு ஐ.தே.கவாக மாற்ற முயல்கின்றனர் என்பதே காரணம். எனவே உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தேசபக்தி உள்ள மக்களும் சுதந்திரக் கட்சியின் எந்தப்
பிரிவின் பின்னால் அணிதிரள வேண்டும் என்பதற்கு சம்பந்தனின் உரை ஒரு குறிகாட்டியாக இருக்கின்றது.

எதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நாம் எதிர்க்க வேண்டும். எதிரி எதை
எதிர்க்கிறானோ அதை நாம் ஆதரிக்க வேண்டும் 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...