ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை ஜனவரி 08 எதிர்ப்புரட்சியின் தொடர்ச்சியாகும்! -அரசியல் நிருபர்

இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் ஆரம்பமான எதிர்ப்புரட்சி நடவடிக்கையின் ஒரு தொடர்ச்சியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அவர் தான் நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில் ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு தரப்பையும் ஆதரிக்காமல் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் அவர் தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதம மந்திரி வேட்பாளராக நோக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது மிகவும் கேவலமான முறையில் வகைபாடியும் இருக்கிறார். சிறிசேன  ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்த நாளிலிருந்தே மிகவும் குளறுபடியான வேலைகளைச் செய்து வருகிறார்.



43 வருடங்களாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவராகவும்ää இறுதியில் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சிரேஸ்ட அமைச்சராகவும் இருந்த அவர்ää அக்கட்சிக்குத் திடீரெனத் துரோகம் இழைத்துவிட்டு ஐ.தே.கவுடனும், இதர பிற்போக்கு சக்திகளுடனும் இணைந்துää வெளிநாட்டு வல்லாதிக்க சக்திகளின் உதவியுடன் ஜனாதிபதியானார். கட்சியை விட்டுப் போனவர் நேர்மையானவர் என்றால் அப்படியே போயிருக்க வேண்டும். ஆனால் அவர் சதி நோக்கத்துடன் திரும்பி வந்து தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி சுதந்திரக் கட்சியின் தலைமையையும் அது தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையையும் கைப்பற்றிக் கொண்டார். அதுமாத்திரமல்ல உண்மையிலேயே அந்த இரு அமைப்புகளினதும் சார்பாக ஜனவரி 08 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபச்சவையும் அவரது ஆதரவாளர்களையும் சதித்தனமாகவும் சர்வாதிகாரத்தனமாகவும் ஓரம்கட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். ஒருவர் ஒரு தேர்தலில் தோல்வி கண்டதற்காக அக்கட்சியை விட்டுப் போய்விட வேண்டும் என்ற நெறிமுறையோ அல்லது நடைமுறையோ உலகில் எங்கும் இல்லாத போதும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறிசேனவும் அவரை வழிநடாத்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 20 வருடங்களில் தனது கட்சியை 20இற்கும் அதிகமான தடவைகள் தோல்விக்கு இட்டுச் சென்றும் அவர் கட்சித் தலைவராகவே இன்றும் தொடர்கிறார். அவருக்கு ஒரு நீதி மகிந்தவுக்கு ஒரு நீதியா?

 அதுமட்டுமல்ல 1978இல் ஜே.ஆர். கொண்டு வந்த ஜனநாயக விரோத அரசியல் சட்டத்தை நீக்குவதே தான் ஜனாதிபதியானதும் முதல் பணி என்று சொன்ன சிறிசேனää தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி,  மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த ஐ.தே.கவுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கையளித்து ஆட்சியிலிருந்த தனது கட்சி தலைமையிலான அரசுக்கு குழிபறிப்பும் துரோகமும் செய்தார். பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்ட போதும் அந்த எதேச்சாதிகாரம் பிடித்த சிறுபான்மை அரசையே ஆட்சியில் தொடர வைத்து அவர்கள் அரசு அதிகாரத்தைத் தேர்தலுக்குப் பயன்படுத்தவும், தேர்தல் மோசடிகளில் ஈடுபடவும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார். அவர் ஒரு கட்சியினதும், அந்தக் கட்சி தலைமையிலான ஒரு கூட்டமைப்பினதும் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் நடுநிலைமை என்று சொல்வதே கேலிக்கூத்தானது. ஆனால் அதைவிட மோசமானது தேர்தலில் வெற்றிபெற விடாது தனது கட்சிக்கே குழிபறிக்க முயல்வது. அவர் தேர்தலில் நடுநிலைமை எதையும் வகிக்கப் போவதில்லை என்பதை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையே புட்டு வைத்துள்ளது.

