இலங்கையை பொலிஸ் இராச்சியமாக மாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி! -சேதுபந்தனன்

இலங்கையில் அரசாங்கம் ஒன்றை  அமைப்பதற்குரிய போதியளவான
பாராளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது அதற்கான தார்மீக ரீதியிலான
உரிமையையோ கொண்டிராத ஐக்கிய தேசியக் கட்சி, இன்றைய ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும் முன்னைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும்
செய்த தவறுகளால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,
ஆதரவாளர்கள் அவ்வரசில் கடமை புரிந்த அரச அதிகாரிகள் ஆகியோரைப்
பழிவாங்கும் நடவடிக்கைகளை வேகமாக முடுக்கி விட்டிருக்கிறது.



100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் ஐ.தே.க. அரசு செய்துவரும்
மக்கள் விரோத, ஜனநாயக விரோத,தேச விரோத நடவடிக்கைகள்
எண்ணிலடங்காதவை. 100 நாட்களுக்குள்ளேயே இவ்வளவு நாசகார நடவடிக்கைகளை எடுத்தவர்கள் 5 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் நாட்டை எங்கே கொண்டுசென்று விடுவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு
பதறுகின்றது.

தற்போது பிரதமர் பதவியில் கூச்சநாச்சமின்றி ஒட்டிக் கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க தனது மாமனாரும்  ~அரசியல் குள்ளநரி| என்று வர்ணிக்கப்படுபவருமான ஜே.ஆர்.ஜெயவர்த்தனää 1977இல் ஆட்சிபீடம் ஏறியவுடன் எப்படிச் செயல்பட்டாரோ, அவ்வாறே செயற்படுவதைக் காண முடிகிறது.

ஜே.ஆர். அன்று ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் ஜனநாயகத்தைக்
கட்டியெழுப்பப் போகிறேன் ,சிங்கப்பூராக மாற்றப் போகிறேன்|
என்றெல்லாம் சூளுரைத்தார். ஆனால் 17 வருடங்களாகப் பதவியில் இருந்த
ஜே.ஆரும் அவரது சகபாடியான ஆர்.பிரேமதாசவும் அவர்களது
சகாக்களும் செய்ததெல்லாம் நாட்டை நரக லோகமாக மாற்றியதுதான்.
அவர்கள் தமது 17 வருட கொடூர ஆட்சியில் பல தடவைகள் தமிழ் மக்களுக்கு மேல் கொடூரமான இன வன்செயல்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றி , பல்லாயிரக்கணக்கான தமிழ்
மக்களைக் கொன்று குவித்ததுடன் அவர்களது பல இலட்சம் கோடி
பெறுமதியான சொத்துக்களையும் சு10றையாடியவர்கள். அதுமாத்திரமின்றி
பல இலட்சம் தமிழ் மக்களை நாடும் வீடும் அற்றவர்களாக்கி
நடுத்தெருவிலும் உலகெங்கிலும் அலைய வைத்தவர்கள்.

1981இல் அபிவிருத்திச் சபைத் தேர்தல் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தின்
உலகப் பிரசித்தி வாய்ந்த நூலகத்தையும்,பத்திரிகைக்காரியாலயங்களையும் நகரையும் பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தையும்,ஆலயத் தேரையும் எரித்து யாழ் நகரைச் சுடுகாடாக்கியவர்களும் இந்த ஐ.தே.கவினரே.(அப்படியானவர்களுடன்தான்

இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை இரண்டறக்கலந்து நிற்கிறது) 1988 - 89 காலகட்டத்தில் ஜே.வி.பியின் இரண்டாவது ஆயுதக்
கிளர்ச்சியின் போது அதை அடக்குகிறோம் என்ற பெயரில் சுமார்
60,000 சிங்கள இளைஞர்களின் உயிரைக் குடித்தவர்களும் இவர்களே.
(அப்படியானவர்களுடன்தான் இன்றைய ஜே.வி.பி தலைமை
கூடிக்குலாவித் தேன்நிலவு கொண்டாடுகிறது) எம்பிலிப்பிட்டியவில் நூற்றுக்கும் அதிகமான அப்பாவி சிங்களப் பாடசாலை மாணவர்களைக் கொன்று புதைத்தவர்களும் இந்த ஐ.தே.கவினரே.

