புதிய உலக ஓழுங்கு: புலம்பெயர்ந்த புதிய உலக ஓழுங்கு: புலம்பெயர்ந்த புலம்பெயர்ந்தஇரகசிய பேச்சுவார்த்தை




இம்மாதம் (யூன் மாதம்) 8ந் திகதி இலங்கை வெளிவிவகார இ
அமைச்சராலும் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலும்
உலகத்தமிழர் பேரவையாலும் வெளியிடப்பட்ட பத்திரிகை
அறிக்கையொன்றின் வாயிலாக இலண்டனில் இலங்கை அரசுää
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புää உலகத்தமிழர் பேரவைச் சார்ந்த
பிரதிநிதிகளும் (உலகத்தமிழர் பேரவையென அறிக்கையில்
சொல்லப்பட்டாலும்  பிரித்தானியா தமிழர் பேரவைச்
சார்ந்தவர்களே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்)
மற்றும் தென்னாபிரிக்கா  சுவிட்சலாந்து  நோர்வே நாட்டு
பிரதிநிதிகளும் இரகசிய (ஏன் இந்த இரகசியம்?..)



பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த
பேச்சுவார்த்தைக்கு முன்னர் இப்பேச்சுவார்த்தை தொடர்பாக
செய்தி எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராததால்ää
இப்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மிகவும் இரகசியமாக
பேணப்பட்டுள்ளது என்பது உறுதியாகத் தெரிய வருகின்றது.
இலங்கையில் நல்லிணக்கம் ஒன்றினை ஏற்படுத்திää அரசியல்
தீர்வொன்றினை எட்டுவதற்காக இலங்கை அரசு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினுடனோ அல்லது தென்னாபிரிக்காää
சுவிட்சலாந்துää நோர்வே நாட்டு பிரதிநிதிகளுடனோ
பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது புருவத்தை உயர்த்தும்
விடயமல்ல. ஆனால் இவர்கள் அனைவருடனுமான
பேச்சுவார்த்தையில்ää இலங்கையின் முன்னைய அரசினால்
அறிவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பட்டியலிலுள்ள
புலம்பெயர் தமிழர் அமைப்புகளில் ஒன்றான உலகத்தமிழர்
பேரவையும் இணைந்துள்ளது என்பதுபற்றி ஆழமாக சிந்திக்க
வேண்டியுள்ளது. இந்த அமைப்போ அல்லது வேறு எந்த
புலம்பெயர் அமைப்போ இலங்கை அரசியலில் தீர்மானகரமான
பங்கொன்றினை வகிக்கவேண்டிய கட்டாயமான
புறச்சூழலொன்று உருவாகியிருப்பது மாதிரியும் தெரியவில்லை.
அவ்வாறான சூழ்நிலையில் ஒரு புலம்பெயர் அமைப்புடனான
பேச்சுவார்த்தை என்பது அந்த அமைப்புக்கு ‘தலைப்பா’
கட்டும் காரியமே. அத்துடன் இவ்வாறானதொரு
பேச்சுவார்த்தைக்கு தூண்டிய சக்திகளின் பின்னணிபற்றியும்
இதனால் எதிர்காலத்தில் அரசியலில் ஏற்படுத்தப்போகும் பாரிய
விளைவுகளையும் ஆராயமலிருக்க முடியாது.
இப்பேச்சுவார்த்தை இலண்டனில் நடைபெற்றுள்ளதாலும்ää
மேற்கத்தைய சக்திகளின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ள புதிய
இலங்கை அரசே இப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாலும்ää
மேற்கத்தைய சக்திகளின் நிகழ்ச்சி நிரலின் (புதிய உலக
ஒழுங்கின்) கீழேயே இப்பேச்சுவார்த்தை நிகழ்ந்துள்ளதாக
உறுதிபடக் கூறலாம். இலங்கையின் அரசியல் வரலாற்றில்
முதற்தடவையாக புலம்பெயர் தமிழ்சார் அமைப்பொன்றுக்கு
இலங்கையின் அரசியலில் மூக்கை நுழைப்பதற்கு பகிரங்க
அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்திற்கான
அடிப்படை  இலங்கையின் தறபோதைய அரசு மற்றும்
தமிழத்தேசியக். கூட்டமைப்பினர் போலவே இந்த அமைப்பும்
மேற்கத்தைய சக்திகளின் அடிவருடிகள் என்பதே.
புலிகளின் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் பல
பிரிவுகள்ää பிரிவுகளுக்குள் உட்பிரிவுகள் என சிதைந்து
போயுள்ளனர். இந்த பிரிவுகளில் பெரும்பாலானவை இலங்கை