 நடுநிலைமை என்று சொல்லிக் கொண்டு தனது கட்சி சார்பாகப் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு தான் வேட்பு மனு வழங்கவில்லை என்கிறார். அவரை ஜனவரி 08ஆம் திகதியில் இருந்தது போலவே தொடர்ந்து எதிர்ப்பதாகக் கூறுகிறார். அத்துடன் மகிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைவார் என்றும் கூறுகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது (தனது) சுதந்திரக் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டுää ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியை முறியடிக்கவே தான் பாராளுமன்றத்தைக் கலைத்ததாகவும் கூறியிருக்கிறார்!

 அவர் கூறுவது உண்மையாக இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவரிடம் முன்வைக்கும் கேள்விகள் என்னவென்றால் நீங்கள் சுதந்திரக் கட்சித் தலைவர் என்று முறையில் உங்கள் ஆதரவில்லாமல் எப்படி மகிந்தவுக்கு வேட்பு மனு கிடைத்தது? தொடர்ந்தும் நீங்கள் மகிந்தவை எதிர்ப்பதானால் உங்களைப் போல கட்சி மாறி எதிரிகளுடன் சேராமல் கட்சியுடன் உறுதியாக நிற்கும் மகிந்தவை நீங்கள் தொடர்ந்து எதிர்ப்பதென்றால் அது சுதந்திரக் கட்சியையே நீங்கள் எதிர்ப்பது என்று அர்த்தமாகாதா? ரணிலைக் காப்பாற்றுவதற்காகத்தான் நீங்கள் பாராளுமன்றத்தைக் கலைத்தீர்கள் என்றால் நீங்கள் தேர்தலுக்குப் பின்னரும் உங்கள் கட்சிக்குத் துரோகம் இழைத்து ஐ.தே.கவை ஆட்சிக்குக் கொண்டு வரத்தான் முயல்கிறீர்கள் என்று அர்த்தப்படாதா?

 ஓன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஆதரவு இல்லை. பெரும்பான்மையான ஆதரவு மகிந்தவுக்கே இருக்கிறது என்பது சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி அவருக்கு வேட்பு மனு வழங்கியதிலிருந்தும் மகிந்தவை தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக நியமித்ததிலிருந்தும் தெளிவாகின்றது. இந்த நிலைமையில் நல்லாட்சி பற்றியும் வாய்க்கு வாய் ஜனநாயகம் பற்றியும் பேசும் மைத்திரிபால சிறிசேன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் அதன் வழிவந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புத் தலைமைப் பதவியையும் துறந்துவிட்டு ஐ.தே.கவில் சங்கமமாவதே சிறந்தது. ஆனால் அதைச் செய்வதற்குப் பதிலாக நாட்டில் நிறைவேறற்று அதிகாரத்தை ஒழிக்கப் போவதாகப் புறப்பட்டவர் இப்பொழுது தனது கட்சிக்குள் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை தேர்தல் முடியும் வரை கூட்டுவதற்குத் தடை போட்டு கட்சியின் தேர்தல் செயல்பாடுகளை முடக்கிப் போட்டிருக்கிறார்.


சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் இப்படிக் கட்சியின் செயல்பாடுகளை ஜனநாயக விரோத ரீதியில் முடக்கிப் போட்டு தான்தோன்றித்தனமாக எந்தவொரு தலைவரும் செயல்பட்டது கிடையாது. சிறிசேனாவின் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் இரண்டு விடயங்களைப் புலப்படுத்துகின்றன. ஒன்று அவர் ஜனவரி 08 இல் ஆரம்பித்த வெளிநாட்டு சக்திகளின் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முயற்சிக்கிறார் என்பது. இரண்டாவது அவர் சுதந்திரக் கட்சியின் உண்மையான தலைவர் அல்ல, அவர் ஐ.கே.கவின் பிரதிநிதி. அவரது இந்தப் போக்கை பெரும்பான்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி முற்போக்கு சிந்தனையும் தேசபக்தியும் கொண்ட மக்களும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Source vaanavil
https://manikkural.files.wordpress.com/2015/07/vaanavil-55_2015.pdf

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...