இப்படியாக இன்னும் என்னென்னவோ கொடுமைகளையெல்லாம் அன்று
ஐ.தே.க. ஆட்சியினர் செய்தனர். அப்படியான அரசில்தான் இன்றைய
பிரதமர் ரணிலும் ஒரு முக்கியமான அமைச்சராக அன்று இருந்தார்.
(அதுமட்டுமில்லாமல்ää 1983 இன வன்செயலின் போது கொழும்பில்
தமிழருக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான
ஐ.தே.க. அமைச்சர்கள் குழுவில் ரணிலும் இருந்ததார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.) ஆனால் இவ்வளவு கொடுமைகள் அன்று 17 வருடங்களாக நடந்தும்ää
இன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூச்சல்
போடும் மேற்கத்தைய சக்திகள் வாய்திறந்து என்ன ஏது என்று ஒரு
சொல் கூடக் கேட்டது கிடையாது.

இன்று அதே மேற்கத்தைய சக்திகளின் முயற்சியாலும்ää இந்திய மத வலதுசாரி சக்திகளின் சதி சூழ்ச்சிகளாலும், இலங்கையில் அவர்களுக்கச்
சாதகமான ஒரு அரசு கொண்டு வரப்பட்டுää அன்றைய ஐ.தே.க. அரசின்
பாணியில் சம்பவங்கள்  அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் கடை கோடி வலதுசாரியான ரணில் முக்கியமான பங்கு வகித்து வருகின்றார்.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு நாட்டு மக்கள் அளித்த வாக்குகளை
தனக்கு அளித்த வாக்குகளாக எண்ணியே ரணில் இவ்வாறெல்லாம் செயல்பட்டு வருகின்றார். அதில் ஒன்றுதான் தனது மாமனார் ஜே.ஆர். கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என ரணிலுக்கு திடீரென்று எழுந்த சிந்தனை. 37 வருடங்களாக வராத இந்தச் சிந்தனை இப்பொழுது வந்ததிற்குக் காரணமில்லாமல் இல்லை. தனது மாமனார் அளவுக்கு ரணில்
பெரிய அரசியல் குள்ளநரியாக இல்லாவிட்டாலும் ஒரு குட்டி அரசியல் குள்ள நரியாகத்தன்னும் இருப்பதற்கான சகல தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் தன்னால் ஜனாதிபதித் தேர்தலில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று கண்ட ரணில் மைத்;திரியைப் பொதுவேட்பாளர் என்று முன்னிறுத்தி, ஏமாற்றக்கூடியவர்களையெல்லாம் ஏமாற்றி அவருக்கு வாக்குப் போட்டு வெற்றி பெற வைத்துவிட்டு  இப்பொழுது அவரது நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்து தனது கைகளில் அதிகாரத்தை
எடுக்கும் சூழ்ச்சிகளில் இறங்கியிருக்கிறார். அவரது இந்த முயற்சி ஒரு அரசியல் சதி நடவடிக்கையன்றி வேறு எதுவுமல்ல.

 அவரது இந்த நடவடிக்கை ஒரு பழைய சுவாரசியமான கதையைத்தான் நினைவூட்டுகிறது. அதாவது ஒரு கடுமையான குளிர்காலத்தில் ஒரு குரங்கும், பூனையும் குளிர்காய்வதற்காக அடுப்பங்கரையொன்றை நாடி அதன் அருகில் குந்தியிருந்திருக்கின்றன. அப்பொழுது அங்கே ஒரு
பலாக்கொட்டை இருப்பதைக் குரங்கு கண்டு அதை நெருப்பில்
சுட்டுத்தின்ன ஆசைப்பட்டிருக்கிறது. எனவே அதை எடுத்து நெருப்புத்
தணலில் போட்டுவிட்டது. ஆனால்  பலாக்கொட்டை சுடப்பட்ட பின்னர்
அதை எடுக்கும் போது நெருப்புச் சுட்டுவிடும் என்று கண்ட குரங்கு
திடீரென பூனையின் கைகளைப் பிடித்து அந்தப் பலாக்கொட்டையை
எடுத்து பூனைக்குக் கொடுக்காமல் தான் மட்டும் தின்று தீர்த்தது.
நெருப்பில் சூடு கண்டது பூனையின் கைகள் பலாக்கொட்டை தின்றது
பூனை. இப்படியாகத்தான் இருக்கிறது ரணில், ைத்திரியைப் பயன்படுத்தி
ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற வழிமுறை.