அரசு மீது எப்போதும் போலவே பகையுணர்வுடனேயே
இருக்கிறார்கள். அதனால் இந்த உடைந்து சின்னாபின்னமாய்
பலவீனமாக போயுள்ள புலிகளின் எச்சசொச்சங்களை தங்கள்
வலைக்குள் வீழ்த்திய ஏகாதிபத்திய சக்திகள்ää இலங்கை
அரசினை நவகாலனித்துவ பிடிக்குள் வைத்திருப்பதற்காக
இவர்களை துரும்புச்சீட்டாக பயன்படுத்துகின்றன.
உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பு புலிகள் முற்றுமுழுதாக
முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்ட பின்னர்ää ஏறத்தாழ 6
ஆண்டுகளின் முன்பு ஸ்தாபிக்கப்பட்டது. பிரித்தானியா தமிழர்
பேரவைää உலகத்தமிழர் பேரவையை விடவும் சில
வருடங்கள் பழைமையானது. இவ்விரு அமைப்புகளின்
தலைமைப்பீடத்திலுள்ள அனைவருமே புலம்பெயர் நாடுகளில்
புலிகளை தீவிரமாக விசுவாசித்தவர்கள். அதனால் புலிகளின்
நிகழ்ச்சி நிரலினைää புலிகளின் முற்றுமுழுதான அழிவிற்கு
பின்னர்ää இலங்கைக்கு வெளியிலிருந்து இயங்க வைப்பது
போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தமது இருப்பினைää குறிப்பாக
பணவருவாயினைää பேணி வருகின்றனர். இதற்காக பல
ஊர்வலங்களை புலிப்பதாகைகள் தாங்கி ஐரோப்பிய நாடுகளில்
நடாத்தியுள்ளனர். இலங்கை அரசு மீதான சர்வதேச
விசாரணை என்பது இவர்களது நாளாந்த புலம்பல்களில் மிக
முக்கியமானது.

இலங்கையில் இனங்களுக்கிடையே நீடித்து நிலைத்து
நிற்கக்கூடிய நல்லிணக்கம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கும்ää
பொருளாதார காரணிகளுக்காகவும் புலம்பெயர்ந்த தமிழ்
மக்களின் ஆதரவு அவசியம் என்பது நிட்சயமாக ஓரளவு
ஏற்றுக்கொள்ளக்கூடியதே. இலங்கைக்கு எந்த வகையிலாவது
உதவ வேண்டுமென்று நல்லெண்ணங்கொண்டவர்கள் என்றும்
இலை மறை காயாக உதவிய வண்ணமே இருக்கிறார்கள்.
இந்த சக்திகளை மென்மேலும் ஊக்குவிப்பதற்கு இன்னமும்
இலங்கையில் எந்த பொறிமுறையும் உருவாக்கப்படவில்லை.
புலிகள் அமைப்பு சகலவிதமான ஜனநாயகங்களையும் குழி
தோண்டி புதைத்தவர்கள். எனவே புலிகளை வெறித்தனமாக
ஆதரித்ததை பின்புலமாக கொண்ட புலம்பெயர் தமிழர்களோ
அல்லது அவ்வாறானவர்கள் சார்ந்த அமைப்புகளோää எந்த
பிசாசின் துணை கொண்டாவதுää எப்போதுமே இலங்கைக்கு
மீண்டும் நாசகாரம் விளைவிப்பதற்கான சந்தர்ப்பத்தை
எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பவர்கள் என்ற எச்சரிக்கையை நாம்
சொல்லித்தான் ஆகவேண்டும்.
மூலம்: வானவில் ஆணி-2015

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...