அதுமாத்திரமல்லää மைத்திரி சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியாக
இருக்கையிலேயேää ரணில் அவரையும் மீறிää அவருக்குத் தெரியாமலேயே பல அதிகாரத்துவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கு ஒரு உதாரணம்,கடந்த பெப்ருவரி 13ஆம் திகதி ரணில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குத் தெரியாமல் வெயிளிட்டுள்ள ஒரு அரச வர்த்தமானி அறிவித்தலில் ~பொலிஸ் பாரிய நிதி மோசடிப் பிரிவு| என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்க உத்தரவிட்டிருக்கிறார். இந்த அமைப்பு
உருவாக்கப்பட்ட பின்னர் அதற்குப் பொறுப்பான ஒரு பிரதிப் பொலிஸ் மா
அதிபரிடம் யாரும் நேரடியாகவே நிதி மோசடி சம்பந்தமான முறைப்பாடொன்றைச் செய்ய முடியும். நிதி மோசடி போன்ற விடயங்களைத்
தடுப்பதற்கென தற்போதைய சட்டங்களிலேயே போதிய வசதிகள்
இருக்கையில் இத்தகைய மேலதிக ஏற்பாடு எதற்காக என்ற கேள்வி
எழுகின்றது. அதன் உண்மையான நோக்கம், முன்னைய ஆட்சியாளர்களை
நேரடியாகவும் வகைதொகை இன்றியும் சுலபமாகவும் கைது செய்து
நீண்டகாலம் அடைத்து வைப்பதற்காகவே. எனவேதான் ரணில்
இந்த ஏற்பாட்டை முன்னைய ஆட்சியில் 10 வருடங்களாக சிரேஸ்ட
அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதிக்கும் தெரியாமல்
செய்திருக்கிறார் என்ற அபிப்பிராயமே அரசியல் அரங்கில் நிலவுகின்றது.
இந்த விடயம் குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய
எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது நாட்டை பொலிஸ் இராச்சியமாக மாற்றுவதற்கான முயற்சி என்றும்,அதனால்தான் ஜனாதிபதிக்கும் தெரியாமல் ரணில் இதைக் கொண்டு வந்திருக்கிறார் என்றும்
குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுமட்டுமல்ல அண்மையில்
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்
நிறைவேற்றப்பட்ட 19ஆவது சட்டத்திருத்தத்தில் கூட ஊடகங்களுக்கு
கடிவாளம் இடும் சரத்துகளைச்சேர்ப்பதற்கு ரணில் குழுவினர் முயன்று எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டிருக்கிறது.

நாட்டின் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுமின்றிää பிரதம நீதியரசர்ää சட்ட மா அதிபர்ää பொலிஸ் மா அதிபர் போன்றவர்களின் அதிகாரங்களையும் ரணில் குழுவினர் தமது கைகளில் எடுத்துச்செயல்பட முயல்வதாக முன்னாளைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

ரணில் அரசாங்கத்தின் போக்கை இப்படியே விட்டு வைத்தால் 1977 - 94
கால 17 வருட ஐ.தே.க. ஆட்சியை விட மோசமான ஒன்றாக ரணில் ஆட்சி
அமைந்துவிடும் அபாயம் இருக்கின்றது. அதன் காரணமாக இராமாயணக்
காவியத்தில் கம்பன் வர்ணிப்பது போல '(இராவணன்) வீரமும் களத்தே
போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்" என்ற நிலை, ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர்  ரணிலால் ஏற்பட்டாலும்
வியப்பதற்கில்லை.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...